Sunday, March 10, 2013

செல்வவளம் தரும் சிவராத்திரி









த்ரிகுணம் த்குணாகாரம் த்ரி நேத்ரஞ்ச த்ரயாயுஷ 
த்ரிஜன்ம பாப சம்ஹாரம் ஏகபில்வம் சிவார்ப்பணம்

 ஒரு வில்வத்தை அர்ப்பணம் செய்தாலே மூன்று ஜென்ம பாவங்களை 
அழிக்க வல்ல. மூன்று தளங்களைக் கொண்ட வில்வத்தைக் கொண்டு முக்கண்ணனான ஸ்ரீ பரமேஸ்வரனுக்கு அர்ச்சனை செய்தல் வேண்டும். 

மகாசிவராத்திரியன்று சிவ லிங்கத்தை ஒரு வில்வ இலையால் பூசித்தால், கோடிக்கணக்கான மலர்களால் பூசித்ததற்குச் சமம்

சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ஹரிகேசா, விருபாக்ஷா, சாம்பு, சூலினா, உக்ரா,பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். 

கோயில்களில் பிரதட்சிணமாக வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய  பல புன்ணிய விரதங்களின் பலனை  ஒரு சிவராத்திரி விரதம் அளிக்கும் ...

அம்பு படுக்கையில் கிடந்த பீஷ்மர், சிவராத்திரி விரத மகிமையை பாண்டவர்களுக்கு சொன்னார். 

மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது
அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். 

ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின்
படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.

பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி பூஜை  ,அர்ச்சனை செய்தாள். 

தான் பூசித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் `சிவராத்திரி‘
என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள். 
சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் - மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை; சிவனைப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க அருள் புரியுமாறு  அன்னை வேண்டுதலின் படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.

வேட்டையாடச் சென்ற வேடன் ஒருவன் சிவராத்திரி. வில்வ மரத்தடியில் இருந்த  சிவலிங்கம் மீது  உறக்கம் வராமல் இருக்க பறித்துப் போட்ட வில்வ இலைகள்  அறியாமல் செய்தாலும், சிவராத்திரியன்று லிங்கத்துக்கு வில்வார்ச்சனையால்  - அறியாமல் செய்த அர்ச்சனையே ஒரு வேடனை நாட்டின் மன்னன் ஆகும் அளவிற்கு உயர்த்தியது.
எனவே பக்தியுடன் சிவராத்திரி விரதம் இருப்பவர்கள், எத்தனை
பிறவி எடுத்தாலும் . அவர்களது சந்ததியும் செல்வவளத்துடன் திகழும் 

பாச பந்தத்தில் கட்டுண்டு உழலும் பசுக்களாகிய நம்மை உய்விக்க எம்பெருமான் அரூப ரூபமாகிய லிங்க ரூபத்தில் தோன்றி அருள் பாலித்ததால் சிவராத்திரி இரவில் லிங்க மூர்த்திக்கு செய்யும் அபிஷேகமும் வில்வ தள அர்ச்சனையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

அன்னை பார்வதி தேவி ,  சிவபெருமானை நோக்கிக்
கடுந்தவமியற்றி இடப்பாகத்தில் இடம் பெற்று உமையொருபாகனானது.
அர்ஜுனன் தவம் செய்து பாசுபத அஸ்திரம்  பெற்ற நாள் ...

.கண்ணப்பர் தன் கண்களை  சிவபெருமானுக்கு அப்பி 
கண்ணப்ப நாயனாராகி திருக்காளத்தி என்னும் 
புண்ணிய  திருதலத்தில் முத்தி பெற்ற திருநாள் .

பகீரதன் ஒற்றைக் காலில் கடுந்தவம் புரிந்து கங்கையை 
பூமிக்கு வரவழைத்த நாள் சிவராத்திரி ..

தன் பக்தன் மார்க்கண்டேயருக்காக  காலதேவனை 
தண்டித்து என்றும் பதினாறாக வரம் அளித்த நாள் ..

மனித உடலில் சக்தி இயல்பாகவே சிவராத்திரி
நாளில் மேல் நோக்கி ஈர்க்கப்படுகிறது. 

ஆதியந்தமிலாமல் எங்கும் நிறைந்திருக்கும்
வெறுமையும் இருளுமான சிவனவனை நாடி நாம்
செல்லத் தேவையில்லை, 

சிவன் நம்மை நாடி வருகிற அற்புதத்தை நமக்கு உணர்த்திவிடும் 
சீர் மிகுந்த சிறப்புறு நாள் சிவராத்திரி  !

மாசிமகா சிவராத்திரி தேரோட்டம்,  அமாவாசை யொட்டி, இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் சுவாமி, அம்மன் எழுந்தருளி, தீர்த்தவாரி 
நிகழ்ச்சி நடைபெறும் ..

மஹா சிவராத்திரி 10 நாள் பெருவிழாவாக தேரோட்டத்துடன் நடைபெறும் தலங்கள் ஸ்ரீ சைலம், ஸ்ரீ காளஹஸ்தி, ஸ்ரீ இராமேஸ்வரம்  ,ஸ்ரீ கோகர்ணம் .

மந்திர மலையை மத்தாக்கி வாசுகிப் பாம்பை கயிறாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது வலிதாங்கமுடியாது வாசுகிப் பாம்பு நஞ்சைக் கக்கவே, தேவர்களைக் காக்கும் பொருட்டு, அவ் விடத்தை சிவபெருமான் அருந்தி நீலகண்டரான காலமும்  சிவராத்திரிதான் ..










39 comments:

  1. அழகிய படங்களுடன் அழகாய்த் திகழும் சிவராத்திரி
    சிறப்புப் பகிர்வுக்கு வாழ்த்துக்கள் சகோதரி !.........

    ReplyDelete
    Replies
    1. வாங்க அம்பாளடியாள் ..

      சிறப்பான கருத்துரைக்கும் வாழ்த்துகளுக்கும்
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்....

      Delete
  2. விளக்கங்கள் சிறப்பு... படங்கள் அதைவிட...

    ReplyDelete
    Replies
    1. வாங்க திண்டுக்கல் தனபாலன் அவர்களே,,,

      சிறப்பான கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

      Delete

  3. வணக்கம்!

    சிவனின் பெருமையைச் செப்பும் பதிவு!
    தவஞ்சோ் தமிழே தழைத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா ..

      தழைக்கும் கருத்துரைகளால் பெருமை சேர்த்தமைக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா....

      Delete
  4. பக்தி இல்லாதவனையும் பக்தனக்கும் உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா..

      கருத்துரைக்கும் வாழ்த்துரைகளுக்கும்
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்..ஐயா..

      Delete
  5. அருமையான விளக்கங்களும்..
    அழகழகான படங்களும் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ..

      அழகான கருத்துரைக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்....

      Delete
  6. நன்றி மகா நாளின் குறிப்புகள் சிறப்பு படங்கள் அருமை ஓம் நமசிவாய நமஹ

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ,,ஓம் சிவ சிவ ஓம் ...

      சிறப்பான கருத்துரைகளுக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

      Delete
  7. Replies
    1. வணக்கம் ..
      கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

      Delete
  8. சிவராத்திரி சம்பந்தமான படங்களும்,பதிவும் அருமை.பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ...

      அருமையான கருத்துரைக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

      Delete
  9. செல்வ வளம் தரும் சிவராத்திரி நல் வாழ்த்துகள்.

    >>>>>

    ReplyDelete
  10. அனைத்துப்படங்களும் அழகோ அழகு.

    சிவாய நம ஓம் ! ஓம் நமச்சிவாயா !!

    சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
    சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
    சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
    சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
    சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
    சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
    சிவ சிவ சிவ சிவ சிவ சிவ

    ஸம்போ மஹாதேவா !
    ஸாம்பப் பரமேஸ்வரா !!

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஓம் நம்ச்சிவாயா ..!

      அழகான கருத்துரைகளுக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்..ஐயா...

      Delete
  11. வில்வார்ச்சனை மஹத்துவம்

    பகல் பகவானுக்கும், இரவு பராசக்திக்கும் என்ற விளக்கம்

    விஷமுண்ட நீலகண்டன் கதை

    என அனைத்துத்தகவல்களும் மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்>

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    இனிய நல் வாழ்த்துகள்.

    இந்த இன்றைய நாளுக்கேற்ற பொருத்தமான பதிவுக்கும் பகிர்வுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

    சிவாய நம ஓம், ஓம் நமச்சிவாயா !.

    ReplyDelete
    Replies
    1. விளக்கமான் அருமையான கருத்துரைகளுக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்..ஐயா..

      Delete
  12. good information about sivarathiri

    ReplyDelete
    Replies
    1. அருமையான் அகருத்துரைக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்.......

      Delete
  13. சிவராத்திரி வழிபாட்டின் மகிமையை உணர்த்திய பதிவு அருமையான படங்களுடன்.
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
    என் கடன் பணி செய்து கிடப்பதே! என்று இறைவனைப் பற்றி நாளும் சொல்லி இறையருள் இன்பம் எல்லோருக்கும் கிடைக்க செய்யும் உங்களுக்கு இறைவன் எல்லா வளங்களையும் அருள்வார்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ..வாழ்க வளமுடன் ...

      இனிமையான கருத்துரைக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்...

      Delete
  14. பகிர்ந்த படங்கள் வியக்க வைக்கின்றன. சிறப்பான விளக்கங்களும் நன்றிங்க.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் .. வாழ்க வளமுடன் ..

      சிறப்பான கருத்துரைக்கு
      மனம் நிறைந்த் இனிய நன்றிகள்..

      Delete
  15. Arumaiyana pathivu Rajeswzari.
    Padankal arputham.
    Thanks for the post.
    viji

    ReplyDelete
    Replies
    1. வாங்க விஜி
      அற்புதமான அருமையான கருத்துரைக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்....

      Delete
  16. Replies
    1. அருமையான கருத்துரைக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்....

      Delete
  17. அழகிய சிவனார் உருவங்களின் அற்புத வண்ணப்படங்கள்!
    சிவனின் சிறப்பான சிவராத்திரி பற்றிய விளக்கங்கள்.
    அனைத்தும் அருமை சகோதரி!

    சிவனின் அருள் அத்தனைபேருக்கும் கிடைத்திட வேண்டுகிறேன்.
    பகிர்வுக்கு மிக்கநன்றி!

    ReplyDelete
  18. இளைய நிலவின் அழகான வரவிற்கு வாழ்த்துகள்..

    சிவனருள் சிறக்கும் அருமையான கருத்துரைக்கு
    மனம் நிறைந்த இனிய நன்றிகள்....

    ReplyDelete
  19. சிவராத்திரியை முன்னிட்டு ஒரு சிறப்பான பதிவு. வழக்கம் போல கண்ணைக் கவரும் வண்ணப் படங்கள்!
    ” தென்னாடுடைய சிவனே போற்றி!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! “

    ReplyDelete
  20. சுமார் 11 விடயங்களிற்கு மேல் சிவராத்திரியில் நடந்திருக்கிறது என்பதை ஒன்றாகத் தொகுத்துள்ளீர்கள் மிக சிறப்பு. நல்ல படங்கள். அருமை. இறையருள் நிறையட்டும்.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  21. சிவராத்திரி சிறப்பு பதிவு அழகான படங்களுடன்
    வெகு அருமை.

    ReplyDelete
  22. படங்கள் , விளக்கங்கள் அருமை நன்றி

    ReplyDelete
  23. அழகான படங்களுடன், நல்லதோர் பகிர்வு.

    ReplyDelete
  24. மனமுருகச் செய்திட்ட அற்புதப் படைப்பு! இறை அருளால் மங்களம் உண்டாகட்டும்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete