`ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாகிருதம் ஆதாரம்
ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ் மஹே'
ஞானம் மற்றும் ஆனந்தத்தின் வடிவமாய், குற்றமற்ற ஸ்படிக மணியைப் போன்ற திருமேனி கொண்டவனும், எல்லாக் கலைகளுக்கும் பிறப்பிடமாகத் திகழ்பவனும், குதிரை முகத்தைக் கொண்டு பீதாம்பர ஆடை தரித்து ஸ்ரீமகாலட்சுமி தாயாரை மார்பில் கொண்ட ஹயக்ரீவரை மனதார வழிபடுகிறேன் என்பது பொருள். இதனை தினமும் காலையில் 12 முறை சொல்லிவிட்டு ஸ்ரீஹயக்ரீவரை வணங்கினால், கல்விச் செல்வம் குறைவறக் கிடைக்கும் என்பது ஐதீகம்
கோவை நகரின் முக்கியப் பகுதியான கோட்டைமேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில் கரிகால்சோழன் கட்டிய அழகிய ஆலயம்.
புராதனப் பெருமை கொண்ட கோயிலில், தட்சிணாயனம் மற்றும் உத்தராயனம் ஆகிய காலங்களுக்கான இரண்டு வாசல்கள் உள்ளன.
புராதனப் பெருமை கொண்ட கோயிலில், தட்சிணாயனம் மற்றும் உத்தராயனம் ஆகிய காலங்களுக்கான இரண்டு வாசல்கள் உள்ளன.
சொர்க்க வாசல் உள்ள கோவைக் கோயில்களில் ஒன்றானஇங்கு தாயாரின் திருநாமம் ஸ்ரீமகாலட்சுமி கருணையும் கனிவும் கொண்டு, தன்னை நாடி வரும் பெண்களுக்குத் திருமண வரம் தரும் தேவியாக எழிலுடன் அருள்பொழிகிறாள்..!
அசுரர்களை அழித்து, அவர்களிடம் இருந்து வேதச் சுவடிகளைக் கைப்பற்றி, கலைவாணியிடம் தந்தருளினார் ஸ்ரீஹயக்ரீவர்.
ஸ்ரீஹயக்ரீவர் தனி சந்நிதியில் இவருக்குத்தான் சிறப்பு வழிபாடுகள் அதிகம் நடைபெறுகின்றன.
ஸ்ரீஹயக்ரீவர் தனி சந்நிதியில் இவருக்குத்தான் சிறப்பு வழிபாடுகள் அதிகம் நடைபெறுகின்றன.
ஸ்ரீலட்சுமிதேவியைத் தாங்கியபடி இருப்பதால்,
ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் எனும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
புதன்கிழமைகளில் இங்கு வந்து, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவரை வணங்கித் தொழுதால், சகல ஐஸ்வரியங்களும் பெருகும்; மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை.
புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் ஏலக்காய் மாலை, திராட்சை மாலை அணிவித்து, நெய்தீபம் ஏற்றி வணங்கினால், கல்வி ஞானம், ஞாபக சக்தி ஆகியவை அதிகரிக்கும்.
வருடந்தோறும் பிப்ரவரி மாதத்தில், கோயிலில் ஸ்ரீசுதர்சன ஹோமமும் ஸ்ரீஹயக்ரீவ ஹோமமும் பிரமாண்டமாக நடைபெறும்.
வருடந்தோறும் பிப்ரவரி மாதத்தில், கோயிலில் ஸ்ரீசுதர்சன ஹோமமும் ஸ்ரீஹயக்ரீவ ஹோமமும் பிரமாண்டமாக நடைபெறும்.
அப்போது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இங்கே அழைத்து வந்து, ஸ்வாமி தரிசனம் செய்து, ஹோமத்திலும் பங்கு பெறுகின்றனர். இந்த நாளில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
தங்கள் பெயர், தேர்வு பதிவு எண், நட்சத்திரம் மற்றும் ராசி
ஆகியவற்றைக் காகிதத்தில் எழுதி, உத்ஸவருக்கு அருகில்
வைத்து வேண்டிக் கொள்கிறார்கள்.
தங்கள் பெயர், தேர்வு பதிவு எண், நட்சத்திரம் மற்றும் ராசி
ஆகியவற்றைக் காகிதத்தில் எழுதி, உத்ஸவருக்கு அருகில்
வைத்து வேண்டிக் கொள்கிறார்கள்.
ஸ்ரீலட்சுமி ஹயகிரீவர் மகிமை அறிந்தேன்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
கல்விக்கடவுளான ஹயக்ரீவர் பற்றிய இன்றைய பதிவு,
ReplyDeleteபொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களுக்கு
மிகவும் பயன்படக்கூடியது.
காலத்திற்கு ஏற்ற கருணையுடன் தந்துள்ள பதிவு.
>>>>>
வழக்கம்போல் படங்களும் விளக்கங்களும்
ReplyDeleteஅருமையோ அருமை,
>>>>>
ஹயக்ரீவர் ஸ்தோத்ரம் பற்றிய காணொளி கச்சிதம்.
ReplyDelete>>>>>
கோவை கோட்டைமேடு பகுதியில் அமைந்துள்ள
ReplyDeleteஆலயம் பற்றிய அனைத்துத் தகவல்களும், அங்கு
நடைபெறும் சிறப்பு வழிபாடுகளும், அவற்றினால்
ஏற்படும் கைமேல் பலன்களும் அறிய முடிந்தது.
>>>>>
பார்வைப்பதிவுகள் எண்ணிக்கை: 10,06,077
ReplyDeleteமொத்தப்பதிவுகளின் எண்ணிக்கை: 1226
பின்தொடர்வோர் எண்ணிக்கை: 699
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ooooo
சிறப்பான விளக்கங்களுடன் அருமையாக படங்கள் அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇங்கு தாடிக்கொம்பு கோவிலிலும் ஸ்ரீ ஹயக்ரீவர் மிகவும் விசேசம்...
அருமையான படங்கள்.
ReplyDeleteநல்ல தகவல்கள். நன்றிம்மா.
பொன் தரும் புதன் !.. - சகல செல்வங்களுடன் ஞானமும் அருளும் ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவ ஸ்வாமியின் தரிசனம் .. மகிழ்ச்சி!..
ReplyDeleteபிரமனுக்கு அருளியவா,
ReplyDeleteபரமனுக்கு இசைந்தவா,
திரு வாழ் மார்பா,
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா ,
என அரை நிமிடமாகிலும்
உனை நினைத்து வழிபட
பதிவிட்ட பேரரசி வாழ்கவே !
ஸ்ரீலஷ்மிஹயக்ரீவர் வழக்கம்போல சிறப்பான விளக்கங்கள், ஸ்தோத்திரம், அருமையான படங்கள்.நன்றி..
ReplyDeleteஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் பற்றிய தகவல்களும், படங்களும் அருமை.
ReplyDeleteகோட்டைமேடு வரதராஜபெருமாள் பார்க்கவேண்டும். கோவை போகும் போது பார்க்கவேண்டிய கோவில் லிஸ்ட் அதிகமாகி கொண்டு போகிறது.
ReplyDeleteஇன்று 10வது பரீட்சை எழுதும் மாணவர்கள் எல்லாம் ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவர் அருளால் நன்கு எழுதட்டும். அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலங்களும், வளங்களும் பெற்று வாழட்டும். வாழ்க வளமுடன்.
வாழ்த்துக்கள் அருமையான பதிவுக்கு.
லஷ்மி ஹயக்கீரிவர் கோயில் பற்றிய சிறப்பு தகவல்கள் அருமை! அழகான படங்கள்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteலஷ்மி ஹயக்கீரிவர் கோயில் பற்றிய சிறப்பு தகவல்கள் அருமை! அழகான படங்கள்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஏலக்காய் மாலை திராட்சை மாலை நெய்தீபம் அணிவித்து ஏற்றி வழிபட்டால் கவி ஞானம் ஞாபக சக்தி அதிகரிக்கும்.....! ஹூம்.....!
ReplyDeleteஉங்கள் பதிவுகள் ஆன்மீக அன்பர்களுக்கு மிகச்சிறந்த கையேடு. புத்தகமாக கொண்டுவர இருக்கிறீர்களா? மின்நூலாகவாவது கொண்டுவாருங்கள்.
ReplyDelete