சகஸ்ர சந்திர ப்ரதிமா தயாள:
லக்ஷ்மீ முகா லோகன லோல நேத்ர:
தசவதாரைர் பரித பரீத:
ந்ருகேசரி மங்கள மாதளேது
கிரகங்கள் தோஷ நிவர்த்தி தலமான ஸ்ரீரங்கம் தசாவதார திருக்கோயில்
'உலகத்தில் தருமம் அழிந்து, அதர்மம் ஓங்குகிற சமயம், நான் உலகத்தில் அவதாரம் எடுக்கின்றேன்' என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் கூறுகிறார்.
உலக உயிர்களுக்கு இறைவன் தன் கருணையை காட்டுவதற்கே அவதாரங்களை இறைவன் எடுக்கிற அடிப்படையில் ஸ்ரீரங்கம் கோயில் ராஜகோபுரம், திருமதில் சுவர் உட்பட கோயில் கட்டுமானப்பணிகளை திருமங்கையாழ்வார் முன்னின்று நடத்தி.ய பணியை பாராட்டி ரங்கநாதர் திருமங்கையாழ்வாரின் கோரிக்கையை ஏற்று, பத்து அவதாரத்தில் (தசாவதாரம்) திருமங்கையாழ்வாருக்கு காட்சியளித்த இடம் கொள்ளிடம் ஆற்றங்கரையிலுள்ள தசாவதாரம் கோயிலாகும்.
திருமங்கையாழ்வாருக்கு தனி சன்னதியுள்ளது.
கிரகங்கள் தோஷ நிவர்த்தி தலமாக இருப்பதால், ஒவ்வொரு கிரக தோஷமுடையவர்கள் தங்கள் பிறந்த நட்சத்திரத்தில் தசாவதார கோயிலில் பத்து அவதாரங்களையும் பிரார்த்தித்து பலனடையலாம்.
பிரார்த்தனை நிறைவேறியவுடன் 10 அவதார மூர்த்திகளுக்கும் திருமஞ்சனம் செய்து வஸ்திரம் அணிவித்து வழிபாடு செய்கின்றனர்.
கோயில்களில் ஒரு மூலவருக்கு பல உற்சவர் இருப்பதை காணலாம்.
ஆனால் இங்கு பத்து மூலவருக்கு ஒரே ஒரு உற்சவர் மட்டுமே
இருப்பது சிறப்பு.
திருச்சி - ஸ்ரீரங்கத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையில்
அருள்மிகு தசாவதாரக் கோயில் உள்ளது.
பத்து மூலவருக்கு ஒரு உற்சவர் போன்ற தகவல்கள் புதிது. இது எல்லோரும் அறிந்த புகழ்பெற்ற அதே ஸ்ரீரங்கம் கோவில்தானா, வேறா?
ReplyDeleteஅழகான படங்கள். தரிசித்தோம்!
ReplyDeleteகோவிலின் சிறப்பான தகவலுக்கு நன்றி அம்மா...
ReplyDeleteபடங்களுடன் பகிர்வு ஆனந்தமாக இருக்கு பத்து மூலவர்க்கு ஒரே ஒரு உற்சவரா இது கேள்விப்படாத விஷயமா இருக்கு. தேடித்தேடி விஷயங்கள் பகிர்ந்து வருகிறீர்கள். நன்றிம்மா
ReplyDeleteஉலகத்தில் தர்மம் அழிந்து அதர்மம் ஓங்குகிர சமயம் நான் அவதாரம் எடுக்கிறேன் என்று கீதையில் கிருஷ்ண பகவான் சொல்லி இருக்கிறார். இந்த கலியுகத்தில் எங்கு அவதாரம் எடுத்திருக்கிறார்????
ReplyDelete