"வான்கலந்த மாணிக்கவாசக! நின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ்சற்றினிலே
தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து,என்
ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!" -
வள்ளலார் சுவாமிகள்
திருவண்ணாமலையில் மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவை
பாடல்களில் தன்னை ஒரு பெண்ணாகப் பாவித்து மார்கழி மாதக் காலையில் சிவனைக் குறித்துப் பாடுவது போல் பாடியுள்ளார்.
திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் திகழும் சிவபெருமானை
முன்னிலைப்படுத்தி திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டுள்ளன.
இதில், 20 பாடல்கள் உள்ளன. இவை மார்கழியின் முதல்,
20 நாட்களில் பாடப்படும்.
கன்னிப்பெண்கள் அதிகாலையில் துயில்
எழுந்து, ஒருவரை ஒருவர் எழுப்பி, சிவ வழிபாட்டிற்கு செல்வது
போல் திருவெம்பாவைப்பாடல்கள் அமைந்துள்ளன.
அடுத்து வரும் திருப்பள்ளியெழுச்சி பாடல்கள்,
10ம் திருப்பெருந்துறையில் உள்ள ஆவுடையார்கோவில் சிவனை,
பள்ளி எழுப்பும் வகையில் அமைந்திருக்கும். திருவெம்பாவையும்,
திருப்பள்ளியெழுச்சியும் மாணிக்கவாசகரால் பாடப்பட்டது.
"திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்"
பாண்டிநாட்டு அந்தண வடிவில், ஈசன் மணிவாசகரிடம் வந்து, அதுவரை அவர் பாடியுள்ள பாடல்களை முறையாகச்சொல்லுமாறு கேட்டுக்கொண்டார்.
மணிவாசகர் அவ்வாறு சொல்லச்சொல்ல, இறைவனும் தன் திருக்கரத்தால் ஏட்டில் எழுதிக்கொண்டார்...
திருவாசகப் பாடல்கள் அனைத்தையும் எழுதிய பின்னர், ஈசன் மணிவாசகரிடம், "பாவை பாடிய வாயால், கோவை பாடுக!", என்று கேட்டுக் கொண்டான். மணிவாசகர் அவ்வண்ணமே திருக்கோவையாரைப் பாட, ஈசன் அதையும் ஏட்டில் எழுதிக்கொண்டார்...
எழுதி முடித்தவுடன் இறுதியில், "இவை திருச்சிற்றம்பலமுடையான் எழுத்து", என்று கைச்சாத்துச் சாற்றி திருச்சிற்றம்பலத்தின் வாசற்படியில் வைத்து மறைந்தார்..
.வாசற்படியில் ஏட்டுச்சுவடி இருப்பதைக்கண்ட அர்ச்சகர், தில்லைமூவாயிரவர் ஆகியோர் மாணிக்கவாசகரிடம் அந்தப்பாடல்களுக்குப் பொருளைக் கேட்டனர்.
அவனே அதற்கு அர்த்தம் மாணிக்கவாசகர், அவர்களை அழைத்துக்கொண்டு திருச்சிற்றம்பலத்தை யடைந்து, "அந்நூலின் பொருள் இவனே!", என்று சிற்சபையில் நடனமாடும் நடராசப் பெருமானைக் காட்டியவாறு, சிற்றம்பலத்துள் தோன்றிய பேரொளியில் ஆனி மாத மூலத்தன்று கலந்து, கரைந்து, மறைந்தார்.
திருவெம்பாவை, தொள்ளாயிரம் ஆண்டுகளாக சைவக்கோயில்களில் ஓதப்படும் பெருமையுடையது. "தமிழ் மந்திரம்" என்ற பெயரில் அந்தக்காலத்தில் அது கடல் கடந்து சயாம் நாட்டிற்குச் சென்றிருக்கிறது.
அரசனுக்கு முடிசூட்டும் காலத்திலும், சில திருவிழாக் காலத்திலும், சயாமியர் திருவெம்பாவையை ஓதுகின்றனர். ஒவ்வொரு திருவெம்பாவைப்பாடலின் முடிவிலும் "ஏலோர் எம்பாவாய்!" என்ற சொற்றொடர் காணப்படும். அது மருவி வந்து இப்போது சயாமியரால், " லோரி பாவாய்" என்று அழைக்கப்படுகிறது.
பூர்வஜென்ம பாவம் போக்கும் திருவெம்பாவை..
ReplyDeleteதிருவெம்பாவை அறிந்தேன்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
திருவெம்பாவையைப் பற்றிய தாங்கள் கூறியனவற்றை முன்னரே அறிந்துள்ளேன். இருப்பினும் தாங்கள் இட்டுள்ள புகைப்படங்கள் இன்னும் மணிவாசகப் பெருமான் மூலமாக இறைவனிடம் எங்கள் உணர்வுகளை நெருக்கமாக அழைத்துச்சென்றது.
ReplyDeleteபல சிறப்புகளை அறிந்தேன் அம்மா... நன்றி...
ReplyDeleteதிருவெம்பாவையின் அருமைகளைக் குறித்த அழகான பதிவு!..
ReplyDeleteவாழ்க நலம்!..
திருவெம்பாவைத் திறன்கள் அறிந்தேன்.
ReplyDeleteமிக்க நன்றி.
இனிய பாராட்டுகள்.
வேதா. இலங்காதிலகம்:
திரும்வெம்பாவையின் சிறப்புகள் கொண்ட பகிர்வு.நடராஜர்,அம்மன் படம் அழகு. நன்றிகள்.
ReplyDeleteதிருவெம்பாவைப் பற்றிய பெருமைகள் அருமை. படங்களும் மிகவும் அழகு. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி!
ReplyDeleteகலக்கிட்டீங்க. திருவெம்பாவைக்கு இன்னும் நாள் இருக்குதுதானே?.. நானும் பிடிக்கிறனான்ன் சின்னனில் இருந்து இப்பவரை.
ReplyDeleteதிருவெம்பாவை விளக்கம் அருமை படங்கள் எல்லாம் அழகு.
ReplyDeleteபாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
Can you also please explain the meaning of the paragraph starts with "வான்கலந்த மாணிக்கவாசக! நின் வாசகத்தை"....
ReplyDelete