ஆயிர மாறுகளும் சுனைகள்பல வாயிரமும்
ஆயிரம்பூம் பொழிலுமுடை மாலிருஞ் சோலையதே.
பல நதிகளையும் அனேகமாயிருந்த தடாகங்களையும்
பல பூஞ்சொலைகளையும் உடைய மலை.அழகர் கோவில்
அழகர்கோவிலில் தான் மஹா லட்சுமி, பெருமாளைக் கைப்பிடித்து
கல்யாண சுந்தரவல்லி என்னும் பெயர் பெற்றாள் அன்னை.
அழகர்கோவில் மூலவர் பரமசாமி. ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார்.
மகாவிஷ்ணுவின் திருக்கோலங்களிலேயேஅழகர்கோவிலில்
உள்ள சுந்தரராஜப்பெருமாள் தான் பெயருக் கேற்றாற் போல்
மிகவும் அழகாக இருப்பார்.
தர்மதேவனுக்கு காட்சி தர பெருமாள் வந்ததால் வைகுண்டத்தில்
பெருமாளை காணாமல் மகாலட்சுமி பெருமாளைத்தேடி வந்துவிட்டாள்.
மகாவிஷ்ணுவை விட மிக அழகான லட்சுமியைக்கண்ட தர்மதேவன், மகாலட்சுமியும் பெருமாளுக்கு அருகில் இங்கேயே தங்க வேண்டும் என்ற வேண்டுகோளின் படி மகாலட்சுமி பெருமாளை கைப்பிடித்து அவருக்கு அருகில் கல்யாண சுந்தரவல்லி எனும் திருநாமத்துடன் வீற்றிருக்கிறாள்.
இப்படி அழகான இருவரது திருமணக்கோலம் அனைவர் மனதையும் திருடிக்கொண்டது. மக்கள் மனதை கொள்ளை கொண்டதால் அழகர் "கள்ளழகர்' ஆனார். இதனாலேயே இந்த பெருமாளை நம்மாழ்வார், "வஞ்சக்கள்வன் மாமாயன்' என்கிறார்.
அழகர் கோயில் தோசை : காணிக்கையாகக் கிடைக்கும் தானியங்களை அரைத்து மாவாக்கி அதில் கோயில் சார்பாக தோசை சுட்டு பிரசாதமாகத் தரப்படுகிறது. இது பழநி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு போன்று மிகவும் புகழும், சிறப்பும் உடையது.
ஷேச வாகனம்
மோகினி அலங்காரம் ..!
அழகர் கோவில் ஆடி பிரம்மோற்சவம் சிம்ஹ வாகனம்
அழகர் கோயிலில் ஆண்டு தோறும் நடக்கும் ஆடித் திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்குவது வழக்கம் ..!
அழகர்கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுந்தரராஜ பெருமாள்
ஆடித் தேரோட்டத்தில் பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க
வடம் பிடித்து இழுக்க அசைந்தாடி வரும் அழகுத்தேர் மனம் கரும் ..
"கோவிந்தா கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்து நிலைக்கு வந்த தேரிலிருந்து பூப்பல்லக்கில் புறப்பட்ட பெருமாள், தேரோடிய பாதையில் வலம் வருவார்..
சுந்தரராஜ பெருமாள் புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளி கோயிலை சுற்றி வலம் வந்து அருள் காட்சி அளிக்கிறார்.
ராஜகோபுரத்தில் உள்ள 18ம் படி கருப்பணசாமிக்கு, சந்தன குடம் எடுத்து வந்து நேர்த்திக் கடன் செய்வது விஷேசம்..
தங்கப்பல்லக்கு
கருட சேவை ..!