Wednesday, December 19, 2012

வாரணம் ஆயிரம் ...








வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்து புறமெங்கும்
தோரணம் நாட்ட கனாக் கண்டேன் தோழீ ! நான் ...

நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாளை கமுகு பரிசுடை பந்தர் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர்
காளை புகுத கனாக் கண்டேன் தோழீ ! நான் .........

இந்திரன் உள்ளிட்ட தேவர் குலமெல்லாம்
வந்திருந்து என்னை மகள் பேசி மந்திரித்து
மந்திரக் கோடி யுடுத்தி மணமாலை
அந்தரிநாட்ட கனாக் கண்டேன் தோழீ! நான் .....

நால் திசை தீர்த்தம் கொணர்து நனி நல்கி
பார்பன சிட்ட்ர்கள் பல்லார் எடுத்தேத்தி
பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னை
காப்பு நாண் கட்ட கனாக் கண்டேன் தோழீ ! நான்.. 

கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்தி
சதிரிள மங்கையர்தாம் வந்தெதிர் கொள்ள
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டேங்கும்
அதிரப்புகுத கனாக் கண்டேன் தோழீ ! நான் .............

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடை தமம் நிறைந் தாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசுதன் வந்தென்னை
கைத்தலம்பற்றக் கனாக் கண்டேன் தோழீ ! நான் ..

வாய் நல்லார் நல்ல மறையோதிமந்திரத்தால் 
பாசிலை நாணல் பதித்துபரிதிவைத்து 
காய்சின மாகளிறன்னான் என்கைப்பற்றி
தீவலம் செய்யக் கனாக் கண்டேன் தோழீ!  நான் ....

இம்மைக்கும் ஏழேழு பிறவிக்கும் பற்றவான்
நம்மை உடையவன் நாராயணன் நம்பி
செம்மை உடயதிருக்கையால் தாள்பற்றி
அம்மி மிதிக்க கனாக் கண்டேன் தோழீ!  நான் ...

வரிசிலை வாள்முகத்து என்னை மார்தாம் வந்திட்டு
எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கைமேல் எங்கை வைத்து
பொரி முகம் தட்ட கனாக் கண்டேன் தோழீ! ! நான் .

குங்குமம் அப்பி குளிச்சந்தம் மட்டித்து 
மங்களவீதி வலம் செய்தி மணநீர் 
அங்கவனோடும்உடன்சென்ற றங்கானை மேல்
மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் தோழீ!  ! நான் ..

ஆயனுக்காக தான் கண்ட கனாவினை
வேயர் புகழ்வில்லி புத்துர்கோன் கோதை சொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர் 
வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே ...

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்..!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ வாசுதேவாய..!!

39 comments:

  1. அத்தனையும் அழகு ,கோவிலுக்கே போக வேண்டாம் உங்கள் பதிவுகளை பார்க்கும்போதே அனைத்தும் நேராக பார்ப்பதுபோல் உள்ளது அருமை

    ReplyDelete
  2. தங்களின் பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்! வாருங்கள் வலைச்சரத்திற்கு! நன்றி!
    http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_9668.html

    ReplyDelete
  3. மிக அழகான படங்கள்

    ReplyDelete
  4. படங்கள் மிக மிக அருமை... நன்றி...

    ReplyDelete
  5. அற்புதமான படங்கள்!

    ReplyDelete
  6. சிறப்பான படங்கள்.....

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  7. அற்புதமான படங்கள் அதற்கான பாடல்கள் அழகு

    ReplyDelete
  8. ஆண்டாள் திருமணப்படங்கள்,அதற்குரிய பாடல்கள் கொடுத்தமைக்கு நன்றிகள்.அழகான படங்கள்

    ReplyDelete
  9. அன்பின் இராஜ இராஜேஸ்வரி,

    பூமாலை சூட்டினால் வாடி விடுமென்று பாமாலை சூட்டினாள் பாவை. சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் ! கோதை நாயகி ! கண்ணனைக் கண்களால் கண்டு! காயாம்பூ மேனியனை மாலை சூட்டி மணந்தாள். மனச் சிறையில் வைத்தாள். மாவிலைத் தோரணங்கள் மங்கையை வலம் வந்தன் - மணாளனொடு ! அத்தனையும் சொல்கின்ற பதிவு அருமை - படங்களோ அதனினும் அருமை.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  10. ஆண்டாளின் திருமணம் கண்டேன்.கனவு அல்ல நிஜம்.
    படங்கள் எல்லாம் உயிர்வோயிங்கள்.

    வாழ்த்துக்கள்.
    ஆண்டாள் திருவடிகளே சரணம்.

    ReplyDelete
  11. வாரணமாயிரம் பத்துப் பாடல்களையும் தினமும் சேவித்து வந்தால் புத்திரப் பேறு நிச்சயம் கிடைக்கும் என்று கடைசி பாசுரத்தில் 'வாயும் நன் மக்களைப் பெற்று மகிழ்வரே' என்கிறாள் ஆண்டாள்.

    புகைப்படங்கள் அருமை!

    ReplyDelete
  12. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளின் நாச்சியார் திருமொழிப் பாடல்கள் அற்புதமான அழகிய படங்களுடன்...திவ்வியதரிசனம்..

    மிக்க நன்றி உங்கள் பகிர்வுக்கு...

    ReplyDelete
  13. பாடல் வரிகளுடனான படங்கள் அழகோவியம்.

    ReplyDelete

  14. உங்கள் பதிவுகள் கண்டு வியக்கும் நான் உங்கள் அறிவு கூர்மையையும் சுடோகு புதிர் சால்வ் செய்ததில் கண்டு உங்களுக்கு ஒரு பட்டம் தருகிறேன். விவரம் என் பதிவில். பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன். நன்றி.

    ReplyDelete
  15. பாடல்களுடன் படங்களும் அணிவகுத்து பகிர்வு சிறப்புப் பெறுகின்றது. அருமை.

    ReplyDelete
  16. கவியாழி கண்ணதாசன் said...
    அத்தனையும் அழகு ,கோவிலுக்கே போக வேண்டாம் உங்கள் பதிவுகளை பார்க்கும்போதே அனைத்தும் நேராக பார்ப்பதுபோல் உள்ளது அருமை///

    அருமையான கருத்துரை வழங்கியமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ..

    ReplyDelete
  17. Seshadri e.s. said...
    தங்களின் பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்! வாருங்கள் வலைச்சரத்திற்கு! நன்றி!
    http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_9668.html //


    வலைச்சரத்தில் பகிர்ந்ததற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ..

    ReplyDelete
  18. ஆட்டோ மொபைல் said...
    மிக அழகான படங்கள் ..

    அழகான கருத்துரை வழங்கியமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் .

    ReplyDelete
  19. ஸ்கூல் பையன் said...
    படங்கள் மிக மிக அருமை... நன்றி..

    .அருமையான கருத்துரை வழங்கியமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ..

    ReplyDelete
  20. கே. பி. ஜனா... said...
    அற்புதமான படங்கள்!//

    அற்புதமான கருத்துரை வழங்கியமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் .

    ReplyDelete
  21. வெங்கட் நாகராஜ் said...
    சிறப்பான படங்கள்.....

    பகிர்வுக்கு நன்றி. //

    சிறப்பான கருத்துரை வழங்கியமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் .

    ReplyDelete
  22. SRH said...
    அற்புதமான படங்கள் அதற்கான பாடல்கள் அழகு ..

    அற்புதமான கருத்துரை வழங்கியமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் .

    ReplyDelete
  23. priyasaki said...
    ஆண்டாள் திருமணப்படங்கள்,அதற்குரிய பாடல்கள் கொடுத்தமைக்கு நன்றிகள்.அழகான படங்கள் //

    அழகான கருத்துரை வழங்கியமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் .

    ReplyDelete
  24. cheena (சீனா) said...
    அன்பின் இராஜ இராஜேஸ்வரி,

    பூமாலை சூட்டினால் வாடி விடுமென்று பாமாலை சூட்டினாள் பாவை. சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் ! கோதை நாயகி ! கண்ணனைக் கண்களால் கண்டு! காயாம்பூ மேனியனை மாலை சூட்டி மணந்தாள். மனச் சிறையில் வைத்தாள். மாவிலைத் தோரணங்கள் மங்கையை வலம் வந்தன் - மணாளனொடு ! அத்தனையும் சொல்கின்ற பதிவு அருமை - படங்களோ அதனினும் அருமை.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா //

    இன்று எமது பல பதிவ்களுக்கும் அருமையான உற்சாகமளிக்கும் இனிய் கருத்துரைகள் பல வழங்கி பெருமைப்படுத்தியமைக்கு மனம் நிறைந்த இனிய் நன்றிகள் ஐயா...

    ReplyDelete
  25. கோமதி அரசு said...
    ஆண்டாளின் திருமணம் கண்டேன்.கனவு அல்ல நிஜம்.
    படங்கள் எல்லாம் உயிர்வோயிங்கள்.

    வாழ்த்துக்கள்.
    ஆண்டாள் திருவடிகளே சரணம்./

    ரசித்து உணர்ந்து அருமையான கருத்துரை வழங்கியமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் .

    ReplyDelete
  26. Ranjani Narayanan said...
    வாரணமாயிரம் பத்துப் பாடல்களையும் தினமும் சேவித்து வந்தால் புத்திரப் பேறு நிச்சயம் கிடைக்கும் என்று கடைசி பாசுரத்தில் 'வாயும் நன் மக்களைப் பெற்று மகிழ்வரே' என்கிறாள் ஆண்டாள்.

    புகைப்படங்கள் அருமை!//

    பாசுரத்தின் பலனை அருமையாக உரைத்தமைக்கு இனிய நன்றிகள்..

    மகனின் திருமணத்தில் இந்த பத்து பாசுரங்களும் வருமாறு வீடியோவும் , ஆல்பமும் அமைக்க ஏற்பாடு செய்தேன் ...
    அருமையாக மனம் நிறைந்தது ...

    ReplyDelete
  27. இளமதி said...
    சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளின் நாச்சியார் திருமொழிப் பாடல்கள் அற்புதமான அழகிய படங்களுடன்...திவ்வியதரிசனம்..

    மிக்க நன்றி உங்கள் பகிர்வுக்கு...//

    திவ்வியமான கருத்துரை வழங்கியமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்

    ReplyDelete
  28. Sasi Kala said...
    பாடல் வரிகளுடனான படங்கள் அழகோவியம். //



    சிறப்பான கருத்துரை வழங்கியமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்

    ReplyDelete
  29. G.M Balasubramaniam said...

    உங்கள் பதிவுகள் கண்டு வியக்கும் நான் உங்கள் அறிவு கூர்மையையும் சுடோகு புதிர் சால்வ் செய்ததில் கண்டு உங்களுக்கு ஒரு பட்டம் தருகிறேன். விவரம் என் பதிவில். பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன். நன்றி. //

    //GENIUS என்று பட்டம் கொடுத்து மகிழ்கிறேன்//
    பட்டம் கொடுத்து பெருமைப்படுத்தியதற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  30. மாதேவி said...
    பாடல்களுடன் படங்களும் அணிவகுத்து பகிர்வு சிறப்புப் பெறுகின்றது. அருமை.

    அருமையான கருத்துரை வழங்கியமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்

    ReplyDelete
  31. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளின் நாச்சியார் திருமொழிப் பாடல்கள் அருமை நன்றி. படங்களும் சிறப்பு
    நல்வாழ்த்து
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  32. ஆண்டாள் திருமனத்திற்கே அழைத்து சென்று விட்டீர்கள்.
    புகைப்படங்கள் மனதை கொள்ளையடித்தன.

    பகிர்விற்கு நன்றி.

    ராஜி

    ReplyDelete
  33. Aravindkumar Jaghamani
    3:35 PM (16 hours ago)

    to me
    மைத்துனன் பிரகாஷன் மதுசூதன் வந்தென்னை கைதலம்பற்றக் கனாக் கண்டேன் தோழி! நான்....

    I am able to see the whole picture now.
    Thanks.//

    மகிழ்வான கருத்துரைக்கு
    மனம் நிறைந்த நன்றிகள்...

    ReplyDelete
  34. அருமையான பதிவு.
    நன்றி அம்மா.

    ReplyDelete
  35. மிகவும் அழகான பதிவு.

    அற்புதமான விளக்கங்கள்.

    படங்களும் பாமலைகளும் அருமையோ அருமையாய் உள்ளன.

    இந்தப்பதிவினை இன்று நான் படிப்பேன் என்று கானாக்கண்டேன் தோழீ!! நான்..

    ReplyDelete
  36. வை.கோபாலகிருஷ்ணன் said...
    மிகவும் அழகான பதிவு.

    அற்புதமான விளக்கங்கள்.

    படங்களும் பாமலைகளும் அருமையோ அருமையாய் உள்ளன.

    இந்தப்பதிவினை இன்று நான் படிப்பேன் என்று கானாக்கண்டேன் தோழீ!! நான்.//


    வணக்கம் ஐயா..

    அருமையாய்
    ஆண்டாளின் கனவுப்பதிவைபடித்து அற்புதமாய் நனவில் கருத்துரை வழங்கியதற்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா ...

    ReplyDelete
  37. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  38. your blog made my day beautiful to day. very nice one

    ReplyDelete
  39. your blog made my day beautiful today

    ReplyDelete