மற்ற அவதாரங்களில் ஸ்ரீமன் நாராயணன் ஒரு குறிக்கோளுடன் உலக நன்மைக்காக நேரிடையாக அவதரித்து, அவதார நோக்கம் முடிந்தவுடன் ஸ்ரீவைகுண்டம் எழுந்தருளிவிட்டார்.
ஆனால், நரசிம்மனாக அவதரித்தது முதல் அன்றும், இன்றும், என்றும், எங்கும், எதிலும் வீற்றிருந்து இவ்வுலகை ரட்சிக்கும் தனிச் சிறப்பு மிக்கது நரசிம்ம அவதாரம்..
மோகினி அலங்காரம்ஆனால், நரசிம்மனாக அவதரித்தது முதல் அன்றும், இன்றும், என்றும், எங்கும், எதிலும் வீற்றிருந்து இவ்வுலகை ரட்சிக்கும் தனிச் சிறப்பு மிக்கது நரசிம்ம அவதாரம்..
அவதாரங்களிலேயே மேன்மையாகிய லட்சுமி நரசிம்மனே லட்சுமியுடன், மாலோலனாக, லட்சுமி நரசிம்மனாக அழகிய சிரித்த முகத்துடன் சாந்த சொரூபியாக ஏழரை அடி உயரத்தில் கம்பீரமாக, தன் பிராட்டியாகிய மகாலட்சுமியை இடது தொடை மீது அமர்த்தி, ஒருவருக்கொருவர் அணைத்தபடி வீற்றிருக்கும் கோலத்தில் நரசிங்கபுரம் மரகதவல்லி
சமேத லட்சுமி நரசிம்மன் கோயிலில் சேவை சாதிக்கிறார்.
தாயார் நேரடியாக பக்தர்களையே பார்க்கும் அம்சமாக
அமைந்திருப்பது தனிச் சிறப்பு.
இரண்யனை வதம் செய்து கோபம் தீராத நரசிம்மரை
தாயார் சாந்தப்படுத்தி, பக்தர்களுக்கும் அனுக்கிரகம் செய்வது
போன்ற இந்தத் தோற்றம், வேறு எத்தலத்திலும் இல்லாத சிறப்பாகும்.
தாயார் சாந்தப்படுத்தி, பக்தர்களுக்கும் அனுக்கிரகம் செய்வது
போன்ற இந்தத் தோற்றம், வேறு எத்தலத்திலும் இல்லாத சிறப்பாகும்.
சிறந்த பிரார்த்தனைத் தலமான நரசிங்கபுரம் பிரத்யட்ச தெய்வ சக்தி நல்கி ,துன்பம் நீங்கி .உடனுக்குடன் பலன் தரும் பெருமை பெற்றது.
செவ்வாய் தோஷ பரிகாரத்தலம்.
ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 6-ம் இடமாகிய ருண (கடன்),
ரோக (வியாதி), சத்ரு (பகை) ஸ்தான தோஷத்தை
உடனுக்குடன் நிவர்த்தி செய்பவர் இந்த லட்சுமி நரசிம்மன்.
ரோக (வியாதி), சத்ரு (பகை) ஸ்தான தோஷத்தை
உடனுக்குடன் நிவர்த்தி செய்பவர் இந்த லட்சுமி நரசிம்மன்.
. சுமார் 4 அடி உயர கருட மூர்த்தி -பெரிய திருவடி (கருடன்), தன் மேனியில் 16 நாகங்களை அணிகலனாக கொண்டு அருள் தரிசனம் தருவதால், இத்தலம், நாக தோஷ பரிகாரத் தலமானது
அந்திப் பொழுதில் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்த நரசிம்ம பிரபுவை தொடர்ந்து 9 சுவாதி நட்சத்திரத்தில் சேவித்தால் தீராத கடன், பிணி, திருமணத் தடை, சகலவிதமான தோஷங்களும் நிவர்த்தியாகும்.
நரசிம்ம அவதாரத்தைக் குறிப்பிடுகையில் சிங்கம் சிரித்தது (சிரித்து செங்கட்சீயம்) என்பார் திருமங்கையாழ்வார்.
அதேபோன்று சிரித்த முகத்துடன் பெருமாள் இங்கே காட்சி தருகிறார்.
அதேபோன்று சிரித்த முகத்துடன் பெருமாள் இங்கே காட்சி தருகிறார்.
லட்சுமி நரசிம்மனாக திருமால் அருள்புரியும் பல திருக்கோயில்களில் ஒன்றுதான் நரசிங்கபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்ம ஸ்வாமி ஆலயம்.
கருவறையில் வீற்றிருக்கும் மாலோல நரசிம்மன்,
பல்லவர் காலத்திய சிற்பம்
முக மண்டபத்தில் இருக்கும் ஜெய, விஜயர்கள் சிலைகளும்
(துவார பாலகர்கள்), பல்லவர்கள் காலத்தியதுதான் ..
(துவார பாலகர்கள்), பல்லவர்கள் காலத்தியதுதான் ..
கோயிலின் கட்டிட அமைப்பு, சோழர்களின் சிற்பக் கலைத் திறனைப்
பறை சாற்றும் பொக்கிஷமாகத் திகழ்கிறது.
பறை சாற்றும் பொக்கிஷமாகத் திகழ்கிறது.
அடித்தளமும் அதன் மேல்பாகமும் கற்களாலும்,
விமானம், செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளன.
கருவறை விமான கோபுரத்தில் சுண்ணாம்பு சுதையால்
ஆன அழகிய உருவங்கள் ஐந்துள்ளன..
விமானம், செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளன.
கருவறை விமான கோபுரத்தில் சுண்ணாம்பு சுதையால்
ஆன அழகிய உருவங்கள் ஐந்துள்ளன..
நரசிங்கபுரம் மரகதவல்லி சமேத லட்சுமி நரசிம்மன் கோயில், சென்னையிலிருந்து சுமார் 55 கி.மீ. தொலைவிலும் திருவள்ளூர் மாவட்டத்தில் பூவிருந்தவல்லியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள பேரம்பாக்கத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
நசிம்ம ஜெயந்திக்கு அருமையான ஒரு பதிவு! தரிசனம் கண்டேன்! நன்றி!
ReplyDeleteநரசிம்ம ஜெயந்தியான இன்று அருமையான படங்களுடன் சிறப்பான பகிர்வு அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநல்லனவற்றை நல்கும் நரசிங்கபுரம் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் -
ReplyDeleteதிருவடிகள் போற்றி.. போற்றி!..
நரசிங்கபுரம் மரகதவல்லி சமேத லஷ்மிநரசிம்ம கோயிலின் சிறப்புகள்,தகவல்கள் அழகான படங்களுடன் அருமையான பகிர்வு. நன்றி.
ReplyDeleteபுதிய கோயில், புதிய பெருமாள், புதிய தகவல்கள். ;)))
ReplyDelete>>>>>
பளிச்சிடும் பாந்தமான படங்கள். ;))
ReplyDelete>>>>>
நரசிம்ஹ ஜயந்தியான இந்த நாளுக்கு ஏற்ற நல்ல பதிவு. ;)
ReplyDelete>>>>>
ஏலக்காய் வாஸனையுடன் இனிப்பான பானகம் ஜில்லென்று ஒருசொம்பு நிறைய அருந்திய திருப்தியையும் மகிழ்ச்சியையும் அளித்தது. ;)
ReplyDelete>>>>>
ஸ்ரீலக்ஷ்மிந்ருசிம்ஹ ஸ்வாமி துதி என்று ஆறு வரிகள் அழகாகக் கொடுத்துள்ளீர்கள்.
ReplyDeleteஅதன் கீழே ஓர் கருப்பு கட்டம் மட்டுமே காட்சியளிக்கிறது. காணொளியாக இருக்குமோ என்னவோ .... ?
அதை காண முடியாமல் உள்ளது. அதைத்திறந்து பார்க்க அதில் நிப்பிள் [முக்கோண பட்டன்] ஏதும் தங்களால் தரப்படவே இல்லை.
>>>>>
அந்த கருப்புக்கட்டத்தில் இப்போது நல்லதொரு முன்னேற்றம்.
Deleteஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ கரவலம்ப ஸ்தோத்ரம் by-Adi-Sh...
என ஏதோ மேலே ஆங்கிலத்தில் பொடி எழுத்துக்கள் தெரிகிறது. முக்கோணமும் வந்து விட்டது. ஆனால் அதை நான் அமுக்கினால் என்ன வருகிறது பாருங்கோ:
An error occurred, please try again later. Learn more
சரி, நானே அடிக்கடி பிறகு try try try try பண்ணிக்கொண்டே இருக்கேன். எத்தனை முறை try பண்ணினால் தான் என்ன - Result favorable ஆகவா இருக்கப்போகிறது. ;((((( .....
என்னவோ போங்க ........................ பார்ப்போம்.
This comment has been removed by the author.
Deleteஅ ப் பா டி ........... அ ம் மா டி .............. !
Deleteஒருவழியா ஆதிசங்கரர் இயற்றிய கரவலம்ப ஸ்தோத்ரங்களைக் கேட்க முடிந்ததில் மகிழ்ச்சியே.
பெங்களூர் இஸ்கான் டெம்பிளுக்கு __ __ __ __ யுடன் மீண்டும் போய் வந்தது போல ஒரு உணர்வு
ஸ்லோகங்களின் இடையே பெருமாளின் வலக்கரம் முத்தங்கி ஸேவை போல அடிக்கடி காட்சியளித்தது அருமை.
ஏதோ இதிலாவது தொடர்ந்து முயற்சித்தது வீண்போகவில்லை. சந்தோஷம்.
>>>>>
or
ooooo
; ) 1273 ;)
Deleteமரகதவல்லித்தாயாருக்கும் பெருமாளுக்கும் நமஸ்காரங்கள்.
ReplyDeleteஅனைத்துக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், பதிவுக்கும் பகிர்வுக்கும் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
oo oo oo
படங்களும் பதிவும் கச்சிதம்
ReplyDeleteஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி அன்று படங்களுடன் அழகிய பகிர்வு! அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநரசிம்ம அவதாரம் பற்றிப் பேசும்போது இரண்யன் – பிரகலாதன் வாக்குவாதம் பற்றி சிறப்பாகச் சொல்லுவார்கள்.
ReplyDelete'"சாணிலும் உளன்; ஓர் தன்மை, அணுவினைச் சத கூறு இட்ட
கோணினும் உளன்; மா மேருக் குன்றினும் உளன்; இந் நின்ற
தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன்; இத் தன்மை
காணுதி விரைவின்" என்றான்; "நன்று" எனக் கனகன் நக்கான்.
- கம்பராமாயணம்
உங்கள் பதிவின் முதல் படம் பக்த் பிரகலாதன் கதையை மீண்டும் படிக்கத் தூண்டுகிறது. மற்றைய படங்களும் அருமை. நீங்கள் சொன்ன நரசிங்கபுரம் (திருவள்ளூர் மாவட்டம்) பெருமாள் கோயில் பெயரிலும் இங்கு அரியலூர் அருகேயும் ஒரு பெருமாள் கோயில் உள்ளது. அந்த ஊரின் பெயரும் நரசிங்கபுரம்தான்.
நரசிங்கப் பெருமாளின் தரிசனம் மகிழ வைத்தது. திரு தமிழ் இளங்கோ அவர்களின் கருத்துரை உங்கள் பதிவிற்கு மெருகூட்டுகிறது. கம்பராமாயண பாடல் மிகச் சிறப்பு!
ReplyDeleteநரசிம்ம ஜெயந்தி சிறப்புப் பகிர்வு மிக அருமை......
ReplyDeleteபகிர்ந்து கொண்டதற்கு நன்றி.