ஓம் அஸாத்ய ஸாதக ஸ்வாமின்
அஸாத்யம் கிம் தவ ப்ரபோ
ராமதூத மஹா ப்ராக்ஞ்ய மம கார்யம் ஸாதயா.
கடல் மணலில் உருவான சுயம்பு ஆஞ்சநேயராக ராமேஸ்வரத்தில் அருள்பாலிக்கிறார் அருள்மிகு அபய ஆஞ்சநேயர் திருக்கோயிலில்...
ராமதூத மஹா ப்ராக்ஞ்ய மம கார்யம் ஸாதயா.
கடல் மணலில் உருவான சுயம்பு ஆஞ்சநேயராக ராமேஸ்வரத்தில் அருள்பாலிக்கிறார் அருள்மிகு அபய ஆஞ்சநேயர் திருக்கோயிலில்...
ஆஞ்சநேயர் சன்னதி, எட்டு பட்டைகளுடன் கூடிய விமானத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. மூலஸ்தானத்தில் அபய ஆஞ்சநேயர், வாலறுந்த ஆஞ்சநேயர் என இரண்டு மூர்த்திகள் அருகருகில் காட்சி தரும்
"இரட்டை ஆஞ்சநேயர்'களை தரிசிக்கலாம்.
அபய ஆஞ்சநேயர் பீடத்திற்கு கீழே ஒரு கோடி "ராமரக்ஷை மந்திர எழுத்துக்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது சிறப்பு.
ஆஞ்சநேயருக்கு முன்புறம் ராமர் பாதம் இருக்கிறது.
ஆஞ்சநேயருக்கு முன்புறம் ராமர் பாதம் இருக்கிறது.
ராம நாமம் மதிப்பில்லாதது.
ஒரு தடவை ராம் என்று சொன்னால் அதன் மதிப்பு பத்து மடங்கு கூடும். அதையே ராம்... ராம்... ராம்.... என்று மூன்று தடவை சொன்னால் அதன் மதிப்பு ஆயிரம் மடங்கு உயர்ந்து விடும் (10*10*10=1000) அதாவது, சகஸ்ரநாமம் சொன்னதன் பலன் கிட்டும். அப்பேர்ப்பட்ட மகிமை வாய்ந்தது ராம மந்திரம்
ஆஞ்சநேயர் பக்தர்களின் பயத்தை போக்கி காத்தருள்பவர் என்பதால்,
"அபய ஆஞ்சநேயர்' என்றழைக்கப்படுகிறார்.
வெள்ளிக்கிழமைகளில் விசேஷ பூஜை செய்யப்படுகிறது.
அன்று தேங்காய், வெல்லம், அவல் சேர்ந்த கலவையை விசேஷ நைவேத்யமாக படைத்து வழிபடுகின்றனர்.
"அபய ஆஞ்சநேயர்' என்றழைக்கப்படுகிறார்.
வெள்ளிக்கிழமைகளில் விசேஷ பூஜை செய்யப்படுகிறது.
அன்று தேங்காய், வெல்லம், அவல் சேர்ந்த கலவையை விசேஷ நைவேத்யமாக படைத்து வழிபடுகின்றனர்.
சுயம்பு ஆஞ்சநேயர்: ஆஞ்சநேயர் உருவாக்கிய தீர்த்தம், கோயிலுக்கு பின்புறம் உள்ளது.
கோயில் முகப்பில் கடல் மணலில் உருவான சுயம்பு ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். இவருக்கும் வால் கிடையாது.
இந்த ஆஞ்சநேயர் சிலை, கடலில் கிடைக்கும் சிப்பி பதிந்த நிலையில் இருப்பது வேறெங்கும் காணக்கிடைக்காத அதிசயம்.
கோயில் முகப்பில் கடல் மணலில் உருவான சுயம்பு ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். இவருக்கும் வால் கிடையாது.
இந்த ஆஞ்சநேயர் சிலை, கடலில் கிடைக்கும் சிப்பி பதிந்த நிலையில் இருப்பது வேறெங்கும் காணக்கிடைக்காத அதிசயம்.
கடல் மண்ணால் ஆன வாலறுந்த ஆஞ்சநேயர்
கோயில் வளாகத்தில் தலவிருட்சம் அத்தி மரத்தில் இளநீரை கட்டி, ஆஞ்சநேயரிடம் வேண்டிக்கொள்ளும் வழக்கம் இருக்கிறது.
வேண்டுதல் நிறைவேறியதும் ஆஞ்சநேயருக்கு, வேறு இளநீரால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.
உக்கிரமாக இருந்து சிவலிங்கத்தை தகர்க்க முயன்றவர் என்பதால் குளிர்ச்சிப்படுத்தும்விதமாக இவ்வாறு செய்கிறார்கள்.
வேண்டுதல் நிறைவேறியதும் ஆஞ்சநேயருக்கு, வேறு இளநீரால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.
உக்கிரமாக இருந்து சிவலிங்கத்தை தகர்க்க முயன்றவர் என்பதால் குளிர்ச்சிப்படுத்தும்விதமாக இவ்வாறு செய்கிறார்கள்.
இளநீர் நேர்த்திகடன்
புரட்டாசி கடைசி சனிக்கிழமை, அனுமன் ஜெயந்தி, ஆனி ரேவதி நட்சத்திரம் ஆகிய மூன்று நாட்களில் மட்டும் இவருக்கு திருமஞ்சனம் செய்கின்றனர்.
புத்திர பாக்கியம் கிடைக்க, பயம், மனக்குழப்பம் நீங்க, பாதுகாப்பு உண்டாக வேண்டிக்கொள்கிறார்கள்.
இலங்கை சென்று ராவணனை வென்று, சீதையை மீட்டு வந்த ராமர் தோஷம் நீங்க ராமேஸ்வரம் கடற்கரையில் சிவலிங்க பூஜை செய்ய எண்ணினார்.
ராமரது பூஜைக்காக லிங்கம் எடுத்து வர ஆஞ்சநேயர், கைலாயம் சென்ற வேளையில் சீதாதேவி, மணலில் ஒரு லிங்கம் பிடித்து வைத்தாள். ஆஞ்சநேயர் வர தாமதமாகவே, ராமர் மணல் லிங்கத்தை பூஜை செய்து வழிபட்டார்.
அதன்பின்பு வந்த ஆஞ்சநேயர், நடந்ததையறிந்து வாலால் லிங்கத்தை சுற்றி மணல் லிங்கத்தை பெயர்க்க முயன்றார்.
ஆனால் வால் அறுந்ததே தவிர, லிங்கத்தை அசைக்கக்கூட முடியவில்லை.
ஆனால் வால் அறுந்ததே தவிர, லிங்கத்தை அசைக்கக்கூட முடியவில்லை.
தவறை உணர்ந்த ஆஞ்சநேயர், சிவஅபச்சாரம் செய்த குற்றம் நீங்க தீர்த்தம் உண்டாக்கி, சிவனை வழிபட்ட ஆஞ்சநேயர், வாலறுந்த கோலத்தில் மூலவராக காட்சி தருகிறார்.
BANGALORE, காரிய சித்தி ஆஞ்சநேயர்பெருமாள் ...
யோக ஆஞ்சநேயர், திருப்போரூர்,
தென்காசி குத்துக்கல்வலசை
சுபீட்ஷ வழித்துணை ஆஞ்சநேயர் - கிருஷ்ணர் அலங்காரம்.
சுபீட்ஷ வழித்துணை ஆஞ்சநேயர் - கிருஷ்ணர் அலங்காரம்.
ஒவ்வொரு படமும் சிறப்பு... விளக்கங்களுக்கு மிக்க நன்றி அம்மா... வாழ்த்துக்கள்... நன்றி...
ReplyDeleteஅனுமனை வழிபட்டு
ReplyDeleteஆன்மீக பலம் பெற்று
இராமேஸ்வரம் சென்று வந்தேன்
ஈசன் அருள் பெற்று வந்தேன்.
உங்கள் அன்பினாலே.
எல்லாம்.
சுப்பு தாத்தா.
படங்கள் அருமை. எல்லோருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயர் அருள் கிடைக்க வாழ்த்துக்கள்
ReplyDeletesuperb pictures madam
ReplyDeleteஅனுமனைப் பற்றிய எவ்வளவு செய்திகள் அத்தனையும் அருமை.
ReplyDeleteபடங்கள் எல்லாம் அழகு, தெய்வீகம்.
நன்றி, வாழ்த்துக்கள்.
அதென்னமோ சகோதரி! எனக்கெனவே நீங்கள் பதிவிடுவதாக சிலநாட்களில் அமைந்துவிடுகிறது. இன்றும் அதேசிறப்புத்தான். கண்களில் கசியும் கண்ணீரே அதன் சான்று.
ReplyDeleteஜெயம் தரட்டும் ராம பக்த ஹனுமான்!
அழகிய படங்கள்! அற்புத விஷயங்கள்! பகிர்தலுக்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரி!
ஆஞ்சநேயர் பற்றி படமும் பதிவும் மிகவும் அருமை அக்கா இந்தமாதிரி படம் எங்கே தான் தேடுறேங்களோ சூப்பர்
ReplyDeleteயோகநித்திரையில் ஆஞ்சநேயர் இன்றே கேள்விப்படுகிறேன். படங்களும் விளக்கங்களும் சிறப்புங்க.
ReplyDeleteஆஞ்சநேய விளக்கங்கள் விசேட படங்கள் வியப்புக்குரியன.
ReplyDeleteசந்தனக்காப்பு இன்னும் அத்தனை அலங்காரங்கள்,
தூக்கம் அனைத்தும் அற்புதம்.
இறையாசி நிறையட்டும்.
வேதா. இலங்காதிலகம்.
அறியாத புரணக்கதை ஒன்றை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க...
ReplyDeleteஅபய ஆஞ்சநேயர் தரிசனம் கண்டேன்! பரவசம் கொண்டேன்! வித்தியாசமான அனுமர்களை படங்களில் கண்டு மகிழ்ந்தேன்! நன்றி!
ReplyDeleteஎன்ன சொல்வது. அழகிய பதிவு, அழகிய விலைமதிப்பற்ற படங்கள், அதிலும் பூசனி வைத்த ஆஞ்சனேயர் புது விதமாக இருக்கெனக்கு.
ReplyDeleteLORD RAMAA WORSHIPPED SIVA LINGAM-----THIS IS BLASPHEMOUS AND NOT FOUND IN EITHER VALMIKI RAMAYANAM OR KAMBA RAMAYANAM--THIS STORY IS AN INTERPOLATION BY SIVA BAKTHAS---LORD RAMAA IS THE SUPREME LORD AND THERE IS NO NEED FOR HIM TO WORSHIP SIVA--IN FACT SIVA IS ALWAYS MEDITATING ON LORD RAMAA
ReplyDeleteLORD RAMAA WORSHIPPED SIVA LINGAM-----THIS IS BLASPHEMOUS AND NOT FOUND IN EITHER VALMIKI RAMAYANAM OR KAMBA RAMAYANAM--THIS STORY IS AN INTERPOLATION BY SIVA BAKTHAS---LORD RAMAA IS THE SUPREME LORD AND THERE IS NO NEED FOR HIM TO WORSHIP SIVA--IN FACT SIVA IS ALWAYS MEDITATING ON LORD RAMAA
ReplyDeleteஸ்ரீ அபய ஆஞ்சநேயரை, நான் இன்று தான் தரிஸிக்கப் பிராப்தம் ஏற்பட்டுள்ளது
ReplyDeleteநேற்று அம்மா நினைவுநாள் [திதி] + ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா ஜயந்தி. பலவிதமான வேலைகள். ஓய்வேதும் இல்லை.
என் தெய்வமான என் அம்மாவும், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளும் சேர்ந்து நேற்று இரவும், அதற்கு முதல் நாள் இரவும், பயங்கர இடி + மின்னலுடன் கூடிய பலத்த மழையை சுமார் ஒரு மணி நேரம் மட்டும் திருச்சிக்கு அளித்து, பூமியைக்கொஞ்சம்குளிர வைத்து விட்டனர்.
பேய்க்காற்று வந்து மழையை எங்கோ வேறு ஊர்களுக்குக் கொண்டு சென்று விட்டது. அதனால் இரவு முழுவதும் மின் தடை ஏற்பட்டு, இண்டர்நெட் கிடைக்காமல் கணினி பக்கம் சரியாக வரமுடியாமல் செய்துவிட்டது.
21 நாட்களுக்கு முன்பு ’ஸ்வர்ண குண்டல அனுமன்’ ஐ ஆசை தீர என்னால் அனுபவிக்க முடிந்தது. அந்த அனுமனை 78 முறை நானே சுத்திச்சுத்தி பிரதக்ஷணம் செய்து மகிழ்ந்தேன். இருப்பினும் ஏனோ அவரின் அனுக்ரஹம் எனக்கு நான் எதிர்பார்த்த அளவில் முழுமையாகக் கிடைக்கவில்லை.
இன்னும் மேலும் மேலும் பக்தி செலுத்தி, வரும் நாட்களில் ஆயிரம் வடைமாலைகள் சாத்தி, ஆயிரம் கிலோ வெண்ணெய் சாத்தி, ஆயிரம் ஜாங்கிரி மாலைகள் சாத்தி, ஆயிரம் வெற்றிகள் கிட்டிட ஆயிரம் வெற்றிலை மாலைகள் சாத்தி, துளஸி இதழ்கள் + பாரிஜாதமலர் என ஆயிரக்கணக்கில் பறித்து வந்து பூஜிக்கத் துடிக்குது என் மனது. ;)))))
ஹனுமனின் அருள் துளியாவது கிட்டினால் தான் என்னால் எதுவுமே ஆர்வமாகத் திட்டமிட்டு, எழுச்சியுடன் செயல் பட முடியும்.
ஹனுமனின் மெளனம் கலையட்டும். வாலைக்கொஞ்சம் ஆட்டட்டும். வாயைத்திறந்து பேசட்டும். ;)
21 நாட்களுக்குப்பிறகு இப்போது இன்று ஸ்ரீ அபய ஆஞ்சநேயர் தரிஸனம் கிடைத்துள்ளதில் மகிழ்ச்சியே
மிகச்சிறப்பான பதிவு. அழகான படங்கள், அற்புதமான விளக்கங்கள்.
மனமார்ந்த பாராட்டுக்கள், இனிய நல்வாழ்த்துகள், பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.
ooooo 922 ooooo
A small correction please !
ReplyDeleteooooo 920 ooooo
[and not 922]
ஆஞ்சநேய தர்சனம் கிடைத்து மகிழ்ந்தோம். படங்கள் சிறப்பு.
ReplyDeleteவணங்கி நிற்கின்றோம்.
31.05.2013 வெள்ளிக்கிழமையன்று இந்தத்தங்களின் பதிவு வலைச்சரத்தில் அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுளது. ;)))))
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2013/05/blog-post_31.html
அதற்கு என் மனமார்ந்த இனிய அன்பு நல்வாழ்த்துகள்.