சிவபெருமான், "பிறவாயாக்கைப் பெரியோன்" என்ற நிலைபெற்றவர். , இம்மண்ணுலகில் மானுடர்க்காக எத்தனை முறை தோன்றினாலும்;
மானுடக் கருவில் மீண்டும் பிறக்க மாட்டார்.
ஈசன் அறுபத்து நான்கு முறை திருவிளையாடல் நிகழ்த்தியபோதும், ஒருமுறை கூடப் பிறக்கவில்லை.
எனவே, 'கருவூறார்' என்ற சொல்லால், அதாவது கருவில் ஊறமாட்டார் (மீண்டும் பிறக்க மாட்டார்) என்ற சிறப்புப் பெயரைப் பெற்றவர்..!
சிவபெருமானது அறுபத்து நான்கு திருக்கோலங்களில் ஒன்றாகத்திகழும்
இருபத்தி ஐந்து தலைகளும், ஐம்பது கைகளையும் கொண்ட திருக்கோலம் மகா சதாசிவ மூர்த்தி என்று அழைக்கப்படுகிறது.
கயிலையில் உள்ள மகா சதாசிவ மூர்த்தியச் சுற்றி, இருபத்தி ஐந்து மூர்த்திகளும் இருப்பதாகவும், ருத்ரர்களும், சித்தர்களும், முனிவர்களும் வணங்கக்கூடியவராகவும் அருள்புரிகிறார்..
மகா கைலாயத்தில் இருந்து கொண்டு அனைத்து உயிர்களுக்கும் அருள் பாலித்து அனுக்கிரகம் செய்வதால் அனுக்கிரக மூர்த்தி என்றேவணங்கப்படுகிறார்..
இன்ன உருவம் தான் எனக் கூற முடியாதவாறு அனைத்தும் கலந்த திருமேனியுடையவர் என புராணங்கள் கூறுகின்றன. மகேஸ்வர வடிவங்கள் இருபத்து ஐந்தும் உள்ளடக்கிய வடிவம், ‘மகா சதாசிவர்’.
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள மகா சதாசிவ மூர்த்தியை கோயிலுள்
காண முடியாது.
சுரகரேஸ்வரர் கோயில் விமானத்தில் சுதை சிற்பமாகத்தான் காண முடியும்.
பல கோயில் விமானங்களில் தரிசிக்க முடியும்.
25 முகங்களையும் 50 திருக்கரங்களையும் உடைய மகா சதாசிவ வடிவினை திருநல்லூர் திருத்தலத்தில் சிவன் கோயிலின் ராஜகோபுரத்தில் தரிசிக்கலாம்.
மகா சதாசிவ மூர்த்திய வணங்கினால் சிவ தரிசனம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்.
கடுமையான காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் கருப்பஞ்சாறால்
மகா சதாசிவரை அபிசேகம் செய்தால் கடும் காய்ச்சல் நீங்கி தேகம் ஆரோக்கியம் பெறும் என்றும் நம்பிக்கை..!