Wednesday, February 5, 2014

நலம் நல்கும் திருநாங்கூர் கருட சேவைகள்..!




குலந்தரும் செல்வம் தந்திடும்  அடியார் படுதுயர் ஆயினவெல்லாம் 
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும்  அருளோடு பெருநிலமளிக்கும் 
வலந்தரும் மற்றும் தந்திடும்  பெற்ற தாயினும்ஆயின செய்யும் 
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமமே. 
திருமடந்தை மண்மடந்தை யிருபாலும் திகழத்
தீவினைகள் போயகல அடியவர்கட் கென்றும்
அருள் நடந்து இவ் வேழுலகத் தவர்பணிய வானோர்
அமர்ந்தேத்த இருந்தவிடம்

என்று  ஆழ்வார்களால் போற்றப்படும் திருநாங்கூர் திவ்ய தேசத்தில்
பெருமாளை பெரிய திருவடியான கருட வாகனத்தில் சேவித்தால் 
மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம்..

 நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த நாங்கூரில் 108 வைணவ தலங்களில் 
11 கோயில்கள் ஒரே பகுதியில் அமைந்துள்ள கோயில்களில் ஆண்டுதோறும் கருட சேவை உற்சவம் விமரிசையாக நடைபெறும். 

ருத்ர தாண்டவம் ஆடிய சிவபெருமானின் ருத்ரத்தை தணிக்க, 
ஸ்ரீமந் நாராயணரே பரமபதநாதனாக வந்தாராம். அவரிடம், 'என்னைப் போலவே பதினோரு உருவங்களாக காட்சித்தர வேண்டும்' என்று சிவனார் கேட்டுக்கொண்டதற்கிணங்க, 11 திருக்கோலங்களில் திருநாங்கூர் திருப்பதிகளில் காட்சி தருகிறாராம் பெருமாள். 

 தை அமாவாசைக்கு மறுநாள்- கருடசேவையின்போது, 11 பெருமாள்களும் கருடவாகனத்தில் எழுந்தருள... திருமங்கையாழ்வார் அன்ன வாகனத்தில் எழுந்தருளி, மாலை- மரியாதையுடன் வலம் வந்து மங்களாசாசனம் செய்வது, கண்கொள்ளா காட்சியாக இருக்கும்

ஆண்டு தோறும் திருநாங்கூர் மணிமாடக்கோயில் நாராயணப் பெருமாள் சந்நிதியில்  தை  அமாவாசைக்கு மறுநாள் 11 பெருமாள்களும் 
கருட வாகனத்தில் சேவை சாதிக்கும் உற்ஸவம் நடைபெறும்.

நாராயணப் பெருமாள், 
குடமாடு கூத்தர்,  
செம்பொன்னரங்கர், 
பள்ளி கொண்ட பெருமாள், 
அண்ணன் பெருமாள், 
புருஷோத்தம்ம பெருமாள், 
வரதராஜ பெருமாள், 
வைகுந்தநாத பெருமாள், 
மாதவ பெருமாள்,  
பார்த்தசாரதி பெருமாள், 
கோபாலன் பெருமாள் 

ஆகிய பெருமாள்கள் தங்கள் கோயில்களில் இருந்து மேளதாளங்களுடன் புறப்பட்டு நாங்கூர் மணிமாட கோயில் முன்பு எழுந்தருள்வர்.

அனைத்து பெருமாள்களுக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை காட்டப்படும்..! தொடர்ந்து 11 பெருமாள்களும் தங்க கருட வாகனத்திலும், குமுதவல்லி நாச்சியாருடன் திருமங்கையாழ்வார், மணவாளமாமுனிகள் சகிதம் ஹம்ச வாகனத்தில்  எழுந்தருளி சேவை சாதித்து  சிறப்பு தீபாராதனை காண்பித்து கருட சேவை நடைபெறும்..!

பெருமாள்கள் வீதியுலா காட்சியுடன் 11 கருட சேவையை தரிசித்தால் புண்ணியங்களின் பலன்கள் ஏராளம் கிடைக்கும், 


Manikoodam





Shri Sowmya Damodara Perumal Villivakkam






9 comments:

  1. வணக்கம்
    அம்மா.

    இறைவனின் தரிசனம் கிடைத்தது போல ஒரு உணர்வு... கருத்துகளும் படங்களும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் அம்மா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-



    ReplyDelete
  2. அத்தனையும் அற்புதம்

    ReplyDelete
  3. அதிகாலையில் 11 கருட சேவையின் தரிசனம் கிடைத்தது அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. 11 பெருமாள்களையும் கருடசேவையில் தரிசனம் செய்து விட்டேன்.
    நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. கருடசேவை அற்புதம். நன்றி.

    ReplyDelete
  6. தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு பார்த்திருக்கிறேன். இருந்தாலும் உங்கள் படங்களில் அணு அணூவாகத் தரிசிக்க முடிகிறது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. 11 பெருமாள்கள் பற்றிய புதிய செய்தியை தெரிந்துகொண்டதற்கு மிக்க நன்றி அம்மா

    ReplyDelete
  8. கண்கொள்ளாக்காட்சிகளாக கருட சேவைகள், அனைத்தும் கண்டேன் பெரு மகிழ்ச்சி கொண்டேன்.

    கடைசி படத்தின் நடுவே என் பெயரிலும் ஒரு பெருமாளா !

    ஆஹா ! ;) பிரமாதம். ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே !!

    வழக்கம்போல அழகான படங்களுடன் கூடிய அற்புதமான பகிர்வுக்கு நன்றிகள், பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. //கடைசி படத்தின் நடுவே என் பெயரிலும் ஒரு பெருமாளா !//

    இல்லை. இல்லவே இல்லை. ஸ்ரீ பெருமாள் பெயரிலேயே அடியேன் என்று என் தாயாருக்கும் தெரியும்.

    என் அம்மாவின் அப்பா பெயர் இது.

    ஏற்கனவே சொல்லியுள்ளேன் என் ‘பெயர் காரணம்’ என்ற பதிவினில்.

    http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_09.html

    ReplyDelete