Friday, December 14, 2012

நிலவும் அமுதும்







 யாதேவீ ஸர்வபூதேஷு மஹாலட்சுமிரூபேண ஸம்ஸ்த்திதா 
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:
images of goddess saraswati. Goddess
தனம் கல்வி வீரம் தந்திடும் திருமகள் 
தண் கண்கள் கருணையுள்ள மேகம் 

மக்கள் வணங்கும் ஸ்ரீதேவி மகாலட்சுமி
மனது வைத்தால் வர்ஷிக்கும் பொன்மழை
நிலவும் அமுதும் தன்னோடு வந்தன 
மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும் மகிழ்ச்சியை தந்தன 

வானவர் வணங்கிடும் நீ வேதத்தின் வடிவ
மலர்ந்த முகத்தினளே அடியவரை நோக்குவாய் 
பாற்கடலில் உதித்தவளே வறுமையை போக்குவாய் 
அன்னை ஆனவளே எனை செல்வந்தன் ஆக்குவாய் 
தங்கத் தாமரை மேல் வீற்றிருக்கும் தேவியே 
தாமரை மலர்களை கரத்தில் ஏந்தினாய் 



சங்கு சக்ரதாரி நமஸ்காரம்
சகல வரம் தருவாய் நமஸ்காரம்

பத்மபீட தேவி நமஸ்காரம்
பக்தர் தம்மைக் காப்பாய் நமஸ்காரம்


திருவிளக்கை ஏற்றி வைத்தோம் திருமகளே வருக
குலம் விளங்க எங்கள் வீட்டில் கொலுவிருக்க வருக
அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக



மாவிலையும் தோரணமும் மங்கலத்தின் அடையாளம்
ஊதுவத்தி எரிவதினால் உள்ளத்திலும் ஒரு வாசம்

அம்மா நீ அருள் புரிந்தால் அகிலமெல்லாம் அலங்காரம்
அன்றாடம் பாடிடுவோம் அஷ்டலட்சுமி திருநாமம்!



வாசலிலே மாக்கோலம், வீட்டினிலே லட்சுமீகரம்
நெற்றியிலே ஸ்ரீசூர்ணம், நெஞ்சினிலே லட்சுமீகரம்

அம்மா நீ ஆதரித்தால் அகிலமெல்லாம் இன்ப மயம்
அஷ்டமா சித்தியுடன் லோகமெல்லாம் சேம மயம்
அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக


ஸர்வே பவந்த ஸுகின: ஸர்வே ஸந்து நிராமயா:!
ஸர்வே பத்ராணி பஸ்யந்து மா கச்சித் துக்கபாக் பவேத்!!


எல்லாரும் சுகமாக வாழ்க! 
எல்லாரும் நோயின்றி வாழ்க! 
எல்லாருக்கும் மங்களம் உண்டாகுக! 
ஒருவரும் துன்புறாமல் இன்புற்று இருப்பார்களாக! 

19 comments:

  1. அருமையான படங்கள்... நன்றி...

    ReplyDelete
  2. Aha.............
    Vellikilamai....
    Poluthu pularumvelai.......
    Mahalakshmi darshnam.......
    Danyananen......
    Thanks Rajeswari for post.
    viji

    ReplyDelete
  3. தங்களோடு சேர்ந்து நானும் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  4. வெள்ளிக்கிழமையும் அதுவுமா காலங்காத்தால ஸ்ரீ லஷ்மிதேவியின் தரிசனம். நன்றி

    ReplyDelete
  5. அழகான தெய்வீகம் நிறைந்த படங்கள். வெள்ளிக்கிழமையில். சரஸ்வதிதேவியின் படம் அழகு.

    ReplyDelete
  6. படங்களும் பகிர்வும் அருமை.

    ReplyDelete
  7. அருமையான படங்களுங்களுடன் கண்கொள்ளாக்காட்சி...

    மஹாலக்ஷ்மியின் அருட்கடாட்சம் அனைவரும் கிடைக்க மனதார வேண்டுகிறேன்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    ReplyDelete
  8. நல்ல தரிசனம், வெள்ளிக்கிழமை அன்று.
    புகைப்படங்கள் அருமை.
    அதற்கேற்ப நீங்கள் எழுதியிருந்தவை அனைத்தும் மிக அருமை.

    ராஜி

    ReplyDelete
  9. திருமகளின் படங்கள் தெய்வீகம் என்றால் நிறைவாய் சொல்லி இருக்கும் செய்தி அதைவிட அருமை.
    எல்லோரும் நோய் நொடி இல்லாமல் வளமாய் வாழ பிரார்த்திக்கும் உள்ளம் வாழ்க!
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  10. அருமையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  11. வெள்ளிக்கிழமையன்று திருமகளின் தரிசனம் கிடைத்தது. பதிவிட்டமைக்கு நன்றி!

    ReplyDelete
  12. பக்தி மயம்.மனமும் அமைதியாகிறது !

    ReplyDelete
  13. அந்த முதல் ஓவியம்- முகத்தில் தவழும் கருணை- மிக‌ அழகு!!

    ReplyDelete
  14. அன்பின் இராஜ இராஜேஸ்வரி - நல்லதொரு பதிவு - படங்களூம் வர்ணனைகளும் அருமை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  15. அருமையான பதிவு.
    அற்புதமான படங்கள்.
    நன்றி.

    ReplyDelete
  16. நிலவென வந்து ......
    அமுதெனத் தந்து ....
    அசத்துயுள்ள பதிவு .... ;)))))

    அலைமகள் வந்தாள்
    ஐஸ்வர்யம் தந்தாள்.

    விசிறி மடிப்புடன் பாவாடை [சிற்றாடை] உடுத்திய அம்மன் அலங்காரங்கள் அழகோ அழகாக உள்ளது.

    மிகவும் பிடித்துள்ளது.

    அதுவும் அந்த காசுமாலை, பவழமாலை, நவரத்தினாங்கி வில்லை, முரட்டுப்புஷ்பமாலை என அனைத்துமே ஜோராக உள்ளது.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  17. I was suggested this website by my cousin.
    I am not sure whether this post is written by
    him as nobody else know such detailed about my difficulty.
    You are wonderful! Thanks!

    Also visit my weblog: ArleanCMontalbano

    ReplyDelete