ஓம் ஹ்ரீம் ரோம் கார்த்த வீர்யார்ஜுனாய நம: |
கார்த்த வீர்யார்ஜுனோ ராஜா பாஹூ ஸஹஸ்ரவாந் ||
தஸ்ய ஸ்மரந மாத்ரேன கதம் நஷ்டம் ச லப்யதே ||
கார்த்த வீர்யார்ஜுனனுக்கு ஆயிரம் கைகள். இந்த ஸ்தோத்திரத்தை ஜபிப்பதால் தன ஆயிரம் கைகளால் நஷ்டம் வராமல், காணாமல் போன பொருளைக் கண்டுபிடிக்க உதவ உதவிக்கழைக்கும் சுலோகம் இது.
ஸ்ரீ கார்த்தவீர்யர் காயத்ரீ மந்திரம்
ஓம் கார்த்தவீர்யாய வித்மஹே
மஹாசூஷ்மாய தீமஹி
தந்நோஸ்ர்ஜுநஹ் ப்ரசோதயாத்.
திருமாலின் சுதர்சன சக்கரம் திருமாலின் ஆணையின்பேரில்
கார்த்தவீர்யார்ஜுனனாகப் பிறந்தது.
பூஜையையும் சந்திர பூஜையையும் செய்து வினாயகரை வழிபட்பிள்ளைவரம் வேண்டி தவமிருக்கும் கிருதவீர்யனுக்கு மகனாக சுதர்சனம் பிறந்தது...
சுதர்சனச் சக்கரத்துக்கு ஆயிரம் ஆரங்கள். ஆயிரம் சுவாலைகள்.
அந்த ஆயிரம் ஆரங்கள்தான் கைகளும் கால்களுமில்லாமல் பிறந்து விநாயக ஏகாக்ஷரி என்னும் மந்திரத்தை பன்னிரண்டு ஆண்டுகள் ஜபம் செய்து தவமியற்றின கார்த்தவீர்யார்ஜுனனுடைய
ஆயிரம் கைகளாக தரணீதர விநாயகரால் கொடுக்கப்பட்டிருந்தன
தேவர்களை வென்றடக்கிய ராவணனையே வெல்லக்கூடிய
வலிமை மனித க்ஷத்திரியனாகிய கார்த்தவீர்யனுக்கு இருந்தது.
நர்மதை ஆற்றில் கார்த்தவீர்யார்ஜுனன் ஜலக்கிரீடையாக ஆற்றின் குறுக்கே தன்னுடைய ஆயிரம் கைகளையும் வைத்து தண்ணீரை அணை போல் தேக்கிவைத்து அதில் நீந்திக்குளித்துக்கொண்டு திடீரென்று கைகளை எடுத்துவிடும்போது அடைபட்ட தண்ணீர் திறந்துவிடப்பட்டு வெள்ளப்பெருக்கு போல் ராவணனின் சிவபூஜையைக் குலைத்துவிட்டது.
கோபப்பட்ட ராவணன் கார்த்தவீர்யனைக் குத்தச்சென்றான்.
கார்த்தவீர்யன் திரும்பிக்கூடப் பார்க்காமல் குத்தச்சென்ற கையைப் பிடித்துக்கொண்டான்.
இராவண்னுக்கு இருபது கைகள்... ஒவ்வொரு கையையும் கால்களையும் பிடித்துக்கொண்டுவிட்ட பின்னரும் கார்த்தவீர்யனின் தொள்ளாயிரத்து எழுபத்து எட்டு கைகள் மீதமிருந்தன.
ராவணன். கொஞ்சமும் அசைய முடியவில்லை. மூச்சு முட்ட. பார்க்குமிடமெல்லாம் எல்லாமே கார்த்தவீர்யனின் கைகள்.
ராவணனிடம் இருக்கும் வரங்கள் அவனைக் கொல்ல விடவில்லை ..கார்த்தவீர்யன் கடைசியில் ராவணனின் பரிதாப நிலையைப் பார்த்து ராவண்னை விரட்டிவிட்டான்.
கார்த்தவீர்யன் தன்னுடைய படைகளுடன் நர்மதைக் கரையிலிருந்த ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்தில் விருந்து உண்ட கார்த்தவீர்யன், நினத்ததையெல்லாம் கொடுக்கக்கூடிய காம் தேனுவைக் கேட்டதற்கு ரிஷி மறுத்துவிட அவரை வாளால் வெட்டிவிட்டு தேனுவைக் கவர்ந்து சென்றான்.
ஜமத்னி முனிவரின் மகன் பரசு ராமன் கார்த்தவீர்யனின் ஆயிரம் கைகளையும் தலையையும் கிரீடத்துடன் வீழ்த்தினார் ...
திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு சவுந்திரராஜப் பெருமாள் கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்கது. கடன்பிரச்னை நீங்க, தொலைந்தபொருட்கள் மீண்டும் கிடைக்க, மரணபயம் நீங்க, நியாயமான வழக்குகளில் வெற்றி பெற, கல்வியில் சிறந்தோங்க என்று பக்தர்களின் பல்வேறு குறைகளை நீக்க பல்வேறு பூஜைகளும், பரிகாரங்களும் செய்யப்படுகின்றன.