Monday, November 30, 2015

சங்காபிஷேக வைபவம்


ஓம் பாஞ்சஜந்யாய வித்மஹே பவமாநாய தீமஹி 
தந்ந சங்க ப்ரேசோதயாத் .சங்கு காயத்ரி..

சங்கமத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோபரி
அங்க லக்ஷ்ணம் மனுஷ்யாணாம் ப்ரும்ம ஹத்யாதிகம் தகேத்'
என்பது வேதவாக்கியம்..

கார்த்திகை மாத சோமவாரங்களில் சிவாலயங்களில் அபிஷேகப்பிரியர். சிவனுக்கு சங்கினால் அபிஷேகம் செய்தால் பரமானந்தம் வழங்குவார்.

  சங்கில் புனித நீர் நிரப்பி, அந்தத் தீர்த்தத்தை கங்கையாகப் பாவித்து கங்கை சடைமுடியானுக்கு,  சங்காபிஷேகம் செய்வது வழக்கம்.

 சங்கு, செல்வத்தின் சின்னம். வற்றாத பொருள் செல்வம் வேண்டும் இல்லறத்தாரும், இறைவனின் அருட்செல்வம் வேண்டும் துறவிகளும், சங்கு பூஜையை மேற்கொள்கிறார்கள். - 

வைணவத்தில் சங்கு வீரத்தின் சின்னமாகத் திகழ்கிறது. பகவான் கிருஷ்ணனின் பாஞ்சஜன்யம் என்ற சங்கொலி கேட்டு குருக்ஷேத்ரமே நடுங்கியது. 

 சங்கு, இயற்கையாக கிடைக்கக் கூடியது. வெண்மையானது. சுட்டாலும் வெண்மை தருவது. மனித மனங்களும் சங்கைப்போல, நிலையான தன்மையுடையதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே அபிஷேகத்திற்கு  சங்கைப் பயன்படுத்தி சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. 

சங்கினுள் பால், பன்னீர், பஞ்ச கவ்யம் போன்றவற்றை நிரப்பி அபிஷேகம் செய்தாலும், அதை கங்கையாகப் பாவித்தே அபிஷேகம் செய்யப்படுகிறது

. கார்த்திகை மாதத்தில் இறைவன் அக்னிப் பிழம்பாக இருப்பார். அவரைக் குளிர்விக்கும் பொருட்டு சங்காபிஷேகம் செய்வார்கள். கார்த்திகை மாதம் சூரியன் பகை வீடான விருச்சிகத்தில் சஞ்சரிப்பார். அப்போது சந்திரன் நீச்சத்தில் இருப்பதால் தோஷம் என்பர். இந்த தோஷத்தை நீக்கவே சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது.

தலைவாழை இலையில் அரிசி போட்டு, தர்ப்பைப் புல் வைத்து சங்குக்கு சந்தனம், குங்குமம் வைத்து, மலர்களால் அலங்கரிக்க வேண்டும். இந்தச் சாதாரண சங்குகளின் நடுவில் ஒரு தட்டில் சிவப்பு நிறத் துணியில் மிகப்பெரிய வலம்புரிச் சங்கை வைத்து, நீர் விட்டு, வாசனை திரவியங்கள் போட்டு அருகில் சிவபெருமானைக் கலசத்தில் வர்ணிக்க வேண்டும்.

அபிஷேக ஆராதனைகள்சங்குகளைச் சுற்று முறையில் அடுக்கி வைத்தும், ஸ்வஸ்திகம், சங்கு, திரிசூலம், சிவலிங்கம், பத்மதளம், வில்வதளம் வடிவங்களிலும் அடுக்கி வைத்து வழிபடலாம்.

சோமவாரத்தில் சங்காபிஷேகத்தைத் தரிசித்தால் ஆயுள் விருத்தி உண்டாகும், தீராத நோய்களும் தீரும், துர்சக்திகள் நம்மை விட்டு விலகும் என்பது நம்பிக்கை.


9 comments:

  1. நல்ல விளக்கங்கள். அழகிய படங்கள்.

    ReplyDelete
  2. மன நிறைவோடு சங்காபிஷேகம் கண்டேன். நன்றி.

    ReplyDelete
  3. அரிய செய்திகளுடன் - இனிய பதிவு.. வாழ்க நலம்..

    ReplyDelete
  4. விளக்கங்களும் படங்களும் மிகவும் அருமை அம்மா...

    ReplyDelete
  5. அபிஷேகத்துக்கு வலம் புரிச் சங்குதான் உபயோகிப்பார்களா

    ReplyDelete
    Replies
    1. பிரதான சங்காக வலம்புரிச் சங்கு இடம் பெறும்..ஒரு வலம்புரி சங்கு, கோடி இடம்புரி சங்குகளுக்கு சமம். எனவே, சுவாமிக்கு வலம்புரி சங்கினால் அபிஷேகம் செய்தால், விசேஷமானது.

      வலம்புரிச்சங்குகள் கிடைத்தற்கு அரியவை..ஆகவே பிரதானமான சங்கு மட்டும் வலம்புரிச்சங்காக அமையும்..

      கருத்துரைகளுக்கு நன்றிகள்..

      Delete
  6. கண் நிறைத்த காட்சிகளும் கருத்துகளும்!

    ReplyDelete
  7. indru than sugavaneswarar koilil sangu api sagam paarthan athan palani ungal padivil arithu kondan vaalthukal:

    ReplyDelete
  8. சங்காபிஷேக வைபவத்துடன் எவ்வளவு சிறப்பான விஷயங்கள் ஸ்லோகங்கள் மனதுக்கு நிறைவான பகிர்வு அழகழகான படங்கள் காடுதல் சிறப்பு.

    ReplyDelete