Friday, March 29, 2013

புனித வெள்ளி






தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது யூத நிலத்தினிலே!
சத்திய வேதம் நின்று நிலைத்தது தாரணி மீதினிலே!

எத்தனை உண்மை வந்து பிறந்ததுஇயேசு பிறந்ததிலே!
இத்தனை நாளும் மானிடன் வாழ்வதுஇயேசுவின் வார்த்தையிலே!

வாழிய சூசை வாழிய மரியாள் வாழிய இயேசு பிரான்!
ஆழியும் வானும் உள்ள வரைக்கும் வாழிய தேவபிரான்!

ஏழைகள் பாவிகள் இரட்சக ராக எங்கும் நிறைந்தபிரான்!
ஆழ்தமிழாலே அவர்புகழ் சொன்னேன் துன்பங்கள் சேரவிடான்!

மண்ணிடை இயேசு மறுபடி வருவார் என்பது சத்தியமே!
புண்கள் இருக்கும் வரையில் மருந்து தேவை நித்தியமே!

விண்ணர சமையும் உலகம் முழுவதும் இதுதான் தத்துவமே!
எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே இயேசுவை நம்புவோமே!

(கவியரசு கண்ணதாசன் அவர்கள், எழுதிய 
"இயேசுகாவியம்"நூலின் எழுதியுள்ள பாக்கள்.)




இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற புனித வெள்ளி கிறித்தவக் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

வெறும் 30 வெள்ளிக் காசுகளுக்காக யூதாஸ் இயேசுநாதரை காட்டிக் கொடுத்த போதும், அதை புன்முறுவலுடன் பொறுத்துக் கொண்டார்
இயேசு நாதர்.

காட்டி கொடுத்தான் முப்பது வெள்ளி 
காசுக்காகவே கர்த்தர் இயேசுவை
கொலை செய்யவே கொண்டு போனாரே 
இதை காணும் உள்ளம் தாங்குமோ
பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்
பாரினில் பலியாக மாண்டாரே..!

கல்வாரி மலையில் உள்ள கொல்கொதா (கபாலஸ்தலம்) என்ற சிகரத்திற்குக் கொண்டு சென்று இயேசுவையும், கூடவே இரு குற்றவாளிகளையும் சேர்த்து சிலுவையில் அறைய உத்தரவிடப்பட்டது.

இயேசு நாதர் சிலுவையில் அறையப்பட்டது முதல் மூன்று மணி நேரத்திற்கு உலகை இருள் சூழ்ந்தது. இதை நினைவு கூறும் வகையில் இந்த மூன்று மணி நேரத்தை மையமாகக் கொண்டு மும்மணித் தியானம் என்ற பிரார்த்தனை, சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியும் தேவாலயங்களில் நடைபெறும்.

புனித வெள்ளி சிலவையில் அறையப்பட்ட இயேசு நாதர் 3 நாட்கள் கழித்து உயிர்த்தெழுந்ததை நினைவு கூறும் வகையில், ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும்.

 உலகத்தை காக்க வந்த ரட்சகரான இயேசுநாதர், இந்த உலக மக்களுக்காக எத்தனையோ துயரங்களையும் தாங்கிக் கொண்டார்.

இயேசுநாதரை காவலர்கள் சிலுவையில் அறைந்தனர். சிலுவையில் அவர் அறையப்பட்ட போது உலகமே இருளில் சூழ்ந்ததாக பைபிள் கூறுகிறது. இந்த நாளைத்தான் புனித வெள்ளியாக உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ மக்கள் அனுசரிக்கின்றனர்
இயேசு, "தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" என்று  பகைவனுக்கும் கருணை காட்டினார் ...

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்கும் என்றார் - இயேசு






13 comments:

  1. புனித வெள்ளி சிறப்பு பார்வை அருமை. கவியரசு கண்ணதாசன் அவர்களின் பாடல் பகிர்வு நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  2. புனித வெள்ளியின் சிறப்புகள் அறிந்து கொள்ள முடிந்தது/பகிர்வுக்கு நன்றிம்மா.

    ReplyDelete
  3. புனித வெள்ளி பற்றிய பல தகவல்களுக்கும், படங்களுக்கும், விளக்கங்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. OOOOOOOOOOO
    i came to know about good Friday eleabaratly now.
    Thanks.
    viji

    ReplyDelete
  5. புனித வெள்ளியன்று நமது கிருஸ்துவ மத நண்பர்களை வாழ்த்துவோம்.

    கண்ணதாசன் பாடலை இங்கே கேட்கலாம்.

    https://www.youtube.com/watch?v=bGDQAIe3l3I

    சத்தியம் இருக்குமெடமில்லாம் யேசுவின் குரல் ஒலிக்கும்.
    ஆக, இங்கேயும் ஒலிக்கும்
    www.subbuthatha.blogspot.in
    சுப்பு தாத்தா.
    https://plus.google.com/u/0/


    https://www.youtube.com/watch?v=bGDQAIe3l3I

    ReplyDelete
  6. சிறப்பு பகிர்வு அருமை அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. புனித வெள்ளியின் கருத்துகள் படங்கள் அருமை

    ReplyDelete

  8. அருமையான தகவல் தக்க சமயத்தில் பகிரப்பட்டுள்ளது !..
    வாழ்த்துக்கள் சகோதரி ....

    ReplyDelete
  9. புனித வெள்ளி சிறப்பு பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  10. கண்ணதாசனின் ‘இயேசு காவியம்’ பெரும்பாலும் தமிழர்களால் மறக்கப்பட்டுவிட்டது எனலாம். இவர் எதற்காக இன்னொரு மதம் சார்ந்த காவியத்தை எழுத வேண்டும் என்பதே அவரது தீவிர ரசிகர்களுடைய கருத்தாக இருந்தது. கிறிஸ்தவர்களும் அதைப் பெரிதாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. இன்னிலையில், புனித வெள்ளியன்று அவரது கவிதையை வெளியிட்டது, மிக நல்ல நினைவூட்டல். நன்றிகள்.

    ReplyDelete
  11. சிறப்பான பகிர்வுங்க. கிருஸ்துவ நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. மிக மிக அருமையான சிறப்பான புனித வெள்ளி பற்றிய பதிவு.
    பகிர்வுக்கு மிக்க நன்றி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. புனித வெள்ளி பற்றி சிறப்பான பகிர்வு

    ReplyDelete