ஸ்ரீ மாருதி அனுமன் திரிசதீ என்னும் அனுமான் கவசம்-
(முப்பது துதிகள் கொண்டது அனுமன் கவசம்).
மழகளிறு அனைய வீரம் மாண்புடன் பெற்றோ னாக
அழகியே அளிப்பாய் நீயே அரன்துணை என்றும் காப்பான்;
காப்பதில் வல்லோ னான கடிதமிழ் சிவனின் ஆவல்
பூப்பதில் நன்மை பெற்றாய் புண்ணியை நல்கு வாயே.
என்றனன் அதனால் தாயும் ஈன்றனள் அழக னாக
வன்புயல் தீர்க்கும் கோவும் வளமுடன் நலம் பெற்றானே
அன்பினால் ஒன்றித் தெய்வ ஆசையால் அனுமன் வந்தான்
வன்மைநல் வலிமை யாவும் வாய்ப்புடன் அழகும் பெற்றான்.
பெற்றனன் பெரிய பேறு பேரறி வாள னாக
உற்றனன் சிவனின் மைந்தன் உயர்ந்தனன் மறைக்கும் வேலாய்
கற்றனன் குருவே இன்றி கண்ணுதற் கருணை யாலே
அற்றனன் பிறவிப் பேறு ஆதலின் என்றும் வாழ்வான்
வானவர் மகிழத் தன்றன் வல்லமை காட்டும் ஈசன்
ஈனமில் உருவ மான ஏந்தலாம் ராமன் தன்றன்
ஊனமில் உடலம் மீதில் உள்நலம் கொண்டான் ஆனால்
வானிலே பருதி கண்டான் வளர்ந்ததைப் பற்றிக் கொண்டான்
ஸ்ரீ ராம பிரானின் தொண்டனான அனுமன் , இப் பூவுலகிற்கு இராம நாமத்தின் மகிமையை எடுத்துக்காட்டியவரும், சொன்னவருமாவார்.
இராம நாமத்தால் எதையும் வெற்றிகொள்ள முடியும் என்ற உதாரணம் காட்ட நீலக்கடலை ராம நாம உச்சரிப்புடன் தாண்டி இலங்கையில் சிறைப்பட்டுக்கிடந்த சீதையன்னையைக் கண்டு, வெற்றியோடு திரும்பி ராமரின் ஆனந்தத்தையும், ஆலிங்கனத்தையும் பெற்றார்.
ஸ்ரீ ராமனுக்கு அனுமன் அணுக்கத் தொண்டன்.
இப்பிறவியில் இருமாதரை சிந்தையாலும் தீண்டாத - ஸ்ரீ ராமனையன்றி பிறிதொன்றை சிந்தையாலும் தொடாத தூய பக்தன்.
எங்கெங்கெல்லாம் ராம நாம சங்கீர்த்தனம் நடைபெறுகின்றதோ அங்கெல்லாம் ஆனந்தக்கண்ணீர் சொரிந்தபடி இரு கைகூப்பி நிற்பவன் அனுமன்.
பூத பிசாசங்கள் முதலிய தீய சக்திகள் அனுமனின் பெயர் கேட்ட மாத்திரத்தித்திலேயே நடு நடுங்கி ஒழிந்து போகும்.
கோரிய வரங்களை தடையின்றி தந்தருளும் அனுமன் எல்லா மதத்தவர்களாலும் வழிபடப்படுகின்ற தெய்வம்.
அனுமனை வழிபடுவதால் எல்லாப் பிணிகளும் நீங்கி
வாழ்வில் வெற்றி சேருமென்பதில் ஜயமில்லை.
“புத்தி, பலம், கீர்த்தி, தைரியம், பயமற்ற மனோ உறுதி, உடற்பிணிகள் இல்லாமை, இவற்றுடன் உயர்ந்த நாவன்மையும் அனுமனை வழிபடுவோருக்கு அமையும்.
அப்படி ராம நாமத்தை உச்சரிப்பவர்க்கு, ராமனை
வழிபடுவர்களுக்கு தானே வந்து அருள் புரிகின்றவர் அனுமன்..
ஸ்ரீ அதிசய ஆஞ்சநேயர் சிவலிங்கத்தை கையில் ஏந்தியவாறு வித்தியாசமாக காட்சி தரும்.இந்த அதிசய ஆஞ்சநேயர் தினமும் பக்தர்களின் வாழ்க்கையில் பல அற்புதங்களை நிகழ்த்துகிறார்.
ஆறடி உயரத்தில் கூப்பிய கரங்களிடையே சிவலிங்கத்தை ஏந்தியவாறு நின்ற திருவடிவினராக அனுமன் அருள்பாலிக்கும் தலம், கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கூகலூர்.
இவர் அதிசய ஆஞ்சநேயர் என்றழைக்கப்படுகிறார்.
உடல்நிலை சரியில்லாதவர்கள் மகப்பேறு இல்லாதவர்கள் ஏதாவது ஒரு சனிக்கிழமை இங்கே வந்து வடைமாலை சாத்தி இவரை வழிபட்டால் நற்பேறு கிட்டும் என்பது நம்பிக்கை.
மகப்பேறு இல்லாதவர்களும், நோயால் பாதிக்கப்பட்டவர்களும்
இந்த அனுமனை வழிபட்டு நற்பலன்கள் பெறுகிறார்கள்.
வேண்டுதல் நிறைவேறியதும் ஆஞ்சநேய பகவானுக்கு நன்றி செலுத்தி, அர்ச்சனை அலங்காரம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
ஏழை எளியோருக்கு அன்னதானமும், வஸ்திர தானமும் செய்து ஆஞ்சநேயரின் அருளைப் பெறுகின்றனர்.
பஞ்சவடி ஆஞ்சநேயர்
வணக்கம்
ReplyDeleteஅம்மா
ஆஞ்சநேயர் பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்... ஒவ்வொரு படங்களும் மிக அழகு வாழ்த்துக்கள் அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அற்புதம் . கண்ணை விட்டு அகலாத காட்சிகள்
ReplyDeleteஆஞ்சநேய சுக தரிசனம். ஸ்ரீராம ஜெயம். ஸ்ரீராம ஜெயம்.
ReplyDeleteஅதிசய ஆஞ்சநேயர் அறிந்தேன்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
அற்புதமான ஒரு பகிர்வு ! ஓம் ராம்! ஓம் ராம்!
ReplyDeleteஅதிசய ஆஞ்சநேயர் பற்றிய தகவல்களுக்கும் அழகிய படங்களுக்கும் நன்றி.
ReplyDeleteஆஞ்சநேயரைப் பற்றிய அரிய செய்திகளை புகைப்படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteஆஞ்சநேயரின் மகிமைகளை அறியத் தந்தமைக்கு நன்றி அவர் தரிசனமும் கண்டு உள்ளம் பூரித்தேன். அழகிய படங்களும். வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteஇங்கு கர்நாடகத்தில் மாருதி உபாசகர்களதிகமென்று எண்ணுகிறேன் அனுமனுக்கான கோவில்கள் ஏராளம். வழக்கம் போல்படங்களுடன் பதிவும் அருமை
ReplyDeleteஹனுமனை வழிபடுவோருக்கு பொதுவாக வெற்றிகள் கிடைக்கும் என்பது நிச்சயமாக எல்லோராலும் உணரப்படும் உண்மை.
ReplyDeleteஹனுமனைப்பற்றி அடிக்கடி பதிவுகள் போடும் தங்களுக்கு வெற்றி மேல் வெற்றிகள் கிடைப்பதில் ஆச்சர்யமே ஏதும் இல்லை. வெற்றி வீராங்கனை வாழ்க வாழ்கவே !
>>>>>
சனிக்கிழமைக்கு ஏற்ற அருமையான அழகான அற்புதமான பதிவினைத்தந்து அசத்தியுள்ளீர்கள். மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
ReplyDelete>>>>>
கடைசியில் காட்டப்பட்டுள்ள படம் [குலை குலையாக வாழை + தேங்காய் + பனை] என்னை மிகவும் மனம் கவர்ந்து மகிழ்ச்சியில் சொக்க வைத்துள்ளது.
ReplyDeleteதாங்கள் தினமும் காட்டிடும் படங்களிலெல்லாம் இப்படிச் சொக்குப்பொடி தூவி என்னைச் செயல் இழக்க வைத்து ஹிம்சிப்பது நியாயமா ? ;)
>>>>>
காணொளி மூலம் பஞ்சவடிக்கே என்னைக் கூட்டிச்சென்று தரிஸிக்கச்செய்ததற்கு என் நன்றிகள்.
ReplyDeleteகண்களுக்கு விருந்தாக அமைந்தது.
>>>>>
ஆஞ்சநேய காயத்ரி கேட்க காதுகளுக்கு மிகவும் இனிமையாக இருந்தது.
ReplyDelete>>>>>
அனுமனின் அன்னையை தரிஸித்தது அதிசயமாக இருந்தது.
ReplyDeleteஅருமையான கற்பனையில் யாரோ வடித்த சித்திரம் / சிற்பம் சிறப்பாக உள்ளது.
>>>>>
கோபிச்செட்டிப்பாளயம் அருகே உள்ள கூகலூரில், ஸ்ரீ அதிசய ஆஞ்சநேயர் சிவலிங்கத்தையே கையில் ஏந்தி வித்யாசமாகக் காட்சி தருகிறாரா !!!!!
ReplyDeleteசூப்பர்.
எதுவும் நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.
காட்டினால் கற்கண்டாக இனிக்கும். ;)))))
>>>>>
ஹனுமன் வால் போன்ற மிக நீண்ட இன்றையப் பதிவுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றியோ நன்றிகள்.
ReplyDeleteஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம் !
;) 1284 ;)
oo oo oo oo
ஆஞ்சநேயரின் அழகான படங்கள். கூகலூர் அதிசய ஆஞ்சநேயரின் தகவல்கள் சிறப்பு .நன்றி.
ReplyDeleteராம் ராம்....
ReplyDeleteராம் ராம்....
ராம் ராம்....
அதிசிய ஆஞ்சிநேயர் பற்றிய தகவல்கள் புதுசு. அனைத்து படங்களும் அருமை.
ReplyDeleteபகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி அம்மா.
படங்கள் வெகு அழகு! ஹனுமனின் சிறப்புக்களை சிறப்பாக எடுத்துரைத்தது பதிவு! நன்றிகள்!
ReplyDeleteஸ்ரீராம தரிசனத்தோடு கட்டுரையை ஆரம்பித்திருப்பது சிறப்பு.
ReplyDelete'அஞ்சிலே ஒன்று பெற்றான்' பாடலைத் தேடிய பொழுது, நாமக்கல் ஆஞ்சனேயர் தரிசனம் கிட்டியது..
ஆத்மார்த்தமான பதிவு. நன்றி.