Tuesday, January 13, 2015

இந்திர விழா




கடுங்கால் மாரி கல்லே பொழிய, அல்ல எமக்கு அன்று
கடுங்கால் நீயே சரண் என்று ஆயர் அஞ்சஅஞ்சாமுன்
நெடுங்கால் குன்றம் குடை ஒன்று ஏந்திநிரையைச் சிரமத்தால்
நடுங்கா வண்ணம் காத்தான் நாம்ம் நமோ நாராயணமே

என்ற திருமங்கை மன்னன்  பாடல் வழி கல்மாரி பொழிந்த திறத்தையும் கண்ணன் காத்த கருணையையும் விளக்கமாக அறியலாம்...

 தன் ஐந்து விரல்களை மேலுயர்த்தி குன்றத்தை குடை எனப் பிடித்திருக்கும் காட்சியை பெரியாழ்வார் தம் பாசுரத்தில் படம்பிடித்துக் காட்டுகிறார். 

கண்ணபிரானின் மணி நெடுந்தோள் குடைக்காம்பாகவும், அவன் கைவிரல்கள் குடையின் உள் விட்டங்களாகவும் விளங்க அதன் மேல் மலை கவிழ்ந்து குடையாக இருப்பதாக் காண்கிறார். 

கண்ணபிரான் விரல்களை விரித்து கோவர்த்தன மலையைத் தாங்கும் காட்சி ஆதிசேடன் தன் ஐந்து தலைகளை படமாக விரித்து அதன் மேல் பூமியை தாங்குவது போல் தோன்றிற்று. 

கண்ணன் வலப்பக்கத்தில் பலதேவர் நிற்க
குன்றமேந்திக் குளிர் மழை காத்த திருக்கோலம் வெகு அற்புதமானது..


அமரர்தம் கோனார்க் கொழியக் 
கோவர்த்தனத்துச் செய்தான் மலை

ஆய்ப்பாடியில் ஆண்டுதோறும் இந்திரனுக்கு சமைத்துப் படைப்பார்கள். 

கண்ணன் பிறந்த பிறகு , இதனைத் தடுத்து, "எல்லா நன்மைகளும் செய்யும் கோவர்த்தனமலைக்கே இனி  படைப்போம்," என்று கூற ஆயர்களும் அவ்வாறே  கோவர்த்தன மலைக்கே படைத்தார்கள். 

கோபமடைந்த இந்திரன் ஏழு நாட்களுக்கு அடை மழையை பொழிந்து ஆயர்பாடியை வெள்ளமாக்கினான். இந்த ஆபத்திலிருந்து காப்பாற்ற கண்ணனும் தன சிறு விரல் நுனியால் கோவர்த்தன மலையை அனாயாசமாக தூக்கி குடையாகப் பிடித்தான்.

குன்றேடுத்து மாரி காத்ததை அறிந்து அவமானப்பட்ட இந்திரன் கண்ணனிடம் மன்னிப்பு வேண்டி கண்ணன் கையில் இருந்த கோவர்த்தன மலைக்கும், கண்ணனுக்கும் 
"கோவிந்த பட்டாபிஷேகம்" செய்தான். 

இதனால் கண்ணனுக்கு "கோவிந்தன்" என்ற பட்டப்பெயர் கிடைத்தது. 

 மார்கழி கடைசி நாளன்று போகி என இந்திரனுக்குரிய விழாவாக கொண்டாட கோவிந்தன் அருள்புரிநதான்..

அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம்.

ராமன் பாதுகைக்குக் கிடைத்த பாக்கியம் கோவர்த்தன மலைக்கும் கிடைத்தது . இந்த உணவு படைக்கும் உத்சவம் "அன்னக் கூட உத்சவம்" என்று பல கோயில்களில் இன்றும் நடைபெறுகிறது. -

21 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட கோவர்த்தன மலையை "பரிக்ரமா", அதாவது ப்ரதிக்ஷிணம் செய்வது சிறந்தது - 


ஸ்டிக்கர் கோலமும், குக்கர் பொங்கலும்ஸ்டிக்கர் கோலமும், குக்கர் பொங்கலும்ஸ்டிக்கர் கோலமும், குக்கர் பொங்கலும்

16 comments:

  1. இந்திர விழா அறிந்தேன் உணர்ந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. அருமை அம்மா... பிரமாண்டம்...!

    ReplyDelete
  3. சிறப்பான பதிவு.

    சப்பன் போக் விசேஷமான ஒன்று.

    ReplyDelete
  4. இனிய பதிவாக - இந்திர விழா..
    அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும்!..

    ReplyDelete
  5. இந்திர விழாவை பற்றி அறிந்தோம்.இந்திரனுக்கு சமைத்து படைத்து இருக்கும் புகைப்படம் அழகு. கலைநயத்தோடு இருக்கிறது.

    ReplyDelete
  6. கோவிந்தன் ...அழகு

    ReplyDelete
  7. அன்னக்கூட உற்சவம் அருமை. படங்கள் எல்லாம் மிக அழகு.
    வாழ்த்துக்கள்.
    இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. போகியன்று இந்திரவிழா கதை கேட்டு மகிழ்ந்தோம்.

    ReplyDelete
  9. அருமையான தகவல்கள்! இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. இந்திர விழாவின் சிறப்பு அருமை.
    குன்றை குடையாய் பிடித்தகோவிந்தன் நம்மையும் காக்கட்டும்
    விஜி.

    ReplyDelete
  11. இந்திர விழா படங்களும் பகிர்வும் அருமை அம்மா.
    தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
    கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
    தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
    பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
    எனது மனம் நிறைந்த
    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
  13. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய தமிழர்/உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. அருமை. நல்ல விளக்கம்
    மகிழ்ச்சி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  16. அருமை. நல்ல விளக்கம்
    மகிழ்ச்சி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete