ரத்ன அங்கி - வெள்ளியாலான மெல்லிய சல்லாத் துணி -
வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசனம்
பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரேரே ஆயர்தம் கொழுந்தேயென்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகமாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருள்ளானே..--
- நாலாயிர திவ்யப்ரபந்தம்
ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து, மனம் ஒன்று. இந்த பதினொன்றையும் பரம்பொருளாம் திருமாலுடன் ஒன்றுபடுத்தும் நாளான ஸ்ரீவைகுண்ட ஏகாதசி. நாளில் விரதம் இருப்போருக்கு திருமால் பரமபத வாசலைத் திறந்து வைத்து அருள்புரிகிறார் என்பது ஐதீகம்.
ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் விழாக்களிலேயே மிகவும் போற்றப்படுவது மார்கழி மாதத்தில் வரும் அத்யயன உற்சவம் எனும் வைகுண்ட ஏகாதசி விழா ஆகும்.
பகல் பத்து தொடக்கத்தில் சந்தனு மண்டபத்தில் நம் பெருமாள் எழுந்தருள்வார்.
அன்று இரவு சந்தனு மண்டபப் பக்கமாக அரையர்கள் நின்று திருமங்கையாழ்வாரின் திருநெடுந்தாண்டகப் பாசுரங்களை அபிநயத்துடன் பெருமாள்முன் பாடி, நடிப்பது வழக்கம்.
பகல் பத்தாவது திருநாளன்று நம்பெருமாள், நாச்சியார் திருக்கோலம் - மோகினி அவதாரம் கொண்டு காட்சியளிப்பார்.
இராப்பத்து தொடங்குவது வைகுண்ட ஏகாதசியன்று. அன்றுதான்
பரமபத வாசல் திறக்கப்படும் புனித நாள்.
மூலவர் ரங்கநாதப் பெருமாளுக்கு முத்தங்கி அணிவிக்கப்படும்.
அன்று நம்பெருமாள் விடியற்காலை நாலரை மணியளவில் மூல ஸ்தானத்திலிருந்து ரத்ன அங்கி அணிந்து, அதை வெள்ளியாலான மெல்லிய சல்லாத் துணியால் மூடிக்கொண்டு பரமபத வாசல் வழியாக எழுந்தருள்வார்.
வைகுண்ட ஏகாதசியன்று முழு நாள் உபவாசம் இருப்பது சிறப்பானது.
முதல் நாள் தசமியன்று இரவே உணவு உண்ணாமல் இருப்பது வழக்கம். ஏகாதசிக்கு மறுநாள் துவாதசி அன்று சூரிய உதயத்திற்குமுன் சாப்பிட்டு முடித்துவிட வேண்டும்.
உணவில்அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றை அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அகத்திக்கீரையை "அமிர்தபிந்து' என்பர்.
நெல்லிக்காயில் ஹரி வாசம் செய்வதாகவும்,
சுண்டைக்காயில் தன்வந்திரியின் நிழல் இருப்பதாகவும் சாஸ்திரம் கூறுகிறது. இவை உடல்நலத்திற்கு வளம் தருபவை
Salagrama on Vaikunta Ekadasi - சாளக்கிரம அபிஷேகம்
வைகுண்ட ஏகாதசி அரங்கன் அழகு கொண்டை ,அடுக்குப்பதக்கம் , கஸ்தூரி திலகம் , முத்துமாலை, வைர ஹஸ்தம் , அலங்காரத்தில் அருளும் எழில் காட்சி !
காலையில் பரந்தாமன் தரிசனம் கோடி புண்ணியம்.
ReplyDeleteதங்கள் தயவால் பதிவால் ஸ்ரீரங்க நாதனை
ReplyDeleteசர்வ அலங்காரத்துடன் தரிசித்து மகிழ்ந்தோம்
வைகுண்ட ஏகாதேசியின் அருமை பெருமைகளையும்
அறிந்தோம்.பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
தங்கள் தயவால் பதிவால் ஸ்ரீரங்க நாதனை
ReplyDeleteசர்வ அலங்காரத்துடன் தரிசித்து மகிழ்ந்தோம்
வைகுண்ட ஏகாதேசியின் அருமை பெருமைகளையும்
அறிந்தோம்.பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
வைகுண்ட ஏகாதசிவிரதம் பற்றிதந்தமைக்கு நன்றிகள்.வைகுண்ட ஏகாதசியன்று அலங்காரத்தில்அரங்கன் காணக்கிடைக்காத காட்சிகள். படங்கள் அருமை.
ReplyDeleteஉங்க ஏகதேசி வாழ்த்துக்கு நன்றி ,எனக்கு பழசெல்லாம் ஞாபகத்துக்கு வருது ,
ReplyDeleteஎங்கப்பா தூங்க விடாம கூட்டத்துல நிக்க முடியாம அரோகரா கோவிந்தான்னு விடிய விடிய கோவில் வாசலில் நின்றது
ஓம் ஹரி ஓம் நமோ நாராயணாய
ReplyDeleteகாலையிலேயே திருமாலது தரிசனம் மனதுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது..நன்றியம்மா..
ஓம் நமோ நாராயணாய
ReplyDeletesubbu rathinam
தங்களின் இந்தப் பதிவு என்னை மலரும் நினைவுகளில் மூழ்கச் செய்து விட்டது.
ReplyDeleteநான் அப்போது பள்ளி மாணவன்.
ஒவ்வொரு ஆண்டும் எங்கள் ஊர் சேலம் கோட்டை பெருமாள் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா பிரசித்தம் வாய்ந்தது. இரவு சுமார் பனிரெண்டு மணிக்கு குளித்து முடித்து விட்டு, கோவிலுக்கு சென்று வரிசையில் நின்று விடுவேன். முன்னதாக ஒரு நாள் விரதம் இருப்பதன் விளைவாக பனியில் உடல் நடுங்கும். எனினும் அதுவே ஒரு சுகமாக இருக்கும். அதிகாலை கோவில் திறந்தவுடன், திவ்ய தரிசனம். கூட்டம் அதிகம் இருக்கும். இருப்பினும் பெருமாள் சிந்தனைகள் நம்மை தனியாக அழைத்து செல்லும். தரிசனம் முடிந்தவுடன் சொர்க்க வாசல் வழியாக வெளியே வர கூட்டம் அலை மோதும். அக்கூட்டமே நம்மை சொர்க்க வாசல் வழியாக வைகுண்டம் அழைத்து செல்லும். சொர்க்க வாசல் வழியாக வெளியே வந்த பிறகு, கிடைக்கும் ஒரு புத்துணர்ச்சி வார்த்தையால் விவரிக்க இயலாத ஒன்று. அது அடுத்த வைகுண்ட ஏகாதசி வரை தாங்கும்.
வெளியில் வந்த பிறகு கரும்பு ஒரு ஜோடி வங்கிக் கொண்டு, புதிய பரமபதமும், புதிய தாயக்கட்டையும் வாங்கிக் கொண்டு வீடு வந்து வெற்றி வீரனாக சேரும் போது உண்மையில் பெருமாள் கண் திறந்து பார்த்து ஆசி வழங்கியது மனம் மகிழ்ச்சி கொள்ளும்.
இது நான் கல்லூரி படிக்கும் காலம் வரை தொடர்ந்தது. பிறகு அன்றைய தினமே அதாவது வைகுண்ட ஏகாதசி தினமே கோவிலுக்கு செல்வது கொஞ்சம் கொஞ்சமாக நின்று போனது. ஆனால் அன்றைய தினமே கரும்பு தின்பது நிற்கவில்லை. நம் பிள்ளைகள் செல்கிறார்கள்.
வைகுண்ட ஏகாதசி சிறப்பு பதிவில் தகவல்களும் படங்களும் அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஆமா , இந்த வருடம் வைகுண்ட ஏகாதசி எப்போது? திருப்பதி, ஸ்ரீ ரங்கம் வேற டேட் சொல்றாங்களே?
ReplyDeleteவேடந்தாங்கல் - கருண் said...
ReplyDeleteஆமா , இந்த வருடம் வைகுண்ட ஏகாதசி எப்போது? திருப்பதி, ஸ்ரீ ரங்கம் வேற டேட் சொல்றாங்களே?
டிசம்பர் 24 - வைகுண்ட ஏகாதசி..
Advocate P.R.Jayarajan said...
ReplyDeleteதங்களின் இந்தப் பதிவு என்னை மலரும் நினைவுகளில் மூழ்கச் செய்து விட்டது./
மலரும் நினைவுகளின் மலர்ச்சியான பகிர்வுகளுக்கு இனிய நன்றிகள்...
sury Siva said...
ReplyDeleteஓம் நமோ நாராயணாய
subbu rathinam //
ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ பகவதே வாசுதேவாய ..
Thava Kumaran said...
ReplyDeleteஓம் ஹரி ஓம் நமோ நாராயணாய
காலையிலேயே திருமாலது தரிசனம் மனதுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது..நன்றியம்மா.. //
ஓம் ஹரி ஓம் நமோ நாராயணாய
மனதுக்கு மகிழ்ச்சியளித்த கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..
கவியாழி கண்ணதாசன் said...
ReplyDeleteஉங்க ஏகதேசி வாழ்த்துக்கு நன்றி ,எனக்கு பழசெல்லாம் ஞாபகத்துக்கு வருது ,
எங்கப்பா தூங்க விடாம கூட்டத்துல நிக்க முடியாம அரோகரா கோவிந்தான்னு விடிய விடிய கோவில் வாசலில் நின்றது ..//
இனிய நினைவுகளின் அருமையான பகிர்வுகளுக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றிகள்..
priyasaki said...
ReplyDeleteவைகுண்ட ஏகாதசிவிரதம் பற்றிதந்தமைக்கு நன்றிகள்.வைகுண்ட ஏகாதசியன்று அலங்காரத்தில்அரங்கன் காணக்கிடைக்காத காட்சிகள். படங்கள் அருமை./
அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..
Ramani said...
ReplyDeleteதங்கள் தயவால் பதிவால் ஸ்ரீரங்க நாதனை
சர்வ அலங்காரத்துடன் தரிசித்து மகிழ்ந்தோம்
வைகுண்ட ஏகாதேசியின் அருமை பெருமைகளையும்
அறிந்தோம்.பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்..//
அருமையான கருத்துரைக்கும் வாழ்த்துகளுக்கும் இனிய நன்றிகள்..
பழனி.கந்தசாமி said...
ReplyDeleteகாலையில் பரந்தாமன் தரிசனம் கோடி புண்ணியம்.
அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..
வணக்கம்
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி(அம்மா)
ஸ்ரீவைகுண்ட ஏகதாசி பற்றிய விளக்கம் மிக அருமை இந்தப்பதிவுக்கு
(பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்) என்ற பாடல் அடி படைப்புக்கு நல்ல கருத்தை புகட்டுகிறது படங்கள் மிக அழகாக உள்ளது வாழ்த்துக்கள் அம்மா
தொடரகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி(அம்மா)
ஸ்ரீவைகுண்ட ஏகதாசி பற்றிய விளக்கம் மிக அருமை இந்தப்பதிவுக்கு
(பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்) என்ற பாடல் அடி படைப்புக்கு நல்ல கருத்தை புகட்டுகிறது படங்கள் மிக அழகாக உள்ளது வாழ்த்துக்கள் அம்மா
தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ReplyDeleteஒரே ஒரு முறை வைகுண்ட ஏகாதசியன்று அரங்கன் கோயிலில் பரமபதவாசல் வழியே போயிருக்கிறோம். கூட்டம் சொல்லி மாளாது. வாழ்த்துக்கள்.
சொர்க்க வாசல், அரங்கனின் படங்கள் என அனைத்தும் அருமை.
ReplyDeleteஸ்ரீரங்கம் போக முடியாத குறை தீர்ந்தது உங்கள் புண்ணியத்தால்!
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி!
உங்களின் இந்தப் பதிவை காணக் கண் கோடி வேண்டும்.
ReplyDeleteஉங்கள் புண்ணியத்தில் பகல் பத்து ராப்பத்து வைபவங்களை கண்ணார கண்டு கொண்டேன்.
பகிர்வுக்கு நன்றி.
ராஜி
நாவாய் பிளந்தானை, தேவாதி தேவனை பூலோக வைகுந்தம் சென்று சேவிக்க வைத்ததற்கு நன்றி
ReplyDeleteஅன்பின் இராஜ இராஜேஸ்வரி,
ReplyDeleteவைகுண்ட ஏகாதசி - நேரில் கண்டு களித்தது போலிருக்கிறது - வகை வகையான படங்கள் - அரூமையான் விளக்கங்கள் - நன்று நன்று
ஆன்மீகத்தினை அயராது வளர்க்கும் தங்களுக்கு ஸ்ரீரங்கம் ரங்க நாதப் பெருமாள் பூரண நலத்துடன், நீண்ட ஆயுளையும், நிறைந்த செல்வத்தையும், மட்டற்ற மகிழ்ச்சியையும், கருணை மழையையும் அளிக்க பிரார்த்தனைகளுடன் கூடிய நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
வைகுண்ட ஏகாதசி பெருமையையும், ஸ்ரீ ரங்கம் சொர்க்கவாசல் படபகிர்வும் அருமை.
ReplyDeleteகண்குளிர தரிசனம் செய்தேன் நன்றி.
ReplyDeletewin win
6:04 PM (54 minutes ago)
to me
அன்புள்ள அம்மா,
ஏகாதசி, ஆண்டாள் மற்றும் நாராயணன் கதைகள், படங்கள் நிறைந்த பதிவுகள் அனைத்தும் அருமை.
அனைத்தையும், இப்பொழுது தான் பார்த்தேன்.
கோவிலுக்கு சென்று அரகில் தரிசித்து போன்ற நிறைவு ஏற்பட்டது !
பகிர்வுக்கு நன்றி.
அன்புடன்,
சஞ்சு ///
கருத்துரைக்கு இனிய நன்றிகள்...
மனதிற்கு நிறைவைத் தரும் இறைவனின் நினைவுகள்! நித்தம் நித்தம் வந்து போகுதம்மா! தங்களின் இனிய பதிவுகளை படிக்கையில்! ஒன்றிவிடுகின்றேன்! பகிர்வு மிக்க அருமை! நன்றி!
ReplyDeleteஸ்ரீ ரங்கம் - நல்ல தரிசனம். நன்றி.
ReplyDeleteவெகு அழகான படங்கள்.
ReplyDeleteஅற்புதமான விளக்கங்கள்.
கோயிலுக்குச்சென்று வந்தது போன்ற உணர்வினைத்தந்தது.
பாராட்டுக்கள்.
வாழ்த்துகள்.
சந்தோஷம் தரும் பகிர்வுக்கு நன்றிகள்.