Sunday, May 25, 2014

தவழும் ரதமாய் தங்கமீன்கள்..















பல நாடுகளில் வீடுகளில் அலங்கார வண்ண மீன்களை தொட்டியில் வளர்ப்பது ஒரு பொழுது போக்காகவும்,  சோதிட , வாஸ்து சாஸ்திர நம்பிக்கைகளின் அடிப்படையிலும் நடைபெற்று வருகிறது

மீன்கள் மிகவும் சுறுசுறுப்புடன் காணப்படுவதோடு, 
காண்பவரின் மனதை புத்துணர்ச்சியாக்கும். 

மனதை ஒருமுகப்படுத்தி கவலைகளை மறக்கவைக்கும்.. 

தனிமையில் இருக்க விரும்பும் மனம் எப்போதும் மிகவும்  
அழுத்ததுடன் இருக்கும்..

பிரச்சனைகளிலிருந்து விடுபட, அலுவலகங்களில் தங்களைச் சுற்றி, தங்கள் மனதிற்கு விரும்பியவற்றை வைத்து அலங்கரித்து வந்தால்,  பார்க்கும் போதெல்லாம், மனம்  ரிலாக்ஸ் ஆகும்.

வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளின் பட்டியலில், 
தற்போது மீன்களும் சேர்ந்துள்ளன..

பல வண்ணங்களுடன் ரம்யமாக காட்சிப்படும் மீன்கள் 
அன்பின் வெளிப்பாடாகவும் திகழ்கின்றன

வண்ண தொட்டிகளில் நீந்தும் அழகு மீன்களை பார்த்தாலே மனதில் உற்சாகமும் அமைதியும் வந்துவிடும். . -கலைநயமிக்க தொட்டிகள்  பெரிய ஹோட்டல், மருத்துவமனைகளில் வைத்துள்ளனர்







 கோல்ட் பிஷ் வகை மீன் விளையாட்டுக் கார் ஒன்றினை ஓட்டிச்செல்லுவது நம்பமுடியாத அதிசயமாக கருத்தைக்கவரும் வகையில்  வடிவமைக்கப்பட்டிருக்கிறது..

வளர்ப்பு மீன்களுக்காக அமைக்கப்படும் மீன்தொட்டியுடன் இணைந்தவாறு அமைக்கப்பட்டுள்ள விளையாட்டுக் காரை தங்கமீன் ஓட்டிச் செல்கிறது. 

 நெதர்லாந்தைச் சேர்ந்த ஸ்டூடியோ டிப் நிறுவனத்தில் அமைப்பாளர்கள் இந்த காரை வடிமைத்துள்ளனர்.

இந்த நிறுவனத்தின் இணை நிறுவுனர் , நடமாடும் மீன் தொட்டியில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மீனின் நகர்வு அமையும் திசையினை பதிவு செய்கிறது. இதன் மூலம் மோட்டருக்கு சக்தி வழங்கப்பட்டு கார் மீனின் திசையில் நகர்கிறது’ என  மீன்தொட்டியில் இருந்தவாறு மீன் ஒன்று காரை தனது கட்டுப்பாட்டில் ஓட்டிச் செல்வதை விளக்கியுள்ளார்.

நகரும்  கார் மீன் தொட்டியை  வடிவமைத்து விற்பனை செய்வதற்காக நிதிதிரட்டும் முற்சியிலும் இறங்கியுள்ளதாம்...



மீன் வளர்ப்பிற்குத் தங்க மீன் மிகவும் ஏற்றது..

அரவணா:வாஸ்து சாஸ்திர மீன் வகை அதிர்ஷட மீன் 
என்றும் அழைப்பர்..எஜமான் மேல் பாசம் வைத்திருக்கும்.. 
 ..  
 .
மீனே மீனே மீனம்மா...



வேகம் வேகம் போகும்  போகும் ..மேஜிக் ஜர்னி...

கண்களைக் கவர்ந்து கருத்தை ஈர்க்கும் வண்ண வண்ண மீன்கள் நடனம். பார்க்க சுட்டுங்கள் பார்க்கலாம் ..

சிரிக்கும் ...அழகு சிரிக்கும்....
தங்க மீன்களும் பறக்குமோ...!
பறக்கும் ..பந்து பறக்கும் .

17 comments:

  1. வண்ண வண்ண மீன்களைக் கண்டு மனம் குழந்தையானது.
    அதிலும் - தங்க மீன் கார் ஓட்டும் காட்சி அழகு..
    காணொளிகள் அனைத்தும் அருமை..

    ReplyDelete
  2. அனைத்தும் அருமை... பிரமித்துப் போனேன் அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. பிரமிப்பூட்டும் மீன்கள்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  4. வண்ண வண்ண மீன்கள் - மிக அழகு...

    ReplyDelete
  5. மீன் தொட்டிகள் வைத்திருப்பது, மனதோடு சம்பந்தப்பட்ட ஒரு விஷயமா. ஆச்சிரியமாக இருக்கிறது.

    ReplyDelete
  6. ’தவழும் ரதமாய்த் தங்க மீன்கள்’

    கொங்கு நாட்டுக் கோவைத்
    தங்கம் கொடுத்துள்ள தலைப்பும் பதிவும்
    தங்கமே தங்கம் தான் !

    >>>>>

    ReplyDelete
  7. அனைத்துப்படங்களும்
    காணொளிகளும்
    அழகோ அழகு !

    >>>>>

    ReplyDelete
  8. தாங்கள் சுட்டச்சொன்னதைச் சுட்டினேன். நேற்றே G+ இல் தாங்கள் பகிர்ந்து கொண்டுள்ளதை பார்த்து மகிழ்ந்தேன். இன்று மீண்டும் பார்த்து மிகவும் ரஸித்தேன். ;)

    >>>>>

    ReplyDelete
  9. மீனே மீனே மீனம்மா ........

    பறக்கும் ..... பந்து பறக்கும் ....

    சிரிக்கும் .... அழகு சிரிக்கும் .....

    என்ற தங்களின் புத்திசாலித்தனமான பாடல் வரிகள் ...

    ஆங்காங்கே என் இதழோரம் புன்னகையை வரவழைத்தன.

    >>>>>

    ReplyDelete
  10. மச்சாவதாரம் எடுத்த மஹாவிஷ்ணுவையும், அவர் தங்கையான
    மீனைப்போன்ற அழகிய கண்களுடைய மீனாக்ஷியையும்
    தொட்டுக்கொள்ள ஊறுகாய் போல இந்தப்பதிவினில்கொண்டுவராமல்
    இருந்தும்கூட........

    கடுகும் தாளித்து, கருவேப்பிலையும் கலந்த புளிக்காத
    நல்ல டேஸ்டான தயிர்சாதமாக அமைந்துள்ளது, இந்த இன்றையப்பதிவு.

    >>>>>

    ReplyDelete
  11. மும்பை சென்றபோது ’செளப்பாத்தி பீச்’ அருகே ஒரு அக்கோரியத்தில் இவற்றையெல்லாம் பார்த்து மகிழ்ந்த நினைவுகள் வந்தன.

    >>>>>

    ReplyDelete
  12. ’மீனே .... மீனே .... மீனம்மா’

    என்ற சிகப்பு நிற வரிகளுக்கு மேல் உள்ள படம் தான் என்னை மிகவும் கவர்ந்தது. ஏரோப்ளேன் பறப்பது போல சூப்பரோ சூப்பர் அது. அவைகள் உயரத்தில் ஆகாயத்தில் ப்ளேன் போல பறப்பது போலவும், குழந்தைகளும் மக்களும் கீழிருந்து பார்ப்பதுபோலவும் காட்டப்பட்டுள்ளது அழகோ அழகு.

    முடிந்தால் அதை மட்டும் எனக்கு அனுப்பி வையுங்கோ, ப்ளீஸ்.

    >>>>>

    ReplyDelete
  13. மீனைப்பற்றிய பதிவு என்பதால் நான் வேறென்ன சொல்ல முடியும்?

    அதனால், இத்துடன் மிகச்சுருக்கமாக ;) முடித்துக் கொள்கிறேன்.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    oooo ;) 1285 ;) oooo

    ReplyDelete
  14. அழகிய பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  15. அழகிய பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  16. மீன் பதிவு மனதைக் கொள்ளை கொண்டது. அழகழகான மீன்கள்.

    ReplyDelete
  17. திருச்சியில் குடியிருப்பில் இருந்தபோது இரண்டு மீன் தொட்டிகள் வைத்திருந்தோம். உடல்சோர்வுடனும் மனச் சோர்வுடனும் இருக்கும்போது இந்த மீன்கள் நீந்திச் செல்லும் அழகில் மனம் பறிகொடுத்தடுண்டு, இவற்றில் கப்பீஸ், மோலி கள்முட்டை இடுவதில்லை. நேராகக் குஞ்சுகள்தான். தங்க மீன்கள் கண்ணாடித் தொட்டியில் ப்ரீட் ஆவதில்லை. மிகவும் அழகான படங்களுடன் பதிவு பிரமாதம் ( ஒரு மாற்றத்துக்கு ஆன்மீகப் பதிவாக இல்லாமல் )

    ReplyDelete