இந்த உலகத்தில் எதையும் எதிர்கொள்ள வேண்டும் என்ற துணிவு இல்லாத மனிதர்கள் , நிச்சயமாகச் சாதித்ததாக வரலாறு இல்லை.
என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே என்று, தான் கொண்ட குறிகோளுக்காகத் துணிவுடன் போராடும் மனம் படைத்த மனிதர்கள் தான் சாதனையாளர்கள் பட்டியலில் அமர்ந்து இருக்கிறார்கள்.
தெரிகிறதோ இல்லையோ எதையும் எதிர்கொள்வோம் என்ற நேர்மறை எண்ணத்துடன் இருக்கும் பல பேர், பணி வாய்ப்பு பெற்று நல்ல பதவியில் சிறப்பாக செயல்படுகிறார்கள்...
கதவுகளை தட்டுங்கள். கண்டிப்பாக கதவுகள் திறக்கும்.
தட்டுங்கள் திறக்கப்படும் .. கேளுங்கள் தரப்படும்.....
எது வேண்டும் என்று முதலில் வாய் திறந்து கேளுங்கள். அது கண்டிப்பாக கிடைக்கும். இது தான் இயற்கையின் நியதி.
புதிதான இடத்திற்குப் பயணம் போகிறிர்களா? பயப்படாமல் செல்லுங்கள். அங்கு போய் உங்கள் திறமைகளை, மற்றவர்களைப் பார்த்து வளர்த்துக் கொள்ள முடியும்.
மொழி பிரச்னை ஒரு கவலையா? ஒரு மனிதனால் ஒரு மாதத்தில் பிற மொழிகளை கற்றுக் கொள்ள இயலும்.
இந்த உலகத்தின் கதவுகள் சாத்தப்பட்டிருக்கலாம். ஆனால் அடைக்கபடுவதில்லைவேண்டும் வேண்டும் என்கின்ற ஆசையை மட்டும் விட்டு விடாதிர்கள்.
அதுதான் உற்சாகப்படுத்தும் மந்திரத் தீ.
அது மனதில் கொழுந்து விட்டு எரிந்தால் எந்த சூழ்நிலையும் நமக்கு சாதகமாக மாறிவிடும்.
பயம், எதிர்மறை எண்ணம் யாவும் தூள் தூளாகும்.
சாதனைக்குத் துணிந்து விட்டால் எந்த ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும்
வானமே எல்லை என்பது நமது முயற்சிகளை ஊக்குவிக்க சொல்லிவரும் மந்திரச்சொல் ..
நமது முயற்சிகள் வழியாக நமது கனவுகள் மெய்ப்பட, மெய்ப்பட, நாம் கனவு காண்பதை நிறுத்தாமல் எதிர்பார்ப்புகளை விரிவாக்கி மேலும் மேலும் முயற்சிகள் செய்ய வேண்டும் என்பதே இதன் பொருள்.
சிறந்த சிந்தனைகள். அருமையான படங்கள்.
ReplyDeleteபடங்களும்,செய்திகளும் மிக அருமை...
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)
எத்தனை எத்தனை நல்ல எண்ணங்களை மனதில் தைத்துக் கொள்ள வேண்டிய கருத்துக்கள்... நன்றி அம்மா...
ReplyDeleteஉங்களின் சொற்கள் எத்தனை புத்துணர்வைத் தருகிறதோ, அந்தளவு உங்களின் படங்களும் புத்துணர்வு தருகிறது.
ReplyDelete
ReplyDeleteவித்தியாசமான ( உங்களிடமிருந்து )பதிவு. உற்சாகமூட்டும் பதிவு. வழக்கம்போல் அருமையான படங்களுடன் முன்னோக்கிப் பயணிக்க வைக்கும் பதிவு. வாழ்த்துக்கள்.
சிறப்பானதொரு பகிர்வு! படங்களும் நல்ல தெரிவு! சிறப்புமிகு பதிவிற்கு நன்றி!
ReplyDelete//எது வேண்டும் என்று முதலில் வாய் திறந்து கேளுங்கள்.//
ReplyDeleteஅது தான் ஆரம்பக் கோளாறே.
இது வேண்டும் என்று குறிப்பிட்டுச் சொல்லத் தெரியாமல், எல்லாமும் வேண்டி குழம்பும் கோணல் மனம்!
அந்த EXIT 1-A - அறிவிப்புப் பலகை கவனத்தைக் கவர்ந்தது. ஆனால், பத்தே மைல்களில் 'வெற்றி' அடைந்துக் கடந்து அதற்கப்புறம் 15 மைல்கள் தாண்டித் தான் 'குறிக்கோள்' அடைதல் தான் குழப்பத்தை ஏற்படுத்தியது.
குறிக்கோளுக்கு அப்புறம் வெற்றி வருகிற மாதிரி வேறொரு பாதை தான் தெரிவு செய்ய வேண்டும் போல் தெரிகிறது.
அருமையான வாசகங்கள்! சிறப்பான பதிவு!
ReplyDeleteMade my energy battery recharged ...thanks ! Sorry .... Sum probs with google transliterate in my PC ...
ReplyDeleteMOTIVATION & SELF MOTIVATION பற்றி அழகான பொருத்தமான படங்களுடன் சொல்லியுள்ளது அத்தனையும் அருமையோ அருமை.
ReplyDelete’வானமே எல்லை’ நல்லதொரு தலைப்பு.
பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
மனதில் உற்சாகத்தையும், பாஸிட்டிவ் சிந்தனைகளையும் விதைக்கிற அருமையான பகிர்வு! மிக்க நன்றி!
ReplyDelete