பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரேரே ஆயர்தம் கொழுந்தேயென்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகமாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருள்ளானே..--
- நாலாயிர திவ்யப்ரபந்தம்
மத்தியரங்கம் - ஸ்ரீரங்கம்
பூலோக வைகுண்டம் என்ற பெருமை பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது.
அச்சுதா அமரரேரே ஆயர்தம் கொழுந்தேயென்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகமாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருள்ளானே..--
- நாலாயிர திவ்யப்ரபந்தம்
மத்தியரங்கம் - ஸ்ரீரங்கம்
பூலோக வைகுண்டம் என்ற பெருமை பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது.
11 ஆழ்வார்கள் மங்களாசாசனம் பெற்று பாடிய ஒரே தலம்.
மற்ற திவ்யதேசங்களில் 9ஆழ்வார்களுக்கும் குறைவாகவே பாடியுள்ளனர்.
108 வைணவ திருத்தலங்களில் இரண்டு, இந்நிலவுலகில் இல்லை.
ஒன்று பரமபதம். மற்றொன்று திருப்பாற்கடல்.
ஒன்று பரமபதம். மற்றொன்று திருப்பாற்கடல்.
ஸ்ரீரங்கம் பெருமாள், பிரம்மலோகத்தில் பிரம்மதேவனால்
தினமும் பூஜிக்கப்பட்டு வந்த திருவாராதன விக்ரமான பெருமாள்.
தினமும் பூஜிக்கப்பட்டு வந்த திருவாராதன விக்ரமான பெருமாள்.
பூலோகத்தில் சூரிய வம்சத்தில் வந்த இஷ்வாகு மன்னனின் கடும் தவத்தை மெச்சிய பிரம்மன், இஷ்வாகு வேண்டுகோள்படி தான் தினமும் பூஜித்தவந்த திருவாராதன விக்ரஹமான பெருமாளை வழங்கினார்.
இந்த பெருமாள் இட்சுவாகு மன்னன் முதல் ராமபிரான் வரை
சூரிய குலமன்னர்கள் வழிபட்டு வந்த குலதெய்வம்.
சூரிய குலமன்னர்கள் வழிபட்டு வந்த குலதெய்வம்.
திரேதா யுகத்தில் ராமாவதாரம் எடுத்த திருமால், ராவணனை அழித்தபின் அயோத்திக்கு பட்டம் சூட்ட தன்னோடு அழைத்து வந்த விபீஷணனுக்கு விடைகொடுத்து அனுப்பும்போது முன்னோர் பூஜித்த பெருமாள் விக்ரகத்தை விபீஷணனுக்கு அன்பாக கொடுத்தார்..
அதை தலையில் சுமந்தவாறு இலங்கை புறப்பட்ட விபீஷணன் களைப்பால் ஸ்ரீரங்கத்தில் தரையில் வைக்க விக்ரகத்தை எவ்வளவு முயன்றும் அங்கிருந்து எடுக்கமுடியவில்லை.
அப்பகுதியை ஆண்ட சோழமன்னன் தர்மவர்மன் பெருமாளையும் தொழுது
பெருமாள் விக்ரகத்தை சுற்றி சிறிய கோயில் எழுப்பி வழிபட்டார்.
காலப்போக்கில் காவிரியில் ஏற்பட்ட வெள்ளத்தில் கோயில் மணலால் மூடி இருந்த இடம் தெரியாமல் போனது.
தர்மவர்மனுக்கு பின் அவரது வழியில் வந்த கிள்ளிவளவன் காடாக இருந்த ஸ்ரீரங்கத்தில் வேட்டையாட வந்தபோது ஒரு மரத்தின் நிழலில் தங்கி இருந்த போது மரத்தில் இருந்த கிளி ஒன்று கோயில் இருந்த இடம் இது தான் என்று தெரிவிக்க கிளியின் சேவையை நினைவு கூறும் வகையில் கோயிலில் கிளி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
கிள்ளிவளவன் பெருமாளை தொழுது மதில்சுவரும், கோபுரமும் கட்டினான்.
கிள்ளிவளவனுக்கு பின் வந்த சோழ, பாண்டிய, விஜயநகர மன்னர்கள்,ஆழ்வார்கள், ஆச்சார்யார்களின் தொடர்பணியால் தற்போது இருக்கும் நிலையில் ஸ்ரீரங்கம் கோயில் உயர்ந்தோங்கி நிற்கிறது.
வைணவத்தின் மையத் தலைமைச்செயலகமாக ஸ்ரீரங்கம் திகழ்ந்தது.
ஸ்ரீராமானுஜர் பரப்பிய விசிஷ்டாத்வைதம் நெறிக்கு ஸ்ரீரங்கமே நிலைக்களம்.
சிலப்பதிகாரம், நாலாயிர திவ்யபிரபந்தத்தில் ஸ்ரீரங்கக்கோயில்
குறித்த வர்ணனைகள் உள்ளன.
குறித்த வர்ணனைகள் உள்ளன.
இந்தியாவிலேயே ஸ்ரீரங்கம் கோயில்தான் ஏழு பிரகாரங்களுடன் அமைக்கப்பட்டு உள்ளது. கோயிலை சுற்றி 21 கோபுரங்கள் உள்ளது.
கோயிலின் நாழிக்கேட்டான் வாயிலில் வெளிப்புற முகப்பின் இருபக்கங்களிலும் உள்ள மாடங்களில் பத்திரர், சுபத்திரர் ஆகிய துவார பாலகர்கள் உள்ளனர்.
உள்புற முகப்பில் பெரியபெருமாள் மூலஸ்தானத்தை நோக்கி மகாவிஷ்ணுவுக்கு உரியவனாய் முறையே சங்கு, தாமரை வடிவங்களில் சங்கநிதி, பதுமநிதி உருவங்கள் இருபக்கங்களிலும் உள்ளன.
மூலஸ்தானம் மேற்கே உள்ள மேடையில் விஜயரங்கசொக்கநாத நாயக்கர், அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோரின் உருவங்கள் தந்தத்தால் இயற்கை அளவில் செய்து, வண்ணம்தீட்டி வைக்கப்பட்டுள்ளது.
மூலவர், உற்சவர், தாயாருக்கு அணிவிக்கப்படும் மாலைகள் அனைத்தும் அம்மாமண்டபம் ரோட்டில் உள்ள மதுரகவி நந்தவனத்தில் பூக்கள் பறிக்கப்பட்டு மாலை கட்டப்பட்டு சமர்ப்பிக்கப்படுகிறது.
பெருமாளுக்கு நைவேத்தியம் செய்ய சமைப்பதற்கு மடப்பள்ளியில் மண்பாத்திரங்களே தற்போதும் பயன்படுத்தப்படுகிறது.
மூலவர் சுதையினால் இருப்பதால் திருமஞ்சனம் செய்வதில்லை.
அதற்கு பதில் ஆண்டுக்கு இருமுறை இயற்கை மூலிகைகளினால் தயாரிக்கப்பட்ட தைலம் பூசப்பட்டு(தைலக்காப்பு) உலர்ந்தபின் நீக்கப்பட்டு மெருகூட்டப்படுகிறது.
ஸ்ரீரங்கத்தில் ஆண்டாள், திருப்பாணாழ்வார், துலுக்கநாச்சியார் ஆகியோர் அரங்கனின் திருவடியை அடைந்து உள்ளனர்.
கோயில் கருவறை மேலே தங்கத்தகடுகளால் வேயப்பட்ட விமானத்தில்
மேல் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை குறிக்கும் வகையில்
நான்கு தங்கக்கலசங்கள் உள்ளன.
மேல் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை குறிக்கும் வகையில்
நான்கு தங்கக்கலசங்கள் உள்ளன.
ஆண்டுதோறும் துலா மாதத்தில்(ஐப்பசி) பெருமாளுக்கு திருமஞ்சனம் மற்றும் பூஜைக்கு தங்கத்தில் செய்யப்பட்ட பொருட்களையே பயன்படுத்தப்படுகிறது.
துலாமாதம் 30 நாட்களும் மூலவருக்கும், உற்சவருக்கும்
சாளக்கிராம மாலை அணிவிக்கப்படும்.
சாளக்கிராம மாலை அணிவிக்கப்படும்.
கோயில் தல விருட்சம் புன்னை மரம், மூலவர் ஸ்ரீரங்கநாதர்,
உற்சவர் நம்பெருமாள், தாயார் ஸ்ரீரங்கநாச்சியார்.
கோயில் தீர்த்தங்கள்: சந்திர புஷ்கரணி, சூர்ய புஷ்கரணி, வகுள தீர்த்தம், சம்பு தீர்த்தம், அசுவத்த தீர்த்தம், பலாச தீர்த்தம், புன்னாக தீர்த்தம், பில்வ தீர்த்தம், கதம்ப தீர்த்தம், ஆம்பர தீர்த்தம், தென்திருக்காவிரி, வட திருக்காவிரி
கோயிலில் நிர்வாக முறையை ஏற்படுத்தி - 120 ஆண்டுகள் வாழ்ந்த இராமானுஜரது திருமேனி 5வது திருச்சுற்று எனப்படும் அகளங்கன் திருச்சுற்றில் வசந்தமண்டபத்தில் புதைக்கப்பட்டது.
பிறகு தானாகவே அவரது திருமேனி பூமிக்கு வெளியே தோன்றியது.
அதுவே தற்போது ராமானுஜர் சன்னதி மூலஸ்தானமாக உள்ளது.
தான் ஏற்படுத்திய நிர்வாகங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதை கண்காணித்து வருகிறார் ராமானுஜர் என்பது ஐதீகம்.
பிறகு தானாகவே அவரது திருமேனி பூமிக்கு வெளியே தோன்றியது.
அதுவே தற்போது ராமானுஜர் சன்னதி மூலஸ்தானமாக உள்ளது.
தான் ஏற்படுத்திய நிர்வாகங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதை கண்காணித்து வருகிறார் ராமானுஜர் என்பது ஐதீகம்.
திருமங்கையாழ்வாரால் கட்டப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஆயிரம் தூண்கள் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் 951 தூண்கள் மட்டுமே கட்டப்பட்டு இருக்கும்.
மீதமுள்ள 49 தூண்கள் வைகுண்ட ஏகாதசி விழா காலங்களில் மணல்வெளியில் 49 மரத்தூண்கள் நடப்பட்டு ஆயிரம் தூண்களாக கணக்கிடப்பட்டு விழா நடைபெற்று வருகிறது.
மீதமுள்ள 49 தூண்கள் வைகுண்ட ஏகாதசி விழா காலங்களில் மணல்வெளியில் 49 மரத்தூண்கள் நடப்பட்டு ஆயிரம் தூண்களாக கணக்கிடப்பட்டு விழா நடைபெற்று வருகிறது.
ஆசியாவிலேயே மிக உயரமான கோபுரம் என்ற பெருமைக்குரியது ஸ்ரீரங்கம் ராஜகோபுரம். உயரம் 236 அடி. 13 நிலைகளுடன், 13 கலசங்களுடன் கம்பீரமாய் காட்சி அளிக்கிறது.
கிருஷ்ணதேவராயர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறாதிருந்த தெற்குராயகோபுரம் முன்பு மொட்டை கோபுரமாக இருந்தது.
ராயர் கோபுரத்தில் திருஷ்டிபரிகாரத்திற்காக
முனிக்கு அப்பனான ஸ்ரீனிவாசனை எழுந்தருள செய்தனர்.
முனிக்கு அப்பனான ஸ்ரீனிவாசனை எழுந்தருள செய்தனர்.
நித்ய வழிபாடுகள் இன்றும் நடந்து வருகிறது. இந்த ராஜகோபுர
வாசலை முனியப்பன் கோட்டை வாசல் எனவும் அழைக்கின்றனர்.
வாசலை முனியப்பன் கோட்டை வாசல் எனவும் அழைக்கின்றனர்.
கடந்த முறை இந்த ராஜகோபுரத்திற்கு அருகில் இருந்த
ஹோட்டலில் தங்கியிருந்தோம்..
ஹோட்டலில் தங்கியிருந்தோம்..
திருப்பைஞ்ஞீலி,திருப்பட்டூர் இன்னும்
பல தலங்களைத் தரிசிக்க திட்டமிட்டிருந்தோம்..
பல தலங்களைத் தரிசிக்க திட்டமிட்டிருந்தோம்..
முதல் நாள் அரங்கனையும் தாயாரையும் திருப்தியாக தரிசித்திருந்தோம்..
அரங்கனுக்கு நைவேத்யம் செய்த , அமிர்த சுவையுடன் கூடிய பச்சைக்கற்பூரம் ஏலம் , சுக்கு , குங்குமப்பூ வாசனையுடன் கூடிய தன்வந்திரி பகவானின் பிரசாதம் கிடைத்தது மன நிறைவளித்தது..
திரண்ட கூட்டத்தின் நடுவே ஒரு துளி சப்தமும் இல்லாத நிசப்தத்தில் அரங்கனுக்கு நடைபெற்ற வீணை இசை ,
அரையர் சேவை ஆகியவை சிறுவயதில் கேட்டவை
ஆன்மாவில் கலந்து நிறைந்தவை...!
அரங்கனுக்கு அபிஷேகிக்கும் காவிரி தீர்த்தமாகவோ,
அலங்கரிக்கும் புஷ்பங்களாகவோ ஏதாவதாகவோ ஆகி எப்போதும் அரங்கனையே தரிசிக்க ஆசை ..
எந்தை , தந்தைக்கும் தந்தை , அவருக்கும் முன்னோர்கள் என எல்லோரும் இப்படித்தான் ஆசைப்பட்டு,அங்கேதான் அரங்கனைத் தரிசித்துக்கொண்டிருப்பார்கள்..!
அடுத்தநாள் .....!விடியற்காலையில் அரங்கனைத் தரிசிப்பது எனக்குத் தொட்டில் பழக்கமல்லவா ..ஆயத்தமானேன்..இல்லத்தினர் ஒருவருவரும் ஆர்வம் காட்டவில்லை.. நேற்றுப் பார்த்த அதே கோவில் தானே அம்மா .. எத்தனை தடவை பார்ப்பது என்றனர்..
அரங்கனுக்கு நைவேத்யம் செய்த , அமிர்த சுவையுடன் கூடிய பச்சைக்கற்பூரம் ஏலம் , சுக்கு , குங்குமப்பூ வாசனையுடன் கூடிய தன்வந்திரி பகவானின் பிரசாதம் கிடைத்தது மன நிறைவளித்தது..
திரண்ட கூட்டத்தின் நடுவே ஒரு துளி சப்தமும் இல்லாத நிசப்தத்தில் அரங்கனுக்கு நடைபெற்ற வீணை இசை ,
அரையர் சேவை ஆகியவை சிறுவயதில் கேட்டவை
ஆன்மாவில் கலந்து நிறைந்தவை...!
அரங்கனுக்கு அபிஷேகிக்கும் காவிரி தீர்த்தமாகவோ,
அலங்கரிக்கும் புஷ்பங்களாகவோ ஏதாவதாகவோ ஆகி எப்போதும் அரங்கனையே தரிசிக்க ஆசை ..
எந்தை , தந்தைக்கும் தந்தை , அவருக்கும் முன்னோர்கள் என எல்லோரும் இப்படித்தான் ஆசைப்பட்டு,அங்கேதான் அரங்கனைத் தரிசித்துக்கொண்டிருப்பார்கள்..!
அடுத்தநாள் .....!விடியற்காலையில் அரங்கனைத் தரிசிப்பது எனக்குத் தொட்டில் பழக்கமல்லவா ..ஆயத்தமானேன்..இல்லத்தினர் ஒருவருவரும் ஆர்வம் காட்டவில்லை.. நேற்றுப் பார்த்த அதே கோவில் தானே அம்மா .. எத்தனை தடவை பார்ப்பது என்றனர்..
அவர்கள் வந்தாலும் என்னை சூழ்ந்து எதையும் பார்த்துவிடாதபடி பாதுகாப்பு படைபோல அரண் அமைத்து அழைத்துச் சென்று வருவார்கள்..
என் கணவர் ..அம்மா கோவிலுக்குச்சென்று திரும்பும் வரை நாம் நிம்மதியாக இருக்கலாம் ..எனவே சென்று வரட்டும் - நாம் தயாராகி காரில் ஏறுவதற்குள் திரும்பவேண்டும் - என்ற நிபந்தனையுடன் அனுமதி அளித்தார்...
அத்துடன் தங்க கொடிமரத்துக்குப்பக்கத்தில் தூண் அஞ்சனேயர் உயரமாக அமர்ந்திருப்பாரே அவரிடம் கொஞ்சம் புத்தியும் கொடு என்று வேண்டிக்கொள்.அவர் எவ்வளவு அமைதியாக அமர்ந்திருக்கிறார் ..என்றும் சொல்லி அனுப்பினார்..
ஓட்டமும் நடையுமாக கோவிலுக்குச்சென்று கருடாழ்வார், , ஆண்டாள் சந்நிதிகளை தரிசித்து ,சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றிப்பிரார்த்தித்து ,ஆறு பிரத்ட்சிணங்கள் வந்து ,தரிசித்து திரும்பும் வழியில் கோட்டைக்கோபுர வாயிலில் முனியப்பனுக்கு பூஜை நடந்துகொண்டிருந்தது..
வியப்புடன் கவனித்தேன்.. கோட்டைக்காவல் முனியப்பனுக்கு நைவேத்தியம் போல...பலி பீடத்தில் சுருட்டுகள் சில புகைந்துகொண்டிருந்தன ..
தரிசனம் செய்து கொண்டிருந்தவர் இடுப்பில் உற்சாகபான பாட்டிலும் தென்பட்டது..முனியப்பனுக்கு நைவேத்தியம் செய்திருப்பார்களோ...!!திகைப்புடன் திரும்பினால் பக்கத்தில் மாரியம்மன் கோவிலிலும் பூஜை நடைபெற்றுக்கொண்டிருந்தது..
எத்தனை எத்தனை முறை நிதானமாக கோவிலுக்கு வந்தபோதும் கிடைக்காத அபூர்வ தரிசனம் இப்படி அவசரமாக திரும்பும் சமயத்தில் கிடைத்திருக்கிறதே..விவரம் கேட்கவும் தயங்கும் வகையில் முரட்டுத்தனமான தோற்றத்துடன் இருந்ததால் எதுவும் கேட்காமல் திரும்பிவிட்டேன்..
வைணவக்கோவிலில் மாரியம்மனையும் முனியப்பனையும் காவல் தெய்வங்களாக தரிசித்தது ஆச்சரியமளிக்கிறது..!
அருமையான படங்களுடன் சிறப்பான விளக்கங்கள்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteவணக்கம் . அருமையான கருத்துரைக்கும் ,இனிய வாழ்த்துரைக்கும் சிறப்பான நன்றிகள்..!
Deleteஅனந்தரங்கம் எனப்படுகின்ற ,திருவரங்கம் பற்றிய தெரியாத தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி! படங்கள் கொள்ளை அழகு.
ReplyDeleteவைணவக்கோவிலில், மாரியம்மனையும் முனியப்பனையும் காவல் தெய்வங்களாக இருப்பது உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் ஆச்சரியம் தான். உண்மையில் திருவரங்கம் ஆச்சரியம் நிறைந்த ஊர்தான்!
வணக்கம் ஐயா,
Deleteஆச்சரியமான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..!
திருவரங்கனின் தரிசனத் தகவல்களும், புகைப்படங்களும் சிறப்பு. அரங்கனைக் குறித்து எழுத வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்துகிறது தங்கள் பதிவு. ஸ்ரீரங்கம் குறித்த நேர்த்தியான பதிவு. மிக்க நன்றி.
ReplyDeleteஸ்ரீ....
வாங்க வணக்கம் ,
Deleteநேர்த்தியான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..
தங்கள் பாணியில் அருமையான பதிவாக்குங்கள்..!
ஸ்ரீரங்கபெருமாளின் தகவல்கள் சுவாரஸ்யமாகவும் அறிந்திராத புது தகவல். எனக்கும் ஆச்சரியமாக இருக்கு அங்கு மாரியம்மனும்,முனியப்பரும் இருப்பது.அழகான படங்கள்.நன்றி.
ReplyDeleteவாங்க , வணக்கம் ,
Deleteசுவாரஸ்யமான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..!
ஸ்ரீரங்கனே அழகானவர். அழகுக்கு அழகு சேர்க்கும் வேலைகள் கண்டு பிரமித்தேன்! அத்தனையும் சொக்க வைக்கும் அழகு!
ReplyDeleteமாரியம்மன், முனியப்பருக்கு செய்யும் ஆராதனைகளும் அதிசயிக்க வைத்தன...
அனைத்தும் அருமை! மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!
வாங்க இளமதி ,
Deleteசொக்கவைக்கும் அதிசயமான கருத்துரைகள்
அளித்தமைக்கு இனிய நன்றிகள்..!
தகவலுக்கு நன்றி
ReplyDeleteஸ்ரீரங்கம் போக வேண்டும் ஆனால் பகவானை தரிசிப்பது
அவ்வளவு எளிது அல்ல
அங்கு இருக்கும் நிர்வாகம் திருப்பதிக்கு நிகராக அராஜகம் செய்கிறார்கள்
பணம், செல்வாக்கு உள்ளவர்களுக்கு மட்டும் ஸ்ரீரங்கத்தில் சுவாமி ரங்கநாதரை தரிசிக்கலாம்.
வணக்கம் ,
Deleteநாங்கள் சென்றிருந்த சமயம் கூட்டம் நிரம்ப இருந்தாலும் அருமையான தரிசனம் கிடைத்தது..
நாங்கள் குறைகளை விமர்சனம் செய்ய கோவில்களுக்குச் செல்வதில்லை..
கருத்துரைகளுக்கு நன்றிகள்..!
குறைவில்லா நிறைந்த புதுத் தகவல்கள்.
ReplyDeleteஇனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
வாங்க , வணக்கம்
Deleteநிறைந்த கருத்துகளுக்கு இனிய நன்றிகள்..!
2002 ல் நான் இந்தியாவிற்கு வந்திருந்த போது எனது தந்தையார் (அவர் அங்கே 7 வருடங்கள் வசித்து வந்தவர் ) அவசர அவசரமாகப் பல கோவில்களை எனக்குக் காட்டினார் .அதில் ஸ்ரீ ரங்கமும் ஒன்று அப்போது கூட நாம் அறிந்து கொண்டோம்
ReplyDelete1000 கால் மண்டபம் என்று .புதுமையாக இருந்தது தோழி தங்களின் தகவலைக் கேட்ட போது .ஸ்ரீ ரங்க நாதப் பெருமாளைத் தரிசிக்க
ஆவலுடன் சென்ற எமக்குத் தக்க தருணத்தில் தெய்வமே வரம் கொடுத்தது போல் மடை சாற்றுவதற்கு சற்று முன்னரே
சென்று இறைவனைத் தரிசித்து விட்டோம் .ஆனாலும் தலத்தின் வரலாற்றினைத் தாங்கள் சொன்னதைக் கேட்ட பின் மீண்டும் ஒரு முறை இந்த வாய்ப்பு எமக்குக் கிட்டாதோ என ஆவல் மிகுந்துள்ளது தோழி .236 அடி உயரத்தில் கட்டப் பட்ட இந்த ஆலயமானது எமக்கெல்லாம் பெரும் வியப்பைத் தருபனவாகவே இன்றும் திகழ்கின்றது .எவ்வளவு
தெய்வ நம்பிக்கை மிகுந்தவர்களாகத் திகழ்ந்துள்ளனர் எமது முன்னோர்கள் !! அறிவிலும் ஆரோக்கியத்திலும் கூட அவர்களே என்றும் உயர்ந்தவர்கள் .அருமையான படங்களுடன் மிகத் தெளிவாகவும் சிறப்பாகவும் பகிரப்பட்ட தங்கள் படைப்பிற்கு என் மனமார்ந்த நன்றி கலந்த வாழ்த்துக்களும் சகோதரி .
வணக்கம் ,,வாங்க அம்பாளடியாள்,
Deleteநம் முன்னோர்களின் சிறப்பை வானளாவி உயர்த்தி உரக்கச்சொல்லி நிற்கும் நம் ஆலயங்களின் அற்புதத்தை சிறப்பாக கருத்துரையாக்கியதற்கு நிறைந்த நன்றிகள்..!
அருமையான அத்தனை விஷயங்களையும் தொகுத்து தந்துள்ளீர்கள்....படங்களுடன் வெகுவே சிறப்பு....
ReplyDeleteஸ்ரீரங்கம் ஆச்சரியங்கள் நிறைந்த ஊர் தான்...
வணக்கம்
Deleteதங்கள் ஊராயிற்றே ,,, ஆச்சரியங்களுக்கு
கேட்கவேண்டுமா என்ன..!!!!!
கருத்துரைகளுக்கும் இனிய நன்றிகள்..
ஸ்ரீரங்கம் மட்டுமல்ல.. இன்னும் பல தலங்களின் காவல் தெய்வம் ஸ்ரீ முனீஸ்வரர் தான்!.. நிறைந்த தகவல்களுடன் அருமையான பதிவு!.. மகிழ்ச்சி!..
ReplyDeleteஸ்ரீரங்கம் மட்டுமல்ல.. இன்னும் பல தலங்களின் காவல் தெய்வம் ஸ்ரீ முனீஸ்வரர் தான்!.. நிறைந்த தகவல்களுடன் அருமையான பதிவு!.. மகிழ்ச்சி!..
ReplyDeleteவணக்கம் ஐயா,
Deleteதகவல் பகிர்வுகளுக்கும் கருத்துரைகளுக்கும்
இனிய நன்றிகள்..
பெரும்பாலும் பெருமாள் கோவில்களில் மண் பாத்திரங்களில்தான் தளிகை நடக்கிறது என்று நினைக்கிறேன். படங்களுடன் பதிவு சுவாரஸ்யம்.
ReplyDeleteவணக்கம் ,
Deleteதிருப்பதி போன்ற பல கோவில்களில் மண்பாத்திர
நைவேத்தியம் தான்..கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்.!
சிப்பியிருக்குது ......
ReplyDeleteமுத்துமிருக்குது ........
திறந்து பார்க்க ...........
நேரமில்லடி
ரா ஜா த் தீ ....ன்னு
எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்பப் பிடித்த கண்ணதாசன் பாடல் ‘வறுமை நிறம் சிவப்பு’ என்ற படத்தில்.
ஏனோ எனக்கு இன்று காலை எழுந்தது முதல் அந்தப்பாடல் ஞாபகமே திரும்பத் திரும்ப வருகிறது.
கணினி இருக்குது ......
கரண்டுமிருக்குது .......
தங்கள் பதிவுமிருக்குது .....
திறந்து பார்க்க ......
நேரமில்லை
திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!
>>>>>
எங்கள் குடியிருப்பு வளாகத்தின் நலச்சங்கத்திற்கு என்னைப் பொருளாளராகப் போட்டு பாடாய்ப்படுத்தி வருகின்றனர்.
ReplyDeleteஎனக்கு இதில் விருப்பம் இல்லாமல் இருந்தும் என்மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்ட பதவி இது.
என் வாழ்நாள் முழுவதும் பணத்தின் மீதே படுத்து உருளும் பாக்யம் பெற்றவனாக நான் உள்ளேன்.
அடிக்கடி செயற்குழுக்கூட்டம், பொதுக்குழுக்கூட்டம், குறை கேட்கும் நாள், குறை தீர்க்கும் நிகழ்ச்சிகள் என அழைத்துச் சென்று விடுகிறார்கள்.
நாளுக்கு நாள் பொறுப்புகளும் பொதுப்பணிகளும் அதிகரித்து வருவதால்இரவு நிம்மதியாகத் தூங்கவும் முடியவில்லை.
என் பதிவுகளையும் அவ்வப்போது ஒருங்கிணைத்து வெளியிட வேண்டியுள்ளது.
தங்களின் பதிவினை உடனடியாக படிக்க முடியாமல் கருத்துச்சொல்ல முடியாமல் உள்ள என் மனக்குறையைக் கேட்க யாரும் தயாராக இல்லை என்பதே எனக்கு மிகவும் குறையாக உள்ளது.
இருப்பினும் விடுவேனா! இன்று இங்கு என் வீட்டருகேயுள்ள ஸ்ரீரங்கத்திற்கு வந்துள்ள தங்களை எப்படியும் ஓடி வந்து பிடித்து விடுவேன். ஜாக்கிரதை.
ஆனால் சற்றே தாமதம் ஆகும். என் அம்பாள் தயவுசெய்து பொருத்தருள வேண்டும்.
>>>>>
கடைசியில் காட்டப்பட்டுள்ள இரண்டு யானைகளும் அழகோ அழகாக உள்ளன.
ReplyDeleteஆபரணங்கள், மாலைகள், மணிகள், நெற்றியில் நாமம் என அனைத்துமே ஜோர் ஜோர்.
>>>>>
முதல் இரண்டு படங்களும் சும்மா ஜொலிக்கின்றன. அதுவும் அந்த இரண்டாவது படம் .... அடடா .... தங்கமயமான பள்ளிகொண்ட பெருமாள் ... காணக்கண்கோடி வேண்டுமே! ;)))))
ReplyDelete>>>>>
ஜொலிக்கும் கருத்துக்கு பொலிவான நன்றிகள்..!
Deleteஎவ்ளோ படங்களை சிரத்தையாக சேகரித்து வெகு அழகாக ஒருங்கிணைத்துக் கொடுத்துள்ளீர்கள்.
ReplyDeleteகடும் உழைப்பு உழைக்கிறீர்கள்.
ஒவ்வொன்றும் கண்ணில் ஒத்திக்கொள்ளும்படியாக உள்ளன.
அதுவும் தங்க விமானங்கள், அடுத்தடுத்து பல்வேறு கோபுரங்கள், இராஜ கோபுரம் என எல்லாமே மிகவும் அசத்தல் தான் ;)))))
>>>>>
வணக்கம் ,
Deleteசிரத்தையான கருத்துரைகளுக்கு சிறப்பான நன்றிகள்...
ReplyDelete’பச்சை மாமலைபோல் மேனி ...... பவளவாய்க் கமலச் செங்கண்’ என்ற ஆரம்பமே அசத்தல் தான்.
கிளி சொன்ன தகவலை சாதனைக்கிளி வாயால் இன்று கேட்க நேர்ந்ததில் மகிழ்ச்சி. ;)
7 பிரகாரங்கள் + 21 கோபுரங்கள் !!!!! ;))))))
அம்மாமண்டப மதுரகவி நந்தவனப்பூக்கள் ;)))))
மடப்பள்ளியில் நைவேத்யம் + சமையலுக்கு மண் பாத்திரங்களே ;)))))
ஸ்ரீரங்கத்தில் அரங்கனின் திருவடிகளை அடைந்த மூன்று பாக்கியசாலிகள்.
நான்கு தங்கக்கலசங்களும் நான்கு வேதங்கள் ;))))
சாளக்கிராம மாலை அணிவிப்பு ;)
பெருமாள் பூஜைக்கும் திருமஞ்சனத்திற்கும் தங்கத்தினால் ஆன பாத்திரங்கள்.
தங்கமான என் தகவல் களஞ்சியமே நீங்க வாழ்க வாழ்க !
>>>>>
தங்கமான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..!
Deleteகடைசியில் சொல்லியுள்ள தங்களின் தனிப்பட்ட ஆவல் அனுபவங்கள் மிகுந்த மகிழ்ச்சியளித்தன.
ReplyDeleteதங்களுடன் நானும் மீண்டும் மீண்டும் போய் தரிஸித்தது போல உணர்ந் ... தேன்.
தேன் ..... தேன் ..... தேன் ஆன உணர்வுகள், இனிக்கின்றன.
>>>>>>
மகிழ்வான கருத்துரைகளுக்கு நிறைவான நன்றிகள்..!
Deleteசமயபுரம் மாரியம்மன் கோயில் நிர்வாகமே முன்பு [ஓர் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை] இந்த ஸ்ரீரங்கம் கோயிலின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் தான் இருந்து வந்தது. இப்போது எப்படியோ தெரியவில்லை.
ReplyDeleteமுனீஸ்வரன் காவல் தெய்வம் கருப்பர் போல் அல்லவா. அதனால் அவருக்கும் அவருடைய வேலுக்கும் சரக்கு என்ற பெயரில் சாராயமும், சுருட்டுக்களும், பொரி, பொட்டுக்கடலை, அவல், நாட்டுச்சர்க்கரை, எலுமிச்சம்பழம் போன்றவைகளும் இன்னும் இதர சில பலிகளும் கூட செய்வார்கள். NIGHT SHIFT பார்க்கும் WATCHMAN போன்ற காவல் தெய்வங்கள், அவை.
அவற்றிற்கு உற்சாக பானம் அவசியத்தேவை தான். ;)
>>>>>
வணக்கம் ஐயா ,
Deleteகாவல் தெய்வங்களைப்பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் திருவரங்கத்தில் இவற்றை எதிர்பாராததால் திகைப்பாக இருந்தது..
சமயபுரம் அம்மன் வைஷ்ணவி என்கிற பெயரில் இங்கே இருந்து சென்றதால் வருடாவருடம் சீர் பெறுகிறாரே அரங்கனிடம் ..!
’ஆச்சர்யம் நிறைந்த ஸ்ரீரங்கம்’ பற்றி இதைவிட யாரால் சிறப்பாக எடுத்துச்சொல்ல முடியும்?
ReplyDeleteஅந்த ’ஸ்ரீரங்கநாயகி’த்தாயாரே உங்கள் ரூபத்தில் வந்து சொன்னதாக நினைத்து மகிழ்கிறேன்.
ஸ்ரீரங்கநாயகியே நீங்க வாழ்க வாழ்க !
மனம் நிறைந்த இனிய பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
அழகான இந்தப்பதிவுக்கும், பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.
பிரியமுள்ள VGK
-oOo-
நிறைவான கருத்துரைகள் விரிவாக
Deleteஅளித்தமைக்கு இனிய நன்றிகள்..
இப்போதைய ராஜகோபுரம் மொட்டைக் கோபுரத்தின் மீது எழுப்பப்பட்டது நாங்கள் திருச்சியில் இருந்த சமயம். எத்தனையொ முறை திருவரங்கம் கோயிலுக்குப் போயிருக்கிறோம். இவ்வளவு விலாவாரியாகத் தகவல்கள் இருக்கவில்லை. இப்போதெல்லாம் கோயிலை நுட்பமாகப் பார்த்து ரசிக்க இயலாது. அறியாத தகவல்களுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
ReplyDeleteவணக்கம ..
Deleteமொட்டைக்கோபுரம் என்கிற பெயரைக்கேட்டு வருந்தியதுண்டு.. ராஜ கோபுரமாக எழுந்த வளர்ச்சியை படிப்படியாகக் கண்டு மகிழ்ந்த நினைவுகள் மறக்கமுடியாதவை..ஆலயங்களின் நுட்பமான கலைத்திறன்கள் பிரமிப்பூட்டுபவை..!
கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா..
அருமையாக தெரியாத தகவல்கள் பல தந்த பதிவு. ஸ்ரீரங்கம் போனால், முனீஸ்வரன், மாரியம்மனை தரிசனம் செய்ய வேண்டும்.
ReplyDeleteஉங்கள் கணவர் சொல்லி அனுப்பியதை கேட்டு மிகவும் மகிழ்ச்சி ஏற்கனவே உள்ள புத்தியில் தினம் எவ்வளவு தகவல்கள் படங்கள் அடங்கிய பதிவு கிடைக்கிறது. அனுமனிடன் வேண்டிய பிரத்தானையால் மேலும் அழகிய , அற்புத படங்கள் அடங்கிய பதிவுகள் கிடைக்கும்!
மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்.
முன்னோர்கள் ஸ்ரீரங்க பெருமானை தரிசித்து பெற்ற வரம் நீங்கள்.
தினம் கோவிலுக்கு போகாமல் உங்கள் பதிவை படித்து தரிசித்தாலே போதும் எங்களுக்கு.
வணக்கம ..வாழ்க வளமுடன் ..
Deleteஎப்போதும் முனியப்பன் ,மாரியம்மன் சந்நிதிகள் முன் மறைத்தாற் போல் பூவிற்பவர்கள் , மற்ற பழம் விற்பவர்கள் கூட்டமாக நின்று கொண்டிருப்பதால் இந்த அருமையான காவல் தெய்வங்களைப்பற்றி இத்தனை நாட்கள் தெரிந்துகொள்ளாமல் இருந்திருக்கிறோமே....வருத்தமாகத்தான் இருக்கிறது..!
எங்கு சுற்றினாலும் கடைசியில் ரங்கனிடம்தான் வர வேண்டும் என்பார்கள். அந்த ஸ்ரீரங்கத்துப் பெருமானைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறீர்கள்.
ReplyDeleteவணக்கம ..
Deleteஎன் தந்தை அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் அல்லவா.. கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா..
ஶ்ரீ ரங்க தகவல்கள் இனிமை! படங்கள் அழகு! இறுதியில் சொன்ன காவல் தெய்வ செய்திகள் புதுமை! மொத்தத்தில் படைப்பு அருமை! நன்றி!
ReplyDeleteஸ்ரீரங்கத்தைப்பற்றி எனக்குத் தனிப்பட்ட சில விஷயங்கள் + அனுபவங்கள் உள்ளன.
ReplyDeleteஉங்களுக்குத் தெரியாதது எதுவும் இருக்க முடியாது தான்.
இது மற்றவர்களின் தகவலுக்காக இந்தப்பதிவினிலேயே சொல்கிறேன் என வைத்துக்கொள்ளுங்கள்.
1]
இராஜகோபுரம் தாண்டிய உடனேயே ஒரு 10 அடியில் வலதுபுற ஓரமாக ரோட்டிலேயே மிக அழகான பாதாள கிருஷ்ணன் கோயில் உள்ளது. கீழே குனிந்து அவரை அவசியம் தரிஸிக்க வேண்டும்.
>>>>>
அப்போதெல்லாம் பக்கத்திலேயே வெண்ணை உருண்டை விற்றுக்கொண்டிருப்பார்கள்..வாங்கி குனிந்து வேண்ணை சாற்றுவார்கள்..
Deleteதிருவரங்கக்கோவில் மொட்டை அடித்தால் அங்கே கொடுக்கும் ரசீதை பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும் ,,கோவிலினுள் நுழையும் போது காட்டினால்தால் உள்ளே விடுவார்கள்..
2]
ReplyDeleteஅதுபோல புஷ்கரணி / நந்தவனம் இவற்றுக்கு அருகே அமைந்துள்ள ஸ்ரீ கோதண்டராமர் கோயில் சந்நதியை தரிஸிக்காமல் வந்துவிடக்கூடாது.
அங்குபோய் அந்த சந்நதியில் போய் நாம் நின்றுவிட்டால் திரும்பிவரவே மனஸு வராது.
அவ்வளவு ஓர் அழகோ அழகான விக்ரஹங்கள்.
ஸ்ரீஸீதாராமனை பிரத்யக்ஷமாக நேரில் பார்ப்பது போன்ற உணர்வு நமக்கு ஏற்படும்.
>>>>>
ராமர் கோவிலில் வேதபாராயணம் அருமையாக இருக்கும் ,தியானம் செய்ய ஏர்ற இடம் ,
Deleteதசாவதார தூண்கள் அருமையானவை..
சொன்னவண்ணம் செய்த பெருமாள் -பாம்பணையை பாயாய் சுருட்டி ஆழ்வார் பின்னால் செல்லும் ஓவியம் வேடிக்கையாய் இருக்கும் ..!
3]
ReplyDeleteகோயிலின் உள்ளே உள்ள தன்வந்தரி சந்நதி நிச்சயமாக தரிஸிக்க வேண்டியதொன்று.
தாயாரை தரிஸித்து அங்கு பிரஸாதமாகக் கொடுக்கப்படும், அரைத்த கெட்டி மஞ்சளை வாங்கிக்கொள்ளும் பாக்யம் கிடைப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகளே.
அதை நெற்றியிலும், தலை வகிட்டின் ஆரம்பத்திலும், திருமாங்கல்யத்திலும் இட்டுக்கொள்ள வேண்டும்.
>>>>>
ReplyDelete4]
கோயிலின் வெளியே தனியாக உள்ள ஸ்ரீ சக்ரத்தாழ்வார் சந்நதி, மறக்காமல் தரிஸிக்க வேண்டியது.
அங்கு ஸ்ரீசக்ர வடிவில் விற்கும் புஷ்பமாலைக்கொத்துக்கள் பார்க்கப்பார்க்க ஆசையாகவும் அழகாகவும் இருக்கும்.
அத்தகைய ஒவ்வொரு புஷ்பச்சுருள்களிலும் ஸ்ரீ சக்ரத்தாழ்வாரே இருக்கிறார் என்பதை நாம் உணர்ந்து மகிழ முடியும்.
>>>>>
5]
ReplyDeleteபிரதான பெருமாள் சந்நதிக்கும், மிகப்பெரிதாக வீற்றிருக்கும் கருடாழ்வார் சந்நதிக்கும் இடையே துவஜஸ்தம்பம் இருக்கும்.
அதன் அருகே பெருமாளை நோக்கி நின்றால் இடதுபுறமாக ஓர் கல்தூண் இருக்கும்.
அதன் கீழே மிகச்சிறியதாக ஓர் ஹனுமார் உள்ளார்.
அவருக்குப்பெயர் ’கம்பத்தடியான்’.
மிகவும் சக்தி வாய்ந்தவர்.
நியாயமான கோரிக்கை வைத்து எதை வேண்டிக்கொண்டாலும், உடனே வெற்றிகரமாக முடித்துத் தருபவர்.
வடைமாலை சாற்றுவதாக வேண்டிக்கொள்ளலாம். ஒரு 12 வடைக்கு மேல் அவருக்கு மாலையாக சாத்த முடியாது. அவ்வளவு சிறிய உருவம்.
மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி மிக மிகப்பெரியது.
இந்தக் கம்பத்தடியானான ஹனுமாரை எனக்கு அறிமுகம் செய்தவர் ஸ்வாமிநாத ஐயர் என்பவர் ...... அந்தக்கதை இப்போ தொடரும்.
>>>>>
5/1
ReplyDeleteஎன் மாமனார் ஒரு அரசுத்துறையில் சாதாரண உத்யோகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வு ஊதியம் ஏதும் கிடையாது. அவர் காலமான பின் என் மாமியாருக்கு ஓர் சிறிய தொகையும், மாதாமாதம் ஓர் மிகச்சிறிய குடும்ப பென்ஷனும் அரசாங்கத் துறையிடமிருந்து வர வேண்டும். அவர்கள் மிகவும் பொருளாதார நெருக்கடியில் இருந்தார்கள். வாழ்நாள் முழுவதுமே கஷ்டப்பட்டவர்கள்.
கடைசி காலத்தில் கணவனையும் இழந்து மிகவும் சிரமப்பட்டார்கள். வைத்திய செலவுகள் வேறுகழுத்தை நெறித்தன. நாங்கள் அவ்வப்போது பண உதவிகள் செய்வதுண்டு.
அவர்களுக்கு ஒரே மகன் - வடக்கில் எங்கோ வேலை - அவனுக்கு மனைவி + 4 குழந்தைகள் - அதிலும் வரிசையாக முதலில் மூன்று பெண்கள் - அவரும் ஏதோ ஓர் சொற்பத்தொகை மாதாமாதம் அனுப்புவார்.
இந்த அரசாங்கப்பணத்தை எப்படியாவது வாங்கித்தந்தால் பரவாயில்லை என்று என்னிடம் அடிக்கடி என் மாமியார் சொல்லி வந்தார்கள். முயற்சித்தாலும் மொத்தப்பணம் ரூ. 10000 + மாதாமாதம் 400 மட்டும் கிடைக்கக்கூடும்.
என் மாமனாருடன் பணியாற்றியவர் திரு. ஸ்வாமிநாத ஐயர் என்பவர். அவரும் வயதானவர் + நோய்வாய்ப்பட்டிருந்தார்.
இருப்பினும் இது விஷயத்தில் நிறைய உதவிகள் செய்ய முன்வந்தார்.
”நிறைய செலவு செய்ய வேண்டியிருக்குமே மாப்பிள்ளை” என்றார்.
“நீங்கள் எப்படியாவது முடியுங்கள்” எனச்சொல்லி, அவர் கேட்”ட பெருந்தொகையை சலவை நோட்டுக்களாக வீசினேன். [தொடரும்]
>>>>>
5/2
ReplyDeleteதிருச்சிக்கும் தஞ்சாவூருக்கும் அலையோ அலை என அலைந்தார்.
ஆங்காங்கே அவரவர்களை கவனித்ததால் காணாமல் போன ஃபைல் தூசி தட்டி எடுத்து மளமளவென்று காரியங்கள் நடப்பதாகச்சொல்லி மேலும் பணம் அவ்வப்போது வாங்கிச் சென்றார்.
கடைசியில் நீண்ட நாள் இழுபறிக்குப்பிறகு ஒரு வழியாக ரூ.10000/- என் மாமியார் பெயரில் வங்கிக்கணக்கு ஒன்று புதிதாகத் துவங்கச் செய்து அதில் வரவு வைக்கப்பட்டது.
பழசெல்லாம் போனது போனது தான், இனிமேல் மாதாமாதம் ரூ. 400 மட்டும் பென்ஷனாகக் கிடைக்கும் என்று சொல்லி விட்டார்கள்.
என் மாமியாருக்கு மிகவும் சந்தோஷம். தினமும் பல் தேய்த்தவுடன் ரூ. 13 வீதம் சர்க்கார் பணம் கிடைக்குமே, எனச் சொல்லிச்சொல்லி மகிழ்ந்தார்கள்.
இதுபோல அவர்கள் ஆத்ம திருப்தி அடைவதற்காக மட்டுமே நான் செலவழித்த பணம் கையில் கிடைத்த தொகையைவிட மிக அதிகம். அதனால் பரவாயில்லை என நானும் விட்டு விட்டேன்.
எல்லாம் முடிந்த பிறகு மேற்படி ஸ்வாமினாத ஐயர் என்னிடம் வந்தார்.
”மேலும் ரூ 200 மட்டும் தாங்கோ, மாப்ளே”, என்றார்.
நானும் உடனே கொடுத்தேன்.
”இது எதற்கு எனக் கேட்க மாட்டீர்களா?” என்றார்.
”சொல்லுங்கோ ... கேட்டுக்கொள்கிறேன்” என்றேன். [தொடரும்]
>>>>>
5/3
ReplyDelete”இதை வெற்றிகரமாக முடித்துத்தந்த கம்பத்தடியானுக்குத்தான் இந்தப்பணம்” என்றார்.
“யார் அந்தக்கம்பத்தடியான்?” என்றேன் நானும் ஆச்சர்யமாக.
நாளைக்கு என்னுடன் ஸ்ரீரங்கம் வாங்கோ .... காட்டுகிறேன் என்றார். நானும் என் மனைவியும் சென்றோம்.
கம்பத்தடியானைக்காட்டினார். குட்டியூண்டு வடைமாலை சாற்றினார். நெஞ்சில் வெண்ணெய் சாற்றினார்.
வடைப்பிரஸாதத்தை என் மாமியாரிடம் போய் மறக்காமல் கொடுக்கச்சொன்னார். நாங்களும் சென்று கொடுத்தோம்.
வேடிக்கை என்னவென்றால் என் மாமியார் பெயரும் ரெங்கநாயகி தான். எல்லோரும் அழைப்பது மட்டும் ராஜலக்ஷ்மி.
என் மாமியாருக்கு இந்தக் கம்பத்தடியானுடன் ஏற்கனவே பரிச்சயம் உண்டாம்.
எல்லாம் நடந்தும் என் மாமியார் மாதாந்திர பென்ஷனாக ரூ. 400 பெற்றது வெறும் ஆறு மாதங்கள் மட்டுமே.
அவர்களை மேலும் கஷ்டப்பட விடாமல் இறைவனடி சேர்த்து விட்டார் அந்தக்கம்பத்தடியான்.
அவர்களின் முதல் 13 நாட்கள் காரியங்களுக்கு மட்டுமே அந்த வங்கியில் இருந்த பணம் ரூ. 10000 உதவியது, என் மைத்துனருக்கு.
இதெல்லாம் நடந்து சுமார் 20 ஆண்டுகள் ஆகிவிட்டன.
அந்த நல்ல மனிதர் ஸ்வாமிநாத ஐயரும் போய்ச்சேர்ந்து விட்டார்.
>>>>>
கொக்கு தலையில் வெண்ணை வைத்து பிடித்தமாதிரி கையில் கிடைத்த பணத்தைவிட அதிகம் செலவழித்து ,அலைச்சலும் அனுபவித்து சலவைத்தாள்களை ஸ்வாமிநாத ஐயருக்கு அபிஷேகித்ததற்கு அந்த அம்மாவிடமே அந்த தொகையை தந்து
Deleteசிரமத்தைக்குறைத்திருக்கலாம் என்று காலம் கடந்து தானே நினைக்கத்தோன்றுகிறது..!
இராஜராஜேஸ்வரி has left a new comment on the post "ஆச்சர்யம் நிறைந்த ஸ்ரீரங்கம்":
Delete//கொக்கு தலையில் வெண்ணை வைத்து பிடித்தமாதிரி கையில் கிடைத்த பணத்தைவிட அதிகம் செலவழித்து ,அலைச்சலும் அனுபவித்து சலவைத்தாள்களை ஸ்வாமிநாத ஐயருக்கு அபிஷேகித்ததற்கு அந்த அம்மாவிடமே அந்த தொகையை தந்து
சிரமத்தைக்குறைத்திருக்கலாம் என்று காலம் கடந்து தானே நினைக்கத்தோன்றுகிறது..! //
இல்லை மேடம். அப்படி இல்லை. நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள்.
நான் அவர்களுக்கு நிறையவே பண உதவிகள் செய்துள்ளேன். என் மனைவிக்கே கூட தெரியாமல் நிறைய உதவிகள் செய்துள்ளேன். மருத்துவச்செலவுகளையும் நிறைய ஏற்றுக்கொண்டுள்ளேன்.
அவர்கள் எனக்கு மாமியார் மட்டுமல்ல. என் சொந்த அத்தை பெண் [அத்தங்காவும் ஆவார்கள்].
எவ்வளவோ நாட்கள் அவர்கள் தனியாக கிராமத்தில் இருந்து கஷ்டப்பட வேண்டாமே என, என் BHEL Quarters இல் எங்களுடனேயே தங்க வைத்துள்ளேன்.
இருப்பினும் அவர்களுக்கு ஓர் சிறிய தொகை சர்க்கார் பணமாக கிடைக்க வேண்டும் என்பதில் ஓர் நியாயமான சபலம் / ஆசை மனதுக்குள் இருந்து வந்தது.
அவர்களை ஒத்த வயதுள்ள மற்றவர்களுக்கு மட்டும் கிடைக்கிறதே, தனக்கு மட்டும் ஏனோ கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம்.
அந்த ஓர் மனத்தாங்கலை, வருத்தத்தைப்போக்க மட்டுமே நான் ஒருசில RISK எடுத்து பணத்தால் சாதித்துக் கொடுத்தேன்.
என்னால் என் அலுவலக வேலைகளை விட்டுவிட்டு இதெற்கெல்லாம் அலைய முடியாதல்லவா!
அதனால் மட்டுமே அந்த ஸ்வாமிநாத ஐயரைப் பயன் படுத்திக்கொண்டேன். அவரைப்பொறுத்தவரை நல்ல மனிதர் தான். எங்களுக்காக அலைந்து பாடுபட்டவர் தான்.
என் மாமியார் இறந்தபோது, தன் முடியாத்தனத்துடன் ஸ்ரீரங்கத்திலிருந்து, பிக்ஷாண்டார் கோயில் அக்ரஹாரம் வரை வந்து துக்கத்தில் கலந்துகொண்டு சென்றவர்.
-oOo-
அரசாங்க காரியங்கள் எல்லாம் இப்படித்தான் .. சுண்டைக்காய் கால் பணம் என்றால் சுமைகூலி முக்கால் பணமாகும்..
Deleteஆத்ம திருப்தி அளிக்கமுடிந்ததே சில காலங்களுக்காவது .. அந்தவகையில் சரிதான் என்று ஏற்றுக்கொள்ளமுடிகிறது..!
6 / 1 ]
ReplyDeleteஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு நான், என் மனைவி மற்றும் என் மூன்று பையன்களுடன் பள்ளிகொண்ட பெருமாள் தரிஸனத்திற்காக ஸ்ரீரங்கம் சென்றிருந்தோம். நீண்ட க்யூ வரிசையில் பொறுமையாக நெடுநேரம் நின்றோம். எங்கள் வாய்கள் மட்டும் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் சொல்லிக்கொண்டே இருந்தன. இரவு 8 மணி இருக்கும்.
பெருமாளை நெருங்கி விட்டோம். கர்ப்பக்கிரஹத்திலிருந்து ஆஜானுபாஹுவாக ஓர் பட்டர், கருத்த நிறத்துடன், தலைமுடியை அள்ளிக் கொண்டைபோல போட்டுக்கொண்டு, பள்ளிகொண்ட பெருமாளே எழுந்து வந்தது போல வந்தார்.
“வாங்கோ, நீங்க BHEL சீஃப் கேஷியர் கோபாலகிருஷ்ணன் தானே!” என்றார். நான் அப்படியே ஸ்தம்பித்துப்போய் விட்டேன். என் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் கூட ஒரே ஆச்சர்யம்.
”இப்படி ஓரமாக நில்லுங்கோ, கும்பல் எல்லாம் ஒருவழியாகப் போகட்டும்” என்றார்.
நான் தயங்கியபடியே “தாங்கள் யார் என்று எனக்குப்புரியவில்லையே, ஸ்வாமீ; என்னை உங்களுக்கு எப்படித்தெரியும்?” என்றேன்.
சிரித்துக்கொண்டார். அப்போது என்னிடம் அவர் ஒன்றுமே சொல்லவில்லை.
ஸ்பெஷலாக பள்ளிகொண்ட பெருமாளை எங்கள் குடும்பத்தாருடன் நிம்மதியாக சேவிக்க முடிந்தது. ஸ்ரீ பாதம் முதல் நன்றாக கற்பூர ஹாரத்தி காட்டி சேவை சாதித்து தரிஸிக்க உதவினார்.
நான் ஒரு குறிப்பிட்ட மனக்கவலையை அவரிடம் சொன்னேன். அதைக்கேட்டதும், ஒரு கைப்பிடி அரைத்த சந்தனத்தை விழுதாக எடுத்து பெருமாளின் கைகளில் பதித்து, ஓர் இலையில் அதை வைத்து என்னிடம் கொடுத்து, வீட்டு பூஜையில் கொண்டுபோய் வைத்துக்கொள்ளுங்கள். எல்லாக் கஷ்டங்களும் விலகிடும் என்றார்.
தொடரும்....
>>>>>
பெருமாளே நேரில் வந்தது போல் தோன்றுகிறது அண்ணா எனக்கு.
Deleteஅன்புள்ள மஞ்சு, வணக்கம்.
Deleteகதையை நான் இன்னும் முடிக்கவே இல்லையேம்மா. அதற்குள் ஓர் இடைக்கால பாராட்டா? OK OK
செளக்யமா சந்தோஷமா இருக்கீங்களா மஞ்சு ! ;)))))
இன்னிப்பொழுது எனக்கு இங்கேயே இவர்கள் பதிவினிலேயே போய் விடும் போலிருக்கிறது. ;)
பிறகு உங்களிடம் வருகிறேன். Bye for now, Manju.
அன்புடன் கோபு
6 / 2 ]
Deleteஎன் குடும்பத்தாருக்கும் எனக்கும் மிகச் சிறப்பாக தரிஸனம் செய்து வைத்து, பள்ளிகொண்ட பெருமாள் திருக்கரங்களில் பதித்த சந்தன அச்சினையும் அளித்த, அந்த அர்ச்சகருக்கு நான் ஒரு பெருந்தொகையை கொடுக்க நினைத்து ஆயத்தமாகும் முன், அவர் கர்ப்பக்கிரஹத்தை பூட்டிவிட்டு, எங்களுடனேயே வெளியே வரலானார்.
வரும்போது என் மகன்களிடம் சொன்னார்:
“உங்க அப்பா தான் BHEL இல் எங்கள் எல்லோருக்குமே படியளக்கும் பரமசிவன்” என்றார்.
பிறகு தன் ஜடாமுடியை அவிழ்த்துவிட்டு என்னைப்பார்த்து
“என்னை உங்களுக்குத் தெரியவில்லையா, சார்?” என்றார்.
இப்போது நன்றாகத் தெரிகிறது என்று சொல்லி அவருடைய பெயரையும் நான் குறிப்பிட்டேன். அவருக்கு மிக்க மகிழ்ச்சி. [அவர் பெயரை இங்கு நான் குறிப்பிட விரும்பவில்லை]
நீங்கள் எப்படி இங்கே ??? என நான் மிகுந்த ஆச்சர்யமாகக் கேட்டேன்.
”நாங்கள் பரம்பரையாக பட்டர்கள் தான். ஏதோ நடுவில் BHEL உத்யோகம் கிடைத்தது - பார்த்து வருகிறேன்.
ஆபீஸ் தவிர மற்ற நேரங்களிலெல்லாம் பெருமாளுக்கு சேவை செய்வது தான் என் வேலை. இன்று இங்கு என் முறை.
இங்கு எங்காவது தான் மாற்றி மாற்றி ஏதாவது ஒரு சந்நதியில் இருப்பேன். எப்போது வேண்டுமானாலும் நீங்க முன்கூட்டியே சொல்லிவிட்டு வாங்கோ” என்றார்.
பணம் ஏதும் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.
“மாதாமாதம் சுளையாக உங்கள் கையாலேயே தானே நான் சம்பளம் பெற்றுக்கொள்கிறேன். அது போதும் எனக்கு” என்றார்.
ஒவ்வொரு மாதமும் சம்பள பட்டுவாடா தினத்தன்று அவர் சம்பளம் வாங்கிக்கொண்டதே கிடையாது.
தனியாக ஒரு 4 நாட்கள் கழித்து என்னிடம் வருவார். என் கையாலே தான் வாங்கிச் செல்வார். நான் இல்லை என்றால் திரும்பிச் சென்று விடுவார். மறுநாள் வந்து நான் இருக்கிறேனா என பார்ப்பார்.
ஏதோவொரு கைராசி என்ற செண்டிமெண்ட் பார்ப்பவர், அவர்.
இத்துடன் சுருக்கமாக முடித்துக்கொள்கிறேன். ;)))))
அன்புடன் VGK
-oOo-
திருவரங்கம் திருக்கோவில் பற்றிய சிறப்பான தகவல்கள். அடுத்த பயணத்தின் போது ஒவ்வொன்றாய் கவனிக்க வேண்டும்.....
ReplyDeleteவணக்கம்.. கருத்துரைக்கு இனிய நன்றிகள்..
Deleteமுனியப்பன், மாரியம்மன் கோவிலுக்கு முன்புறம் அப்படி ஒரு கோவில் இருக்கும் சுவடுகூட நமக்குத்தெரிந்துவிடாதபடி கூட்டமாக வியாபாரிகள் மறைத்து ஆக்ரமித்திருப்பார்கள்..!
ஸ்ரீரங்கத்தைப்பற்றி மிக அற்புதமான கட்டுரையோடு ஸ்தல வரலாறு, அழகிய படங்களுடன் பகிர்ந்திருக்கிறீர்கள்பா..
ReplyDeleteஇந்த முறை இந்தியாவுக்கு சென்றபோது ரிஷபன் சார் உபயத்தால் ஸ்ரீரங்க பெருமானை தரிசித்தோம் நாங்கள் அனைவரும். அற்புதமான தரிசனம்.
அன்பு நன்றிகள்பா பகிர்வுக்கு.
வை.கோ. அண்ணாவும் மிக அற்புதமாக எழுதி இருக்கிறார் அனுபவத்தை.
Manjubashini Sampathkumar has left a new comment on the post "ஆச்சர்யம் நிறைந்த ஸ்ரீரங்கம்":
Delete//வை.கோ. அண்ணாவும் மிக அற்புதமாக எழுதி இருக்கிறார் அனுபவத்தை. //
மஞ்சூஊஊஊஊஊ.
ஒருவழியா நான் சொல்ல நினைத்ததையெல்லாம் மிகச்சுருக்கமாச் சொல்லிட்டேன் மஞ்சு.
அப்படியும் விரலெல்லாம் வலிக்குது மஞ்சு ! ;)))))
விரல்களுக்கு ஆயின்மெண்ட் தடவியபடி
அன்புடன் கோபு அண்ணா
எத்தனை முறை படித்தாலும் அலுக்காத ஸ்ரீரங்க மகாத்மியம்! எத்தனை முறை சேவித்தாலும் அலுக்காத பெருமாள்!
ReplyDeleteநானும் உங்களைப்போலத்தான் காலையில் எழுந்தவுடனே முதலில் கோவிலுக்குத் தான் போவேன். பிறகுதான் சமையல், சாப்பாடு எல்லாம்!
ஆச்சர்யம் நிறைந்த ஸ்ரீரங்கம்! அழகான பதிவும் பல ஆச்சர்யங்கள் நிறைந்த தகவல்களும் அருமை அருமை.
ReplyDeleteகிளி மண்டப தகவல் ஆச்சர்யம்
மதுரகவி நந்தவன பூக்கள் தகவல் நறுமணம்
மடப்பள்ளியில் மண் பாத்திரங்கள்
கோவில் நிர்வாகங்களை கண்காணித்து வரும் ராமானுஜர்
காவல் தெய்வங்கள் என பல தகவல்கள் சிறப்போ சிறப்பு.
பிரமாண்ட கோவிலை பற்றிய பிரமிப்பான பதிவு.
பூலோக வைகுண்டம் பெருமாளின் அருள் அனைவர்க்கும் கிடைக்கட்டும்.
வாழ்த்துகள். பாராட்டுக்கள். நன்றி அம்மா.
மேலும் நலசங்க பொருளாளரும், வாழ்நாள் முழுவதும் பணத்தின் மீதே படுத்து உருளும் பாக்கியம் பெற்ற
வைகோ ஐயாவின் தகவல்களும் பகிர்வும் சிறப்பு.
மாமியாருக்கு உதவிய ஐயாவுக்கு பாராட்டுக்கள்.
பட்டரின் கவனிப்பு தங்களுக்கு பகவானின் ஸ்பெஷல் தரிசனம் வைகோ ஐயா.
வேல் has left a new comment on the post "ஆச்சர்யம் நிறைந்த ஸ்ரீரங்கம்":
Delete//..........................
மேலும் நலசங்க பொருளாளரும், வாழ்நாள் முழுவதும் பணத்தின் மீதே படுத்து உருளும் பாக்கியம் பெற்ற
வைகோ ஐயாவின் தகவல்களும் பகிர்வும் சிறப்பு.
மாமியாருக்கு உதவிய ஐயாவுக்கு பாராட்டுக்கள்.
பட்டரின் கவனிப்பு தங்களுக்கு பகவானின் ஸ்பெஷல் தரிசனம் வைகோ ஐயா. //
வாங்கோ, வணக்கம்.
புரிதலுக்கும், பாராட்டுக் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள், ஐயா. அன்புடன் VGK
அழகான படங்களுடன் சிறப்பான வர்ணனை தந்திருக்கிறீர்கள். திருவரங்கம் ரயில்நிலையம், கோவில், கொள்ளிடம் என்றுமே நெஞ்சை விட்டு அகலாதவை. எனது நினைவலைகள் இங்கே.
ReplyDeleteஅழகான படங்களுடன் சிறப்பான வர்ணனை தந்திருக்கிறீர்கள். திருவரங்கம் ரயில்நிலையம், கோவில், கொள்ளிடம் என்றுமே நெஞ்சை விட்டு அகலாதவை. எனது நினைவலைகள் இங்கே.
ReplyDeleteஅழகான படங்களுடன் எம் பெருமான் பள்ளி கொண்ட ஸ்ரீரங்கம் பற்றிய பகிர்வு அருமை அம்மா...
ReplyDeleteஅடடா.......... கோட்டை வாசலைத் தவறவிட்டுட்டேனே:(
ReplyDeleteநெவர் மைண்ட். நெக்ஸ்ட் டைம்.
திருச்சியில் பிறந்து வளர்ந்த நான் அறியாத பல விஷயங்கள் இப்பதிவில் படித்து அறிந்து கொண்டேன், படங்கள் அனைத்தும் அருமை. பாராட்டுக்கள்
ReplyDeleteஇதுவரை 23 + இது ஒன்று ஆக மொத்தம் 24 கருத்துக்களை நான் கஷ்டப்பட்டு பதிவு செய்துள்ளேன். இவை எல்லாமே உண்மைச் சம்பவங்கள்.
ReplyDeleteஇவை எதுவுமே மறையாமல் / அழியாமல் அப்படியே காலம் காலமாக இருக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
நான் மறைந்தாலும் நான் எழுதிய வரலாறுகள் என்று மறையவே கூடாது என்பதே என் தாழ்மையான வேண்டுகோள்.
என் இந்த நியாயமான ஆசைக்கு ஸ்ரீரங்கநாயகி ஸமேத ஸ்ரீரங்கநாதர் அருள் புரியட்டும் என மனதார வேண்டிக்கொள்கிறேன்.
அன்புடன் VGK
சிறீரங்கம் பிரமாண்டம் அற்புதம். மீண்டும் தர்சித்தோம். நன்றி.
ReplyDeleteஅருமையான பதிவு ஸ்ரீ ரங்கம் கோவிலைப் பற்றி இவ்வளவு விஷயங்கள் அடங்கியிருக்கிறதா என்கிற வியப்பு
ReplyDeleteமிக்க நன்றி அம்மா
மிக அழகிய பதிவு
ReplyDeleteநாங்கள் இம்மாதக் கடைசியில் ஸ்ரீரங்கம் கோவில் தரிசிக்கவுள்ளோம்
இந்தப்பதிவு மிகவும் உதவியாக இருக்கும்
இதை நகலெடுக்க முயன்றேன் முடியவில்லை
இந்தப்பதிவை நான் நகலெடுக்க வசதியாக தாங்கள் ஈமெயிலில்
தர முடியுமா
எனது ஈமெயில் ஐடி rajasaraswathi45@yahoo.com
மிக்க நன்றி அம்மா
SRIRANGAM KOVIL PATRI THERINDHU KONDADHU MAKILCHIYAGA ULLADHU MEEKA NANTRI
ReplyDeleteதங்களின் வலைத்தளம் இன்று ஆசிரியர் வை.கோபாலகிருஷ்ணன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
ReplyDeletehttp://drbjambulingam.blogspot.com/
http://ponnibuddha.blogspot.com/
அருமையான புகைப்படங்களுடன்
ReplyDeleteதெளிவான விளக்கங்கள்
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
அற்புதமான படங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அருமையான விபரங்கள, அது போக வலைச்சர ஆசிரியரும் நீங்களும் மாறி மாறி பகிர்ந்த விழயங்கள் ஒரு முறையாவது ஸ்ரீரந்க பெருமாளை தரிசிக்கணும் என்று மனசு நிறைய ஆர்வமாக இருக்கு
ReplyDelete