


இயேசு கிறிஸ்து என்னும் தீர்க்கதரிசி, கடவுளின் மகனாக கன்னிப்பெண்வயிற்றில் பாலகனாக பிறப்பார் என்ற செய்தியையும் "பாடுபட்ட சிலுவை மரணத்தைச் சந்திப்பார். மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார்' என்றும் முன்னறிவித்தது பைபிள்...
யூதாஸ் என்ற சீடனால் 30 வெள்ளிக்காசுக்காக
காட்டிக் கொடுக்கப்பட்டார்.
யூத மதக்குருக்கள் இயேசிவின் மீது பொய்க்குற்றம் சுமத்தி
சிலுவையில் அறைந்து கொன்றனர்.
இயேசுவின் சரீரம் கன்மலையில் உள்ள கல்லறையில் வைக்கப்பட்டது.
மரணத்திற்குப் பின்பு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவேன் என்று
இயேசு முன்னறிவித்து இருந்ததால் ரோம் நாட்டின்
போர்ச் சேவகர்கள் அவரது கல்லறையைக் காவல் காத்தனர்.
மூன்றாம் நாள் அதிகாலையில் வானத்தில் இருந்து வந்த
கடவுளின் தூதன், கல்லறையில் வைக்கப்பட்டிருந்த
பெரிய கல்லைப் புரட்டி அதன் மீது அமர்ந்தான்.
போர்ச் சேவகர்கள் தரையில் விழுந்து செத்தவர்கள் போல ஆனார்கள். அப்போது இயேசுவின் கல்லறைக்கு மரியாதை செலுத்த சிலர் வந்தனர்.
கல் புரட்டிப் போட்டிருப்பதைக் கண்டதும், சரீரத்தை யாரோ
எடுத்துக் கொண்டு போய்விட்டனர் என்று புலம்பினர்.
அவரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ், ""குற்றமற்ற ரத்தத்தைக் காட்டிக் கொடுத்தேன்,'' என்று மனம் நொந்து தற்கொலை செய்து கொண்டான்.
பின்பு 11 சீடர்களில் தாமஸ் என்பவரைத் தவிர பத்து பேர் பூட்டியிருந்த ஓர் அறையில் இருந்தனர். இயேசு அவர்களின் நடுவே காட்சியளித்தார்.
தாமஸுக்குக்கு இந்த தகவலை அவர்கள் கூறினர். தாமஸோ நம்பவில்லை.
அப்போது, இயேசு அங்கு வந்தார், தாமஸை நோக்கி, ""சந்தேகப்படாதே'' என்று கூறி அவனது கைவிரலால் தன் காயங்களைத் தொட்டுக் காட்டினார்.
தாமஸ் உணர்ச்சி வசப்பட்டு கதறி அழுதான். இயேசு சீடர்களை நோக்கி, ""கண்டு நீங்கள் விசுவாசிப்பீர்கள். காணாமல் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்,'' என்று கூறினார்.
அன்று முதல் எதிலும் சந்தேகப்படுபவர்களை டவுட்டிங் தாம்ஸ் ,
சந்தேக தாமஸ் என்று கூறுவது வழக்கமாயிற்று..!
அன்று முதல் இயேசு 40 நாட்கள் வரை தம்மை நம்பிய சீடர்களுக்கு காட்சியளித்து, 40வது நாள் பரலோகத்திற்கு ஏறிச் சென்றார்.
உலக வரலாற்றின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது
இயேசுவின் உயிர்த்தெழுதல் நிகழ்ச்சி.
அந்த நிகழ்வே அவரை நடுமைய நாயகனாக(கி.மு.,-கி.பி.,)
இன்று வரை சாதிக்க வைத்துள்ளது
நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்.
என்றார் இயேசுபிரான்..
அமெரிக்காவில் ஈஸ்டர் விழா அரசு விழாவாக நடத்தப்படுகிறது.
அன்று நன்றாக வேக வைக்கப்பட்ட முட்டையை சர்க்கரைப்பாகு
ஊற்றி பதப்படுத்தி வண்ணம் பூசி அழகுபடுத்துகின்றனர்.
அதை கூடைகளில் வைத்து குழந்தைகளுக்குக் கொடுக்கின்றனர். பெரும்பாலும் இதில் சிவப்பு வண்ணம் தடவுவது வழக்கம்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உலக மக்களுக்காக ரத்தம் சிந்தியதை நினைவு கூரும் வகையில் சிவப்பு வண்ணம் தடவப்படுகிறது.
ஈஸ்டர் திருநாளுக்கு மறுநாள் அமெரிக்க ஜனாதிபதி தமது வெள்ளை மாளிகையில் குழந்தைகளுக்கு ஈஸ்டர் முட்டை வழங்குகிறார்.
நியூயார்க் நகரில் ஈஸ்டர் அணிவகுப்பு நடத்தப்படுகிறது.துன்பம் நீங்கி இன்பம் வந்த ஒரு நாளாக கிறிஸ்தவர்கள் கொண்டாடும் ஈஸ்டர் திருநாள் பெரும் மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகின்றது.
அன்பையும்,கருணையையும் போதித்த இயேசு பெருமான்,தன் பகைவர்கள்
தமக்கு இழைத்த கொடுமைகளையும் தாங்கி,வறிய மக்களுக்கும்,இயலாதவர்களுக்கும் கருணையுடனும் ,அன்புடனும் தன் தேவனின் அருளுடன் பல காரியங்கள் செய்தார்.
உலகை அன்பால் நிறைக்க இயேசு உயிர்த்தெழுந்த நாள் உலகின் மாபெரும் இறைமகன் இயேசு பிரான்.
அன்பை, அதன் உண்மையான பரிமாணத்தை உலகுக்கு உணர்த்தவே பிறந்து, கொடிய துன்பங்கள் தாங்கி, உயிர்த்தெழுந்தார் இறைமகன்.
இயேசு பிரான் உயிர்தெழுந்த நாளினை ஈஸ்டர் பண்டிகை நாளாக உலகம் முழுவதும் உள்ள கிருஸ்துவ மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
நியாமும், சத்தியமும் என்றைக்கும் மரிப்பதில்லை என்பதை எடுத்துக்காட்டும் விதமாகவே இயேசு உயிர்தெழுதல் நிகழ்வு அமைந்துள்ளது.
உயிர்த்தெழுதல் என்பது மனித இனத்துக்குக் கிடைத்த கடவுளின் அன்பளிப்பு என்று கிறித்துவர்கள் நம்புகிறார்கள்.
உயிர்த்தெழவும், மறுபடைப்புக்குத் தயாராகவும் அதில் பங்குபெறவும் மானுடருக்குக் கிடைத்த பரிசு. அது ஒரு புண்ணாற்றும் இயக்கத்தின் தொடர்ச்சி.
ஈஸ்டர் கொண்டாட்டங்கள் சகல மனிதர்களுக்கும் புண்ணாற்றுதல் என்ற மானுடப் பணிக்கான அழைப்பு.
மனிதருள் உறைந்திருக்கும் மரணத்தை வெல்லும் சக்தியை நினைவுபடுத்தி வாழ்வைப் புதுப்பிக்கவும் ரணமாகிவரும் புவியின் புண்களை ஆற்றவும் அளிக்கப்படும் அறைகூவல்.
தொடர்புடைய பதிவுகள்
ஸ்ரீதியா
சிறப்புப் பதிவு வெகு சிறப்பு
ReplyDeleteஇதுவரை அறிந்திராத பல புதிய
செய்திகளை தங்கள் பதிவின் மூலம் அறிந்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteசந்தேக தாமஸ் விஷயம் புதிதாய் தெரிந்து கொண்டேன்..
ReplyDeleteஈஸ்டர் நல்வாழ்த்துக்கள்!..
ReplyDeleteஅழகழகான படங்களுடன், இதுவரை அறியாத தெரியாத பல்வேறு புதிய செய்திகள், அறிய முடிந்தது.
ReplyDeleteதங்களின் வெற்றிகரமான 1250வது பதிவுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான நல்வாழ்த்துகள். !!!!!
Deleteபல புதிய தகவல்களுடன் ஈஸ்டர் திருநாள் பகிர்வு. ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.நன்றி.
ReplyDeleteஈஸ்டர் தினம் பற்றிய பல்வேறு தகவல்கள் அறிந்தோம் நன்றி
ReplyDeleteஈஸ்டர் திருநாள் பற்றிய தகவல்களுக்கு நன்றி.
ReplyDeleteசிறந்த பதிவு .ரசித்தேன்
ReplyDeleteDoubting Thomas பற்றி விஜய் டிவி வினாடி வினா நிகழ்ச்சியில் ஒலி பரப் பானத்தில் நால்வர் அணியில் ஒருவர் கூட பதில்ல்ல்லல்ல்ல்ல் அளிக்க முடியவில்லை கடைசியில் அவர்களளின் ஆசிரியர் விபரம் கூறினார் ஆனால் அதை விட தாங்கள் அளித்திருந்த செய்தியை வாசிக்கும் போது கிறிஸ்துவை பற்றி புரிந்து கொள்ள முடிந்ததுடன் டவ்ட்டிங் தாமசிற்க்கான பதிலும் கிடைத்தது வாழ்த்துக்கள் www.salemscooby.blogspot.in-LIC SUNDARAMURTHY
ReplyDeleteஅனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய பல தகவல்களைக் கூறியுள்ளீர்கள். நன்றி. மேலும் சில தகவல்கள். அந்த doubting Thomas என்பவர்தான் இந்தியாவிற்கு வந்து சென்னை st.Thomas mount இல் இறந்தவர். மேலும் யேசு மரணத்திற்கு முன் பல பாடுகளை அனுபவித்தார். அவைகளைத் தெரிந்துகொள்ள https://www.facebook.com/photo.php?fbid=720601251295955&set=a.720604364628977.1073741826.100000382603615&type=1&relevant_count=1
ReplyDeleteஈஸ்டர் பற்றிய சுவைமிகு தகவல்களுக்கு நன்றி சகோதரியாரே
ReplyDeleteஈஸ்டர் பற்றிய சுவையான செய்திகள்! தங்களின் 1250 ஆவது பதிவு என்பதில் (தகவல் உபயம். திரு V.G.K) என்பதில் மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்! திரு V.G.K அவர்களது பதிவுகளிலேயே அவரது சிறுகதைப் போட்டிக்கான, தங்களின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் கூறிவிடுவது வழக்கம்! மீண்டும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஈஸ்டர் திருவிழாவை அமெரிக்க அரசே கொண்டாடுகிறது என்ற தகவலை உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்.
ஈஸ்டர் திருநாள் பற்றிய விளக்கங்கள் அதிலும் அமெரிக்காவில் கொண்டாடுவதைப் பற்றி தெரிந்து கொண்டேன் . நன்றி அம்மா.
ReplyDeleteமுழுவதும் புதுத் தகவல்கள்.
ReplyDeleteமிக்க நன்றி சகோதரி.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.