ஸ்ரீ ஹேரம்ப கணபதியின் மலர்ப் பதம் பணிந்தேன்
அஞ்சு முகம் கொண்ட ஆனைமுகத்தோன்
ஈரைந்து கரங்களில் பரசும் பாசாங்குசமும்
ஆரமும் மோதகமும் தந்தமுமேந்திய
சூரியனை மிஞ்சும் காந்தியுடையவன்
மாறனும் நாணுறும் பேரெழில் வடிவினன்
பாரெங்கும் புகழ் விளங்கும் கேசவன் மருகன்
வாரணமுகத்தோன் வருமிடர் களைபவன்
"சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வவிக்னோப சாந்தயே'
என்பது கணபதி சுலோகம்
ஓம் நமோ ஹேரம்ப மதமோதித ஹஸ்தி முகாய
மம ஸ்வர்ண ப்ராப்தம் குருகுரு ஸ்வாஹா.
என்பது ஸ்வர்ண கணேசர் தியான மந்திரம் ...
வணங்கித் துதிப்பவர்களுக்கு வித்தகக் கடவுள்
கணபதியின் திருவருள் துணை நிற்கும்.
ஐந்து முகங்களுடன் திகழ்வதால், ஸ்ரீபஞ்சமுக விநாயகர் என்ற சிறப்புடன் அடியவர்களுக்கு நன்மை பயக்கும் அனைத்தும் தம்மிடம் உண்டு என்பதை உணர்த்தும் வகையில்... அங்குசம், கதாயுதம், கரும்பு வில், சக்கரம், சங்கு, பாசம், தாமரை மலர், நெற்கதிர், உடைந்த தந்தம், ரத்தின கலசம் ஆகியவற்றை ஏந்தியபடி பத்து திருக்கரங்களுடன் தரிசனம் தருகிறார் ஹேரம்ப கணபதி.
எல்லோருக்கும் மேலான கடவுளாகத் திகழ்வதால், மிருகங்களில் தலைசிறந்த சிம்மத்தை வாகனமாகக் கொண்டுள்ளார் அருளும் பொருளும் அள்ளித் தரும் ஸ்ரீஹேரம்ப கணபதி
எல்லோருக்கும் மேலான கடவுளாகத் திகழ்வதால், மிருகங்களில் தலைசிறந்த சிம்மத்தை வாகனமாகக் கொண்டுள்ளார் அருளும் பொருளும் அள்ளித் தரும் ஸ்ரீஹேரம்ப கணபதி
தமிழில் "கந்தபுராணம்' செய்த கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு "
திகடச் சக்கர' என அடியெடுத்துக் கொடுத்து அருளினார் முருகன்.
தினமும் தான் எழுதும் பாடல்களை, காஞ்சி குமரக் கோட்டம்
கந்தன் சந்நிதியில் வைத்து விடுவார் கச்சியப்பர்.
காலையில் அவற்றை எடுத்துப் பார்க்கும்போது முருகப் பெருமான் சில திருத்தங்கள் செய்திருப்பாராம். இவ்வாறாக கந்தபுராணம் எழுதி நிறைவடைந்ததும், அதை ஆலய மண்டபத்தில் கூடியிருந்த புலவர் சபையில் அரங்கேற் றம் செய்ய முனைந் தார் கச்சியப்பர்.
திகடச் சக்கர' என அடியெடுத்துக் கொடுத்து அருளினார் முருகன்.
தினமும் தான் எழுதும் பாடல்களை, காஞ்சி குமரக் கோட்டம்
கந்தன் சந்நிதியில் வைத்து விடுவார் கச்சியப்பர்.
காலையில் அவற்றை எடுத்துப் பார்க்கும்போது முருகப் பெருமான் சில திருத்தங்கள் செய்திருப்பாராம். இவ்வாறாக கந்தபுராணம் எழுதி நிறைவடைந்ததும், அதை ஆலய மண்டபத்தில் கூடியிருந்த புலவர் சபையில் அரங்கேற் றம் செய்ய முனைந் தார் கச்சியப்பர்.
முதல் பாடலான-
"திகடச் சக்கர செம்முகம் ஐந்துளான்
சகடச் சக்கர தாமரை நாயகன்
அகடச் சக்கர விண்மணி யாவுறை
விகடச் சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்'
என்னும் விநாயகர் துதியை கச்சியப்பர் பாடியதும், அவையிலிருந்த புலவர் ஒருவர், "திகடச் சக்கர' என்பது இலக்கணப்பிழை என்றார்.
அதிர்ச்சியடைந்த கச்சியப்பர் மறுநாள் விளக்கம் தருவதாகக் கூறி இல்லம் திரும்பினார். "முருகா! நீ எடுத்துக்கொடுத்த முதலடியையே இலக்க ணப் பிழையென்கிறார்களே... நான் என் செய்வேன்...' என்று மனமுருகினார்.
கந்தன் "யாமிருக்கப் பயமேன்' என்றான்.
அதிர்ச்சியடைந்த கச்சியப்பர் மறுநாள் விளக்கம் தருவதாகக் கூறி இல்லம் திரும்பினார். "முருகா! நீ எடுத்துக்கொடுத்த முதலடியையே இலக்க ணப் பிழையென்கிறார்களே... நான் என் செய்வேன்...' என்று மனமுருகினார்.
கந்தன் "யாமிருக்கப் பயமேன்' என்றான்.
மறுநாள் சபைக்குச் சென்றார் கச்சியப்பர். அப்போது ஒரு முதிய புலவர் வடிவில் அங்கு வந்த முருகப்பெருமான், வீரசோழியம் என்ற இலக்கண நூலை ஆதாரம் காட்டி "திகடச்சக்கர' என்பது இலக்கணப் பிழையல்ல என்பதை நிரூபித்து கச்சியப்பருக்கு தன் திருக்கோலம் காட்டியருளினார்.
"திகடச்சக்கர' என்பது "திகழ் தசக் கர' என்பதாகும். அதாவது பத்து கரங்களுடையவன். ஹேரம்ப கணபதிக்கு ஐந்து தலை, பத்து கரங்கள்.
ஹேரம்ப என்றால் எளியவர்க்கு அருள்புரியும் நாயகன்
என்ற பொருளாகும்
விநாயகரின் வடிவங்கள் 32 . அவற்றுள் "ஹேரம்ப கணபதி' என்கிற
ஸ்ரீ பஞ்சமுக விநாயகரை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் விலகும்.
பாலகணபதி, தருணகணபதி, பக்திகணபதி, வீரகணபதி, சக்திகணபதி, துவிஜகணபதி, சித்திகணபதி, உச்சிஷ்டகணபதி, விக்னகணபதி, க்ஷிப்ரகணபதி, ஹேரம்பகணபதி, லக்ஷ்மிகணபதி, மஹாகணபதி, விஜயகணபதி, நிருத்தகணபதி, ஊர்த்துவகணபதி, ஏகாக்ஷ்ரகணபதி, வரகணபதி, திரயாக்ஷ்ரகணபதி, க்ஷிப்ரப்ரசாதகணபதி, ஹரித்திராகணபதி, ஏகதந்தகணபதி, ஸ்ருஷ்டிகணபதி, உத்தண்டகணபதி, ரணமோசனகணபதி, துண்டிகணபதி, துவிமுக கணபதி, த்ரிமுககணபதி, சிங்ககணபதி, யோககணபதி, துர்க்காகணபதி, சங்கடஹரகணபதி.
கணபதியின் பத்து கைகளிலும், பாசம், தந்தம் முதலான ஆயுதங்களும், அட்சமாலை முதலிய பொருட்களும் விளங்குகின்றன.
இவ்வாறு ஆயுதங்களையும், பழங்களையும், மாலை முதலான போகப் பொருள்களையும் தாங்கி இருப்பதால் வெற்றி வீரராகித் துன்பங்களைப் போக்குபவராகவும், இன்பங்களைக் கொடுப்பவராகவும் திகழ்கிறார்.
இவ்வாறு ஆயுதங்களையும், பழங்களையும், மாலை முதலான போகப் பொருள்களையும் தாங்கி இருப்பதால் வெற்றி வீரராகித் துன்பங்களைப் போக்குபவராகவும், இன்பங்களைக் கொடுப்பவராகவும் திகழ்கிறார்.
திருச்சி, பிச்சாண்டார்கோவில், இராஜகோபால்நகரில் அய்யன்வாய்க்கால் கரையில், ஸ்ரீ பஞ்சமுக விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 5 அடி உயரத்தில் சிம்ம வாகனத்தில் தாய் பராசக்தி மடியில் அமர்ந்து அருள்புரிகிறார் பஞ்சமுக விநாயகர்.
பஞ்சமுக விநாயகர் திருமுகங்கள் ஐந்தும், நான்கு திசைகளை நோக்கி உள்ளன. எனவே இவரை வழிபட, நான்கு திசைகளிலிருந்தும் வருகின்ற சங்கடங்கள் விலகும்.
ராகு, கேது தோஷம் உள்ளவர்களும், சனியினால் பாதிக்கப்பட்டவர்களும் ஹேரம்ப கணபதியை வழிபட தோஷங்கள் விலகும். திருமணத் தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
பஞ்சமுக விநாயகருடன், பாலமுருகன், ஐயப்பன், தட்சிணாமூர்த்தி, கஜலெட்சுமி, துர்க்கை ஆகியோரும் அருள்புரிகின்றனர். ஆலமரமும், அரச மரமும் இயற்கையிலேயே பின்னி வளர்ந்து வருவது சிறப்பு. கோயிலில் வன்னி மரமும் அமைந்துள்ளது. வன்னிமர விநாயகரை வழிபடுவது சிறப்பு.
மாதந் தோறும் வளர்பிறை சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி மற்றும் பெüர்ணமி தினங்களில் ஸ்ரீ பஞ்சமுக விநாயகருக்கும், கிருத்திகை அன்று ஸ்ரீபாலமுருகனுக்கும் மாலை 6மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
ஆடி மற்றும் தை மாதங்களில் கடைசி வெள்ளிக் கிழமை
திருவிளக்கு பூஜை நடைபெறும்.
விநாயகர் சதுர்த்தி விழா இரண்டு நாட்கள் விழாவாக
பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படுகிறது.
ஆடி மற்றும் தை மாதங்களில் கடைசி வெள்ளிக் கிழமை
திருவிளக்கு பூஜை நடைபெறும்.
விநாயகர் சதுர்த்தி விழா இரண்டு நாட்கள் விழாவாக
பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படுகிறது.
எதிலும் பொருந்தும் எளியவர் கணபதி.
கணபதிக்கு சித்தி, புத்தி என்னும் இரு மனைவியர்இவர்கள் பிரம்மபுத்திரிகள்- சக்திகள். கணபதியை வணங்கினால் புத்திக்கூர்மை அதிகரிக்கும்; எடுத்த காரியங்கள் எல்லாம் சித்திக்கும்- வெற்றியாகும் என்பதே இதன் தத்துவம்.
பல தெய்வங்களுக்குப் புராணங்கள் எழுதியவர் வியாசர். ஆனால்அவர் விநாயக புராணம் எழுதவில்லை. வியாசர் சொல்ல மகாபாரதத்தை எழுதினார் விநாயகர். வினோதம்தானே. !
விநாயக புராணத்தை முத்கலர் என்ற முனிவர் இயற்றினார்..
விநாயக புராணத்தை முத்கலர் என்ற முனிவர் இயற்றினார்..
ஸ்ரீஹேரம்ப கணபதியின் திருவடிவங்களை,
நேபாளம் மற்றும் வங்காளத்தில் நிறைய தரிசிக்கலாம்.
தமிழகத்தில் நாகப்பட்டினம், திருவானைக்கா மற்றும் திருவொற்றியூர் ஆகிய தலங்களில் ஸ்ரீஹேரம்ப கணபதியைத் தரிசிக்க முடிகிறது.
தம்பி பெண் திருடன்...
மாமனோ வெண்ணைத் திருடன்!.
கணபதியோ உள்ளம் கவர் கள்வன்...!
லண்டனில் ஒருவர் பெரிய இரண்டு காதுகள், தும்பிக்கை என வினாயகரின் உருவம் கத்திரிக்காயில் பதிக்கப்பட்டதைப் போன்றிருந்ததைப்பார்த்து வியந்துபோய் வினாயகரைப் போலவே இருந்ததும், பயபக்தியுடன் பூஜையில் விக்கிரங்களுடன் சேர்த்து வைத்து விட்டார் செய்தி கேட்டதும், பலர் இதனை பார்க்க வந்து விட்டதால், தனது அலுவலகத்திலேயே, கோயில் மாதிரி அதனை வைத்து ஆரத்தியோடு வழிபாடு செய்யவும் ஆரம்பித்து விட்டார்
அசத்தலான அழகு படங்களுடன் கருத்துச் செறிவுடன் ....அஞ்சுமுகத்தோனின் ஆரவார ஆர்ப்பரிக்கும் அற்புதப் பகிர்வு!
ReplyDeleteஅருமை! வாழ்த்துக்கள்!
ஹேரம்ப கணபதி அறிந்தேன்
ReplyDeleteஉணர்ந்தேன்
நன்றி சகோதரியாரே
பாவங்கள் தீர்க்கும் பஞ்சமுக கணபதி தரிசனம் கண்டு மகிழ்ச்சி.. அழகிய ஐங்கரனின் அழகான படங்கள் ஆனந்த தரிசனம்.. வாழ்க நலம்..
ReplyDeleteஉங்கள் பதிவிற்குள் வந்தவுடன் விதம் விதமான விநாயகர் உருவங்கள். ஓவியங்கள் வரையும் ஒரு ஓவியக் கூடத்திற்குள் வந்து விட்டது போன்று இருந்தது. விநாயகர் சதுர்த்திக்கு இப்போதே தயாராகி விட்டீர்கள் போலிருக்கிறது. வாழ்த்துக்கள்!
ReplyDeleteசொல்ல மறந்து விட்டேன். முன்புபோல் பதிவில் படங்களை ஒரே சீராக அமைத்து வெளியிடுவது பதிவை அலங்கரிக்கிறது.
ReplyDeleteவிக்னங்களை களையும் விநாயகரின் தகவல்கள் அனைத்தும் சிறப்பானவை. அழகான விநாயகர் படங்களுடன், அற்புத தகவலாக கத்தரிக்காயில் விநாயகர் உருவம் மெய்சிலிர்க்க வைத்தது. வாழ்த்துக்கள். நன்றி
ReplyDeletegreat post with pictures
ReplyDeleteவெற்றி வரமருளும்
ReplyDeleteஸ்ரீ ஹேரம்ப கணபதிக்கு
என் வந்தனங்கள்
>>>>>
லண்டன் கத்திரிக்காய் விநாயகர் கதை
ReplyDeleteகேட்க மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.
>>>>>
ஆஹா, பத்தொன்பது பூண்டுப் பற்கள்.
ReplyDeleteமூன்றே மூன்று பச்சை மிளகாய்கள்,
ஒன்பது ?????????? ஏதோ தானியங்கள்,
கண்மணிபோல இரண்டு துவரம்பருப்புகள் ....
ஒரு பிள்ளையார் ரெடி .... சூப்பரோ சூப்பர் !
>>>>>
திருச்சி, பிச்சாண்டார் கோயிலில் 1984 வரை
ReplyDeleteஇராஜகோபாலன் நகர் என்ற ஒன்றே கிடையாது.
அந்த ஐயன் வாய்க்கால் மட்டுமே உண்டு.
அதுவும் முக்கொம்பிலிருந்து காவிரி, கொள்ளிடம் +
இந்த ஐயன் வாய்க்கால் என மூன்றாகப்பிரிந்து வருகின்றது.
இந்த ஐயன் வாய்க்காலில் நாங்கள் பலமுறை குளித்து ஸ்நானம் செய்துள்ளோம்.
கடந்த இருபது ஆண்டுகளில் தான் அந்த அமைதியான கிராமமே முற்றிலும் மாறிவிட்டது.
இராஜகோபால் நகர் போன்ற புதுப்புது குடியிருப்பகள் ஆங்காங்கே தோன்றியுள்ளன.
7-8 ஆண்டுகளுக்கு முன்பு உத்தமர் கோயில் ரெயில்வே லைனுக்கு மேலே போடப்பட்டுள்ள புதுப்பாலத்தினால், இந்தப் புதுப்புது குடியிருப்பு இடங்கள் யாவும் உள்ளே அடியில் மாட்டிக்கொண்டு, அடையாளம் தெரியாமல் மறைந்துள்ளன. காலம் செய்த கோலமிது.
எல்லா இடங்களிலும் மாற்றங்கள் ஒன்றே என்றும் மாறாததாக உள்ளன.
>>>>>
இந்த ராஜகோபால நகரில் உள்ள கோயிலுக்கு
ReplyDeleteஎன் _ _ _ _ வந்து போனீர்களோ ?????.
எனக்குத் தெரியாமல் போச்சே !
தெரிந்திருந்தால் மாபெரும் வரவேற்பு அளித்து
கெளரவித்து திக்குமுக்காட வைத்திருபோமே !!
>>>>>
அழகழகான படங்களுடன் அற்புதமான தகவல்களுடன், விநாயகர் ஸ்லோகங்களும் கொடுத்து அசத்தோ அசத்துன்னு அசத்தியுள்ளீர்கள்.
ReplyDeleteமனம் நிறைந்த பாராட்டுக்கள்.
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
அனைத்துக்கும் நன்றியோ நன்றிகள்.
வாழ்க ! வாழ்க!! வாழ்க !!!
;) 1374 ;)
ooo ooo
பிள்ளையார், பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளயார்..! 32 பிள்ளயார்கள்தானா.... சிறிது கற்பனை இருந்தால் எந்த விதமான பிள்ளையாரையும் படைத்துவிடலாம். அருமை...!
ReplyDeleteவழக்கம் போலவே அருமையான பதிவு அறியாதவர்களும் அறிந்தவர்களுக்கு நினைவூட்டவும் தாங்கள் விநாயகரை பற்றி எழுதியமைக்கு வாழ்த்துக்கள் தங்கள் பணி மேன்மேலும் இப்போது போலவே தொடரட்டும்
ReplyDeletelicsundaramurthy@gmail.com
salemscooby.blogspot.in
விநாகர் படங்கள் அழகு..அழகு...
ReplyDeleteமிக்க நன்றி.
வேதா. இலங்காதிலகம்.