மதிப்பிற்குரிய திரு .GMB ஐயா அவர்கள் உறவுகள் பற்றி எழுத அழைப்பிவிடுத்தவர்களில் எமது பெயரும் இருந்தது மகிழ்ச்சி அளித்தது..
உடனடியாக உறவுகள் பற்றிய பல பழமொழிகள் நினைவில் எழுந்தது..
உற்றார் உறவினர்கள் இல்லாமல் வாழ்வில்லை
அண்ணனுக்குப் பெண் பிறந்தால் அத்தை அயல் நாட்டார்
அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா எனலாம்.
அன்னையின் அன்புக்கு வயதே கிடையாது
அக்காள் இருக்கிற வரைதான் மச்சான் உறவு
உள்ளூர் மாப்பிள்ளையும் உழுத மாடும் ஒன்று.
ஏர் உழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்
கணவன்; புல்லானாலும் புருஷன்
சிறு குழந்தை இல்லாத வீடும் வீடல்ல
தந்தை எவ்வழி; தனயன் அவ்வழி
தம்பி உடையான் படைக்கு அஞ்சான்
நார்த்தங்காய்க்குப் போடுகிற உப்பும்,
நாத்தனாருக்குப் போடுகிற சாதமும் வீண் போகா!
பாரியாள் ரூபவதி சத்ரு..
கொண்டன் திடமாக இருந்தால் குப்பை மேட்டிலும் ஏறி சண்டை போடுவாள்..
பிள்ளை பெறுவதற்கு முன்பே தின்றுபார்
மருமகள் வருவதற்கு முன்பே கட்டிப் பார்
பெண்ணின் கோணல் பொன்னில் நிமிரும்
போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோட
மகள் ஆனாலும் சும்மா வரமாட்டாள்
மலைக்குப் போனாலும் மச்சினன் தயவு வேண்டும்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடமா?
மகள் தீவிளிக்கு தீவிளிக்கு குளிச்சுடுவா..
மருமகளோ எட்டோடெட்டுத்தான் குளிப்பா..
தனி மரம் தோப்பாக முடியாது
போன்றவை உறவுகளைப்பற்றிய பழமொழிகள்..
உறவுகள்தான் மனிதனின் பலமே! ஆபத்துகளில் கை கொடுக்க, துயரங்களில் ஆறுதல் அளிக்க, இன்ப-துன்பங்களில் உரிமையோடு பங்கெடுக்க உறவுகள் வேண்டும்
.. உறவுகள் மிக அவசியம்.
உறவுகளும் இப்போது பணத்துக்காகவும் பரஸ்பர தேவையின் அடிப்படையிலும் மட்டுமே செயல்பட்டு வருவதே உண்மை.
முன்பெல்லாம் உறவுகளில் தோள்கொடுத்து விஷேசங்கள் அரங்கேறின..
.இப்போது தொழில்நுட்ப புரட்சியின் விளைவாக ஒரு மெசேஜ் மட்டுமே..!
.இன்பத்தை அனுபவிக்க எத்தனை, எத்தனையோ உறவுகள் கூடும். ஆனால், துன்பத்தை பகிர்ந்து கொள்வதற்கு எந்த உறவும் முன்வருவதில்லையே…!
அண்ணன், தம்பி உறவுக்கு இலக்கணம் வடித்ததும், துன்பமான நேரத்தில் கை கொடுத்து உதவிய பக்தரை தம்பியாக்கியதும்தான் ராமாயணம் சொல்லும் பாடம்.
மாமனின் உறவுக்கு கோடிட்ட மகாபாரத்தின் கண்ணன் சொன்ன போதனையான “கீதை’ மனித குலத்துக்கு கிடைத்த வரப்பிரசாதம்.
தேசம் மீது பாசம் கொண்ட காந்தியை “தேசத் தந்தை’ என்று அழைக்கிறோம். நேசம் கொண்ட மாமனிதரை “நேரு மாமா’,
அறிவுரை வழங்கிய முதாட்டியை “ஒüவை பாட்டி’ என்கிறோம்.
அன்புக்கு இலக்கணம் கொடுத்த மாதரசியை “அன்னை தெரசா’ என்று உலகம் அழைக்கிறது.
அருளைப் போதித்துவரும் போதகர்களை “அப்பா’, “சகோதரன்’ என்றே சொல்கிறோம்.
பணிவிடை செய்யும் பெண்ணை “சகோதரி’ என்கிறோம்.
இவ்வாறு உறவுகள் விரிந்தன. மனித வாழ்வு சிறக்க, நாடு செழுமை பெற உறவுகள் அவசியமாகிறது.
உரசல்களை ஒதுக்கிவைத்துவிட்டு, கோபத்தைக் குறைத்து, நாக்கை அடக்கி, பகைமை பாராட்டாமல், இனிதான வாழ்கைக்கு உத்தரவாதம் தருவதாக ஒவ்வொருவரும் சபதமேற்று ,உறவுகளின் இணைப்பை, தொடர்பை விரிவுபடுத்த வேண்டும்..
'தம்பி உடையான் படைக்கு அஞ்சான்' என்று ஒரு பழமொழி உள்ளது.
இன்றைய தலைமுறையினர் வயதானவர்களை தங்களுடன் வைத்து கொள்ள விரும்புவதில்லை.
தனியாக ஓரிடத்தில் வயதான காலத்தில் பேச்சுத் துணைக்குக் கூட ஆள் இல்லாமல் தாத்தா, பாட்டிகளும், பள்ளி, பள்ளி முடிந்து டியூஷன், இதர பயிற்சிகள் என பம்பரமாக சுற்றிக் கொண்டிருக்கும் பேரன், பேத்திகளும் ஒரே இடத்தில் ஒருவர் மீது ஒருவர் அன்பு பாராட்டி, கொஞ்சி மகிழ்ந்து, விளையாடி, கதைகளைச் சொல்லி, அதனைக் கேட்டு வாழ்ந்து வந்தால், இரு தலை முறையினருக்குமே மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.
தாத்தா மற்றும் பாட்டிகளோடு, அவர்களது பேரன் பேத்திகள் நன்கு விளையாடி மகிழ்ந்தால், இருவருக்குமே மன அழுத்தம் குறையும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம், அவர்களை சந்திக்க வழி ஏற்படுத்தி, இரு தலைமுறைக்கும் இடையே பெற்றோர் ஒரு பாலமாக இருந்தால், மூத்த தலைமுறையும், எதிர்கால தலைமுறையும் ஆரோக்கியமாக இருக்கும்.
.பணம் , சொத்துக்கள் என்றிருந்தும் பிடிவாதத் தாலும்,முன்கோபத்தாலும் உறவுகளை விட்டுப் பிரிந்த அவர்களை பாசமுடன் ஆதரிக்க உறவுகள் யாரும் முன்வருவதில்லை.
அன்பு பாசம் என்பது . நாம் அழிந்த பின்னும் பேசப்படும்
அழிவில்லா செல்வமாகும்.
கருத்து வேறுபாடுகள் என்பது கார்த்திகை மாத மழை போல் வந்து போகக் கூடியது. அதை கால மெல்லாம் பகையாக்கிக் கொள்ளாமல் அன்பைப் பகிர்ந்து கொண்டு அனைவரிடத்திலும் ஒற்றுமையுடன் இருந்து மகிழ்ச்சியை தேடிக் கொள்ளவேண்டும்..
உறவுகளை உதாசினப் படுத்தாமல் உண்மையான அன்பு பாசங்களை உறவினர்களுடன் பகிர்ந்து கொண்டு மன நிம்மதியுடன் வாழமுன்வரவேண்டும்.. !
ஏழு நிறங்களும் இணைந்துதான் வானவில்லுக்கு
வர்ணமும் அழகும் சேர்க்கின்றன..
உறவுக்கு கை கொடுப்போம்!
ReplyDeleteதேவையில்லாமல் தேடுவதில்லை யாரும் என்பதும் ஒப்புக் கொள்ளவேண்டிய உண்மையே.
ஒவ்வொன்றும் முத்துக்கள்...
ReplyDeleteநல்ல வேளை. இந்தப் பதிவு இன்றே வந்தது. ஒரு நாள் தள்ளியிருந்தாலும் இதைக் காண நான் பல நாட்கள் காத்திருக்க வேண்டியதாயிருக்கும். என் பதிவில் பொதுவாகப் பெண்கள் கணவன் வழி உறவுகளோடு தங்கள் குழந்தைகள் ஒட்டுவதை விரும்புவதில்லை என்ற ஒரு கருத்தையும். வசதிகள் வந்தால் உறவுகள் ஒதுக்கப் படுவதையும் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் பதிவுகளை எழுதிய அனைவரும் அது குறித்து மூச்சுக்கூட விடவில்லை. உறவுகள் மேன்மையானவை என்பதே அவர்களது மேலான கருத்தாக இருக்கிறது. இதிலிருந்து பல எழுத்தாளர்களும் ஒரு spade ஐ spade எனச் சொல்லத் தயங்குகிறார்கள் என்று தெரிகிறது. என் விருப்பத்தை மதித்துப் பதிவு எழுதிய உங்களுக்கு நன்றி,
ReplyDeleteஅருமை சகோதரியாரே
ReplyDeleteசொந்தம் எப்போதும் தொடர்கதைதான்..
ReplyDeleteமுடிவே இல்லாதது!..
அருமையான பதிவு.. வாழ்வின் நிதர்சனம்!..
ஐயா ஆரம்பித்து வைத்த உறவுகள் தொடர்பான தங்களின் பதிவில் ஆழமான வகையில் நிசர்சனமான உண்மைகளைக் காணமுடிந்தது. புகைப்படங்கள் அருமை.
ReplyDeleteஉறவுகளுக்கென்றே இவ்வளவுப் பழமொழியா ! அறிய வைத்தமைக்கு நன்றி.
ReplyDeleteஅறியாத பல பழமொழிகளையும், உறவுகளின் அருமைகளையும் அழகாக பகிர்ந்திருக்கிறீங்க. நன்றி
ReplyDeleteஉறவுகள் பற்றிய பழமொழிகள் உங்கள் தொகுப்பு பயனுள்ளது .. வாசிக்கின்ற ஒவ்வொருவரும் தங்கள் உறவுகள் பற்றிய நினைவுகளில் தங்களை தொலைத்திருப்பார்கள் .. நல்ல பதிவு
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅம்மா
மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக அழகாய் எழுதியிருக்கிறீர்கள்! பழமொழிகள் தொகுப்பு அருமை! அந்த முதலாவது படம் அத்தனை அழகு!
ReplyDeleteஉறவை விளக்கும் பழமொழிகள். வழக்கம் போல உங்கள் பதிவிற்கே உரிய தனித் தன்மையான வண்ணப் படங்கள் இணைப்பு. அனைத்தும் சிறப்பு. நாயும் அதன் சேயும் வீடியோவை ரசித்தேன். நன்றி.
ReplyDeleteமிக்க ஒரு ஆய்வு மனதோடு எழுதப்பட்டுள்ளது.
ReplyDeleteநன்று..நன்று.
ரசித்தேன் பாராட்டுடன்
வேதா. இலங்காதிலகம்.
அருமை அம்மா.
ReplyDeleteஎன்ன அருமையான உறவுகள்.. நவீன காலத்தில் உறவுகள் நிலைநாட்ட பிரவிகள் இல்லை. அக்கா,தம்பி,அண்ணன் தம்பியே இல்லா விட்டால் உறவுகள் எங்கிருந்து உருப்பெறும்? வயதானவர்களுக்கு இருக்கும் உறவு வகைகள் ஸந்ததிகளுக்கில்லை.
ReplyDeleteஇருக்கும் உறவுகளையாவது கொண்டாடிக் கொண்டிருக்க வேண்டும்..
உறவினர்களைப் பார்க்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி அனுபவிப்பவர்களுக்குதான் தெரியும்.
பழமொழிகள் சேகரம் பழமாய் இனிக்கிறது. மகிழ்வுடனும்,அன்புடனும்
உறவுகள் பழமொழி மிக அருமை.
ReplyDeleteஉறவுகளுடன் எதிர்பார்ப்பு இன்றி பழகுவது நனமை தரும் என்பதையும், குற்றம் பார்க்காமல் குணங்களை பார்க்க வேண்டும் அருமையாக சொன்னீர்கள்.
சார், திரும்ப திரும்ப பெண்கள் கணவன் வழி உறவுகளை பேண வில்லை என்றே சொல்லிக் கொண்டு இருக்கிறார். ஏன் அப்படி சொல்கிறார் என்று தெரியவில்லை ஒரு சிலர் இருக்கலாம், அதையே எல்லா பெண்களும் அப்படித்தான் என சொல்லக்கூடாது. தன் வீட்டூ உறவினர்களை விட தன் கணவன் வீட்டு உறவுகளுக்கு தான் அதிக முக்கியம் கொடுத்து வருகிறோம்.
நீங்கள் சொல்லியிருக்கும் பழமொழிகள் எல்லாம் நிறைந்த அர்த்தம் கொண்டவை. உறவுகளைப் பற்றிச் சொல்லும் பழமொழிகளை தொகுத்துப் போட்டிருப்பதற்கு நன்றி.
ReplyDelete