Wednesday, November 11, 2015

ஸ்கந்தசஷ்டி திருவிழா




‘ ‘ஸ்கந்த சஷ்டி’ என்பது ஆறுமுகப் பெருமான், சூரனை வதைத்த பெருமையைக் கொண்டாடும் விழாவாகத்திகழ்கிறது... 

ஐப்பசி மாதம், சுக்ல பட்ச பிரதமை முதல் சஷ்டி வரை உள்ள ஆறு நாட்களும் ஸ்கந்த சஷ்டி காலமாகும்..சஷ்டி’என்றால் ஆறு என்றுபொருள். 
திதிகளில் ஆறாவது என்பதால்  ‘சஷ்டி’ என்று பெயர்.

 தனிச்சிறப்பு வாய்ந்தத முருகனின் அறுபடை வீடுகளில், திருச்செந்தூர் 
. ‘திருச்சீரலைவாய்’ என அழைக்கப்பட்ட திருச்செந்தூரில் அமைந்துள்ள  கடற்கரைக் கோயில் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் சிறப்பு வாய்ந்தது. 

திருச்செந்தூரில் கொண்டாடப்படும் ‘ஸ்கந்த சஷ்டி’ விழா உலகப் பிரசித்தி பெற்றது. 

 முருகப்பெருமான் நிகழ்த்தும் சூர சம்ஹார வைபவத்தைக் காணக்கண் கோடி வேண்டும்.

 பரம்பொருளாம் இறை பதம் சென்றடைய ஆணவம், கன்மம், மாயை போன்ற தடைகளாமும்மலங்களின் மொத்தத் தோற்றமானவன் சூரபத்மன். 

அதர்மத்தின் வித்தான அசுரனது கொடுமையால் விளைந்த தேவர்களின் சிறைவாச குறைதீர்க்கும் பொருட்டு சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோற்றமானான் கந்தப் பெருமான்.
ஆறுமுகன் தரிசனம் வேண்டி, தேவ குரு பிரகஸ்பதி செந்தூர் தலத்தில் தவமிருக்க, அவருக்குக் காட்சி தந்த முருகப்பெருமான் இங்கேயே தங்கினார்.

தேவகுருமூலம் சூரபத்மனின் கொடுங்கோல் பின்னணியை தெரிந்துகொண்டு. அவனைத் திருத்தி ஆட்கொள்ள சமாதானம் வேண்டி தமது படைத்தளபதி வீரவாகுவைத் தூதாக அனு ப்பினார்.
 ஆண்டவன் அருட் குணத்தைப் புரிந்து கொள்ளாத ,. போருக்குக் கிளம்பி வந்த சூரபத்மனை வெற்றி கொண்டார் முருகப் பெருமான். 
 ‘ஆணவம்’ எவ்வகையில், எத்தனை முறை தலையெடுத்தாலும் அது பூண்டோடு அழிக்கப்பட்டே தீரும் என்பதை உணர்த்தி. இறுதியில் சூர பத்மனை வாஞ்சையோடு ஆட்கொள்ளவும் செய்தார் முருகப்பெருமான்..
.
முருகப்பெருமான் சூரபத்மனை கொல்லாமல் மாறாக, மாமரமாக உருமாறி எதிர்த்த சூர பத்மனை தமது வேலாயுதத்தால் இரண்டாகப் பிளந்தார். 
இருகூறா கப் பிளந்த மாமரம், சேவலாகவும், மயிலாகவும் மாறி 
அசுர சுபாவத்தால் எதிர்க்கவும் முனைந்தது. 
தம் அருட்பார்வையை  செலுத்தி ஆட்கொண்டார் முருகப்பிரான். கொடியவனான சூரன் சேவல் கொடியானான்; 
வேலவனைத்தாங்கும் வாகனமும்ஆனான்.
நடந்தது சம்ஹாரம் என்றாலும், சூரபத்மனைப் பொறுத்தவரை அவனுக்கு நிகழ்ந்தது மங்கலமே. அனைவரையும் அலற வைத்தவன், அனைவராலும் வணங்கப்படுபவனாக ஆன  பெரிய மாற்றமும் பேறும் ஆறுமுகனால்  அருளப்பட்டது..!.

ஸ்கந்த சஷ்டியன்று, யானை முகன், சிம்ம முகன், சூரபத்மன் என மூன்று ரூபங்க ளில் வரும் அசுரர்களை வதைக்கிறார் முருகப் பெருமான். 

இம்மூன்று அசுரர்க ளும்முறையே மாயை, கன்மம், ஆணவம் போன்றவற்றை உணர்த்துகின்றன. மாயையை உணர்த்தும் யானை முகன் முதலில் வதைக்கப்படுகிறான்.

மாயை ஒழிந் தால் கன்மம் தானாகவே தொலையுமாதலால் அடுத்து, 
சிம்ம முகனை வதைக்கிறார். 

மூன்றாவதாக, ஆணவ மலமான சூரபத்மன். ஆணவ மலம் ஒடுங்குமே தவிர, அழியாது. எனவே, சூரபத்மனை மயிலாகவும், சேவலாகவும் ஒடுக்கிப் பணிகொண்டார் முருகப் பெருமான். என்பதே ஸ்கந்த சஷ்டி உணர்த்தும் தத்துவப் பொருளாகும்.

கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா?
என வியப்புறும் வண்ணம்  மக்கள் பங்கு பெற்று களிப்புறும் திருச்செந்தூர் ஸ்கந்தசஷ்டி திருவிழா 12 நாட்கள் விமரிசையாக நடை பெறுகிறது. 

முதல் ஆறு நாட்கள் சஷ்டி விரதம் மேற்கொள்ளப்பட்டு, 
முடிவில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. 

ஏழாம்நாள் முருகப்பெருமான் – தெய்வானை திருக்கல்யாண வைபவம். அடுத்த ஐந்து நாட்கள் சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை சாதிக்கிறார். 


‍!

9 comments:

  1. கந்த சஷ்டி விழாவிற்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. கந்த சஷ்டி குறித்த பக்தி மயமான பதிவு..
    வாழ்க நலம்..

    ReplyDelete
  3. அறியாதன அறிந்தேன்
    படங்களுடன் சிறப்புப்பதிவு
    வெகு சிறப்பாக உள்ளது
    தங்களுக்கும் தங்கள் குடும்ப்த்தாருக்கும்
    இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அழகான படங்கள், முருகபெருமான் பற்றிய செய்திகள் அனைத்தும் அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அறியாதன்அறிந்தேன் நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  6. ஸ்கந்த சஷ்டி பற்றிய விளக்கமான பதிவு;நன்றி

    ReplyDelete
  7. திருமதி இராஜ ராஜேஸ்வரி மேடம் பதிவும் படங்களும் நிறைய விஷயங்கள் தெரிந்துகொள்ள உதவின. தேடித்தேடி விஷயங்களை எப்படித்தான் சேகரித்து விளக்கமாக பதிவிலும் சொல்லிவிட முடிகிறது. படிக்கும் போதே மனசு ஒரு பரவச நிலமையில லயித்து விடுகிறது. வேறு பக்கமே கவனம் செல்வதில்லை. உங்க ஆத்மார்த்த அர்ப்பணிப்பு அற்புதமா இருக்கு. நன்றி என்று வெறும் வார்த்தைகளில் சொல்வது மிகவும் கம்மிதான். வேறு எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லையேமேடம்

    ReplyDelete
  8. கந்தசஷ்டி பற்றிய பதிவுக்கு நான் கருத்திடாமல் இருந்தது
    கண்டு பிடித்தேன். மகிழ்ச்சி வழமை போன்று நல்ல பதிவு
    மிக்க நன்றி சகோதரி.
    ஆரோக்கியம் பெருகட்டும்.

    ReplyDelete