Friday, May 23, 2014

ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி ஓம் சக்தி ஸ்ரீ பராசக்தி





ஜெய ஜெய ஜெய சக்தி ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி ஜெய ஜெய 
ஜெயவென பாடி பணிந்தோம்ஜெகமெங்கும் அமைதியை தா. (ஓம் ஸ்ரீ)

திருப்தியும் இன்பமும் வாழ்வில் துலங்க தேவை யெல்லாம் அடைய அம்மா
பக்தி பெருகிட பாடிஉருகிட பணிப்பாய் அன்பில் எமை      (ஓம் ஸ்ரீ)

இரண்டுகள் போக மூன்றுகள் கலக்க ஈஸ்வரி வரம் அருள்வாய்
கரங்குவித்தோமினி காலை விடோமம்மாகருணையுடன் அணைப்பாய்

காசினில் எங்கும் வேற்றுமை போக கருத்தினில் அன்பருள்வாய்
தேஜசுடன் வாழ காட்டி காட்சி தேவி அடைக்கலமே அம்மா (ஓம் ஸ்ரீ)

நமஸ்காரம் இருவினை கரத்தினில் ஞான  
நல்லொளி தீபம் வைத்து அம்மா நமஸ்காரம் செய்து 
ஹாரத்தி எடுத்தோம் ஞாலத்துக்கு அமைதியை தா.

ஓம் கணபதி சிவ ஷண்முக நாதா ஓம் த்ரிகுண தீ தா க்ருஷ்ணா
ஓம் த்ரிகுண தீ தா ஓம் ஸ்ரீ ராம மஹாதேவ சம்போ ஓம் ஜய ஜகத் ஜனனி
 சேலம்–தர்மபுரி மெயின்ரோடு பிரிவில்  பழமைவாய்ந்த பத்ரகாளியம்மன் கோவில்  பிரதான வாசல் வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. 

 கோவிலைச் சுற்றி உயர்ந்த மதில்களும், நான்கு திசைகளிலும் 
நான்கு கோபுரங்களுடன் கூடிய வாசல்களும் உள்ளன.
கோவிலில் வடக்கு நோக்கிய ராஜகோபுரத்தை அடுத்து வசந்தமண்டபத்தில் கொடிமரம், பலிபீடம், ஊஞ்சல், சிம்மவாகனம் ஆகியவை உள்ளன. 

மண்டபத்தின் மேல்பகுதியில் உள்ள விதானத்தில் சிவலிங்கம், 
கோமுகம் போன்றவை காணப்படுகிறது. 
 அதில் எந்த பக்கம் இருந்து பார்த்தாலும் நம்மையே பார்க்கும் வண்ணம் சிங்கவாகனத்துடன் வாளேந்தி நிற்கும் பத்ரகாளியம்மன் உருவம் பஞ்சவர்ணத்தில் ஓவியமாக வரையப்பட்டு இருப்பது கருத்தைக்  கவரும் வகையில் உள்ளது.

மகாமண்டப நுழைவு வாசலின் வலதுபுறம் 2 ஆண் பூதங்களும், இடது புறம் 2 பெண்பூதங்களும், அதன் அருகில் கணபதி இருபுறமும் வீற்றிருக்கிறார். 
 மகாமண்டபத்தில் தூண்களும் அதிலுள்ள சிற்ப வேலைபாடுகளும் சிறப்பாக அமைக்கப்பட்டு இருப்பதை காணமுடிகிறது. 
மகாமண்டபத்தின் சுவர்களில் நர்த்தன விநாயகர், நாகதேவதை, வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான், அஷ்டலட்சுமிகள், தில்லைநடராஜர், மீனாட்சி அம்மன் ஆகிய கருங்கல் சிற்பங்கள் பழங்கால சிற்பக்கலையை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது.

இவ்வாறு தரிசனம் செய்வதால் முப்பெரும் தேவிகளின்ஆசீர்வாதமும், காளியின் ஜெயமங்களயோக சித்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம். 

மகாமண்டபத்தை அடுத்து அர்த்தமண்டபத்தின் 
வலதுபுறம் நாகதேவதையும், சப்தகன்னியரும் அமர்ந்துள்ளனர். 
இடதுபுறம் விநாயகர் உள்ளார்.

அர்த்த மண்டபத்தை அடுத்து கருவறைக்கல் மண்டபம் 
எனப்படும் மூலஸ்தானம் உள்ளது
இந்த மூலஸ்தான கர்ப்ப கிரகத்தில் அகிலபுவன மாதாவாக, 
அஷ்ட புஜங்களுடன், அர்த்த பத்மாசனத்தில் வலது காலை மடக்கி, இடதுகாலை மகிஷாசூரனின் மார்பில் வைத்து அழுத்தி தீயோரை தண்டித்து நல்லோரை காக்கும் நாயகியாக, கொற்றவையாக, வெற்றியைத்தரும் வீரதுர்க்கையாக அன்னை பத்ரகாளியம்மன் அருள்புரிகின்றாள்.
அன்னையின் அஷ்டபுஜங்களில் பிரம்மா, விஷ்ணு, ருத்ரரூபமான சூலாயுதம், கபாலம், உடுக்கை, வாள், கேடயம், தலை, மணிகளை தாங்கிய தண்டையணி பொன்சலங்கை அணிந்து வலதுகால் மேலூன்றி, பொன் சலங்கை அணிந்த இடது காலை அசுரன் மீது ஊன்றி வீராசனத்தில் அமர்ந்து, மூக்கில் மின்னும் மூக்குத்தியும், பவளமாய் ஜொலிக்கும் புன்சிரிப்புடனும், அக்னி மகுடமும், குண்டலமும் அணிந்து தேவியாய், பத்ரகாளியாய் அனைவருக்கும் அருள்புரிகின்றாள்.
அன்னையை தரிசனம் செய்வதால் 21 தலைமுறையில் செய்த பாவங்கள், சோகம், ரோகம் போன்றவை நீங்கும். 

வித்தை, புத்தி சித்திக்கும். அஷ்டமாசித்திகளும் 
அன்னையை பணிந்து வழிபட்டால் கைகூடிவரும்

 பாவதோஷங்கள், ஏவல், பில்லிசூனியம், எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள், ராகு, கேது தோஷத்தால் ஏற்படும் திருமண தடைகள், குழந்தைபேறின்மை ஆகியவைகளுக்கு ராகுகாலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபட்டால் நீங்கும் என்பது  நம்பிக்கை .
 மன நோய் பாதித்தவர்கள் ஒருமண்டலம் இங்குவந்து 
தீர்த்தம், விபூதி உட்கொண்டால் நோய் நீங்குகிறது. 

பேய், பிசாசு பிடித்தவர்கள் வந்து பூதகணங்களின் முன் கூட்டு பிரார்த்தனை செய்து விபூதி அணிந்தால் அவைகள் நீங்கிவிடுகிறது. கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் நீங்க பக்தர்கள் வீபூதி பெற்று செல்கின்றனர்.

மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் ஆலயத்திற்கு வந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர். 

அம்மனை வணங்கி விட்டு வெளியே மகாமண்டபத்தில் அமைந்துள்ள நாகதேவதையம்மன் மற்றும் சப்தகன்னியரை வணங்கி வெளிப்பிரகாரத்தில் பரிவார தெய்வங்களாக சன்னிதியில்  காலபைரவர், சித்திவிநாயகர், நாகபுற்று(நாகலிங்கம்), வீரபுத்திரர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்

பிரகாரத்தில் கருவறையின் வெளிப்புற சுவர்களில் நர்த்தனகணபதி, மகேஸ்வரி, தட்சிணாமூர்த்தி, கவுமாரி, துர்க்கை போன்ற தெய்வங்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. 

பிரகார மண்டபத்தில் வீரமாத்தி அம்மன்கோவில் உள்ளது.

 சிறப்புபெற்ற  கோவிலை பத்ரகாளியம்மன் இறையருள் நற்பணி மன்றம், கோவில் நிர்வாகம், பக்தர்கள் புனரமைத்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 23–ந்தேதி லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
The kumbhabishekam of Arulmigu Badrakaliamman Temple at Mecheri in Salem was held 
கோவிலில் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடைதிறந்து இருக்கும். காலை 5 மணிக்கும், மாலை 5 மணிக்கும் பூசாரிகள் காலை சந்தி, மாலை சந்தி இருகாலமும் அம்மன் கருவறை நடைசாத்தி கேரள தாந்திரீக முறைப்படி நைவேத்திய மகாபூஜைகள் செய்கின்றனர்
பின்னர் நடை திறந்து மகாதீப ஆராதனை, விபூதி பிரசாதம் வழங்குகின்றனர். அப்போது வழங்கப்படும் விபூதி மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. 

காலை 5.30மணி, 10.30 மணி, மதியம், 1.30 மணி ஆகிய நேரங்களில் ராகு, கேது பூஜைகளும், அம்மனுக்கு அபிஷேகமும் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகுகாலபூஜை அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரையும், செவ்வாய்க்கிழமைகளில் அதிகாலை 3 மணி முதல் 4.30 மணி வரையும் நடைபெறுகிறது. 

இந்த நேரத்தில் காளசர்ப்பதோஷம், ராகு, கேது, திசாபுத்தி, அந்தரம் போன்ற தோஷங்கள் இருக்கும் நபர்கள் பத்ரகாளியம்மனை வணங்கி கருவறை அருகில் உள்ள நாகக்கன்னிக்கு புனுகு அபிஷேகம் செய்து, செவ்வரளிமாலை, 24 எலுமிச்சைபழம் மாலை அணிவித்தும், விளக்கு ஏற்றியும், மஞ்சள், குங்குமம், கலந்து வெள்ளியால் செய்த சிறிய நாகர்சிலை வைத்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கும்.


மேச்சேரி அருகே கொப்பம்புதூர் செல்லும் சாலையில் பத்ரகாளியம்மன் தாய்வீடான பொங்கப்பாலி நான்கு புறமும் பாறைகளால் சூழப்பட்டு  நடுவில் இதுவரை எப்போதும் வற்றாத நீர் புனிததீர்த்தமாக காணப்படுகிறது. 

மார்கழி மாதம் முழுவதும் தனுர் மாதபூஜா நடைபெறும்.போது, தினசரி பொங்கப்பாலியில் இருந்து செண்டை மேளத்துடன் அம்மையை அழைத்து தீர்த்தம் எடுத்து வந்து பத்ரகாளியம்மனுக்கு திருமஞ்சன அபிஷேகம், நைவேத்தியம், பூஜை பிரசாதம் வழங்குதல் போன்றவை நடைபெறுகிறது.


மாசி மாதத்தில் பிரம்மோற்சவம் 10 நாட்கள் கொண்டாடப்படும். 
மக நட்சத்திரத்திற்கு முன்னால் கொடியேற்றத்துடன் விழா தொடங்கப்பட்டு தேரோட்டம் நடைபெறும். 

பெரியதேர், சின்னதேர், கூட்டத்தாள்தேர் என தேர்கள் வரிசையாக புறப்பட்டு நான்கு ரதவீதிகளிலும் வலம்வந்து நிலை சேரும். தற்போது இந்த தேர்கள் அனைத்தும் முழுவதும் புதியதாக செய்யப்பட்டு வருகிறது.
சித்திரை மாதம் வருடப்பிறப்பு, விசு, பவுர்ணமி, 
வைகாசிவிசாகம், வசந்தபஞ்சமி, 
ஆனியில் குருபூர்ணிமா போன்றவையும், 
ஆடியில் தலைஆடி, 18–ம் பெருக்கு ஆடிப்புரம், ஆடிவெள்ளி, 5 வாரம், வரலட்சுமி நோன்பு போன்றவையும், 
ஆவணியில் அவிட்டம்,  விநாயகர் சது£ர்த்தி, 
புரட்டாசியில் நவராத்திரி 10 நாட்களும் 
சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை தோறும் அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படும். 

ஐப்பசி தீபாவளிஅமாவாசை அன்று பிரத்தியங்கீராதேவி அலங்காரமும், குபேரர்பூஜையும் நடைபெறும். 

அமாவாசையில் நடைபெறும் சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அலங்காரத்தில் கலந்து கொண்டு தரிசனம் செய்தால் நினைத்தது நடப்பதாக நம்பிக்கை...

கோவிலில் பூவாக்கு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 
பக்தர்கள் புதிய தொழில்கள் தொடங்குவதற்கும், திருமணம், நிலம் வாங்குதல் மற்றும் பல்வேறு விசேஷ காரியங்களுக்கும் பூவாக்கு கேட்டு அதன்படி செயல்படுகின்றனர்.
அணையாத நந்தாதீபம் பலநூறு ஆண்டு காலமாக இன்றுவரை கருவறையில் பத்ரகாளியம்மன் அருகில் ஒளிவிட்டு எரிந்து கொண்டு இருக்கிறது. 

இது அணைந்தால் கங்கைக்கரையில் காராம் பசுவை கொன்ற தோஷம் பூசாரிகளுக்கு பிடிக்கும் என்ற செய்தி பொறித்த கல்வெட்டு ஒன்று இந்த ஆலயத்தில் உள்ளது

இதனால் பூஜையில் ஈடுபடும் பூசாரிகள் இரவு 8 மணிக்கு கோவிலை பூட்டி விட்டு உள்ளேயே தங்கி நந்தா தீபத்திற்கு எண்ணெய் ஊற்றி அணையாமல் பார்த்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் முக்கனிகளில் சுவையான மாம்பழத்திற்கு பெயர் பெற்ற தித்திக்கும் மாவட்டம் சேலத்தில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், புண்ணிய காவிரி நீரை தேக்கி வைக்கும் மேட்டூர் அணையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் மேச்சேரி உள்ளது.
  Bathrakaliamman Koil,Mecheri, Tamil Nadu, India

19 comments:

  1. மேச்சேரி அருள்மிகு பத்ரகாளி அம்மன் திருக்கோயில் விவரம் அறிந்தேன் நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  3. அருமையான படங்களுடன் சிறப்பான கோயிலின் தகவலுக்கு நன்றி அம்மா...

    ReplyDelete
  4. மேலும் ஒரு புதிய கோவிலை அருமையான படங்கள் மற்றும் விளக்கங்களுடன் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி அம்மா.

    ReplyDelete
  5. சேலம் பத்ரகாளியம்மன் கோயில் பற்றி கேள்விப் பட்டு இருக்கிறேன். நான் பலமுறை சேலம் சென்றும் அந்த கோயில் சென்றதில்லை. காரணம் ஒருநாள் வேலையாகச் செல்லும்போது கோயில் இருக்கும் தூரத்தை எண்ணி மலைத்ததுதான். உங்கள் படங்கள் மூலம் காளி தரிசனம் கிடைத்தது.. மேலும் அடுத்த த்டவை சேலம் செல்லும் போது பத்ரகாளியம்மன் கோயிலைக் காண அம்மன் அருள வேண்டும். பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  6. மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலின் சிறப்புக்கள்,தகவல்கள் அழகான படங்களுடன் பகிர்வு அருமை. நன்றி.

    ReplyDelete
  7. அழகிய படங்கள். அருமையான பதிவு.

    ReplyDelete
  8. //கிட்டாதாயின் வெட்டென மற....//

    என்று இன்று எங்கோ படித்தேன்.

    அதனால் இங்கு வருகை தரவேண்டும்
    என்பதையே சுத்தமாக மறந்து போனேன்.

    >>>>>

    ReplyDelete
  9. அதில் ....

    //எட்டாக்கனி
    கிட்டாதாயின் வெட்டென மற....//

    என்று இருந்தது.

    எட்டாக்கனியாயினும் இதயக்கனியல்லவா !

    எப்படி என்னால் மறக்க முடியும்?

    மறக்க மனம் கூடுதில்லையே ! ;)

    அதனால் எப்படியோ ஒருவழியாகத்
    ‘தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்’
    என்பது போல, ஒருவித பாசத்தால்
    ஓடோடி வந்து விட்டேன்.

    >>>>>

    ReplyDelete
  10. கடைசிபடம் கனஜோர்.

    வைத்தகண் வாங்காமல் நீண்ட நேரம் பார்த்து ரஸித்தேன்.

    >>>>>

    ReplyDelete
  11. காணொளியைக்கண்டு ரஸிக்கவே தினமும் கால் மணி நேரம் ஒதுக்க வேண்டியுள்ளது. அதுவும் லேஸில் திறக்காமல் Error காட்டி என்னைப் பாடாய்ப் படுத்தி வருகிறது.

    >>>>>

    ReplyDelete
  12. இங்கு திருச்சி திருவெறும்பூர் அருகே ஒரு கிலோமீட்டர் வடக்கே உள்ளடங்கி இதேபோல பிரும்மாண்டமான உயரத்தில் ஓர் ஆதிபராசக்தி சிலையுடன் கோயில் எழுப்பியுள்ளார்கள். . 20 ஆண்டுகளுக்கு முன்பு தான் கட்டியுள்ளார்கள்.

    நான் ஒரே ஒருமுறை [சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு] சென்று பார்த்து பிரமித்துப்போனேன். ஏனோ அந்த ஞாபகம் வந்தது.

    [அந்த இடத்தின் பெயர் ‘கூத்தப்பார் அல்லது கூத்தைப்பார்’ என நினைவு] இந்தக் ‘கூத்தப்பார்’ ஜல்லிக்கட்டு காளை வீர விளையாட்டுகளுக்கும் பெயர் பெற்ற கிராமமாகும்.

    >>>>>

    ReplyDelete
  13. ஓம் ஸ்ரீ ஜய ஜய ஜய சக்தி ஓம் சக்தி ஸ்ரீ பராசக்திக்கு
    அடியேனின் வந்தனங்கள் / நமஸ்காரங்கள்

    >>>>>

    ReplyDelete
  14. சேலத்து மாம்பழமாக தித்திக்கும் பதிவுக்குப் பாராட்டுக்கள்.

    சேலம் மாவட்டத்தில் எந்த ஊரில் பிறந்தவர்களானாலும், அவர்கள் ஆட்டயாம்பட்டியில் இருந்தாலும் ஆஸ்திரேலியாவில் இருந்தாலும்,
    அவர்களும் தித்திப்பானவர்களாகவே உள்ளனர் என்பதை நான் என் ஆராய்ச்சி மூலம் கண்டு பிடித்துள்ளேன். ;)

    >>>>>

    ReplyDelete
  15. முதல் படமும் கடைசி படமும் சும்மா ஜொலிக்கின்றன.

    நடுவில் ஒருசில படங்கள் திறக்கபடவே இல்லை.

    அழகான விளக்கங்களுடன் கூடிய அற்புதமான பதிவு.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    oooo 1283 oooo

    ReplyDelete
  16. மேச்சேரி பதற காளியம்மன் கோவில் செய்திகள் படங்களுடன் அருமை.

    ReplyDelete
  17. இந்த வெள்ளிக்கிழமை மேச்சேரி பத்ரகாளியம்மன் தரிசனம்.
    அழகான படங்களுடன் இனிய பதிவு.. மகிழ்ச்சி..
    வாழ்க நலம்..

    ReplyDelete
  18. சேலம் பத்ரகாளியம்மன் கோவில் பற்றி படித்து மகிழ்ந்தோம். நன்றி.

    ReplyDelete
  19. அழகான தரிசனங்களுடன் பத்ரகாளியம்மன் விபரங்களுக்கு நன்றி !
    வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete