திருவருள் தரும் தெய்வம் திருமலை தெய்வம்
தீராத வினையெல்லாம் தீர்த்திடும் தெய்வம் (திரு)
வரும் துயர் பகையாவும் மாற்றிடும் தெய்வம்
வாய் திறந்தே கேட்டால் வழங்கிடும் தெய்வம் (திரு)
மன்னுபுகழ் கோசலைக்கு மைந்தனான...தெய்வம்
மண்மகளும் மலர்மகளும் மருவுகின்ற...தெய்வம்
தென் பொதிகை முனிவர் தொழும் திருவேங்கடதெய்வம்
ஸ்ரீநிவாசனாக நின்று சேவை தரும் தெய்வம்
கொண்டாடும் அன்பர் நெஞ்சில் கோவில் கொண்ட தெய்வம்
கோவிந்தா என்றழைத்தால் குறைகள் தீர்க்கும் - தெய்வம்
சந்தமும் சங்கு சக்கரம் தாங்குகின்ற...தெய்வம்
சாரங்கபாணியென்ற பார்புகழும் தெய்வம்
வேங்கடேஸோ வாஸீதேவ வாரி ஜாஸன - வந்தித
ஸ்வாமி - புஷ்கரிணீ - வாஸ ஸங்க - சக்ர - கதாதர
பீதம்பர - தரோ தேவ: கருடாரூட - ஸோபித
விஸ்வாத்மா விஸ்வ- ஸோகேஸ: விஜயோ வேங்கடேஸ்வர
ஏதத் த்வாதஸ நாமானி த்ரிஸந்த்யம்ய: படேந்நர:
ஸர்வபாப- வினிர் முக்தோ விஷ்ணோஸ்ஸாயுஜ்யம் ஆப்னுயாத்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீவேங்கடேச சுவாமியின் சன்னதியில் காலையிலும், மாலையிலும் இந்த மந்திரசுலோகத்தை ஜபித்து அருள் பெறுகிறார்கள்..
இல்லத்தில் இருந்தபடியே இந்த ஸ்லோகத்தை ஜபித்து
திருப்பதி ஏழுமலையானின் அருளைப் பெறலாம்.
திவ்யாங்கதாஞ்சித புஜத்வய மங்களாத்மன்
கேயூபூரஷண ஸுஸோபித தீர்கபாஹோ
நாகேந்த்ரகங்கண கரத்வய காமதாயின்
ஸ்ரீவேங்கடேச மம தேஹி கராவலம்பம்
ஸ்ரீ வெங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம்.
திவ்யமான வளைகள் அலங்கரிக்கும் தோள்களைக் கொண்டவரே, வெங்கடேசா நமஸ்காரம். மங்களமான சரீரத்தை உடையவரே, ஆபரண அலங்காரத்தால் பிரகாசிக்கும் நீண்ட கரங்களை உடையவரே, அதே கரங்களில் சர்ப்பராஜனை கங்கணங்களாகத் தரித்திருப்பவரே, கோரிய அனைத்தையும் அருள்பவரே, வெங்கடேசா, நமஸ்காரம். என்னைக் கை கொடுத்துக் காத்தருள்வீராக.
(புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் ஸ்ரீ வெங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம் துதியை பாராயணம் செய்து வந்தால் விருப்பங்களையெல்லாம் வேங்கடவன் நிறைவேற்றித் தருவார்.
கருணையே உருவான தெய்வம் திருவேங்கடமுடையான் கருணையாக நோக்கி, லேசாகச் சிரிக்கும் கண்களில் கருணை பொங்கிப் பிரவகிக்கும் அற்புதத்தை உணர முடியும்..
கலியுகவரதனாக எல்லையற்ற கருணைவெள்ளம் கண்கள் வழியே கார்மேகம் போல் அமுதாய் வர்ஷிக்க கருணை வள்ளலாகத் திகழ்வர் திருமலைதெயவம்..
கருணை வர்ஷிக்கும் . திருமாலின் பெருமை பன்னிரண்டு ஆழ்வார்களது திகட்டாத தெள்ளமுதாக திவ்விய பிரபந்தத்திலும் பிரவஹிக்கிறது.
மிகவும் போற்றுதலுக்குரிய காப்பதில்காட்டிய வேகத்துடன்
கருணையின் வெளிப்பாடு கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்தது.
திரௌபதியின் மானம் காக்க ஆடை கொடுத்தது.
ஒவ்வொரு முறையும் சிவன் கொடுத்த வரத்தினால் மக்களைத் துன்புறுத்திய அரக்கர்களையும் அழித்து, அந்த அரக்கர்களுக்கும் உலகுள்ள அளவிற்கு அழியா புகழையும் கொடுத்தது.
நாமஜபம் மூலமாக கடவுளின் திருவடியை எளிதாக அடைய முடியும். கட்டித்தங்கத்தை சுரங்கத்தில் வெட்டி எடுத்தாலும் அப்படியே பயன்படுவதில்லை.
கலைநுட்பம் மிக்க கலைஞரின் கையில் பட்டு ஆபரணமாக மாறினால் தான், அதன் மதிப்பும் மெருகும் கூடுகிறது.
ஊரும், பேருமில்லாமல் கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார். அவரே நமக்காக வடிவம் தாங்கி ராமர், கிருஷ்ணர் என்ற திருநாமம் கொண்டு அவதரிக்கிறார். கட்டித்தங்கம் போல கடவுள், ஆபரணத்தங்கம் போல அவரின் திருநாமம் .. ஆபரணத்தங்கமான கடவுளின் திருநாமத்தை சொல்லி, எளிதாகச் சேமிக்கலாம்.
தனது திருமணத்திற்காக குபேரனிடம் பொருள் பெற்று, அந்தக் கடனை நிவர்த்தி செய்ய வராஹ க்ஷேத்திரமான திருப்பதியில் ஸ்வயம்புவாகக் குடியேறி, - குபேரனுக்கே செல்வம் தரும் ஸ்ரீதேவி தன் மார்பில் இருக்கும்போது, ஒரு க்ஷணத்திலேயே அத்தனை கடனையும் அடைக்கும் செல்வ இலக்குமி தன்னிடம் இருந்தாலும், கருணை கொண்டுதன்னை நாடிவரும் பக்தர்களின் குறை தீர்க்கும்- வினை தீர்க்கும் பெருமாளின் விளையாட்டை போற்றுகிறோம்..
புரட்டாசி சனிக்கிழமை அன்று சனி பகவான் வீரியம் குறைந்திருக்கும் சனிக்கிழமையில் பெருமாளை சேவிப்போரை சனி ஒன்றும் செய்வதில்லை என்ற நம்பிக்கையினால்தான் புரட்டாசி சனிக்கிழமை மிகவும் சிறப்பு பெற்றுள்ளது. சனியின் பாதிப்பு இல்லாதவர்கள் புரட்டாசி புதன்கிழமையிலும் மாவிளக்கு மாவு இட்டு பெருமாளை சேவிக்கலாம்.
உலக சுற்றுலா தினம்
சுற்றுலா மூலம் மனித குலத்தை மேம்படுத்தும் வகையில், செப்டம்பர் 27ம் தேதியை உலக சுற்றுலா தினமாக 1970ம் ஆண்டில் ஐ.நா. சபை அங்கீகரித்து அறிவித்தது. அன்று முதல் சுற்றுலா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
பல்வேறு இடங்களை காண்பதால் மனதில் ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது. எனவேதான், உலகில் உள்ள பல்வேறு நாடுகளும் வெவ்வேறு முறைகளில் சுற்றுலாவை தங்களது கலாச்சாரத்திற்குள் வைத்துள்ளன.
சுற்றுலா செல்வது என்றாலே, கொண்டாட்டம் தான். சுற்றுலா என்பது லட்சக்கணக்கான கோடி ரூபாய் வியாபாரம். சுற்றுலா மூலம் தான், பல்வேறு கலாசாரத்தையும் தெரிந்து கொள்ள முடிகிறது. உலகை ஒருங்கிணைக்கவும் முடிகிறது.
சுற்றுலாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கிலும், சுற்றுலா எப்படி அரசியல், சமூக, பொருளாதாரத்தில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை விவரிக்கும் விதத்திலும் செப்., 27ம் தேதி உலக சுற்றுலா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
"சுற்றுலா மற்றும் தண்ணீர்: எதிர்கால தேவையை பாதுகாப்போம்' என்பது போன்ற மையக்கருத்துகளை வலியுறுத்தும் தினமாக கொண்டாடப்படுகிறது..!
கல்வி சுற்றுலா, இன்ப சுற்றுலா, வியாபார சுற்றுலா என பல வகைகளில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பெருமை, அடையாளம், தனித்தன்மை உள்ளது.
ஒரு இடத்தில் வசிப்பவர்கள், புதிய இடங்களை காண செல்வது என்றால் மகிழ்ச்சி அடையும் வகையில் மலைகள், நீர் வீழ்ச்சி, தீவுகள், உலக அதிசயங்கள், கட்டடங்கள், கேளிக்கை பூங்காக்கள், பீச் என உலகில் பல்வேறு வகையான சுற்றுலா இடங்கள் உள்ளன.
சுற்றுலா மனிதனுக்கு பல்வேறு உலகங்களை அறிமுகப்படுத்துவதன் வாயிலாக, பல்வேறு கலாச்சாரங்களை கற்றுக் கொள்ள வழிவகுக்கிறது.
இந்தியாவில் பழங்காலம் முதலே தீர்த்த யாத்திரை என்ற பெயரில் புனித யாத்திரைகள் செல்வது இருந்துள்ளது.
இமயம் தொடங்கி குமரி வரை கடல், மலை, நதி, கோயில் போன்றவற்றை பார்ப்பதற்காக கோடிக்கணக்கான மக்கள் இந்தியா முழுவதும் சுற்றி வந்துள்ளனர். -
சுற்றுலா மூலமாகவே பல்வேறு நாடுகளிலும் வெவ்வேறு தொழில்கள் வளர்ந்து வந்துள்ளன.
பல நாடுகளில் உணவு தொழில் செழித்து வளர சுற்றுலா துறையும் ஒரு காரணம் .
சுற்றுசூழல் சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா, கலாச்சார சுற்றுலா, கல்வி சுற்றுலா என சுற்றுலா பல்வேறு வகைகளாக பிரிந்து வளர்ந்துள்ளது.
ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு ஆண்டை சுற்றுலா ஆண்டாக அறிவித்து சுற்றுலாவை மேம்படுத்தி வருகின்றன.
இதே செப்டம்பர் 27ம் தேதியை, சர்வதேச நீர் பகிர்வு தினமாகவும் ஐ.நா. அங்கீகரித்துள்ளது.