நாராயணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத்
விஷ்ணோர்நுகம் வீர்யாணி ப்ரவோசம் ய: பார்திவானி விமமே
ராஜா ஸி யோ அஸ்கபாயதுத்தர ஸதஸ்தம்
விசக்ரமாணஸ்-த்ரேதோருகாயோ விஷ்ணோ
ரராடமஸி விஷ்ணோ: ப்ருஷ்டமஸி விஷ்ணோ:
ஸ்ஞப்த்ரே- ஸ்தோ விஷ்ணோ: ஸ்யூரஸி
விஷ்ணோர் த்ருவமஸி வைஷ்ணவமஸி விஷ்ணவே த்வா
ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி
யார் இப்புவியையும் ,மேலே உள்ள விண்ணுலகையும்
அதிலுள்ள அனைத்தையும் படைத்து ,தாங்குகின்ராரோ ,
மூன்று அடிகளால் மூவுலகையும் அளந்தாரோ ,
பெரியோரால் போற்றப்படுகிராரோ ,
அந்த விஷ்ணுவின் சீரிய செயல்களைப் போற்றுவோம்
(ஓம் நமோ விஷ்ணவே தஸ்மை நமஸ்தஸ்மை புன: புன:
யத்ர ஸர்வம் யத: ஸர்வம் ய: ஸர்வம் ஸர்வ ஸம்ஷ்ரய:)
ஆகவே மாதம் இருமுறை வரும் பிரதோஷ காலங்களைப்பற்றி
தகவல் பலகையில் அறிவித்தீருப்பார்கள்..
அவற்றிலும் சனிப்பிரதோஷம் மிக சிறப்பானது..
விஷ்ணு ஆலயங்களில் ஒவ்வொரு வருடமும் நான்கு விஷ்ணுபதி புண்ய காலங்கள் குறிப்பிட்டிருப்பார்கள்..
தமிழ் மாத கணக்கின்படி வைகாசி , ஆவணி, கார்த்திகை , மாசி மதங்களில் முதல் தேதி விஷ்ணுபதி புண்ய காலம் வருகிறது.
விஷ்ணுபதி புண்யகாலத்தில் மகாவிஷ்ணுவையும்,மஹாலக்ஷ்மியையும் மனதார வழிபாட்டு அனைத்து தேவைகளையும் , வேண்டுதல்களையும் கூறி பிரார்த்தனை புரியலாம்
விஷு புண்ய காலம் , உத்தராயண புண்ய காலம் ,
தக்ஷிணாயன புண்ய காலம் - என பல புண்ணிய காலங்களை சிறப்பாக கூறுவதைப் போலவே விஷ்ணுபதி புண்ய காலம் என்பதுவும் மிகவும் விஷேசமான சௌபாக்கியக்கியங்களை வர்ஷிக்கும் வல்லமையுள்ளது.
எனவேதான் விஷ்ணுபதி புண்ய காலம்
"சௌபாக்ய ஸ்ரீ விஷ்ணுபதி புண்ய காலம் " என அழைக்கப் படுகிறது.
- Special Fire Ritual on Vishnupati
திதிகளில் சிறந்ததான ஏகாதசி திதி மகாவிஷ்ணுவிற்கு மிகவும் உகந்ததாக சாஸ்திரம் கூறுகிறது.
ஏகாதசி அன்று ஒருவர் புரியும் பூஜைகளும் , அனுஷ்டிக்கும்
விரத முறையும் அனைத்திலும் சிறந்த பலன் தருவதாக நம்பிக்கை..!
ஒருவர் ஒரு முறை விஷ்ணுபதி புண்ய கால விரதத்தை அனுஷ்டிப்பது , பல ஏகாதசி விரதங்களை அனுஷ்டிப்பதற்கு சமம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
ஏகாதசியை விடவும் மிகவும் சிறந்த பலனைத் தர வல்லது
விஷ்ணுபதி புண்யகாலம் ...
ஒரு விஷ்ணுபதிப் புண்ய கால பூஜையானது பலவருட ஏகாதசிப் புண்ய காலங்களின் திரண்ட ஆன்மீக சக்தியைப் பெற்றுத் தருகிறது.
ஸ்ரீ விஷ்ணு - ஸ்ரீ தேவியினுடைய துதிகளை கூறி அவரவர் சக்திக்கு இயன்ற பூஜைகளை முறைப்படி பூஜை செய்யத் தெரிந்தவர்கள் நிறைவாக செய்வது விஷேசம்...
அருகில் உள்ள விஷ்ணு ஆலயத்திற்கு அந்த குறிப்பிட்ட
விஷ்ணுபதி புண்ய கால நேரத்தில் சென்று வழிபடலாம்.
துளசி பூஜை , கோ பூஜை , என ஸ்ரீதேவிக்குப் ப்ரீத்தியைத் தரக்கூடிய காரியங்களை எல்லாம் சக்திக்குத் தகுந்தவாறு செய்யலாம்.
அருகில் உள்ள விஷ்ணு ஆலயத்திற்கு அந்த குறிப்பிட்ட
விஷ்ணுபதி புண்ய கால நேரத்தில் சென்று வழிபடலாம்.
துளசி பூஜை , கோ பூஜை , என ஸ்ரீதேவிக்குப் ப்ரீத்தியைத் தரக்கூடிய காரியங்களை எல்லாம் சக்திக்குத் தகுந்தவாறு செய்யலாம்.
அதே போல் அன்றைய தினத்தில், செய்யக் கூடாத
செயல்களைத் தவிர்ப்பதுவும் நன்று.
செயல்களைத் தவிர்ப்பதுவும் நன்று.
விஷ்ணுபதி புண்ய காலத்தைப் பற்றி தெரியாதவர்களுக்கு
இதனைத் தெரியப் படுத்தி அவர்களையும் இதில் பங்கேற்கச்
செய்வதுவும் மிகச்மிகச் சிறந்த வழிபாடு ஆகும்.
இதனைத் தெரியப் படுத்தி அவர்களையும் இதில் பங்கேற்கச்
செய்வதுவும் மிகச்மிகச் சிறந்த வழிபாடு ஆகும்.
தமிழ் ஆண்டுகள் மொத்தம் 60 ஆகும்.
ஒவ்வொரு ஆண்டிலும் வரக்கூடிய நான்கு
விஷ்ணுபதி புண்ய காலங்களும் ஒவ்வொரு விதத்தில் வேறுபடும்.
எனவே இந்த முறை நாம் ஒரு விஷ்ணுபதி புண்ய காலத்தை தவறவிட்டால் அடுத்து இதே போன்ற ஒரு புண்ய காலம் வருவதற்கு மீண்டும் 60 ஆண்டுகள் ஆகும். எனவே அரிதான இந்த வாய்ப்பினைத் தவற விடக்கூடாது..!
விஷ்ணுபதி புண்ய கால விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் உலகாயதமான தேவைகளையும் மகிழ்ச்சியானதும், செல்வ செழிப்பு மிக்க வளமான வாழ்வினையும் பெற முடியும் ...
அக வளர்ச்சி, ஆனந்தம் . ஆன்மிக முன்னேற்றம் , மன அமைதி , மோக்ஷத்தையும் தர வல்லது விஷ்ணுபதி புண்ய காலம் ஆகும்.
அக வளர்ச்சி, ஆனந்தம் . ஆன்மிக முன்னேற்றம் , மன அமைதி , மோக்ஷத்தையும் தர வல்லது விஷ்ணுபதி புண்ய காலம் ஆகும்.
புண்ய காலத்தை முழுமையாகக் கடைப் பிடித்து
ஸ்ரீ லக்ஷ்மி நாராயணனின் பூரண அருளைப் பெற
அவனருளாலே அவன் தாள் வணங்கி வேண்டிக்கொள்வோம்..!.
ஸ்ரீ லக்ஷ்மி நாராயணனின் பூரண அருளைப் பெற
அவனருளாலே அவன் தாள் வணங்கி வேண்டிக்கொள்வோம்..!.
அதுவும் தனித்துச் செய்ய இயலாதான தர்ம, பூஜை முறைகளைப்
பலர் ஒன்று கூடிச் சத்சங்கமாக அமைந்து கூட்டாகச்
செய்கையில் அபரிமிதமான பலன் கிட்டும்.
அதுவும் சத்குருவின் ஆணையின் கீழ் நடக்கும் நற்பணிகளின் திரண்ட திருவருளை எழுத்தில் வடிக்க இயலாது! எண்ணத்தில் கூட்ட இயலாது! சொற்பொருள் கடந்த மெய்ஞானத்துடன் கூடிய இறைசுகானுபவத்தைத் தரவல்லது.
பலர் ஒன்று கூடிச் சத்சங்கமாக அமைந்து கூட்டாகச்
செய்கையில் அபரிமிதமான பலன் கிட்டும்.
அதுவும் சத்குருவின் ஆணையின் கீழ் நடக்கும் நற்பணிகளின் திரண்ட திருவருளை எழுத்தில் வடிக்க இயலாது! எண்ணத்தில் கூட்ட இயலாது! சொற்பொருள் கடந்த மெய்ஞானத்துடன் கூடிய இறைசுகானுபவத்தைத் தரவல்லது.
விஷ்ணுபதிப் புண்யகாலம் பெறற்கரிய புண்யகாலம்.
விஷ்ணுபதி என்னும் அற்புத பெருநிலையை தெய்வ அவதார மூர்த்திகளே அடைந்து மனித குலத்திற்கு நல்வழி காட்டியுள்ளனர்.
தான தர்மங்கள், ஹோமங்கள், தர்பணாதிகள், பூஜைகள், நாம சங்கீர்த்தனம், ஜபம் தியானத்துடன் விஷ்ணுபதிப் புண்யகாலத்தைக் கொண்டாடுவது உன்னத நிலைகளைத் தரும்.
விஷ்ணுபதி என்னும் அற்புத பெருநிலையை தெய்வ அவதார மூர்த்திகளே அடைந்து மனித குலத்திற்கு நல்வழி காட்டியுள்ளனர்.
தான தர்மங்கள், ஹோமங்கள், தர்பணாதிகள், பூஜைகள், நாம சங்கீர்த்தனம், ஜபம் தியானத்துடன் விஷ்ணுபதிப் புண்யகாலத்தைக் கொண்டாடுவது உன்னத நிலைகளைத் தரும்.
தினசரி பூஜைகளைச் சரிவரச் செய்யாது சோம்பேறியாய் வாழும் மனிதன், விஷ்ணுபதி போன்ற புண்யகால பூஜைகளையாவது தவறாமல் கடைப்பிடிப்படால்தான் ஓரளவு முன்னேற்றம் பெறலாம்.
விஷ்ணுபதி புண்யகாலம் தேவர்கள். அசுரர்கள் மகிழ்ச்சியோடு
இருக்கும் காலம்.
இக்காலத்தில் நாம் என்ன பிரார்த்தனை செய்து கொண்டாலும் அது உடனே பலிக்கும்.
கறவை முன் காத்து, கஞ்சனைக் காய்ந்த காளமேகத் திருஉருவன்
பறவை முன் உயர்த்து பாற்கடல் துயின்ற பரமறார் பள்ளி கொள்கோவில்
துறைதுறை தோறும் பொன்மணி சிதறும் தொகுதிரை மண்ணியின் தென்பால்
செறிமணி மாடக்கொடி கதிர் எனவும் திருவெள்ளியங்குடி அதுவே.
திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட
திவ்ய தேசத் தலம் வெள்ளியங்குடி கும்பகோணம்,
அணைக்கரை சாலையில் அமைந்துள்ளது..
மயனுக்கும், திருமங்கையாழ்வாருக்கும் மஹாவிஷ்ணு
ஸ்ரீராமனாய்க் காட்சியளித்த அற்புதமான தலம்
திவ்ய தேசத் தலம் வெள்ளியங்குடி கும்பகோணம்,
அணைக்கரை சாலையில் அமைந்துள்ளது..
மயனுக்கும், திருமங்கையாழ்வாருக்கும் மஹாவிஷ்ணு
ஸ்ரீராமனாய்க் காட்சியளித்த அற்புதமான தலம்
மஹாபலியின் யாகத்துக்கு வாமனனாக வந்து உலகளந்த பெருமான் மூன்றடி மண் கேட்க. அதை தானம் செய்ய மஹாபலி முற்பட்ட போது, அசுர குருவான சுக்ராச்சாரியார் வண்டுருவாக வந்து கமண்டலத்தை மூட வண்டின் மீது தன் தர்பத்தால் வாமனர் குத்த ஒரு கண்ணையிழந்தார் சுக்கிரர்.
அதன் பின் மீண்டும் கண்ஒளி பெற ஒரு மண்டலம் வெள்ளியங்குடி தலத்தில் தவமிருந்து அருள் பெற்று கண்ணொளி பெற்றார்.
இந்த பெருமாளை தரிசித்தால் 108 திருப்பதிகளையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தனக்கு கண்ணில் ஒளி தந்த பெருமாளுக்கு நன்றி செலுத்தும் வகையில், சுக்கிர பகவான் அணையா தீபமாக இத்தலத்தில் இரவு பகலாக பிரகாசித்து கொண்டிருக்கிறார். எனவே இத்தலம் நவக்கிரகத்தில் சுக்கிரத்தலமாக போற்றப்படுகிறது
சுக்ரனுக்குக் கொடுக்கப்பட்ட ஒளி இன்றும் தூண்டா விளக்காக
நேத்ர தீபமாக பெருமானின் சன்னதியில் பிரகாசித்துக் கொண்டிருக்கும்.நேத்ர தீப தரிசனம் கண் சம்மந்தமான நோய்களில் இருந்து விரைவில் குணமளிக்கிறது.
இந்திரன் மயன், மார்கண்டேயர், பூமிதேவி, சுக்கிரன், பிரம்மா பராசார் எழுவரும் பெருமாளைக் கல்யாண கோலத்தில் காண பிரார்த்திக்க, பெருமாளும் தன் சங்கு, சக்ரத்தை கருடனிடம் தந்து விட்டு கல்யாணத் திருக்கோலத்தில் காணப் பிரார்த்தித்ததனால் தனது சங்கு, சக்கரப் படைகளை கருடாழ்வாரிடம் தந்து விட்டுக் கல்யாணக் கோலத்தில் காட்சியளித்தாராம் ..
திருவெள்ளியங்குடியில் கருடாழ்வார் நான்கு திருக்கரங்களுடனும், பெருமாள் இரண்டு கரங்களுடனும் வித்தியாச கோலம் காட்டுகிறார்கள்.
பெருமாள் அளித்த அந்த சங்கு சக்கரத்தைதான் இப்போதும்
இங்கே கருடாழ்வார் தாங்கியபடி விநயமாக காட்சி தருகிறார்.
பெருமானின் எதிரில் எழுந்தருளியிருக்கும் கருடாழ்வார் சதுர் புஜங்களுடன், சங்கு, சக்கர மேந்தி, பெருமாள் தரிசனம் தந்த பின் அவரிடம், சங்கு, சக்கரத்தைத் திருப்பி தர எழும்பாவனையில், ஒரு காலைமடித்து, நின்ற நிலையுமில்லாமல், அமர்ந்த நிலையுமில்லாமல் எழும் நிலையில் திருக்காட்சி தரும் கருடாழ்வார் இப் பிரபஞ்சத்தில் வேறெங்கும் காண முடியாத அற்புத வடிவத் தோற்றம் கொண்டு திகழ்கிறார்.
கருட பகவானுக்கு வருடத்தில் நான்கு நாட்கள் விஷ்ணுபதி புண்யகாலத்தில் சிறப்புத் திருமஞ்சனம் நிடைபெறுகின்ற சமயத்தில் கருடாழ்வாரை மனதாரப் பிரார்த்தித்தால் நனைத்த காரியம் கைகூடும்
வாகன விபத்து ஏற்படாதவாறு காக்கும் தெய்வம் இவர் ..!
ஒரு முறை தேவ சிற்பியான விஸ்வகரமாவுக்கும், அசுரசிற்பி மயனுக்கும் வாக்குவாதம் யார் பெரியவர் என்று இருவரும் பிரம்மனிடம் முறையிட்டனர்.
பிரம்மா, மயனை, காவேரி தீரத்தில் எம்பெருமானுக்குக் கோவில் எழுப்பி வழிபட்டால் விஸ்வகர்மாவைப் போல் உயரலாம் எனக்கூற, மயனும் இத்தலம் வந்து அழகியதோர் ஆலயம் அமைத்து பெருமாளை வழிபட்ட, சிருங்கார சுந்தரனாக, ராமனாக காட்சி தந்து அருள் புரிந்தார் பெருமான்.
கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன், வர்ணகலாப திருமேனி கொண்டு மூலவர் சேவை சாதிக்கிறார். உற்சவர் ஸ்ரீதேவி பூமிதேவியுடன் ச்ருங்கார சுந்தரனாக கோலவில்லி ராமனாக சேவை.
திருமுக மண்டலத்தில் கம்பீரம், சிருங்காரம், ஒய்யாரம், புன்முறுவல்! மிளிர எழிலார்ந்த திருக்கோலத்தில் மனம் மயங்க, கோலவில்லி ராமன் என்று எத்தனை பெயர் பொருத்தத்துடன் புஷ்கலாவர்த்தக விமானத்தின் கீழ் எழிலோவியமாய் எழுந்தருளியிருப்பது கண்கொள்ளாக்காட்சி..
ஸ்தல விருட்சமாக செவ்வாழை மரம் கலதரையில் பசுமையாய் நின்று வருடம் ஒருமுறை குலை தள்ளுவது அதிசயம் .. மூலவருக்கு செவ்வாழை நைவேத்தியம் விஷேசம்..
விஷ்ணுபதி புண்ய காலத்தில் சிறப்பாக அபிஷேகம் நடைபெறும்
வல்லம் ஸ்ரீ மாதவ பெருமாள் ஆலயம் .
வல்லம் ஸ்ரீ மாதவ பெருமாள் ஆலயம் .
தஞ்சையை அடுத்த வல்லத்தில் அமைந்துள்ளது
ஸ்ரீ மாதவ பெருமாள் ஸ்ரீ யோக நரசிம்மர் ஆலயம்....
ஸ்ரீ மாதவ பெருமாள் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி எழுந்தருளி சேவை சாதிக்கிறார்.இடது காலை மடக்கி அமர்ந்தக் கோலத்தில் பெருமாள் அமைந்து உள்ளார்
ஸ்ரீ மாதவ பெருமாள் ஸ்ரீ யோக நரசிம்மர் ஆலயம்....
ஸ்ரீ மாதவ பெருமாள் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி எழுந்தருளி சேவை சாதிக்கிறார்.இடது காலை மடக்கி அமர்ந்தக் கோலத்தில் பெருமாள் அமைந்து உள்ளார்
தொல்லைக் கொடுத்து வந்த வல்லாசுரனை வதம் செய்த
ஸ்ரீ யோக நரசிம்ஹரும் சுயம்பு மூர்த்தியாக தெற்கு நோக்கி
அமர்ந்து சேவை சாதிக்கிறார்.
பல்வேறு யோகங்களையும், நலன்களையும் நரசிம்ஹர் வழங்குகிறார். இருதய கோளறு உள்ளவர்கள் வணங்க வேண்டிய தலம்
கார்த்திகை மாதம் முழுவதும் நரசிம்ஹர் தமது தவத்தில்
இருந்து வெளிப்பட்டு கண் திறந்து இருப்பதாக ஐதீகம்
ஸ்ரீ யோக நரசிம்ஹரும் சுயம்பு மூர்த்தியாக தெற்கு நோக்கி
அமர்ந்து சேவை சாதிக்கிறார்.
பல்வேறு யோகங்களையும், நலன்களையும் நரசிம்ஹர் வழங்குகிறார். இருதய கோளறு உள்ளவர்கள் வணங்க வேண்டிய தலம்
கார்த்திகை மாதம் முழுவதும் நரசிம்ஹர் தமது தவத்தில்
இருந்து வெளிப்பட்டு கண் திறந்து இருப்பதாக ஐதீகம்
இரு மூர்திகளுமே சுதை அமைப்பில் உள்ளதால் இந்த மூர்த்திகளுக்கு நித்ய அபிஷேகம் கிடையாது.
முன் நாட்களில் நித்ய தர்ப்பண முறைகள் இருந்துள்ளன.
காலத்தின் வேகத்தில் அவை எல்லாம் தற்போது மறைந்து விட்டன
பொதுவாக அமாவாசை அன்று பெரும்பாலானோர் செய்வது உண்டு.
பொதுவாக அமாவாசை அன்று பெரும்பாலானோர் செய்வது உண்டு.
அமாவாசை' போன்றே விஷு புண்ய காலங்களான உத்தராயணம், தட்சிணாயணம் , மாத பிறப்பு , கிரகண காலங்கள் , மகாளய பட்சம் போன்ற விசேஷ காலங்களில் தர்ப்பணம் செய்வது உண்டு.
ஆடி அமாவசை , மகாளய அமாவசை காலங்களில்
தர்ப்பணம் செய்பவர்கள் அதிகம்.
முன்னோர்களுக்கு செய்யப்படும் நீர்த்தார் கடனில் ஒன்றான தர்ப்பணம். விஷ்ணுபதி புண்ய காலத்திலும் செய்வது சிறந்த பலனைக் கொடுக்கக் கூடியது.
எனவே விஷ்ணுபதி புண்ய காலத்தில் தர்ப்பணம் செய்து, ஸ்ரீ மகாலட்சுமி ,
ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அருளாசியப் பெறுவதோடு , முன்னோர்களின் ஆசியினையும் பெற்றுக் கொள்ளவும்.
ஆடி அமாவசை , மகாளய அமாவசை காலங்களில்
தர்ப்பணம் செய்பவர்கள் அதிகம்.
முன்னோர்களுக்கு செய்யப்படும் நீர்த்தார் கடனில் ஒன்றான தர்ப்பணம். விஷ்ணுபதி புண்ய காலத்திலும் செய்வது சிறந்த பலனைக் கொடுக்கக் கூடியது.
எனவே விஷ்ணுபதி புண்ய காலத்தில் தர்ப்பணம் செய்து, ஸ்ரீ மகாலட்சுமி ,
ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அருளாசியப் பெறுவதோடு , முன்னோர்களின் ஆசியினையும் பெற்றுக் கொள்ளவும்.
'
Power spot where Lord Kalabairava placed his right foot first in our Mortal Earth.
Most Powerful Lakshmi to bless with wealth awaits you there.
https://www.youtube.com/watch?v=iDbR7fuSDsc
Power spot where Lord Kalabairava placed his right foot first in our Mortal Earth.
Most Powerful Lakshmi to bless with wealth awaits you there.
https://www.youtube.com/watch?v=iDbR7fuSDsc
என் சார்பிலும், என் அமெரிக்க நட்பு திருமதி விஜி அவர்கள் சார்பிலும் முதற்கண் இந்தத்தங்களின் 1279வது பதிவுக்கு மிக்க நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteஅவர்களுக்கும் இதன் இணைப்பை மெயில் மூலம் அனுப்பிவிட்டேன்.
பிறகு மீண்டும் வர முயற்சிப்பேன்.. VGK
மிக நல்ல வழிபாடு பற்றி அறிந்து கொண்டோம் . மிக்க நன்றி.
ReplyDeleteஸ்ரீ விஷ்ணுபதி புண்ய கால வழிபாடு மிக அழகாய் விரிவாய் சொன்னதற்கு நன்றி.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
படங்கள் எல்லாம் அழகு.
விஷ்ணுபதி புண்ணியகாலம்.
ReplyDeleteஇதுவரை நான் அறிந்திராத ஒன்று !
தகவலுக்கு நன்றியும்,
சிறந்த பதிவிற்கு பாராட்டுக்களும் !
விஷ்ணுபதி புண்ய காலத்தினைப் பற்றி விரிவாக அறியத் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி..
ReplyDeleteஅருமையான படங்களுடன் சிறப்பான விளக்கம் அம்மா... நன்றி...
ReplyDeleteதெரியாத தகவல் விஷ்ணுபதி புண்யகாலம். அதனைப்பற்றி விரிவாக பதிவினை அழகான படங்களுடன் தந்தமை சிறப்பு. நன்றிகள்.
ReplyDeleteதகவல்களுகு நன்றி! ஓம் நமோ நாராயணாய! ஸ்ரீராமஜெயம்! ஸ்ரீராமபாதஜெயம்!
ReplyDeleteபடங்கள் அத்தனையும் அழகோ அழகாகத்
ReplyDeleteதிரட்டிக் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.
>>>>>
காணொளியில்
ReplyDeleteஸ்ரீஸ்ரீநிவாஸம்
ஸ்ரீவெங்கடேசம்
அழகாக அருமையாக
மெய்மறந்து
கேட்டு மகிழ முடிந்தது.
>>>>>
இரண்டு நாட்கள் முன்பு தான் என்னை ஒரு வெளிநாட்டினர்
ReplyDeleteதொலைபேசியில் தொடர்புகொண்டு இந்த ‘ஸ்ரீ விஷ்ணுபதி புண்யகாலம் பற்றி சில சந்தேகங்கள் கேட்டிருந்தார்கள்.
தங்களைக்கேட்டால் தான் இதுபற்றிய முழுவிபரங்கள் கிடைக்கும் என என் மனதில் நான் நினைத்துக்கொண்டேன்.
என்ன ஆச்சர்யம் .... !!!!!
அதற்குள் தங்களிடமிருந்து இவ்வளவு ஒரு நீள அகல ஆழம் நிறைந்த மனதுக்கு நிறைவான பதிவு !
தக்க நேரத்தில் தங்கமாகக் கிடைத்துள்ள இதனை பொக்கிஷமாக நினைத்து, அவர்களுக்கும் இதன் இணைப்பினை அனுப்பியுள்ளேன்.
>>>>>
அவர்கள் நிச்சயமாக இதனைப்பார்த்து படித்து விட்டு என்னுடன் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வார்கள்.
ReplyDeleteஅதனை அப்படியே நான் தங்களுக்கு ஓர் பின்னூட்டமாக அளிக்க உள்ளேன்.
>>>>>
தங்களது சுறுசுறுப்பும், ஆற்றலும், அறிவும், ஈடுபாடும், தனித்தன்மையும் என்னை மிகவும் வியக்க வைக்கிறது. ஹிம்சிக்கிறது. பொறாமைப்படவும் வைக்கிறது.
ReplyDeleteமிக அழகான அசத்தலான பதிவினை அதற்குள் உடனடியாகத் தயாரித்து வெளியிட்டுள்ளது மூக்கின் மேல் விரலை வைக்க வைக்கிறது. சபாஷ் !
இருந்தால் உங்களைப்போல இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தங்களைப் போன்றோர்களுடனாவது [ கடைசிவரை ] ஸ்நேகிதமாகவாவது இருக்க வேண்டும் என எண்ண வைக்கிறது .
>>>>>
திருவெள்ளியங்குடி கருடாழ்வார் போல பறந்து அங்கு வந்து நேரில் தங்களைப் பாராட்ட வேண்டும் என்ற என் அவா நாளுக்கு நாள் எனக்கு அதிகரித்து வருகிறது.
ReplyDelete>>>>>
வருடம் முழுவதும் பித்ருக்களுக்கு நாம் செய்ய வேண்டிய 96 ஷண்ணவதி தர்ப்பண தினங்களில் இந்த ஸ்ரீ விஷ்ணுபதி புண்ணிய காலங்களான நான்கும்கூட முக்கியமாகச் சொல்லப்பட்டுள்ளன.
ReplyDelete>>>>>
அனைத்துக்கும் மிக்க நன்றியோ நன்றிகள்.
ReplyDeleteமனம் நிறைந்த இனிய பாராட்டுக்கள்.
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
மிகவும் சந்தோஷம்.
வாழ்க ! வளர்க !!
ooo ooo ooo
விஷ்ணுபதி புண்ணியகாலம் என்று ஒன்று இருப்பதையே இந்த பதிவின் மூலம் தான் தெரிந்து கொண்டேன். படங்களும் கண்ணுக்கு விருந்து. பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி அம்மா.
ReplyDeleteMail message to me from one Mrs. VIJI Madam from USA is reproduced below:
ReplyDelete-=-=-=-=-
Dear Rajeswari Madam,
Thank you for posting the article "Vishnupathy punniyakalam" on last Sunday. Two days before that only I had asked about this to Mr.Vaigo Sir. But I didn't expect this much soon you delivered the post. Thank you once again. I am always inspired by each one of your articles and I pray God to give you long and healthy life Madam. Thank you so much and bye for now.
Love Viji
-=-=-=-=-
VGK