Saturday, December 29, 2012

ஓம் நமசிவாய'

கங்கை அணிந்தவா! கண்டோர் தொழும் விலாசா!
சதங்கை ஆடும் பாத விநோதா! லிங்கேஸ்வரா!
நின் தாள் துணை நீ தா!
தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா
அல்லல் தீர்த்தாண்டவா வா வா அமிழ்தானவா வா 
எல்லையை மிதித்தாலே தொல்லை வினைகள் இனி இல்லை என்றாக்கும் அருட்தலம் தில்லை சிதம்பரம் .. 
பஞ்ச பூதங்களில் ஈசன் ஆகாயமாகி நின்றதனால் தரிசிக்க முக்தி தரும் தலம்.

ஆகயத்தலமாகச் சிறப்பித்துப் போற்றப்படும் சிதம்பரத்தில்  மூலவரும், உற்சவரும் என சிவபெருமான், ஆடல்வல்லான் ஆகி ஸ்ரீநடராஜர் மூர்த்தியாய் அருள்பாலிக்கின்றார்.
நடனத்தின் நாயகன் வித்தியாசமாகவும், அதிசயமாகவும் சுவாமியின் திருமேனி ஸ்ரீசக்கரத்தில் அடங்கிஅருட்காட்சி அருள்கிறார்..
தொங்கு சடையாக சுவாமியின் மேனியில் பரவித் திகழும் காட்சி காணக்காண திகட்டாதது ..  . 

ஆடவல்லானின் கலைகள் ஒவ்வொன்றும் எல்லா தெய்வங்களின் உருவில் மிளிர்கின்றது.
ஒவ்வொரு நாள் இரவும் அர்த்த ஜாம பூஜை நடைபெறும் சமயம் 64 கலைகளும் சுவாமியின் திருப்பாத கமலத்தில் ஐக்கியமாகி பின்பே அந்தந்த தலங்கட்கு திரும்புகின்றன என்பது ஐதீகம். 

சிதம்பரத்தில் உள்ள பெருமான் தானே வந்து சிலையாக அமர்ந்ததால் பெரும் சிறப்பைப் பெறுகின்றது. 

நடராஜர் சிலை வடிக்க மன்னன் ஆணையிட, சிற்பிகள் சிலை வடிக்க முற்பட்ட சிலை உருவாகும் நேரத்தில் ஒவ்வொரு முறையும் எப்படியோ தவறு நடந்துசிலை முழுமையடையவில்லை. 

மிகவும் கவலையுற்று நம்பியவர்களைக் காக்கும் நடராஜர் பாதத்தில் சரணடைந்து மனம் உருகி வேண்டியபடி சிலையமைக்கும் இடம் சென்ற. போது ஒரு வயோதிகர்  நின்று உணவு  யாசிக்க
உலோகக் கூழ்தான் உள்ளது.  என்றனர் சிற்பியர் 
உலோகக் கூழையே  அன்புடன் சுவைத்த வயோதிகர்  புன்னகையுடன் 
குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயும், குமிழ் சிரிப்பும், பனித்த சடையும், பவளம்போல் மேனியும், பால் வெண்ணீறும், இனித்தமுடைய எடுத்த பொற்பாதத்துடன் 
ஆடல்பிரானாக  சிரித்துக்கொண்டே அருட்காட்சி தந்து நின்றார். 

சிதம்பர நடராஜன் தானே உகந்து வந்து  உய்யும் பொருட்டு  அருளாசி தருகின்றார். 
நட்சத்திரங்கள் மொத்தம் 27ல் "திரு' என்ற அடைமொழியைக் கொண்டது திருவாதிரை, திருவோணம் என்ற இரண்டுமாகும். 

திருவாதிரை நட்சத்திரம் சிவனுக்கு உகந்தது.
ஒருமுறை சுவாமி, அம்பாள் இருவருக்கும் நடனத்தில் சிறந்தவர் யார் என்ற போட்டி வந்தது. முடிவில் சுவாமி வெற்றி பெற்றதை பிரம்மா, விஷ்ணு, இந்திரன் கூறத் தயங்கியவர்களாய் நின்றனர். அப்போது சுவாமி, மயிலாப்பூரில் நெசவு செய்யும் திருவள்ளுவர் மூலம் கூறப் பணித்தார். திருவள்ளுவருக்கு சுவாமி தறிமேடையில் நடனக் காட்சியைத் தந்தருளின நாள் திருவாதிரை நாளாகும்.
 மார்கழி மாதம், திருவாதிரை அன்று முன் நாளிரவு முதல் ஜாமபூஜை. சுவாமிக்கு மிகவும் அழகான முறையில் பெரிய அளவில் ஆயிரங்கால் மண்டபத்தில் விடிய விடிய அதிகாலை 3 மணிக்கு   மூலாதார பூஜை  என சிறப்புடன் நடைபெறும்.
 சிவன் ஐந்தொழில்களை உலகிற்கு உணர்த்தும் தாண்டவ தரிசனம் தரும் நாளாகும். 
அம்பலவாணரின் நான்கு சபைகளில் பொற்சபை எனப் போற்றப்படும் சிதம்பரத்தில்தான் நந்தனார் எனும் அடியவர்க்கு தரிசனம் அளித்து வியந்து போற்றச் செய்தார்.....

 பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் மருதவாணரை, சிதம்பரத்தில் ஆடல்பிரான், நடராஜர், நடேசன், இரத்தின சபாபதி, அம்பலவாணன் எனப் பல திருநாமங்களில் போற்றப்படும் பிரபுவை "நமசிவாய' எனும் மந்திரத்தை ஓதி வளம் பல பெற வழிபடுகிறோம்...

ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
தங்க நிலாவினை அணிந்தவா
ஆடுகிறேன் பூலோகையா அருளில்லையா (ஓம்)
பஞ்ச பூதங்களும் முகவடிவாகும்
ஆறு காலங்களும் ஆடைகளாகும்

மலைமகள் பார்வதி உன்னுடன் நடக்க
ஏழு அடிகளும் சலங்கை படிக்க 

ராகம் பார்வையே எட்டுதிசைகளே
உன் சொற்களே நவரசங்களே

கயிலாச மலைவாசா கலையாவும் நீ
புது வாழ்வு பெறவே அருள்புரி நீ

மூன்று காலங்களும் உந்தன் விழிகள்
சதுர் வேதங்களும் உந்தன் மொழிகள்

கணபதி முருகனும் பிரபஞ்சம் முழுதும்
இறைவா உன்னடி பெறவே துடிக்கும்

அத்வைதமும் நீ ஆதியந்தம் நீ
நீ எங்கு இல்லை புவனம் முழுதும் நீ 


 //sury Siva said...
All May listen to this Divine Song of Ms.Rajeswari
by pasting this URL below:
http://www.youtube.com/watch?v=Vu05FRDWgXo

Thank U Ms.Rajeswari
subbu thatha//
 காணொளிப் பகிர்வுக்கு நன்றி ஐயா...

17 comments:

  1. Aha.....
    Aha......
    En makilchikku varthaikele illai amma........
    Thanks
    The single word Thanks contains all my emotions dear.
    viji

    ReplyDelete
  2. திருவள்ளுவருக்கு காட்சி தந்த தகவல் புதியது.
    ஏராளாமான தெய்வப் படங்கள்.பக்திமனம் கமழ்ந்தது.

    ReplyDelete
  3. இவ்வளவு அருமையான படங்களுடன் சிறப்பாக தகவல் களும் எப்படி தினசரி பதிவாக போடுரீங்க? அந்த ரகசியம் எனக்கும் சொல்லிதாங்க.

    ReplyDelete
  4. //எல்லையை மிதித்தாலே தொல்லை வினைகள் இனி இல்லை என்றாக்கும் அருட்தலம் தில்லை சிதம்பரம்.//

    உணர்ந்த உண்மை.

    ReplyDelete
  5. பளபளக்கும் படங்களும், பொருத்தமான பாடல் வரிகளும்
    பதிவில் புதினத்தை தினம்தினம் புகுத்துகிறது. வாழ்த்துக்கள் !

    http://sattaparvai.blogspot.in/2012/12/blog-post_29.html

    ReplyDelete
  6. ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ....

    அற்புதம் அருமை மனதிற்கு இனிமை.

    பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  7. நடராஜர் ஜொலிக்கிறார்.. காணக்கண்கோடி வேண்டும்.

    ReplyDelete
  8. All May listen to this Divine Song of Ms.Rajeswari
    by pasting this URL below:
    http://www.youtube.com/watch?v=Vu05FRDWgXo

    Thank U Ms.Rajeswari
    subbu thatha

    ReplyDelete
  9. ^படங்களுடன் கூடிய தில்லை சிதம்பர நடராஜர் பற்றிய‌ தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  10. அசத்தலான படங்களுடன் அருமையான பதிவு

    ReplyDelete
  11. சிறப்பானதொரு பதிவு! அழகிய வண்ணப்படங்கள் அருமை! கண்களை மட்டுமல்ல உள்ளங்களையும் கொள்ளை கொள்கின்றன! பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  12. அற்புதமாக திருவுருப்படங்கள்
    அறியாத பலபுதிய அரிய தகவல்கள்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. அன்பின் இராஜ ராஜேஸ்வரி - திருவாதிரைத் திருநாள் சிறப்பு தரிசனம் பற்றிய ப்திவு அருமையிலும் அருமை - எத்தனை எததனை படங்கள் - பல்வேறு தோற்றங்களீல் ஆடலரசன் - பாடல்கள் - விளக்கங்கள் - அத்தனையும் கண்கலீஆயும் கருத்தினையும் கவர்ந்தன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  14. அருமையான பதிவு.
    அற்புதமான படங்கள்.
    நன்றி அம்மா.

    ReplyDelete
  15. ஓம் நமச்சிவாயா !

    ப்ரும்மாண்டமான படங்களுடன் கூடிய அற்புதமான பதிவு.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete