Saturday, November 26, 2011

ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்






“ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே | 




ஸ்ரீராமராமராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம்ராமநாம வரானனே...


"ராம' என்ற மந்திரம், "ஓம் நமோ நாராயணாய' என்ற எட்டெழுத்து மந்திரத்திலுள்ள (ஓம் என்பது ஒரே எழுத்து) "ரா' மற்றும் "நமசிவாய' என்ற ஐந்தெழுத்து மந்திரத்திலுள்ள, "ம' என்ற பீஜாக்ஷரங்களை இணைத்து உருவாக்கப்பட்டது. பீஜாக்ஷரம் என்றால், உயிர்ப்புள்ள எழுத்து என்று பொருள்.

"ராம' மந்திரம் சொன்னால், பட்டமரமும் தளிர்க்கும் என்பதால் அதை, "உயிர்ப்பு மந்திரம்' என்பர். 

"ராம ராம' என்பது தாரக மந்திரம்.. "தாரகம்' என்றால் கண்மணி. இம்மந்திரத்தைச் சொல்வோரை கண்மணி போல் பாதுகாப்பான் ஸ்ரீராமன். காசியில் இறப்பவர்களின் காதில் சிவபெருமான், "ராம' மந்திரத்தைச் சொல்லி, அவர்களுக்கு பிறப்பற்ற நிலையை அருளுவதாக ஐதீகம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆலங்குளம் வட்டாரத்தில் ராமர் கோவில் அமைந்துள்ள அனைத்து இந்து மத தெய்வங்களின் சிலைகள்மிகவும் 
அழகான முறையில் செய்யப்பட்டுள்ளது கண்கொள்ளாக்காட்சி..


ஸ்ரீ ராமபிரான் இம்மலை மீது ஏறி நின்று தெற்கு நோக்கி ஒரு காலை ஊன்றியும் ஒரு காலை தூக்கி கூர்ந்து நோக்கியதால் மலைக்கு "ஒக்க நின்றான் மலை" என்று பெயர் வந்தது என புராண வரலாறு கூறுகிறது.


அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும் 

சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும் 
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம் 
எந்தைராம ராமராம ராம என்னும் நாமமே.
மலை ராமர் கோவில் புகைப்படங்கள்





Happy Vijaydashmi Graphics

26 comments:

  1. பதிவை முதல்ல படிக்கலாமா? படங்களை முதல்ல ரசிச்சு பாக்கலாமான்னு மனசுக்குள்ள போட்டியே நடக்குது மேடம்

    ReplyDelete
  2. நடுவில் ஒரு படத்தில் திருப்பாற்கடல் லட்சுமி நாராயணான்னு போட்டிருக்கே?அதுவும் அங்குள்ளதுதானா?சோளிங்கர் காவேரிப்பாக்கம் அருகே திருப்பாற்கடல் ஒன்று உண்டு.ஆனால் இது அதல்ல என தெரிகிறது.

    ReplyDelete
  3. raji said...
    நடுவில் ஒரு படத்தில் திருப்பாற்கடல் லட்சுமி நாராயணான்னு போட்டிருக்கே?அதுவும் அங்குள்ளதுதானா?சோளிங்கர் காவேரிப்பாக்கம் அருகே திருப்பாற்கடல் ஒன்று உண்டு.ஆனால் இது அதல்ல என தெரிகிறது.//

    கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்..

    ReplyDelete
  4. ஸ்ரீ ராம் ஜயராம் ஜயஜய ராம்

    “ஹரே ராம ஹரே ராம
    ராம ராம ஹரே ஹரே |.

    ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே;
    ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே.

    அழகான பதிவுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  5. ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
    ராமனை நம்பியவருக்கு ஏது பயம்..?
    ராம்ராம்.. ராம்ராம்..

    என் தந்தை இறக்கும் தறுவாயில்
    அவரை என் மடியில் கிடத்தி ...
    உதட்டில் துளசி தீர்த்தம் தடவி...
    அவர் காதில் "ஓம் நமோ நாராயணா" என்று மூன்று முறை சொன்னேன்..

    அந்த ஞாபகம் வந்து விட்டது.

    Sri Raam...

    ReplyDelete
  6. I am awe-struck by the post and photographs.
    அந்த ஐந்தாவது புகைப்படத்தில் மலைமேல் ஒரு ஆலயம் இருக்கிறதே அது எங்கே உள்ளது??? i think it must be in heaven!!! பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
  7. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. நல்ல படங்கள், தகவல்கள் என தந்து அசத்தறீங்க! இத்தனை கோவில்கள் பார்க்க எப்போது எங்களுக்கு நேரம் கிடைக்கப் போகிறதோ! புரியலை!

    ReplyDelete
  9. கல்லூத்து எங்கே இருக்கிறது? சுவாரசியமான விவரம். கேள்விப்பட்டதே இல்லை.

    Advocate P.R.Jayarajan பின்னூட்டம் வியக்க வைக்கிறது. எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை.

    ReplyDelete
  10. ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் என்று சத்யத்திற்க்கும் தர்மத்திற்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டிய அந்த என் பிரபு ஸ்ரீராமனுக்கே ஸ்ரீராமாயணத்தில் அத்தனை சோதனைகள் வந்துள்ளதே!

    அவரே மிகவும் பொறுமையாக இருந்து தானே, அனைத்தைத் தடைகளையும் தாண்டி வெற்றி பெற்றுள்ளார்! நாம் எம்மாத்தரம் என்று நினைத்துக் கொண்டேன்.

    நான் மிகச்சாதாரணமான மனுஷ்ய ஜன்மம் ஆனதால் சோதனைகளும், தடைகளும் எனக்குக் குறுக்கே வரும்போது, என் குழந்தை மனத்தால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

    ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்!
    ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்!
    ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்!
    ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்!
    ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்!
    ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்!
    ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்!
    ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்!
    ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்!
    -oOo-

    ReplyDelete
  11. உங்க பதிவை படித்ததுமே கோடி புண்ணியம் வந்துவிட்டது-..அத்தனை ராம நாமம்.

    அழகிய படங்களுடன் சிறப்பான பதிவு. நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  12. என் இஷ்ட தெய்வம் இராமரின் தரிசனத்திற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  13. ரொம்ப நல்லா இருக்கு. படங்கள் எடுக்கவும் சுவாரசியமான தகவல்கள் சேகரிக்கவும் தினசரி ஒரு பதிவு போடவும் நீங்க கடுமையா உழைப்பது புரியுது. சிம்ப்ளி க்ரேட்.

    ReplyDelete
  14. வணக்கம் அம்மா, உங்க பதிவுகளில் போடப்படும் படங்களுக்காகவே திரும்பத்திரும்ப பதிவுகளை பார்க்கத்தூண்டும்.

    ReplyDelete
  15. ஸ்ரீராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம் ராம்...

    ராமரின் படங்கள் கண்ணைக் கவர்கிறது.

    ReplyDelete
  16. படங்கள் அருமையா இருக்கு மேடம் பகிர்வுக்கு நன்றி ஜெய ஜெய ராம்

    ReplyDelete
  17. பீஜாஷரம் பற்றி இந்துமத இணைப்பு விளக்கத்தில் படித்திருக்கிறேன்,மறந்துவிட்டது.பதிவும் படங்களும் அருமை.

    ReplyDelete
  18. வழக்கம் போல் அருமை.
    மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரமே துணை!

    ReplyDelete
  19. படங்கள் மனதை கொள்ளை கொள்கிறது....

    ReplyDelete
  20. என் இஷ்ட தெய்வ தரிசனம்!

    ReplyDelete
  21. Lord's Rama's pics are so good that I find it difficult to choose which one to keep as background on my desk top.

    Reading your post is very timely now as I have been doing a second reading of Tulsidas's Ramachandramanasa recently. This book of over a thousand pages was gifted to me by a Christian friend!

    Sri Rama Jayam.

    ReplyDelete
  22. ;)
    ஹரே ராம, ஹரே ராம,
    ராம ராம ஹரஹரே!
    ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண,
    கிருஷ்ண கிருஷ்ண ஹரஹரே!!

    ReplyDelete
  23. what are the use in write sriram jayam words.....

    ReplyDelete
  24. how to write sriram jayam words.....

    ReplyDelete
  25. 1403+3+1=1407

    இந்த 2011 நவம்பர் மாத்ததில் பல இடங்களில் “The Comment has been removed by the Blog Administrator" என என் படத்துடன் காட்சியளிப்பது, எனக்கு மிகவும் எரிச்சலூட்டுவதாக உள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் எரிச்சலின் உச்சக்கட்டத்தையும் நான் அடையக்கூடும். ;(((((

    ReplyDelete