தென்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
திருவண்ணாமலை ஜோதியே போற்றி
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம்
நம பார்வதீபதயே - ஹர ஹர மஹாதேவா
என திகட்டாது தித்திக்கும் திருவாசகத்தேன் அமுதத்தால் அபிஷேகிக்கப்பட்டு நம் எண்ணத்தில் இமைப்பொழுதும் நீங்காமல் போற்றி வணங்கப்படும் அரங்கநாதபுரம் கஜாரண்யேஸ்வரர் ஆலயம் தனிச் சிறப்பு வாய்ந்தது.
இறைவனுக்கு ஆனேசர், கரிவனநாதர், ஆனைக்காரப் பெருமான், கஜஆரோகணேஸ்வரர் என்ற பெயர்களும் உண்டு.

இறைவி, காமாட்சி. தலவிருட்சம் வில்வம்.
தீர்த்தம் வஜ்ரதீர்த்தம், இந்திர கூபம்.
திருச்சிக்கு அருகிலுள்ள திருவானைக்காவில் முன் காலத்தில் சிவபெருமான் வெண் நாவல் மரத்தின் கீழ் அமர்ந்திருந்தார்.
மரத்தின் சருகுகள் விழாதவாறு சிலந்தி ஒன்று சிவலிங்கத்திற்கு மேல் வலையைப் பின்னி வைத்தது.
அதே சமயம், யானை ஒன்று துதிக்கையில் காவிரி நீர் கொண்டு வந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்தது.
சிவலிங்கத்தின் மேல் சிலந்தி வலையை கண்ட யானை அதனை அறுத்தெறிந்தது.
இதுகண்டு வெகுண்ட சிலந்தி இன்னொரு வலை பின்னியது.
மறுபடி யானை அறுத்தெறிந்தது.
இப்படி தினந்தோறும் நடந்தது. இதில் ஆத்திரமடைந்த சிலந்தி ஒருநாள் யானை அபிஷேகம் செய்யும்போது துதிக்கைக்குள் புகுந்து கடித்தது. யானை துதிக்கையை தரையில் அடித்தது. இதில் யானையும் இறந்தது. சிலந்தியும் இறந்தது.
அந்த சிலந்தியே சிவனருளாளரான சோழ மன்னர் சுபதேவர்-கமலாவதிக்கு மகனாக பிறந்த கோச்செங்கணான் -கோச்செங்க சோழன்.
இவர் தன் முற்பிறவி வாசனையால் திருவானைக்கா கோயிலை கட்டினார். மேலும், யானையால் தீங்கு ஏற்படக்கூடாது என்பதற்காக, யானை ஏற முடியாதபடி மாடக் கோயில்களாகக் கட்டினார்.

இது ‘யானை ஏறாத் திருப்பணி’ என்றே அழைக்கப்பட்டது.
திருவானைக்காவிற்கு கிழக்கேயுள்ள அரங்கநாதபுரம் கஜாரண்யேஸ்வரர் கோயில் கோச்செங்கட் சோழன் கட்டிய 70 மாடக் கோயில்களில் முதலாவது கோயிலாகும்.1750 ஆண்டுகள் பழமையானது.
மாலிக்காபூர் படையெடுத்து வந்தபோது திருவரங்கம், திருவானைக்காவில் இருந்த மூர்த்திகளை காடாக (ஆரண்யம்) இருந்த இப்பகுதியில் மறைத்து வைத்திருந்து பின்னர் எடுத்துச் சென்றமையால் அரங்கநாதபுரம் என்றும் கஜாரண்யம் என்றும் அழைக்கப்பட்டது.
ஒருசமயம் இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானை நேமத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை மெய்மறந்து வழிபட்டது. அதற்குச் சான்றாகத் திருக்கோயில் சுற்றில் யானை ஒன்றின் கல்லாலான உருவச் சிலை – தும்பிக்கை, முன் இரு கால்களுடன் சுவரில் பதிந்தவாறு உள்ளது.
ஐராவதத்தைத் தேடி வந்த இந்திரன் கோபம் கொண்டு
யானை மீது வஜ்ராயுதத்தை ஏவினான்.

அப்போது சிவபெருமான் செய்த ஊங்காரத்தால் வஜ்ராயுதம் கஜாரண்ய தலத்துள் வந்து விழுந்தது.
விழுந்த இடத்தில் நீருற்று ஏற்பட்டது. அதுவே வஜ்ரதீர்த்த குளமாகியது.
வஜ்ராயுதத்தை எடுக்க வந்த இந்திரன் அங்கு இந்திர கூபம் என்ற கிணற்றை வெட்டி அந்த தீர்த் தத்தால் கஜாரண்யேஸ்வரரை அபிஷேகம் செய்து வழிபட்டு பேறு பெற்றான்.
இத்தலத்தின் மகிமையை அறிந்த காஞ்சி காமகோடி ஸ்ரீஸ்ரீஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆலயத்தில்
தட்சிணா மூர்த்தி சந்நதிக்கு எதிரில் அமர்ந்து தியானம் செய்ததன் நினைவாக அங்கு ஒரு மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

பரிவார மூர்த்திகளாக வலம்புரி விநாயகர்,
வள்ளி- தேவசேனா சமேத சுப்ரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர்,
நவகிரகங்கள்,
தட்சிணாமூர்த்தி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
இறைவன் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறார்.
நந்திதேவர்.
தெற்கு நோக்கியபடி காமாட்சியம்மன்.
மாடக்கோயிலை கஜேந்திரன் தாங்குவது போல் கட்டப்பட்டுள்ளது சிறப்பு.
இது, பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய தலமாகும்.
25வது நட்சத்திரமான பூரட்டாதி 7ன் மகிமையை விட மிகச் சக்தி வாய்ந்தது.
2ம் எண்ணான மதிகாரகனான சந்திரனுக்கும், 5ம் எண் வித்யாகாரகனான புதனுக்கும் உரியது.

சந்திரனின் புதல்வரே புதன். சந்திரன் மனதை ஆள்பவர். புதன் அறிவை ஆள்பவர். இத்தலத்தில் இறைவனைத் தொடர்ந்து ஏழு நாட்கள் ஏழு திரவியங்களுடன் கூடிய சப்தாமிர்த காப்பு (பஞ்சாமிர்தம் + பாதாம் பருப்பு, முந்திரி) ஏழுவகை நிவேதனங்களால் வழிபடுவதால் ஏழேழு ஜென்மங்களாக தொடரும் சாபங்களை அழித்து கடைத்தேற கஜாரண்யேஸ்வரர் அருள்பாலிகிறார்.
கல்விக்குரிய ஸ்தலம் இது. மகாபாரதத்தில் கிருஷ்ணரே வியக்கும் வகையில் நல்லறிவு கொண்டவனாக பாண்டவர்களில் கடைசி தம்பியான சகாதேவன் விளங்கினான்.
சகாதேவன் ஜோதிட அறிவு கொண்டவன். பாரத யுத்தம் துவங்கும் முன்பு, துரியோதனன் இவனை நாடி வந்து, எந்த நாளில் போரைத் துவங்கினால் வெற்றி கிடைக்குமென சகாதேவனிடமே கேட்டான்.
தன்னை எதிர்த்து போரிட, தன்னிடமே ஆலோசனை கேட்க வந்த துரியோதனனை ஏமாற்ற சகாதேவன் விரும்பவில்லை.
அமாவாசை அன்று போர் துவங்கினால் வெற்றி உனக்கே என அவன் நாள் குறித்துக் கொடுத்தான்.
அவனது கணிப்பு தப்பியதில்லை. ஆனால், கிருஷ்ணர் தான் தன் மாயத்தால் அமாவாசையை முந்தச் செய்து, துரியோதனனைத் தோற்கடித்தார்.
இவ்வாறு எதிரியை வெறுக்காத குணமும், உண்மையாகவும் நடந்து கொள்ளவும், சகாதேவன் போல் சாஸ்திர ஞானம் பெறவும் இங்கு வழிபடலாம்.
காலபைரவர் பூரட்டாதி நட்சத்திர நாளில் ஏழு கிழமைகளைப் படைத்தார். இவற்றை ஏழு யானைகளின் மீது ஏற்றி பவனி வந்தார்.
இவ்வாறு, காலச்சக்கரத்தை படைத்தருளிய தலம் இது என தல புராணம் கூறுகிறது.
மூலவர்விமானம் கஜ கடாட்ச சக்தி விமானம் எனப்படுகிறது.
ஐராவத யானையும், தேவர்களின் தலைவன் இந்திரனும் பூரட்டாதி நாளில் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர்.
இத்தலத்தில் தொடர்ந்து ஏழு நாட்கள் சந்திரஹோரையில் இறைவனை வழிபடுவதால் பதவியில் ஏற்படும் ஆபத்துகள் நீங்கி பதவி உறுதியாகும் என்பது நிதர்சனமான உண்மை.

இசையில் அவரோகண (ஏழு) பீஜங்கள், தட்சிணாமூர்த்தியால் வில்வ தளங்களில் வைத்து ஆஞ்சநேயருக்கு அளிக்கப் பெற்ற திருத்தலம் இது.
ஸ்ரீசாகம்பரி தேவி இங்குள்ள திருக்குளத்தில் ஏழு அல்லிமலர்களை தோற்றுவித்து வேத அல்லிமலர் குருபீடத்தை உலகிற்கே அளித்தாள்.
இதனால் ஏழேழு ஜென்மங்களும் கடைத்தேற இங்கு ஏழு தினங்கள் வில்வ மரத்தின் கீழ் தியானம் மேற்கொள்ளலாம்.
ஏழு வண்ண ஆடைகளை தானம் அளித்தல் இன்னும் சிறப்பாகும்.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் கல்லணை செல்லும் (அகரப்பேட்டை வழி) சாலையின் தென்புறம் இத்தலம் உள்ளது.
கஜாணரன்யேஸ்வரர் மகிமை அறிந்தேன்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
வணக்கம்
ReplyDeleteஅம்மா.
அறிய முடியாத நல்ல விடங்களை அறியக்கிடைத்துள்ளது.. படங்கள் அனைத்தும் அழகாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிகவும் சீரியதொரு பகிர்வு! பல்வேறு பரிகாரங்கள் மேற்கொள்ளவும், வேண்டுதல் செய்திடவும் கூடிய பழம் பெரும் ஆலய சிறப்பினை, கண்களைக் கவரும் அழகு மிளிரும் படங்களுடன், கருத்தாழமிக்க பகிர்வு அளித்தமைக்கு நன்றி சகோதரி!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
சிறப்பான தல விளக்கங்களுடன் அற்புதமான படங்கள் அம்மா... நன்றி...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ஜொலிக்கும் குண்டலங்களுடன்,
ReplyDeleteவேயிறு தோளி பங்கன்,
விடமுண்ட கண்டன் !!
அனைத்தும் கவர்ந்தது அதில் சகாதேவனின் நேர்மையை என்னவென்று சொல்வது தன்னைக் கொல்லவந்த பசுவையும் கொல்லலாம் என்று தான் சொல்வார்கள் அப்படி இருக்க.துரியோதனனுக்கு விசுவாசமாய்....
ReplyDeleteவாழ்த்துக்கள்.....!
கஜாரண்யேச்வரர் ஆலயம் பற்றி அறிந்து கொண்டோம்…. உங்கள் பணியை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை. திருத்தலங்களைப் பற்றி அரிய தகவல்களை அழகுப் படங்களுடன் தருகிறீர்கள்..
ReplyDeleteக ஜா ர ண் யே ஸ் வ ர ர்
ReplyDeleteகஜம் + ஆரண்யம் + ஈஸ்வரர் = கஜாரண்யேஸ்வரர்
கஜம் = யானை
ஆரண்யம் = காடு
ஈஸ்வரன் = சிவன்
யானைகள் நிறைய வாழும் காட்டில் கோயில் கொண்டுள்ள சிவனாக இருப்பார் போலிருக்கிறது.
>>>>>
முதல் படத்தில் காட்டியுள்ள ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தினைப் பார்த்துக்கொண்டே இருந்தாலே நமக்குள்ளும் ஓர் அதிர்வினைத் தருவதாக வெகு அழகாக உள்ளது.
ReplyDelete>>>>>
’சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி’
ReplyDeleteஅப்பாடா, இன்றாவது எங்கள் ஊராம் திருச்’சிராப்பள்ளி’ யைப்பற்றி எழுதத்தோன்றியதே. மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள்.
ஆனால் அதிலும் ’காலை’ [பனுமதி, பனுமாதி, பானுமதி போல] இப்படி அநியாயமாக எடுத்து விட்டீர்களே !
’சிரப்’பள்ளி என்ற அது என்னவோ எனக்கு இருமல் ’சிரப்’ - கஷாயம் குடிப்பதுபோல உள்ளது.
>>>>>
கஷாயத்தில் தேன் கலந்து குழைத்து குழந்தைக்கு இனிப்பாக்கிக் குடிக்கக் களிப்பாக்கிக் கொடுப்பதுபோல, ‘சிரப்’பள்ளிக்குக் கால் வாங்கி இப்போது ’சிராப்பள்ளி’ ஆக்கிக்கொடுத்து சிறப்பித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
Deleteமிக்க நன்றி, மேடம்.
திருவானைக்கோயில் ’யானை + சிலந்தி’ கதையை தாங்கள் சொல்லி மீண்டும் கேட்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteஅந்தப்படம் [யானை, சிலந்தி, சிவன், நாவல் மரம், அழகான அம்பாள்] தான் கூகுளில் எளிதாகக் கிடைப்பதாக உள்ளதே.
ஏனோ தாங்கள் அதை வெளியிடவில்லை. ;(
>>>>>
திருவானைக்கோயிலுக்குக் கிழக்கே என்று எழுதியதும், நம்மூருக்குள் நாம் பார்க்காத இப்படியொரு கோயிலா என முதலில் நான் வியந்தேன்.
ReplyDeleteபிறகு தான் திருக்காட்டுப்பள்ளி அருகே எனத் தெரிந்து கொண்டேன்.
OK OK அதுவும் இங்கிருந்து கிழக்கு தான்.
>>>>>
அரங்கநாதபுரம் / கஜாரண்யம் / வஜ்ர தீர்த்தக்குளம் பெயர்க்காரணங்கள் தெரிந்துகொள்ள முடிந்தது ... அருமை.
ReplyDeleteஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா தக்ஷிணாமூர்த்தி சந்நதிக்கு எதிரில் அமர்ந்து தியானித்த இடத்தில் இப்போது ஓர் மண்டபமா ?
அழகோ அழகான செய்தி தான் !
>>>>>
சஹாதேவனின் ஜோதிட அறிவினை தாங்கள் இந்தப்பதிவினில் எடுத்துரைத்த விதம், தங்களின் ஆழ்ந்த ஆன்மிக அறிவினை அறியத்தருவதாக எண்ணி மகிழ முடிகிறது.
ReplyDelete>>>>>
சிவ .... சிவா !
ReplyDeleteதினமும் எத்தனைக் கோயில்களைப்பற்றி எத்தனைவிதமான தகவல்கள் தங்களால் நாங்களும் அறிய முடிகிறது. ;)
அழகான படங்களுடன் கூடிய அற்புதமான பதிவுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
oo oo oo oo
கஜாரண்யேஸ்வரர் தல அருமை! விரிவாக பகிர்ந்தமை சிறப்பு! தகவல்கள் வியப்பு அளித்தது! நன்றி!
ReplyDeleteஅருமையான படங்கள். தகவல்கள்.
ReplyDeleteஅருமையான படங்களுடன் அழகான விளக்கம்...
ReplyDeleteஅறிந்திராத தகவல்கள்..... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDelete