ஆயிரம் என்பது சாதாரண எண் அல்ல, பெருமைமிக்கது ... ‘
ஆயிரம்’ என்ற சொல், கவிதைகளில் இடம்பெறும்போது,
அதன் அர்த்தம், ‘மிகப் பெரிய எண்’.
அதன் அர்த்தம், ‘மிகப் பெரிய எண்’.
அதாவது, லட்சமும் ஆயிரம்தான், கோடியும் ஆயிரம்தான்,
லட்சம் கோடியும் ஆயிரம்தான்.
பக்திப் பாடல்களில் இறைவனுக்கு ஆயிரம் துதி செய்வதாகச் சொல்வார்கள். அதன் அர்த்தம், அனுதினமும் அவனையே துதித்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான்.
ஆயிரத்தின் மகத்துவம் சொல்லுகிற திருவாரூரில் எழுந்தருளியிருக்கிற சிவபெருமானைப் பணிந்து போற்றும் வகையில் அப்பர் எழுதிய அற்புதமான பாடல்:
ஆயிரம் தாமரை போலும்,
ஆயிரம் சேவடி யானும்,
ஆயிரம் பொன்வரை போலும்,
ஆயிரம் தோள் உடையானும்,
ஆயிரம் ஞாயிறு போலும்,
ஆயிரம் நீள் முடியானும்,
ஆயிரம் பேர் உகந்தானும்,
ஆரூர் அமர்ந்த அம்மானே!
ஆரூர் (அதாவது, திருவாரூர்) தலத்தில் எமக்கு அருள் புரியும் சிவனே,
உனது திருவடிகள் இரண்டு மட்டுமல்ல, ஏகப்பட்ட திருவடிகள் உண்டு,
அவை அனைத்தும் ஆயிரக்கணக்கான தாமரைகளைப்
போலச் சிவந்திருக்கின்றன!
உன்னுடைய தோள்கள் இரண்டுமட்டுமல்ல, பல தோள்களை உடையவன் நீ, அவை அனைத்தும் ஆயிரக்கணக்கான பொன் மலைகளைப்போல் வலுவோடு மின்னுகின்றன!
உன்னுடைய திருமுடியும் ஒன்றல்ல, பலப்பல. அவை அனைத்தும் ஆயிரக்கணக்கான சூரியன்கள் ஒரே இடத்தில் கூடியதைப்போல் பிரகாசிக்கின்றன.
திருவடிகள், தோள்கள், திருமுடிகளைப்போலவே, உனக்குப்
பல பெயர்களும் உண்டு. அவற்றை நாங்கள் பக்தியுடன்
பாடித் துதிக்கிறோம், உன் கருணை வேண்டி நிற்கிறோம்!
பல பெயர்களும் உண்டு. அவற்றை நாங்கள் பக்தியுடன்
பாடித் துதிக்கிறோம், உன் கருணை வேண்டி நிற்கிறோம்!
இந்தப் பாடலில், ‘சிவனுக்கு இரண்டு கால், இரண்டு தோள், ஒரு தலைதானே இருக்க முடியும்? பிறகு எப்படி ஆயிரம் வந்தது? அப்படியே அவருக்கு ஆயிரம் தலை இருந்தாலும் இரண்டாயிரம் தோள், இரண்டாயிரம் கால் இருக்கவேண்டுமல்லவா?’ என்றெல்லாம் கால்குலேட்டரை எடுக்கக்கூடாது.
எல்லாம் வல்ல இறைவனை உயர்வாக எண்ணிப் போற்றுகிறார் அப்பர். இங்கே ஆயிரம் என்பது ‘மிகப் பெரிய ஓர் எண்’, அவ்வளவுதான்!
வைணவத் தமிழ் இலக்கியங்களில் ‘அஷ்டப் பிரபந்தம்’ என்ற திரட்டில் ‘திருவரங்கத்து மாலை’யில் வரும் பாடல் திவ்யகவி பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் அரங்கனைப் போற்றும் அற்புதப்பாடல் :
புரம் ஆயிரம்,
திருக்கண் மலர் ஆயிரம்,
புண்டரிகக்கரம் ஆயிரம்,
கழல் கால் மலர் ஆயிரம்,
கண்ணி முடிச்சிரம் ஆயிரம்,
திருநாமமும் ஆயிரம்,
செய்ய கையில் அரம் ஆயிரம்
கொண்ட திண் திறல் ஆழி அரங்கருக்கே!
அங்கே திருவாரூர், இங்கே திருவரங்கம்,
ஸ்ரீரங்கம் ரங்கநாதருடைய பெருமையைப் பாடுகிறார்
பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்.
பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்.
அரங்கத்துப் பெருமானே, உன்னுடைய திருமேனி பல ஆயிரம்,
மலர் போன்ற உன் திருக்கண்கள் பல ஆயிரம்,
தாமரை மலரைப் போன்ற உன் கைகள் பல ஆயிரம்,
வீரக் கழல் அணிந்த, மலர் போன்ற உன் கால்கள் பல ஆயிரம்,
மலர் மாலையும் கிரீடமும் அணிந்த உன் தலைகள் பல ஆயிரம்!
இப்போது, அப்பர் சொன்னதுபோலவே, பிள்ளைப் பெருமாள் ஐயங்காரும் சொல்கிறார், ‘திருநாமமும் ஆயிரம்’, சிவனுக்கு மட்டுமல்ல, திருமாலுக்கும் பலப்பல பெயர்கள் உண்டே..!
இன்னும் நுட்பமான ஓர் அடி,
‘செய்ய கையில் அரம் ஆயிரம் கொண்ட திண் திறல் ஆழி’.
‘செய்ய கையில் அரம் ஆயிரம் கொண்ட திண் திறல் ஆழி’.
ரங்கநாதரின் சிவந்த கைகளில் இருக்கும் ,வலிமை மிகுந்த சக்ராயுதத்தில் ஆயிரக்கணக்கான ஆரங்கள் இருக்கின்றன.
சக்கரத்தின் வடிவத்தை அப்படியே கற்பனை செய்து பார்த்தால்
சக்கரத்தின் விளிம்பில் சிறு சிறு ஆரங்கள் நிறைய காட்சிப்படுகிறது ..
அவைதானே ஒன்று சேர்ந்து தீமையின் தலையைக் களைகின்றன?
ஒரு பொறியாளரின் லாகவத்தோடு இதை மிக அழகாகக் கற்பனை
செய்கிறார் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்,
செய்கிறார் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்,
‘உலகில் அறங்கள் யாவும் புரியும் என் இறைவா, உன்னுடைய கையில் உள்ள சக்ராயுதத்தில்தான் எத்துணை எத்துணை ஆரங்கள்!’ என்று வியக்கிறார்.
மற்ற எல்லா வரிகளையெல்லாம்விட, இங்கேதான் ‘ஆயிரம்’ என்ற வார்த்தையின் சிறப்புப் பொருள் கச்சிதமாகப் பொருந்துகிறது,
எண்ணமுடியாத எண்ணிக்கையில் சிறு ஆரங்களைக் கொண்ட
சக்கர ஆயுதம் என்பதால்!
சக்கர ஆயுதம் என்பதால்!
ஆயிரம் துன்பம் வந்தால் என்ன?
ஆயிரம் நாமம் கொண்ட இறைவன் பெயரைச் சொன்னால் போதும்,
ஆயிரம் இன்பம் நம்மைத் தேடி வரும்! இது தான்
ஆயிரத்தில் ஒரு வார்த்தை’
நூறாண்டு காலம் வாழ்க என்று வாழ்த்தினால் நூற்று ஒன்றாவது வருடம் வாழ வேண்டாம் என அர்த்தம் அல்ல..!
பல நூறு ஆண்டுகள் வளமோடு வாழ்க என்றுதான் நிறைவோடு பொருள் கொள்ளவேண்டும் ...!

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டுபலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்சேவடி செவ்விதிருக் காப்பு.
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய்நின் வலமார்பினில் வாழ்கின்றமங்கையும் பல்லாண்டு
வடிவார்சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படையோர்புக்குமுழுங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே.

ஆயிரத்தின் மகத்துவம்
ReplyDeleteஅறிந்துகொண்டேன் சகோதரி...
ஆயிரங்கள் போதவில்லையே
ReplyDeleteரசித்தேன்.
ReplyDeleteபிரமாதம்... ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்கள் அம்மா... நன்றி...
ReplyDeleteபுகைப்படங்களும் சுழலும் சக்கரமும் அருமையாக உள்ளன. ''ஆயிரம் நாமங்கள் கொண்ட இறைவனின் பேரைச் சொன்னால் ஆயிரம் இன்பம் நம்மைத் தேடிவரும் இதுதான் ஆயிரத்தில் ஒரு வார்த்தை''.
ReplyDeleteஆயிரம் பகிர்வுகளை அளித்து ஆயிரம் ஆயிரம் பதிவர்களின் உள்ளத்தில் குடிகொண்ட உங்களது இந்த ஆயிரம் பற்றிய பதிவும் ஆயிரத்தில் ஒன்று தான்.
ReplyDeleteவாழ்த்துகள்!
ReplyDelete’ஆயிரம் ஆயிரம் ஆயிரம்’
என்ற தலைப்பில் ஆயிரத்தின் சிறப்புகள் பற்றிய அழகானதோர் பதிவு.
ஆயிரம் பதிவுகளுக்கு மேல் தந்துள்ளவரின் ஆயிரத்து ஒன்பதாவது படைப்பு என்பதில் இதில் ஓர் தனிச்சிறப்பு.
ஆயிரம் ஆயிரம் நன்றிகள்.
ஆயிரம் ஆயிரம் வாழ்த்துகள்.
ஆயிரம் ஆயிரம் பாராட்டுக்கள்.
அப்பர் எழுதி அருளியுள்ள “ஆயிரம் தாமரை போலும்” அழகோ அழகு !
ஆயிரம் தான் இருந்தாலும், மேலும் ஆயிரம் ஆயிரம் விஷயங்களைப்பற்றி பாராட்டிச் சொல்லலாம் தான்.
ஏதோ இது ஆயிரத்தில் ஒன்று மட்டுமே.
ஒருமுறை ஒன்றைச்சொன்னால் ஆயிரம் முறை ஆயிரம் விஷயங்கள் சொல்லிப் பாராட்டியதாக நினைத்துக்கொள்ளவும்.
சொல்வதைவிட சொல்லாமல் விடும் விஷயங்களில் தான் ஆயிரம் எண்ணங்கள் மனதில் புதுசு புதுசாகத் தோன்றி, ஆயிரம் முறை இப்படியோ அப்படியோ என எண்ணி நம்மை மகிழவைக்கும். ;)
00000
ஆயிரத்தில் ஒரு பதிவு!...சுழலும் சக்கரம் மேலும் பொலிவு சேர்க்கின்றது!..
ReplyDeleteஆயிரம் பற்றிய அப்பர் பெருமானின் பாடல் அற்புதம்! ஆயிரமாயிரம் வாழ்த்துக்கள்!!
ReplyDeleteபல நூறு ஆண்டுகள் வளமோடு வாழ்ந்து கடவுளின் பதிவுகளை நாளும் தரவேண்டும் நீங்கள் வாழ்த்துகிறேன்.
ReplyDeleteஆயிரம் இத்தனை அற்புதக் கருத்திற்குச் சொந்தமாய் நிற்ப்பதை
ReplyDeleteஇப்போது தான் அறிந்து கொண்டேன் .வாழ்த்துக்கள் தோழி மேலும்
தங்கள் ஆக்கங்கள் ஆயிரம் ஆயிரமாகத் தொடரட்டும் .
அற்புதம் ஆயிரமாயிரம் வாழ்த்துக்கள்
ReplyDeleteஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ எங்கள் தேவி முகம்...
ReplyDeleteஎதைஎடுத்தாலும் தாங்கள் தரும் புள்ளிவிபரங்கள் பெருவியப்பு. வாழ்க!
மிகத் தெளிவாக ஒரு கட்டுரையை தொகுத்து இருக்கிறிர்கள்.... வாழ்த்துகள்
ReplyDelete