Tuesday, December 18, 2012

சூடித் தந்த சுடர்க்கொடியே ...!






வாரணம் அணியாக வலம்வரும் மணநாளில்
மாதவன் வடிவாகக் கண்ணன் வந்தான்
மார்கழிப் பனிநாளில் மங்கையர் இளம்தோளில்
கார்குழல் வடிவாகக் கண்ணன் வந்தான்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான திருமுக்குளம் பிரமிட் கவிழ்த்து வைக்கப்பட்டதுபோல் படித்துறைகளும், நடுவில் மண்டபத்துடன் கம்பீரமாக காட்சி அளிக்கும் குளத்தின் உள்ளே இரு சிறு குளங்களும் உள்ளது.
ஆண்டாள் நீராடுவதற்காக கங்கை, யமுனை, சரஸ்வதி போன்று புண்ணிய தீர்த்தமாக உருவாக்கப்பட்ட திருமுக்குளத்தின் அடிப்பாகத்தில் சுதர்சன ஆழ்வார் உருவம் செதுக்கப்பட்டுள்ள சிலை உள்ளது. 


 சுதர்சன ஆழ்வார் உருவச் சிலை தண்ணீரில் இருப்பதால் சுதர்சன ஆழ்வார் திருமஞ்சனம் செய்த நீருக்கான பெருமை திருமுக்குள தீர்த்தத்திற்குக் கிடைக்கிறது. 

பாவம் நீக்கும் தீர்த்தமாகவும் விளங்குகிறது.

ஆண்டாளுக்கு தினமும் திருமஞ்சனத்திற்கு திருமுக்குளம்  தீர்த்தம் எடுத்து செல்லப்படுகிறது ...

radhe krishna animated
குளத்தின் அருகே நீராட்ட மண்டபத்தில் மார்கழி மாதம் ஆண்டாளுக்கு நீராட்ட உற்சவம் 10 நாட்கள் நடக்கிறது. 
மாசி மாதத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது. 

புனித  குளத்திற்கு செண்பகதோப்பு பேயனாற்றில் இருந்தும், மொட்டப்பத்தான் கண்மாயில் இருந்தும் தண்ணீர் வருகிறது.


ராமானுஜர் திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுகிறார்..
கல்வெட்டுகளில் ஆண்டாள் கோயில் 
சூடிக்கொடுத்த நாச்சியார் கோயில்….என்று குறிப்பிட்டுளனர்.

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி 
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால் 
தீங்கின்றி நாடெல்லாம் திங்கல்மும்மாறிப் பெய்து 
ஒங்குபெருஞ்செந்நெலூடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுபடுப்பத் 
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி 
வாங்கக், குடம் நிறைக்கும் வள்ளர்பெரும்பசுக்கள் 
நீங்காத செல்வம் நிறைந்தேலோரேம்பாவாய்.
திருப்பாவை பாசுரத்திற்கு விளக்கமாக 
ஓங்கி உலகளந்த திருக்கோலத்தில் அற்புதமான ஆண்டாள் அலங்காரம் 

36 comments:

  1. நான் சில வருடங்கள் முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்குப் போயிருந்தபோது ஆண்டாள் பிறந்த இடம் என்று ஒரு சிறு கோவிலைக் காட்டினார்கள். அவ்வளவு சிலாக்கியமாக பராமரிக்கப் படவில்லை.

    இப்போது எப்படி இருக்கிறதென்று தெரியவில்லை?

    ReplyDelete
  2. அழகான படங்களுடன் காலையில் அருமையான தரிசனம்..நன்றி அம்மா..தொடருங்கள்.

    ReplyDelete
  3. அழகான படங்களுடன் காலையில் அருமையான தரிசனம்..நன்றி அம்மா..தொடருங்கள்.

    ReplyDelete
  4. அழகான படங்களுடன் காலையில் அருமையான தரிசனம்..நன்றி அம்மா..தொடருங்கள்.

    ReplyDelete
  5. அருமையான படங்கள் அம்மா, சூடிக் கொடுத்த சுடர் கொடியாளின் வாரணம் ஆயிரம் பாடல் பற்றி எழுதுங்களேன்....

    ReplyDelete
  6. அழகான படங்களுடன் பகிர்வும் நல்லா இருக்கு

    ReplyDelete
  7. திருப்பாவையில்” ஓங்கி உலகளந்த” என்று ஆரம்பிக்கும் பாடலையும்,திருவெம்பாவையில் ”முன்னிக் கடலைச்சுருக்கி ”என்று ஆரம்பிக்கும் பாடலையும் பாடினால் நல்ல மழை வளம் இருக்கும் எல்லா செல்வங்களும் அதனால் கிடைக்கும் என்பார்கள் அந்த பாடல் பகிர்வுக்கும்,
    சூடி கொடுத்த் சுட்ர் கொடியின் அழகான படப்பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete
  8. சூடி கொடுத்த் சுட்ர் கொடியின் அழகான பகிர்வு.

    ReplyDelete
  9. அழகான தரிசனம். நன்றி ராஜராஜேஸ்வரி.

    ReplyDelete
  10. படங்கள் அனைத்தும் மிக மிக அருமை....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  11. ஆயர்பாடிக்க கண்ணனில் ஆண்டாள் கொண்ட காதல்....ஆண்டாளின் திருப்பாவை ...

    ஓங்கி உலகளந்த உத்தமனார் என்றுதான் அறிந்திருக்கிறேன். ஓங்கி உலகளந்த ஆண்டாளை உங்கள் மூலம்தான் அறிகிறேன். அருமையான பதிவு.

    பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி...

    ReplyDelete
  12. அழகான பதிவு. நீலநிற கண்ணன் ராதை படம் ரெம்ப அழகா இருக்கு.

    ReplyDelete
  13. மணி மணியாக் கோலம். இதுவரை பார்த்திராத ஆண்டாள் அலங்காரம் ரொம்ப அழகா இருக்கு இராஜராஜேஸ்வரி.கீழ இருக்கிற வைஷணவைக் கோல போட்டவர் கைகளுக்கு என்ன கொடுக்கலாம் என்று யோசிக்கிறேன். நானும் ஒரு காலத்தில் இப்படிப் போட்டவள்.இப்பொழுது அறுகோணக் கோலத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்:)

    ReplyDelete
  14. காலையில் அருமையான தரிசனம்..நன்றி

    ReplyDelete
  15. பழனி.கந்தசாமி said...
    நான் சில வருடங்கள் முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்குப் போயிருந்தபோது ஆண்டாள் பிறந்த இடம் என்று ஒரு சிறு கோவிலைக் காட்டினார்கள். அவ்வளவு சிலாக்கியமாக பராமரிக்கப் படவில்லை.

    இப்போது எப்படி இருக்கிறதென்று தெரியவில்லை?//

    கருத்துரைக்கு நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  16. Thava Kumaran said...
    அழகான படங்களுடன் காலையில் அருமையான தரிசனம்..நன்றி அம்மா..தொடருங்கள்.//


    கருத்துரைக்கு நன்றிகள்

    ReplyDelete
  17. சீனு said...
    அருமையான படங்கள் அம்மா, சூடிக் கொடுத்த சுடர் கொடியாளின் வாரணம் ஆயிரம் பாடல் பற்றி எழுதுங்களேன்....//

    ஏற்கெனவே எழுதியிருக்கிறேன் ..

    அருமையான கருத்துரைக்கு நன்றிகள்..

    ReplyDelete
  18. Lakshmi said...
    அழகான படங்களுடன் பகிர்வும் நல்லா இருக்கு//


    அழகான கருத்துரைக்கு நன்றிகள் அம்மா.

    ReplyDelete
  19. கோமதி அரசு said...
    திருப்பாவையில்” ஓங்கி உலகளந்த” என்று ஆரம்பிக்கும் பாடலையும்,திருவெம்பாவையில் ”முன்னிக் கடலைச்சுருக்கி ”என்று ஆரம்பிக்கும் பாடலையும் பாடினால் நல்ல மழை வளம் இருக்கும் எல்லா செல்வங்களும் அதனால் கிடைக்கும் என்பார்கள் அந்த பாடல் பகிர்வுக்கும்,
    சூடி கொடுத்த் சுட்ர் கொடியின் அழகான படப்பகிர்வுக்கும் நன்றி.//

    ஆழிமழைக்கண்ணா என்ற பாசுரம் மழைவேண்டி பிரார்த்தனையாக கோவில்களில் பாடும் வழக்கம் உண்டு ...

    அழகான கருத்துரைக்கு நன்றிகள் ..

    ReplyDelete
  20. வேடந்தாங்கல் - கருண் said...
    Nice.,/

    கருத்துரைக்கு நன்றிகள் ..

    ReplyDelete
  21. Sasi Kala said...
    சூடி கொடுத்த் சுட்ர் கொடியின் அழகான பகிர்வு.//

    அழகான கருத்துரைக்கு நன்றிகள்

    ReplyDelete
  22. அமைதிச்சாரல் said...
    அழகான தரிசனம். நன்றி ராஜராஜேஸ்வரி./


    அழகான கருத்துரைக்கு நன்றிகள்

    ReplyDelete
  23. Easy (EZ) Editorial Calendar said...
    படங்கள் அனைத்தும் மிக மிக அருமை..../

    அருமையான கருத்துரைக்கு நன்றிகள்..

    ReplyDelete
  24. இளமதி said...
    ஆயர்பாடிக்க கண்ணனில் ஆண்டாள் கொண்ட காதல்....ஆண்டாளின் திருப்பாவை ...

    ஓங்கி உலகளந்த உத்தமனார் என்றுதான் அறிந்திருக்கிறேன். ஓங்கி உலகளந்த ஆண்டாளை உங்கள் மூலம்தான் அறிகிறேன். அருமையான பதிவு.

    பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி...//

    அருமையான கருத்துரைக்கு நன்றிகள்..

    ReplyDelete
  25. priyasaki said...
    அழகான பதிவு. நீலநிற கண்ணன் ராதை படம் ரெம்ப அழகா இருக்கு.//

    அழகான கருத்துரைக்கு நன்றிகள்

    ReplyDelete
  26. வல்லிசிம்ஹன் said...
    மணி மணியாக் கோலம். இதுவரை பார்த்திராத ஆண்டாள் அலங்காரம் ரொம்ப அழகா இருக்கு இராஜராஜேஸ்வரி.கீழ இருக்கிற வைஷணவைக் கோல போட்டவர் கைகளுக்கு என்ன கொடுக்கலாம் என்று யோசிக்கிறேன். நானும் ஒரு காலத்தில் இப்படிப் போட்டவள்.இப்பொழுது அறுகோணக் கோலத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்:)/

    கோலத்தை ரசித்து அழ்காக கருத்துரை அளித்தமைக்கு இனிய நன்றிகள்...

    ReplyDelete
  27. படங்கள் பிரமாதம்.
    இந்த வில்லிப்புத்தூர் கோவில் சென்னையருகே இருப்பதா மதுரையருகே இருப்பதா?

    திருப்பாவை அத்தனையுமே சுவை. இந்தப் பாடலில் நிறைய ஆழம் உண்டு. குறிப்பாக, 'நீங்காத செல்வம்'.

    ReplyDelete
  28. வைஷ்ணவை கோலம் என்றால்? கோலத்தில் சைவ வைஷ்ணவ வகை இருக்கிறதா? விவரம் சொல்லுங்களேன் வல்லிசிம்ஹன்?

    ReplyDelete
  29. சூடிக் குடுத்த சுடர்க்கொடி பதிவு,
    படம் எல்லாமே தெய்வீகம் நிறைந்து இருக்கிறது.
    நப்பிண்ணை தன்னை கன்னாடியில் பார்த்துக் கொள்ளும் படத்தில் என் மனதைப் பறி கொடுத்தேன்.அந்த ராதையும் கிருஷ்ணனும் ஒருவரை ஒருவர் பார்த்து கண் சிமிட்டிக் கொண்டு பேசிக் கொள்வது போல் பதிவு செய்துள்ளீர்கள்.மிகவும் ரம்யம்.மிக நல்ல பதிவு.
    எங்கேயிருந்து பிடிக்கிறீர்கள் இந்த தெய்வீகப் படங்களை.
    பகிர்வுக்கு மிக்க நன்றி.
    ராஜி

    ReplyDelete
  30. சூடிக் கொடுத்த சுடர் கோடியை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்!
    பாராட்டுக்கள்!

    ReplyDelete
  31. அழகிய படங்கள் கண்ணையும் மனதையும் நிறைத்து நிற்கின்றன.

    ReplyDelete
  32. NOT ABLE TO COPY THE EXCELLENT PHOTOS

    ReplyDelete
  33. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் தெப்பக்குளம் "திருமுக்குளம்" பற்றி அரிய தகவல்கள், அற்புதமான ஸ்ரீ ஆண்டாள் படங்கள். அருமையான பதிவு.
    எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி & வாழ்த்துகள் திருமதி இராஜ ராஜேஸ்வரி.

    ReplyDelete
  34. சூடி கொடுத்த் சுட்ர் கொடியின் அழகான படப்பகிர்வு .... ;)))))

    பட்டுக்குட்டி போன்ற பவித்ரமான படங்களும் விளக்கங்களும்.

    சந்தோஷம் தரும் பகிர்வு.

    மொத்தத்தில் அனைத்துமே மிக அழகிய கோலம் .... பாராட்டுக்கள்.

    ReplyDelete
  35. வை.கோபாலகிருஷ்ணன் said...
    சூடி கொடுத்த் சுட்ர் கொடியின் அழகான படப்பகிர்வு .... ;)))))

    பட்டுக்குட்டி போன்ற பவித்ரமான படங்களும் விளக்கங்களும்.

    சந்தோஷம் தரும் பகிர்வு.

    மொத்தத்தில் அனைத்துமே மிக அழகிய கோலம் .... பாராட்டுக்கள்./

    வ்ணக்கம் ஐயா

    சந்தோஷம் தரும் அழகிய கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்...

    ReplyDelete