அஸாத்ய ஸாதக ஸ்வாமின்; அஸாதயம் தவகிம் வத
ராமதூத தயாஸிந்தோ மத் கார்யம் ஸாதய ப்ரபோ
புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வம் அரோகதாம் |
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத் ||
புத்தியும் பலமும் தூய புகழோடு துணிவும் நெஞ்சில்
பக்தியும் அச்ச மில்லாப் பணிவும் நோய்இல்லா வாழ்வும்
உத்தம ஞானச் சொல்லின் ஆற்றலும் இம்மை வாழ்வில்
அத்தனை பொருளும் சேரும் அனுமனை நினைப்பவர்க்கே.
முடியாத பணிகளையும் முடித்து வைப்பவர் ஜெய மாருதி. அசாத்தியத்தைச் சாதிப்பவர் - இராமதூதன் - மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில். சிவன் சன்னதியின் முன் வீணை ஆஞ்சநேயர் அபூர்வ கோலத்தில் தரிசிக்கலாம்..
மூலவர் சிங்கீஸ்வரர் நாகாபரண அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்..
அம்பாள் நறுமணம் மிக்கமலருக்கு உரியவளாக இருப்பதால் புஷ்பஜாம்பாள் என்று அழைக்கப்படுகிறாள்..
திருவாலங்காட்டில் இறைவன் ஆனந்த தாண்டவ நர்த்தனம் ஆடியபோது சிங்கி என்ற நந்தி மிருதங்கம் இசைப்பதில் ஆழ்ந்திருந்ததால் அந்த நடனத்தை ரசிக்கத் தவறிவிட்டார்.
இசை ரசனையில் சிவநடனத்தைக் காண முடியாமல் போனதால், அந்த ஆனந்த நர்த்தனைத்தைக் காண வேண்டும் என்று சிவனிடம் விண்ணப்பித்தார்.
அவரது தொழில் பக்தியை பாராட்டிய சிவன், பூலோகத்தினுள்
மெய்ப்பேடு என்னும் தலத்திற்கு வருமாறு சொன்னார்.
மெய்ப்பேடு என்னும் தலத்திற்கு வருமாறு சொன்னார்.
நந்திதேவரும் இங்கு சென்று அங்கிருந்த லிங்கத்திற்கு பூஜை செய்தார். அப்போது சிவபெருமான் அவர் முன்தோன்றி, மீண்டும் நடனம் புரிந்தார்.
சிங்கி என்னும் நந்தி வணங்கிய தலம் என்பதால், இறைவனுக்கு
சிங்கீஸ்வரர் என பெயர் ஏற்பட்டது. .
கோவிலின் வடகிழக்கு மூலையில் மிகமிக பழமையான ஸ்ரீவீரபாலீஸ்வரர் சன்னதி உள்ளது.
கொடி மரத்தின் அருகில் உள்ள நந்தியையும், மூலவரையும் பிரதோஷ காலத்தில் ஒரே நேரத்தில் அதன் எதிரில் கீழே உள்ள நவவியாகரன கல்லின் மீது ஏறி நின்று தரிசனம் செய்தால் எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
துர்க்கையம்மன்திருவடிகளில் மகிஷன் உருவம் உள்ளதால் மிகவும் விசேஷமானவள். , செவ்வாய், வெள்ளி தோறும் ராகு காலத்தில் (42 வாரங்கள்) எலுமிச்சை பழத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், திருமணம் மற்றும் குழந்தை பேறு கிடைக்கும்.என்பது ஐதீகம்
பிரகாரத்தில் ஆஸ்தான் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் முருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாள், வீரபாலீஸ்வரர் வீணை ஆஞ்சநேயர், கால பைரவர், சூரிய பகவான், சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.
சிவன் சன்னதியில் பெருமாள் காணப்படுவது மிகவும் அபூர்வம். மூலவரின் பக்கவாட்டு சுவரில் பிரம்மாவின் சிலை காணப்படுகிறது. வியாழக்கிழமை தோறும் பிரம்மாவுக்கு அர்ச்சனை நடைபெறுகிறது
வீரபாண்டியன் தலை கொண்டவன் என்ற பெயர் கொண்ட
சோழ மன்னனான இரண்டாம் ஆதித்திய கரிகாலனால்
ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது..!
சிவன் சன்னதியின் முன் வீணை ஆஞ்சநேயர் சிலை உள்ளது.
ஆஞ்சநேயர், கலைமகளாகிய சரஸ்வதி ஆகியோருக்குரிய நட்சத்திரம் மூலம்... ஒரு மூல நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயரின் நாவில் வெண்தாமரை தண்டினால், சிங்கநாத பீஜாட்சர சக்திகளை பொறித்தாள் கலைமகள்..
இதனால் அனுமனது பேச்சு தெளிவானதாகவும், உயிர்களைக் காப்பாற்றும் விதத்திலும், சமயோசிதமாகவும் இருந்தது. சொல்லின் செல்வர் என்ற பட்டமும் கிடைத்தது.
மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது பிறந்த நட்சத்திரத்தன்று இத்தலத்தில் பிரார்த்தனை செய்தால் கல்வியிலும், பேச்சிலும் சிறந்து விளங்குவார்கள்...
சீதையை தேடிக்கொண்டு அனுமன் தென்திசை சென்றபோது, இங்கு வந்ததாகவும், அப்போது மழையின்றி வறட்சியுடன் காணப்பட்ட இந்த பகுதி செழிக்க அருள் புரியுமாறு மக்கள் வேண்டிக்கொண்டதாகவும் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க, ஆஞ்சநேயர் அமிர்தவர்ஷினி ராகத்தை இசைத்து பாடினார் என்றும் அதன் தொடர்ச்சியாக பெரும் மழை பெய்தது என்றும் சொல்லப்படுகிறது. இசைத்துறையில் பிரகாசிக்க விரும்புவோர் வீணை அனுமனை வணங்கினால் சிறப்பாக விளங்குவார்கள்
தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது மோகினிஅவதாரம் எடுத்த மகாவிஷ்ணு தனது மெய்யான ரூபத்தை பெற இங்கு சிவனை வழிபட்டார்.
இதனால், இந்த ஊர் ஆரம்ப காலத்தில் திருமால்பேடு (பேடு=பெண்) என்றும், பின்னர் மெய்ப்பேடு என்றும் தற்போது மப்பேடு எனவும் அழைக்கப்படுகிறது
இதனால், இந்த ஊர் ஆரம்ப காலத்தில் திருமால்பேடு (பேடு=பெண்) என்றும், பின்னர் மெய்ப்பேடு என்றும் தற்போது மப்பேடு எனவும் அழைக்கப்படுகிறது
ஆலயம் 5 ஏக்கரில் அமைந்துள்ளது. ராஜகோபுரம் தெற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. மூலவர் மற்றும் அம்பாள் கோபுரம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது.
மிகவும் பழமை வாய்ந்த பரிகார ஷேத்ரம். திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில்.
சென்னையிலிருந்து பேரம்பாக்கம் செல்லும் வழியில், அரக்கோணம் சாலையில் அமைந்துள்ள மப்பேடு என்னும் ஊரில் இந்த கோவில் உள்ளது.
பூவிருந்தவல்லியில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் மப்பேடு உள்ளது. - முகவரி : அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோவில், மப்பேடு – 631 403 (பேரம்பாக்கம் வழி), திருவள்ளூர் மாவட்டம்
திறக்கும் நேரம்: காலை 6.00 – 9.00 AM மாலை 5.30 – 7.30 PM .
வீணை ஆஞ்சநேயர் அறிந்தேன் நன்றி சகோதரியாரே
ReplyDeleteமனம் கவரும் படங்கள். ஸ்ரீராம ஜெயம். ஸ்ரீராம ஜெயம். ஸ்ரீராம ஜெயம்.
ReplyDeleteசிறப்பான படங்கள் அம்மா... நன்றி...
ReplyDeleteஅசோக வனத்தில் அனுமன் சீதையைக் கண்டு
ReplyDeleteஇராமரைப் பற்றிய விவரங்களை கூறி இராமரின்
கணையாழியைக் கொடுத்து சூடாமணியைப்
பெற்றார். அன்னையிடம் விடைபெறும் சமயம்,
அனுமனை ஆசிர்வதிக்க எண்ணிய சீதை தான்
அமர்ந்திருந்த வெற்றிலைக் கொடியின் இலைகளை
பறித்து அனுமாரின் தலையில் புஸ்பமாய் போட்டு
ஆசீர்வதித்து வழி அனுப்பி வைத்தார்.
இதனால் அன்னையின் நினைவாகவே அனுமனுக்கு
வெற்றிலை மாலை அணிவிக்கப்படுகின்றது என்று
கூறப்படுகிறது.
வெற்றிலை அலங்காரத்தில் இருக்கும்
ஆஞ்சனேயரின் தரிசனத்திற்கும்,
வீணை ஆஞ்சனேயரின் அறிமுகத்திற்கும்
நன்றிகள். சிறப்பான பதிவிற்கு வாழ்த்துக்கள் .
ஸ்ரீசிங்கீஸ்வரர் திருக்கோயிலைப் பற்றியும் - வீணையுடன் ஆஞ்சநேயர் அருள் பாலிப்பதையும் அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி.. வாழ்க நலம்..
ReplyDeleteமனம் கவர்நத பதிவு! நன்றி!
ReplyDeleteபதிவுகளின் சிறப்பு பதிவர்களை காணவேண்டும் கை குலுக்க வேண்டும் என்று நினைக்க வைக்க வேண்டும் உங்கள் பதிவுகள் அப்படிச் செய்கின்றன. வாழ்த்துக்கள்
ReplyDeleteமுதலாவது ஆஞ்சநேயர் படம்,வெற்றிலை அலங்கார படம் அழகு. வீணை ஆஞ்சநேயர் சிறப்பான தகவல்கள் + படங்கள்.பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteமப்பேடு என்னும் மெய்ப்பேடு சிங்கீஸ்வரர் ஆலயத் தகவல்களும், வீணை ஆஞ்சநேயர் குறித்த தகவல்களும் சிறப்பு! படங்கள் அருமை! நன்றி!
ReplyDeleteவீணை ஆஞ்சநேயருடன், தஞ்சை மூளை அனுமாரையும் வெற்றிலை அலங்காரத்தில் இன்று தரிசனம் செய்யப் பெற்றோம்.
ReplyDelete’சொல்லின் செல்வர்
ReplyDeleteவீணை ஆஞ்சநேயர்’
என்று
சொல்லின் செல்வி :
திருமதி இராஜராஜேஸ்வரி
அவர்கள்
சொல்லியுள்ளீர்கள் !
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது !!
நினைத்தாலே இனிக்கிறதே !!!
>>>>>
ஆஞ்சநேயர் மற்றும்
ReplyDeleteகலைமகளாகிய சரஸ்வதி
இவர்களின் நக்ஷத்திரம்
’மூ ல ம்’
இதைத்தங்கள்
மூ ல ம்
ஏற்கனவே நான்
கேள்விப்பட்டிருப்பினும்,
இந்தப்பதிவின்
மூ ல ம்
மீண்டும்
நினைவுபடுத்திக்கொண்டேன்.
எதுவுமே
தங்கமான
தங்கள்
மூ ல ம்
எனக்குச்
சொன்னால்
மட்டுமே
என்
மனதில்
அவை
நீங்காததோர்
இடம்
பெறுகிறது.
இதன்
மூ ல ம்
மூ ல த் தி ன்
மூ ல ம்
[Route of the Root]
தாங்கள் தான்
என்பதையும்
இந்தப் பின்னூட்டம்
மூ ல ம்
தெரிவித்துக்கொள்கிறேன்.
>>>>>
ஆஞ்சநேயர் அமிர்தவர்ஷிணி ராகத்தை இசைத்துப்பாடி பெரும் மழையைப் பொழியுமாறு செய்த நிகழ்ச்சியைப்போலவே, தாங்களும் சனிக்கிழமையாகிய இன்று அந்த ஆஞ்சநேயரின் புகழினை பக்தி சிரத்தையுடன் பெரும் மழையாகவே இந்தப்பதிவினில் வர்ஷித்துள்ளது, மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியினைத்தருகின்றது.
ReplyDeleteபேரின்ப மழையில் நனைந்து மகிழ்ந்...தேன்.
எத்தனை எத்தனைப் படங்கள் !
எத்தனை எத்தனைச் செய்திகள் !!
அத்தனையும் அல்வாத் துண்டுகளாக இனிக்கின்றனவே !!!
>>>>>
மணக்கும் பெயருடன்
ReplyDeleteமனதினைச் சொக்க வைக்கும்
’ஸ்ரீபுஷ்ப குஜாம்பாள்’ என்ற
அம்பாளுக்கு என் வந்தனங்கள் +
நமஸ்காரங்கள்.
>>>>>
இன்று ஸ்வாமிகளின் ஆராதனை இங்கு
ReplyDeleteவெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
அங்கு சென்று வந்ததன்
மூ ல ம்
இங்கு சற்றே தாமதம்.
முறைக்காதீங்கோ ;)
ooOoo
தஞ்சை மூலை அனுமார் கோவிலில் வெற்றிலை வடிவில் வெற்றிலையைக் கொண்டே செய்திருந்த அலங்காரத்தை கஞ்ச்செய்த தங்களுக்கு நன்றி!
ReplyDeleteதஞ்சை மூலை அனுமார் கோவிலில் வெற்றிலை வடிவில் வெற்றிலையைக் கொண்டே செய்திருந்த அலங்காரத்தை காணச்செய்த தங்களுக்கு நன்றி!
ReplyDeleteவீணை ஆஞ்சிநேயர் - புதிய செய்தி தெரிந்து கொள்ள முடிந்தது நன்றி அம்மா.
ReplyDeleteபல தகவல்கள் வழமை போல வீணை ஆஞ்சநேயர் பற்றியாதும் புதியதே அழகான படங்களும் இணைத்துள்ளீர்கள் இனிமையான தரிசனமும் கிடைக்கப் பெற்றேன்.
ReplyDeleteநன்றி! வாழ்த்துக்கள் ...!
ஏன் என்ன ஆச்சு ?
ReplyDelete10ம் தேதி முடிந்து 11ம் தேதியும் வந்தாச்சு !
மணி 6.36ம் ஆச்சு !
புதுப்பதிவைக்காணாமல் கண் பூத்துப்போச்சு ;(
ஆட்டோமேடிக் செட்டிங்கில் ஏதோ கோளாறாகி விட்டதா ? மிகச்சரியாக அதிகாலை 5 மணிக்குப் புதுப்பதிவு வெளியாகி விடுமே. ஒரே கவலையாக உள்ளதே !
என்ன ஆச்சோ, சொல்லின் செல்வர் வீணை ஆஞ்சநேயருக்கே வெளிச்சம்.
வீணை ஆஞ்சநேயரைப் பற்றியும் பிற கோயில்களைப் பற்றியும் அருமையான புகைப்படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteவெற்றிலை ஆஞ்ச நேயர் புதிது.
ReplyDeleteமிக நன்றி.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.