Friday, July 31, 2015

ஆயிரம் கண்ணுடையாள், அங்கயற்கண்ணி




அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியாய் விளங்கும் அன்னை ஆதிபராசக்தி திரும்பிய இடமெல்லாம் திருக்கோவில்களாகத் திகழும்  
பிருந்தாரண்ய க்ஷேத்திரம் என்று முற்காலத்தில் வழங்கப் பட்ட  திருவல்லிக்கேணி திருத்தலத்தில்  அளப்பருங் கருணையைத் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது ரேணுகா பரமேஸ்வரி கோவில்

கேட்கும் வரங்களை கேட்டவாறே தரும் தாய் ஆயிரம் கண்ணுடையாள், அங்கயற்கண்ணி என்பது பக்தர்களின் அனுபவ  நம்பிக்கை

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலுக்கு வாயு திக்கில் (வடமேற்கில்) கோவில்கொண்டு ஆயிரம் கண்ணுடையாள், அங்கயற்கண்ணி, மாரி என பல திருப்பெயர்கள் கொண்டு விளங்குபவள் எல்லையம்மனான  ரேணுகா பரமேஸ்வரி.

 ஆலயம் சமீபத்தில் புனராவர்த்தனம் செய்யப்பெற்று. மூலவர் சந்நிதி முழுவதும் கருங்கல் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. 

சாலாகார விமானம், அலங்கார மண்டபம் ஆகியவையும் புதிதாக அமைக்கப்பட்டு, கண்கவரும் வண்ணங்கள் தீட்டப்பட்டு காண்போரை பக்திப் பரவசத்தில் ஆழ்த்துகிறது .

அனுக்ஞை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி முதலியவற்றோடு தொடங்கிய, அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு ஹோமங்கள் மிகச்சிறந்த வேத விற்பன்னர்களைக் கொண்டு சிறப்பாக நடத்தப்பட்டு சமீபத்தில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தேறியிருக்கிறது..!

 ஐந்து நாட்களும் ஊரே விழாக்கோலம் பூண்டிருக்க, தோரண வாயில், மின் விளக்கு அலங்காரம் என திரும்பிய பக்கமெல்லாம் ஒளிவெள்ளம், பக்தி வெள்ளம்.இந்த கும்பாபிஷேக விழா அம்மனின் கீர்த்தி எத்தகையது என்பதை
பறைசாற்றுகிறது..!.

சென்னை திருவல்லிக்கேணியில், ஜாம்பஜாருக்கு தெற்கில், தேவராஜ முதலி தெருவில் அமைந்துள்ளது .  அன்னையிடம் முறையிட்டால் தீராத துன்பங்கள் இல்லை; வாராத இன்பங்கள் இல்லை

6 comments:

  1. இக்கோயிலுக்குச் சென்றதில்லை. வாய்ப்பு கிடைக்கும்போது செல்வேன். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. திருவல்லிக்கேணி ரேணுகா பரமேஸ்வரி கோவிலின் தகவலுக்கு நன்றி அம்மா...

    ReplyDelete
  3. வெகுநாட்களுக்குப் பிறகு அங்கயற்கண்ணியின் அருளாசியுடன் இங்கு வருகை தந்துள்ளேன். பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  4. ஆயிரங் கண்ணுடையாள் பற்றி அறியத் தந்தீர்கள் அம்மா...

    ReplyDelete
  5. வெள்ளிக்கிழமை அம்மன் தரிசனம் அருமை! படங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  6. அருமை! பகிர்விற்கு மிக்க நன்றி!

    ReplyDelete