திருநாகேஸ்வரம்
******************
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவிமாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்தவதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே!
திருநாகேஸ்வரம் திருக்கோவில் இராஜகோபுரம் அருகில் ஒரு சிறிய சன்னதி இருக்கிறது.
அங்கே கணபதி யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிற்து.
இந்த இடம் முற்காலத்தில் அடர்ந்தக்காட்டுப் பகுதியாக இருந்தது.
அங்கே வசித்துவந்த பிரம்மராட்சஸ் ஒன்று அந்தப் பகுதியில் இருந்த மக்களை துன்புறுத்தி வந்தது. யார் கண்களுக்கும் புலப்படாமல் அட்டகாசம் செய்து அச்சுறுத்தி வந்தது.
சதாசிவப் பிரம்மேந்திரர் தரிசனத்திற்கு வந்தபோது பாதிக்கப்பட்ட மக்கள் மகானிடம் முறையிட்டனர். அவர் அந்த இடத்தில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார். பிரமமராட்சஸின் சேட்டைகளைத தன் சக்தியால் அறிந்து அடக்கினார்.
மௌன குருவாய், அவதூதராய் விளங்கி, இருநூறாண்டுகளுக்கும் மேல் வாழ்ந்து பலரது வாழ்க்கைச் சிறக்கக் காரணமான ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர்..
மக்களின் நன்மைக்காக இனி எந்த தீய சக்திகளும் அந்த கோவிலைச் சுற்றி நடமாட முடியாதபடி சக்திவாய்ந்த யந்திரப்பிரதிஷ்டை ஒன்றைக் கல்லில் வடித்து கோவிலின் முன் மந்திரப்பலகையில் ஸ்தாபிதம் செய்தார்.
இன்றும் பிரச்சினைகளுடன் வருபவர்கள் யந்திரத்தை வணங்கி முறையிட்டு தங்கள் ஊர் திரும்பியதும், காளைமாட்டுக்கு வாழைப்பழங்களைச் சாப்பிடக்கொடுத்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றி பிரச்சினை தீர்வதைக் கண்கூடாகக் காண்பதாகக் கூறுகிறார்கள்.
Sadasiva Brahmendra Jeeva Samadhi
பல அற்புதங்களை சதாசிவப் பிரம்மேந்திரர் நிகழ்த்தியிருக்கிறார். பிரசித்தி பெற்ற வேண்டுதல் தலமான தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் உள்ள மாரியம்மனின் திருமேனி புற்று மண்ணால் ஆனது. அதனால் அதற்கு அபிஷேகம் செய்யமாட்டார்கள்; புனுகு மட்டுமே சாற்றுவார்கள். தஞ்சை மன்னரின் நோயைத் தீர்க்க சதாசிவப் பிரம்மேந்திரர் அமைத்த திருவுருவம்தான் இந்த புன்னைநல்லூர் மாரியம்மன்!
கரூர் அருகே மூன்று கி.மீ. தூரத்தில், தான்தோன்றி மலையில் அமைந்துள்ளது கல்யாண வேங்கடேசப் பெருமான் ஆலயம். பெயருக்கேற்ப இங்கே விளங்கு பவர் உற்சவமூர்த்தி. இந்தத் திருவுருவிற்கு உயிரூட்டி கும்பாபிஷேகம் செய்வித்தவர் சதாசிவப் பிரம்மேந்திரர்தான். இதுவும் தற்போது சிறந்த பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது. திருப்பதி செல்ல இயலாத வர்கள் தங்கள் வேண்டுதலை இங்கே நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
புதுக்கோட்டை மன்னரின் வேண்டு கோளை ஏற்று, அவருக்கு சிறிது மணலை மந்திரித்துக் கொடுத்தார் சதாசிவர். அதை ஒரு தங்கப் பேழையில் வைத்து இன்றளவும் பூஜையறையில் பாதுகாத்து வருகின்றனர் அந்த வம்சத்தினர்.
இத்தகைய பெருமை வாய்ந்த சதா சிவப் பிரம்மேந்திரருக்கு மானாமதுரை, கராச்சி, நெரூர் ஆகிய தலங்களில் சமாதி உள்ளது. ஒருவருக்கே மூன்று சமாதிகள் எப்படி? சித்தர்களின் பிரபாவங்களை சாதாரண மக்களால் உணர்ந்து கொள்ள முடியாது
சிருங்கேரி மடாதிபதி சச்சிதானந்த நரசிம்ம பாரதி சுவாமிகளுக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டன. அவர் நெரூர் வந்து பிரம்மேந்திரரின் அதிஷ்டானத்தின் அருகே நிஷ்டையில் மூழ்கி னார். அப்போது அவருக்குக் காட்சி கொடுத்த பிரம்மேந்திரர் அவரது சந்தேகங்களைத் தீர்த்து வைத்தாராம். அதைப் பெரும் பாக்கியமாகக் கருதிய நரசிம்ம பாரதி சுவாமிகள், "ஸ்ரீசதா சிவேந்திர ஸ்தவம்' என்னும் 45 துதிகளால் பிரம்மேந்திரரை வழிபட்டார்.
அதில் 45-ஆவது துதி, "சதாசிவ சுவாமிகளே! தாங்கள் எப்போதும் நிறைந்த மனதுடன் இருப்பவர். இந்த மந்த புத்தியுள்ளவனால் செய்யப்பட்ட துதிகளை ஏற்று மகிழ்வீராக' என்பதாகும்.
சதாசிவப் பிரம்மேந்திரரின் பாதம் பணிந்து குருவருளும் திருவருளும் பெறுவோம்!
திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாதசுவாமி கோவில்
திருநாகேஸ்வரம் குளம்
நல்ல படங்கள் மற்றும் சிறப்பான தகவல்கள்....
ReplyDeleteசதாசிவ ப்ரமேந்த்ரர் பற்றிய தகவல்களுக்கும் திருநாகேஸ்வரம் படங்களுக்கும் நன்றி
ReplyDeleteஇரண்டாவது படம் மெய் சிலிர்க்க வைக்கிறது.. பதிவு தகவல்கள் அருமை . பகிர்வுக்கு நன்றி..
ReplyDeleteதிருமணத்திற்கு முன் திரு நாகேஸ்வரம் சென்று வந்திருக்கிறேன்.அற்புதமான கோயில்.
ReplyDeleteஅருமையான பல தகவல்களை மிக மிக சிறப்பான படங்களுடன் தொகுத்துத் தருகிறீர்கள்.
ReplyDeleteஇரண்டாவது படத்தில் இருப்பது உண்மையான நாகமோ...பார்க்கவே நடுக்கமாயிருக்கிறது.
பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி...
great post about sathasiva brammendirar
ReplyDeleteபிருமேந்திராள் பற்றிய தகவல்கள் அருமை! படங்கள் சிறப்பாக அமைந்தது! நன்றி!
ReplyDeleteதிருநாகேஸ்வரம் ஒருமுறை சென்று வந்திருக்கிறேன்..
ReplyDeleteபுதிய தகவல்கள்! நல்ல படங்கள்! பகிர்விற்கு நன்றி!
ReplyDeleteதிருநாகேஸ்வரம் பற்றியும், சதாசிவ ப்ரும்மேந்திரர் பற்றியும் தகவல்களும், படங்களும் வெகு அருமை.
ReplyDeleteகடைசியில் காட்டியுள்ள படம் ஜோர்.
பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.