சூடிக் கொடுத்தாள் சுடர்க் கொடியே தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய்
நாடி நீ வேங்கடவற்கு என்னை விதி ஒன்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு
கள்ளழகருக்கு நூறு குடம் வெண்ணெயும், அக்கார வடிசலும் சமர்ப்பிப்பதாக தனது விருப்பத்தை ஆண்டாள் பாடியதை ஸ்ரீராமானுஜர் நிறைவேற்றினார். பின்னர் ஸ்ரீராமானுஜர் ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்தபோது
‘என் அண்ணன் அல்லவோ!’ என்று அசரீரி ஒலியுடன் ஆண்டாள் விக்கிரகம் முன்னோக்கி நகர்ந்து ஸ்ரீராமானுஜரை வரவேற்றது
திருப்பாவை முப்பதும் செப்பினாள்
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை
ஸ்ரீபெரும்புதூர் மாமுனி யின் (ராமாநுஜரின்) தங்கை-
நாச்சியார் திருமொழி 143 பாசுரங்கள் சொன்ன திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே!
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!(நாச்சியார் திருமொழி-143)
உயரரங்கர்க் கேகண்ணி யுகந்தளித்தாள் வாழியே!.
மருவாரும் திருமல்லி வளநாடு வாழியே!
வண்புதுவை நகர்க்கோதை மலர் பதங்கள் வாழியே!
ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்
வேதம் அனைத்திற்கும் வித்து' என சிறப்பிக்கப்படும் திருப்பாவையின் 30 பாடல்களும் 'சங்கத் தமிழ் மாலை' என போற்றப்படும் சுத்தமான அழகுத் தமிழ் கொஞ்சும் பாமாலை!
வைகுண்ட ஏகாதசி விரதத்தை அனுஷ் டித்தால் மூன்று கோடி ஏகாதசி விரதங் களைக் கடைப்பிடித்த பலன் கிடைக்கும். அதனால் முக்கோடி ஏகாதசி என்றும்; மோட்ச ஏகாதசி என்றும்; பீம ஏகாதசி என்றும் பெயருண்டு.
பாற்கடல் நஞ்சினை ஈசன் விழுங்கியதால் நஞ்சுண்ட ஏகாதசி என்றும் கூறுவர்
.ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா திரு அத்யயன உற்சவம் என 21 நாட்கள் நடைபெறும்.
பகல் பத்து என்ற திருமொழி விழா பத்து நாட்கள் நடைபெறும். பத்தாம் நாள்தான் வைகுண்ட ஏகாதசி- சொர்க்கவாசல் திறப்பு.
திருவாய் மொழி விழா என்னும் இராப்பத்து விழா பத்து நாட்கள், இயற்பா விழா ஒருநாள் என 21 நாட் கள் தமிழ்விழா நடைபெறும்.
பகல் பத்தில் அரங்கன் அர்ச்சுன மண்டபத் தில் அனைத்து ஆழ்வார்கள், ஆச்சார்யார்களு டன் எழுந்தருளி சேவை சாதிப்பார்.
பெரியாழ்வார் அருளிய திருமொழி, ஆண்டாள் நாச்சியார் அருளிய நாச்சியார் திருமொழி, குலசேகராழ்வார் பாடிய பெருமாள் திருமொழி, திருமங்கை ஆழ்வார் பாடிய பெரிய திருமொழி ஆகிய திருமொழிப் பாசுரங்களைப் பாடுவார்கள். அதனால் இதைத் திருமொழித் திருநாள் என்பர்.
பத்தாம் நாள் வைகுண்ட ஏகாதசியின்போது இந்தப் பாடல்கள் அபிநயத்துடன் அரையர் களால் சேவிக்கப்படும்.
பத்தாம் நாள் மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாவால் திருவரங்கனுக்கு அளிக்கப்பட்ட ரத்ன அங்கியுடன் ஜொலிப்பார்.
பகல் பத்தின் பத்தாம் நாள் பெருமாள் நாச்சியார் கோலம் கொள்வார்.
இதற்கு மோகனாவதாரம் என்று பெயர்.
வைகுண்ட ஏகாதசி யிலிருந்து ஏழு நாட்கள் மூலவருக்கு முத்துக்களாலான அங்கியுடன் "
முத்தங்கி சேவை' வெண்மைத் திருக்கோலம் அரியகண்களையும் கருத்தையும் கொள்ளை கொள்ளும் மாட்சி.
சொர்க்க வாசல் என்ற பரமபத வாசல் திறப்பு
வைகுண்ட வாசலுக்கு பூஜை செய்து நான்கு வேதங்களும் ஓதப்பட்ட பிறகு, பெருமாள் ஜோதி ஸ்வரூபமாக ஆபரண தேஜஸுடன் காட்சியளித்துக் கொண்டே மங்களவாத்தியம் முழங்க வாசலைக் கடந்து வருவார்.
பக்தர்கள் பக்திப் பெருக்குடன் பகவானைப் பின்தொடர்ந்து "ரங்கா, ரங்கா' என ஜெபித்தபடி. பரமபத வாசல் திறப்பு விழா என கொண்டாடுகின்றனர். பரமபத வாசலின் அடியில் விரஜா நதி ஓடுகிறது. பக்தர்கள் வாசலைக் கடக்கும்போது புண்ணிய நதியில் நீராடி பரமபத வாசல் வழியாக வைகுண்டம் போவதாக ஐதீகம்.
வைகுண்ட ஏகாதசியன்று இராப்பத்து உற்சவம் தொடங்குகிறது.
இராப்பத்தின் ஏழாம் நாள் கைத்தல சேவையும்; எட்டாம் நாள் திருமங்கை மன்ன னின் வேடுபறி உற்சவமும்; பத்தாம் நாள் நம்மாழ்வாரின் மோட்சமும் நடைபெறும்.
இராப்பத்தின் 11-ஆம் நாள் இயற்பாவை அமுத னார் மூலம் சேவித்து சாற்று முறை நடக்கும். இப்படி 21 நாள் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடையும்.
வைகுண்ட ஏகாதசி இரவில் பரமபதம் விளையாடுவார்கள்.