Thursday, November 27, 2014

கார்த்திகை தீபத்திருக்காட்சி







What is Pancharatra Deepam | When is Vishnu Deepam

திருமாலும் பிரமனும் அடி முடி தேடி வராஹமாகவும் , அன்னப்பட்சியுமாக உருவெடுத்தும் அனல் உருவெடுத்த அண்ணல் அண்ணாமலையானின் ஆதி அந்தம் அறியப்படமுடியாமல்  ஜோதிப்பிழம்பாய் தகதகத்து நிற்கும் மலை அண்ணாமலை அதிசயம்..

விளக்கொளியாகிய மின் கொடியாளை
விளக்கொளியாக விளங்கிடு நீயே !
விளக்கிடு மெய்நின்ற ஞானப் பொருளை
விளங்கிடுவார்கள் விளங்கினர் தானே !--

என்று திருமூலர் தீபவழிபாட்டை பற்றி திருமந்திரத்தில்:சிறப்பித்துக் கூறுகிறார்.

வள்ளலார் 'ஒளியின் வடிவம் சிவம்' என்று கருதி, அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடினார்.

அப்பர் பெருமான் 'நமசிவாய' மந்திரமே ஒளிமயமானது என்கிறார். ருக்வேகத்தில் இந்திரன் அடுத்தபடியாக அக்னிபகவான் முக்கிய இடம் பெறுகிறார்.

 கீதையில் கண்ணன் விளக்கின் ஒளி போன்று மனதை டாமல்,அசையாமல் சஞ்சமற்று ஒரு நிலைப்படுத்த வேண்டும் என்கிறார்.

 ''''நலமிகு கார்த்திகை நாட்டவரிட்ட
தலைநாள் விளக்கில் தகைமை யுடைவளாகி...''என்று கார்நாற்பது கூறுகிறது. நன்மைமிக்க கார்த்திகை விழாவில் நாட்டினர் ஏற்றி வைத்த முதல் தீபத்தைப் போல்அழகுடையவளாய் என்பது பொருள்.
நெருப்புப்பிழம்பான சூரியனுக்கு சிறு கற்பூரத்தால் 
தீபாராதனை செய்வது போல.
எல்லையற்ற ஆழங்காணமுடியாத விரிந்த பரப்புள்ள கடலுக்கு மழைத்துளியால் அபிஷேப்பது போல,

வெல்லப்பிள்ளையாரை நுள்ளி வெல்லப்பிள்ளையாருக்கு 
நைவேத்தியம் செய்வது போலவும்,
நெருங்கமுடியாத அண்ணமுடியாத அண்ணாமலைகு அகல் தீபத்தினால் கார்த்திகை தீபத்தன்று வழிபாடுகள் நிகழ்த்துகிறோம்..

ஆதி அந்தம் கடந்தவனை, முதலும் முடிவுற்றவனை இறுதியில் ஜோதிப் பிழம்பாக திருவண்ணாமலையில் கண்டு களித்தனர்.
அதுவே ''லிங்கோத்பவ மூர்த்தி" ஆகும்.

கார்த்திகை தீபத்தை எந்தப் பிராணி பார்த்தாலும் அதற்கு நித்ய ச்ரேயஸ் உண்டாகட்டும் என்று தீபத்தின் ப்ரகாசமானது அதைப் பார்க்கிறவர், பார்க்காதவர் எல்லார் மேலும் படுகிற மாதிரி தீபப்பிரகாசம் படுகிற எல்லைக்குள் இருக்கிற சகல ஜீவராசிகளுக்கும் பாப நிவர்த்தி, ஜன்ம நிவர்த்தி, சாஸ்வதமான ஐஸ்வர்யம்  கிடைக்க வேண்டும்''- என்று பிரார்த்தித்து தீபம் ஏற்றுகிறோம்..

தீபத்தின் ஒளி  வித்தியாசம் பார்க்காமல்,  படுவது போல   மனதிலிருந்து அன்பு ஒரு தீபமாக, எல்லோரையும் அகவொளியோடு, புற ஒளியாக தீபத்தை ஏற்றி ஆனந்தப்படுத்திப் பிராகாசிக்க வேண்டும். 
  சொக்கப்பானை என்று ஆலயத்திலிருந்து தீபத்தைக் கொண்டுவந்து பெரிதாக ஏற்றுவதும் ,, திருவண்ணாமலையில் மலை உச்சியில் மஹா பெரிய ஜோதியாக தீபம் ஏற்றுவதும் உள்ளர்த்தம்  உள்ளவை..

?சின்ன அகலமாக இருந்தால், அதன் பிரகாசம் கொஞ்ச தூரம்தான் பரவும். 
சொக்கப்பானை என்றால் அதன் பிரகாசம் ரொம்ப தூரத்துக்குத் தெரியும். அண்ணாமலை தீபம் மாதிரி மலையில் ஏற்றி வைத்துவிட்டாலோ, அது எத்தனையோ ஊர்கள் தாண்டிக்கூடத் தெரியும்.

அத்தனை பெரிய எல்லைக்குள் இருக்கிற சகல ஜீவஜந்துக்களின் மீதும் பிரகாசம் பட்டு அவற்றின் பாபங்கள் போகவேண்டும் என்ற உத்தமமான சிந்தனையில்தான் சொக்கப்பானை, அண்ணாமலை தீபம் என்றெல்லாம் நம் முன்னோர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். 

கார்த்திகைக்குப்பிறகு மழையும் இல்லை. கர்ணணுக்குப் பிறகு கொடையும் இல்லை என்பார்கள்.. விவசாய நாடான இந்தியாவில் பயிர்கள் வளர்ந்து பால் பிடிக்கும் தருணத்தில் காற்றோ மழையோ அதிகமானால் மகசூல் பாதிக்கப்படும் ..  அதைத்த்விர்க்க ஊர் கூடித்தேர் இழுபதுபோல ஆன்மீகத்தேனில் குழைத்துக்கொடுக்கும் அமிர்தமாக , ஐப்பசி அமாவாசையன்று பட்டாசு வெடித்து கந்தகபுகையால் மழை மேகங்களை இடம்மாற்றியும் ,.சூறாவளிக்காற்றின் வேகத்தையும் மட்டுப்படுத்தும் அக்னிதத்தத்துவத்தை-    தொடர்ந்து மலை மேல் எரியும் தீபங்கள் , ஒவ்வொரு இல்லங்களிலும் ஏற்றப்படும் அகல்விளக்கின் வெப்பத்தினாலும் வானமண்டலத்தில் வெப்பச்சலனத்தை சமப்படுத்தும்  விஞ்ஞான அற்புதம்.
தினமும் காசியிலும், ஹரித்துவாரிலும் மாலையில் தீபம் ஏற்றி இலையில் வைத்துபூக்களுடன் ஆ ற்றில் விடும் பழக்கம் இருந்து வருகிறது.

8 comments:

  1. கார்த்திகைத் தீபத்தின் அருமையை, மனதின் அன்பின் ஒளியாகவும், அழகான படங்களுடனும், நல்ல பாடல்களுடனும் எடுத்துச் சொல்லிய விதம் அழகு. குறிப்பாகத் திருமூலரின் பாடலும், அப்பர் பெருமான், மற்றும் வள்ளலாரின் கருத்துடனும் சொன்னது சிறப்பு. வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  2. ஆஹா...! கண்கொள்ளக் காட்சிகள் அம்மா...

    ReplyDelete
  3. கார்த்திகை தீப காட்சி கண்டு மகிழ்ந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  4. வணக்கம்
    அம்மா
    விளக்கங்கள் மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்.. படங்கள் எல்லாம் அழகாக உள்ளது
    பகிர்வுக்கு நன்றி
    எனது பக்கம்ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: நிறைவேறாத எதிர்பார்ப்புக்கள்.(சிறுகதை-2 நிறைவுப்பக...:   

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே!..

    கண்கொள்ளாக் காட்சியாக இருக்கின்றது.. மகிழ்ச்சி..

    ReplyDelete
  6. ஆதி அந்தம்தெரியாதது கடவுள் என்று நம்பப் படும் உருவகம். அதனை விளக்க பிரம்மன் , மால் அடி முடி தேடி தோற்றதாகக் கதை படங்களுடன் பகிர்வு நேர்த்தி. வாழ்த்துக்கள். .

    ReplyDelete
  7. கார்த்திகை தீப தகவல்களும் படங்களும் அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. தீபத்தின் தரிசனம் கிடைத்தது.

    ReplyDelete