சீல முனிவோர்கள் செறியு மலை..
சிந்திப்பார் முன் நின்று முக்தி வழங்கு மலை..
ஞான நெறி காட்டு மலை.. ஞான முனிவோர்கள் நித்தம் நாடு மலை..
அஞ்ஞானக் கங்குல் அகற்று மலை – அன்பருக்கு
மெய்ஞானச் சோதி விளக்கு மலை
ஞானத் தபோதனரை வா என்று அழைக்கு மலை அண்ணாமலை”
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ள திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடக்கிறது. நிறைவு நாள் விழாவாக கோயிலில் பரணி தீபம் ஏற்பட்டவுடன், மலை உச்சியில் அண்ணாமலையார் தீபஜோதி எனும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலை என்று சொன்னாலும், மலையில் ஏற்றப்படும்
தீப ஜோதியைத் தரிசித்தாலும் முக்தி கிட்டுமென்பது நம்பிக்கை ..!
கிருதயுகத்தில் அக்னி மலையாகவும்;
திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும்;
துவாபரயுகத்தில் தங்க மலையாகவும்;
கலியுகத்தில் ஞானிகள், சித்தர்கள் பார்வையில் மரகத மலையாகவும்-
பாமர மக்களுக்கு கல் மலையாகவும் காட்சி தருகிறது.
ஏராளமான மூலிகைகளும் குகைகளும் உள்ளன. திருவண்ணாமலை கடலில் மறைந்து போனதாகக் கருதப்படும் "லெமூரியா கண்டத்தின் எஞ்சிய பகுதி' என்று மேனாட்டு ஆராய்ச்சியாளர் -மகான் ரமண மகரிஷியிடம் ஆசிபெற்ற பால்பிரண்டன் -தனது நூலில் ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளார். .
ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் எனும் சிவபெருமானின் ஐந்து திருமுகங்களை நினைவூட்டும் பஞ்சகிரியாக அருள் பொழியும் திருக்காட்சியை கிரிவலம் வரும்போது தரிசிக்கலாம்.
திருமால், பிரம்மா ஆகியோரின் அகந்தையை நீக்கி சிவபெருமான் லிங்கோத்பவராக- ஜோதிப் பிழம்பாகக் காட்சி தந்த திருத்தலம் திருவண்ணாமலை.
ஜோதி திருவுருவத்தின் வெம்மை தாங்காமல் தேவர்கள் வருந்தித் துன்பப்படவே, சிவபெருமான் மலையாகி நின்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.
மலையில் தவமிருந்த பார்வதிக்கு சிவபெருமான் தன் உடலில் பாதி இடத்தை அளித்து, அர்த்தநாரீஸ்வரர் என்ற சிறப்புப் பெயரினைப் பெற்றார்.
திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றி வலம் வந்த சிறப்பினை பார்வதிதேவி பெற்ற நாள் திருக்கார்த்திகை என்று புராணம் கூறுகிறது.
அஷ்ட லிங்கங்களுக்கு எதிரில் உள்ள நந்திகள் லிங்கத்தைப் பார்த்த வண்ணம் காட்சி தராமல் திருவண்ணாமலையே சிவபெருமான் என்பதால் அனைத்து நந்திகளும் மலையைப் பார்த்த வண்ணம் உள்ளன.
இறைவனை ஜோதிப்பிழம்பு என்றும் சுடர்ஒளி என்றும் ஞானஒளி என்றும் போற்றி பாடி ஜோதி வடிவில் இறைவனை தரிசித்தும் உள்ளனர்.
அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை என்று அருளிய வள்ளலார் சுவாமிகள் இறைவனை ஜோதி வடிவமாக வணங்குவதே சிறப்பானது என்ற தத்துவத்தை உணர்த்தி அந்த ஜோதியிலேயே ஐக்கியமானவர்.
பார்க்கும் இடமெல்லாம் இருக்கும் தீபஜோதிகள் நமது ஆணவம், அகங்காரம், பொறாமை போன்ற தீய குணங்களை பொசுக்கி, ஞானம் எனும் அறிவொளியை ஏற்படுத்துவதாக ஐதீகம்.
தீபஜோதி வழிபாடானது இருள்போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள், இடையூறுகளையும் ஏழரை சனி, அஷ்டமசனி போன்வற்றால் ஏற்படக்கூடிய கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும்
ஆலயத்தில் தினைமா, தேன், சர்க்கரை, வாழைப்பழம் என்பவற்றை ஒருங்கே பிசைந்து ஒன்று மூன்று ஐந்து, ஏழு என ஒற்றை இலக்கத் தொகையில் அகல் விளக்கு வடிவில் மாவிளக்குச் செய்து நெய்விட்டு திரி இட்டு தீபம் ஏற்றுதல். (இது மாவிளக்கு எனப்படும்)
கார்த்திகைத் தினத்தில் ஒருவார காலம் தொடர்ந்து எரியக் கூடிய வகையில் மாபெரும் கொப்பரைகளில் எண்ணெய் நிரப்பி துணிகளைக் கட்டுக்கட்டாக இட்டுத் தீபம் ஏற்றுவார்கள்..!
மலையுச்சியில் தீபம் ஒளி வீசத் தொடங்கும் வேளையில் மலையடிவாரத்தில் (உலர்ந்த தென்னை, பனைத் தண்டுகளால் ஆன) சொக்கப்பானை ஜ்வாலித்து எரியும் காட்சி கண்ணுக்கினிய பரவசக் காட்சியாகும்.
புற இருள் கலைந்து ஒளிபரப்பும் கார்த்திகை விளக்கீடு அகவிருள் போக்கி ஞானச் சுடர் பரப்பும் தத்துவப் பொருளைக் குறிக்கின்றது.
அக இருள் போக்கும் திருவண்ணாமலையின் அற்புதம் அறிந்தேன் நன்றி சகோதரியாரே
ReplyDeleteதிருவண்ணாமலை தீபம் பற்றிய சிறப்பு பதிவு. தொகுத்த காட்சிகளும் விளக்கமும் அருமை.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅம்மா
திருவண்ணாமலை ஆலயம் பற்றி பல விடயங்கள் அறியக்கிடைத்துள்ளது பதிவு அருமை படங்களும் அருமை வாழ்த்துக்கள் அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அண்ணாமலைக்கு அரோகரா
ReplyDeleteசுப்பு தாத்தா.
அற்புதமான படங்கள் + தகவல்கள்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteபடங்களுடன் தீபத்திருநாள் பற்றிய தகவல்கள் வழக்கம் போல வெகு சிறப்புங்க.
ReplyDeleteஅபீத குசலாம்பாள் ஸமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் படமும், பெளர்ணமி முழு நிலவும், பின்புற மலையும், சுடர்விட்டு எரியும் மலைதீபமும் - ஆஹா மிகவும் அருமையாய் உள்ளன .. அந்த முதல் படத்தில்.
ReplyDelete>>>>>
திருவண்ணாமலை பற்றியும், கார்த்திகை தீபம் பற்றியும் பல்வேறு சுவையான விஷயங்கள் அறிய முடிந்தது.
ReplyDelete>>>>>
நேரிலே சென்றிருந்தாலும், சரியாக கவனிக்காததோர் விஷயம், அங்குள்ள நந்திகள் எல்லாமே, மலையை மட்டுமே நோக்கி இருப்பவைகளாக அமைந்துள்ளன என்பது.
ReplyDelete>>>>>
வரிசையாக எட்டு லிங்கங்களையும் அவற்றின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளது நன்று.
ReplyDelete>>>>>
தேனும், தினைமாவும், சர்க்கரையும், பழமும் கலந்த மாவிளக்கு நல்ல ருசியோ ருசியாக உள்ளது. ;)
ReplyDelete>>>>>
ReplyDelete’ஓம் நமச்சிவாயா’ என்று எழுதியுள்ள, மிகப்பெரிய ப்ளாஸ்டிக் தொட்டிக்கு இருபுறமும் நிற்கும், பசுவும் யானையும் பார்க்கவே பக்திப்பரவஸமாக உள்ளன.
>>>>>
வணக்கம்..! சிறப்பான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்..!
Deleteஅவை வர்ணம் பூசப்பட்ட செப்புக்கொப்பரைகள்..
மலைமீது எடுத்துச்சென்று தீபம் ஏற்றுவார்கள்..!
அப்படியா! வர்ணம் பூசப்பட்ட செப்புக்கொப்பரைகளா ?
DeleteSORRY. இப்போது புரிந்து கொண்டேன். கீழே மஹாதீபம் என்றும்கூட அதில் எழுதப்பட்டுள்ளது.
இப்போது தான் அதை நான் சரியாக கவனித்தேன்.
தனியாகவே ஒரு படம் இப்போது சேர்க்கப்பட்டுள்ளது .... நல்லது.
விளக்கிச்சொன்னதுக்கு நன்றிகள்.
படம் ஏற்கெனவே இருந்ததுதான் ..
Deleteபுதிதாக ஏதும் சேர்க்கப்படவில்லை..!
யானைப்படத்திற்குக்கீழ் காட்டியுள்ள மிகப்பெரிய தனிக்கொப்பரை இப்போது தான் என் கண்ணில் படுகிறது.
Deleteமுன்னால் இதை நான் பார்க்கவே இல்லை. அதை முன்பே பார்த்திருந்தால் ப்ளாஸ்டிக் பக்கெட் என நினைத்து நான் எழுதியிருக்கவே மாட்டேன்.
என் கண் பார்வையிலும், சமீபகாலமாக ஏதோ சில கோளாறுகள் இருப்பதாக நான் உணர்கிறேன். மீண்டும் Periodical Eye Check-up க்கு அடுத்தமாதம் ஒரு நாள் செல்ல வேண்டியுள்ளது.
தாங்கள் இதுபோலச் சொல்வதால் அவஸ்யமாக நான் கண் டாக்டரைப்போய் உடனே பார்க்கத்தான் வேண்டும். அவரிடம் Appointment வாங்குவது தான் மிகவும் கஷ்டம்.
ஏற்கனவே 30 01 2014 க்கு வாங்கி வைத்துள்ளேன். பார்ப்போம். தகவலுக்கு மீண்டும் நன்றிகள்.
விளக்குகள், நந்திகள், சிவலிங்கங்கள், முயல்கள், பறவைகள், விலங்குகள் என ஏராளமாகச் செய்து, விற்பனைக்குப் பரப்பி வைத்துள்ள, பீங்கான் பொம்மைக்கடை பிரமிப்பளிப்பதாக உள்ளது.
ReplyDelete>>>>>
அர்த்தநாரீஸ்வரர் படத்தில் சிவனுக்கும் அம்பாளுக்கும் பொதுவாக நடுவில் அமைந்துள்ள ’கண்’ணையும் புருவத்தையும், வைத்த ’கண்’ வாங்காமல் வெகு நேரம் ’கண்’டு ரஸித்தேன்.
ReplyDeleteஓவியரின் தனித்திறமையை உணர முடிந்தது.
-o [ 8 ] o-
திரு அண்ணாமலை திருத்தலத்தைப் பற்றிய தகவல்களுடன் அருமையான அழகான படங்களுடன் - நல்லதொரு பதிவு!..
ReplyDeleteஅற்புதமாய் அழகாய் அப்படியே மன இருள் அகற்றும்
ReplyDeleteமகாத்மியம்... மிக அருமை!
உங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!
அழகான படங்கள்.. சிறப்பான தகவல்களுடன் கூடிய அருமையான பகிர்வு அம்மா!!.. தங்களுக்கும் திருக்கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...மிக்க நன்றி!!
ReplyDeleteதிருவண்ணாமலை தீபம் பற்றி அறிந்திருக்கிறேன்ன்.. இன்றுதான் படம் பார்த்து மிக மகிழ்ச்சியடைகிறேன்ன்.. தீபத் திருநாள் வாழ்த்துக்கள்...
ReplyDeleteதிருவண்ணாமலை தீபத் த்ரயுனால் படங்களும் விளக்கங்களும் அருமை.
ReplyDeleteஉங்களுக்கு கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள்.
அருமையான தகவல்கள்! அழகான படங்கள்! சிறப்பான பதிவு! வாழ்த்துக்கள்!
ReplyDeletesuperb pictures about thiruannamalai deepam
ReplyDeleteவழக்கம்போல் அருமையான படங்கள் மற்றும் விபரங்கள் .நன்றி அம்மா .
ReplyDeleteஅனைத்து நந்திகளும் (சிவனைப் பார்க்காமல்) மலையையே பார்த்துக் கொண்டிருக்கின்றன என்ற தகவலை இப்போதுதான் தெரிந்து கொண்டேன் படங்களும் அருமையாக உள்ளன. பாராட்டுக்கள்
ReplyDeleteBeautiful wirteup and pictures, it was like I was present in Thiruannamalai...
ReplyDeleteஅற்புதத் தகவல்கள் + படங்கள்.
ReplyDeleteஅருமை.
திருவண்ணாமலை தீபம் பற்றிய சிறப்பான பகிர்வு. நன்றி.
ReplyDelete