பத்மநாபம் கவீந்திரம் ச வாசீகம்
வ்யாசராஜகம் ஸ்ரீநிவாசம் ராமதீர்த்தம்
ததைவச் ஸ்ரீ சுதீந்திரம் ச கோவிந்தம்
நவபிரிந்தாவனம் பஜே
=நவ பிருந்தாவனம் தியான ஸ்லோகம்
கர்நாடக மாநிலத்தில், கொப்பல் மாவட்டத்தில், கங்காவதி தாலுக்காவில் ஆனேகுந்தியில் நுங்கபத்ரை ஆற்றின் நடுவில் உள்ள ஒரு திட்டில் அமைந்துள்ள நவ பிருந்தாவனம் நினைத்தாலும், துதித்தாலும் மனக்குறைகளை நீக்கி நன்மைகளை வழங்கி பிரார்த்தனைகள் நிறைவேற செய்யும்.
ஸ்ரீ ராகவேந்தரின் ஒன்பது மாதவ ஆசார்ய குருமார்களின் சமாதி அமைந்து உள்ள மிகவும் புனிதமானதும் சக்தி வாய்ந்ததுமான ஸ்தலமாக திகழ்கின்றது.
இந்த ஒன்பது சமாதிகளில் அந்த மகான்கள் இன்றும் வாழ்ந்து கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.
இந்த இடம் தான் ராமாயணத்தில் சொல்லப்படும் கிஷ்கிந்தா.சுக்ரீவரும் அவரது வானர சேனையும் இங்கு தான் இருந்ததாக சொல்லப்படுகிறது.
நவபிருந்தாவனம் அமைந்து இருக்கும் இடம் ஒரு தீவு.
ஒரு புறம் துங்கா நதி ஓடுகிறது.மறுபுறம் பத்ரா நதி ஓடுகிறது.இரண்டும் சங்கமித்து துங்கபத்ரா நதியாக மாறும் இடத்தில் ஒரு பாறையின் மேல் உள்ளது நவபிருந்தாவனம்.
அநேகொந்தியில் இருந்து மோட்டார் படகு மூலம் தான் இந்த இடத்தை சென்று அடைய முடியும்.சீதையை தேடி புறப்பட்ட ராமரும் லக்ஷ்மணரும் இந்த பாறையின் மேல் தங்கி இருந்ததாக வரலாறு.மேலும் இந்த இடத்தில் தான் ராமர் ஆஞ்சநேயரை சந்திக்கிறார்.அந்த இடத்தில் தான் ஒன்பது மகான்களின் சமாதி அமைந்துள்ளது

1. ஸ்ரீ பத்மநாப தீர்த்தர் : . நவபிருந்தாவனத்தில் முதல் பிருந்தாவனம் ஸ்ரீமத்வமதயதி. காகதீய ராஜனின் அமைச்சராக இருந்த ஸோபன பட்டர் வியாகரணம், தர்க்கம் போன்றவற்றில் மிகச்சிறந்து விளங்கினார்.
2. ஸ்ரீ ஜய தீர்த்தர் : இரண்டாவது பிருந்தாவனம் ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்தரின்
( மத்வாச்சாரியாரின் நான்கு சீடர்களுள் ஒருவர்) சீடரான
ஸ்ரீ ஜய தீர்த்தருடையதா அல்லது ஸ்ரீ ரகுவர்யரின் பிருந்தாவனமாப என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.
( மத்வாச்சாரியாரின் நான்கு சீடர்களுள் ஒருவர்) சீடரான
ஸ்ரீ ஜய தீர்த்தருடையதா அல்லது ஸ்ரீ ரகுவர்யரின் பிருந்தாவனமாப என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.
3. ஸ்ரீ கவீந்த்ர தீர்த்தர் : மூன்றாவதாக இங்கு பிருந்தாவனம் கொண்ட
ஸ்ரீ ஜய தீர்த்தரின் சீடரான ஸ்ரீ வித்யாதிராஜரின் சீடர் ஆவார்.
ஸ்ரீ ஜய தீர்த்தரின் சீடரான ஸ்ரீ வித்யாதிராஜரின் சீடர் ஆவார்.
4. ஸ்ரீ வாகீச தீர்த்தர் : இவர் கவீந்த்ர தீர்த்தரின் சீடர். தனது குருவைப்போலவே பாண்டித்யம் கொண்டவர். இவர் தனது குருவின் அருகிலேயே நவபிருந்தாவனத்தில் பிருந்தாவனஸ்தராகி அருளுகின்றார்.
5. ஸ்ரீ வியாசராஜர் : நவபிருந்தாவனத்தில் நடு நாயகமாக ஸ்ரீ பிரகலாதர் தவம் செய்த அதே இடத்தில் பிருந்தாவனம் கொண்டவர் வியாசராஜர்.
முன் அவதாரத்தில் இவரே பிரகலாதன், பின்னர் இவரே நாம் எல்லோரும் வழிபட ராகவேந்திரராக திருஅவதாரம் செய்தார்.
முன் அவதாரத்தில் இவரே பிரகலாதன், பின்னர் இவரே நாம் எல்லோரும் வழிபட ராகவேந்திரராக திருஅவதாரம் செய்தார்.
6. ஸ்ரீ ஸ்ரீநிவாச தீர்த்தர் : இவர் ஸ்ரீ வியாசராஜ சுவாமிகளின் பூர்வாச்ரம தமக்கையின் மகன் மற்றும் சீடர் ஆவார்.
7. ஸ்ரீ ராமதீர்த்தர் : இவர் ஸ்ரீநிவாச தீர்த்தருக்குப் பின் பட்டத்திற்கு வந்தார். இவர் வியாசராஜர் அருளிய கிரந்தங்களை போதிப்பதிலும், பிரவசனம் செய்வதிலும் பெரும் பங்காற்றினார்.
8. ஸ்ரீ சுதீந்த்ர தீர்த்தர் : காமதேனுவாய், கற்பக விருட்சமாய் திகழும், இன்றைக்கு பூலோகமே மெய்மறந்து கொண்டாடும் ஸ்ரீராகவேந்த்ர சுவாமிகளை நமக்கு தந்தருளியவர் ஸ்ரீசுதீந்த்ர தீர்த்தர்.
9. ஸ்ரீ கோவிந்த ஓடயர்: இவர் ஸ்ரீவியாசராஜரின் சமகாலத்தவர், அவருக்கு முன்பே இங்கு பிருந்தாவனஸ்தரானவர்.
.நவபிரிந்தாவனத்தில் ஒன்பது சமாதி போக ஆஞ்சநேயர் மற்றும் ரங்கனாதருக்கும் சிறு சன்னதிகள் உள்ளது.
இந்த ஒன்பது மகான்களில் முதல் ஆசார்யர் ஸ்ரீ பத்மநாபா தீர்த்தர்.இவர் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.இவர் தான் மத்வசார்யரின் முதல் சீடர்.உலகின் முதல் ஜீவா சமாதி இவருடையது தான்.பல கால கட்டத்தில் வாழ்ந்த ஒன்பது மகான்களின் சமாதிகள் இங்குள்ளது.
வணக்கம்
ReplyDeleteஅம்மா
சிறப்பான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நவ பிருந்தாவனம் பற்றி அறிந்தேன் அம்மா... நன்றி...
ReplyDeleteஅருமையான தலம் பற்றி அறிந்தேன்! நன்றி!
ReplyDeleteநவ பிருந்தாவனம் பற்றி அறியத் தந்தீர்கள் அம்மா...
ReplyDeleteபடங்கள் அருமை.
பிருந்தாவனம் சென்று குடும்பத்தோடு வணங்கியுள்ளோம். மறுபடியும் தங்களது பதிவால் சென்றோம். பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete