கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல் – அம்மாபூவோடு வருமே பொட்டோடு வருமே சிங்காரத் தங்க வளையல்
வங்கி வளையல் சங்கு வளையல் முத்து முத்தான வளையலுங்க
சித்தானை உடம்பு வத்தாமல் இருந்தால் ஒத்தாசை செய்யும் வளையல்
அன்ன நடை பின்னி வர சின்ன இடை மின்னி வர முன்னாடி வரும் வளையல் இதுஅத்தை மகள் ரத்தினத்தின் அச்சடித்த சித்திரத்தின்
கையோடு வரும் வளையல் வங்கி வளையல் ..
சங்கு வளையல் முத்து முத்தான வளையலுங்க...
பாரம்பரிய வழக்கமாக வளைகாப்பு, சீமந்தம் என்று கொண்டாடும் விழாவில் பிரதான மான அம்சமே கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு வளையல்கள் அடுக்குவது மட்டுமல்ல, அந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் எல்லா வயதுப் பெண்களுக்கும் வளையல் அடுக்குவதுதான்.
கண்ணாடி வளையலில் தேவி தத்துவம், சாத்வீகத் தன்மை அருள் நிரம்பியுள்ளன.
வளையல்கள், சூழ்ந்துள்ள சாத்வீக, சைதன்ய அதிர்வலைகளை ஈர்க்கின்றன.
கண்ணாடி வளையல்களின் ஓசை, தீய சக்திகளை விரட்டி அடித்து தேவியின் அருள் கிடைக்க உதவுகிறது;
வளையல்களை அணிந்திருக்கும் பெண்ணின் மீது விழும்
கெட்ட பார்வையையும் (திருஷ்டி), கெட்ட சக்திகளையும் அழிக்கிறது.
பச்சை நிறக் கண்ணாடி வளையலில் உள்ள சாத்வீகத் தன்மையும் உலகாளும் அன்னையின் பாதுகாப்பும் அரணாக சூழ்ந்து சேர்ந்து மணிக்கட்டிலும் விரல்களிலும் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி, தீய சக்திகளிடமிருந்து பெண்களைக் காப்பாற்றுகின்றன.
சிவப்பு நிறம், கெட்டதை அழிக்கும் சக்தியையும் நல்லனவற்றை அதிகம் கிரகிக்கக் கூடிய சக்தியும் கொண்டது.
வளைகாப்பு வைபவம் ஒன்றில் கலந்துகொண்டோம்..
சிசுவின் உருவாக்கத்தில் இருந்து குழந்தையாக பிறக்கும் வரை மேற்கொள்ளவேண்டிய கட்டங்களை எழிலுற பார்த்துப்பார்த்து செதுக்கி சிற்பமாக விழாவை சிறப்பித்திருந்த நேர்த்தி சிந்தை கவர்ந்தது..
ஒரு குழந்தை கருவாகி உருவானது முதல் அதன் வளர்ச்சியில் பெற்றோர் பங்கும் ,, சுற்றத்தார் பங்கும் சிந்தித்து காட்சியாக்கப்பட்டிருந்தது..
சுகப்பிரசவத்திற்கு அடிப்படையான உணவு , சுகாதாரம் , ,, மனப்பயிற்சி, எளிய உடற்பயிற்சி ,மூச்சுப்பயிற்சிகள் , மருத்துவமனைக்கு செல்ல தயாராக எடுத்துவைத்துக்கொள்ளவேண்டிய துணிமணிகள் , பொருள்கள் , என கோப்புகளாக தயாரித்து வைத்துக்கொள்கிறார்கள்..
குழந்தை பிறந்ததும் குழந்தைக்கு முதல் மாதத்தில் அதற்கு வண்ணங்களைதெரியாதாம்.. எல்லாம் கறுப்பு வெள்ளையாகத்தான் அறிந்துகொள்ளுமாம்..
ஆகவே தாய் தந்தையின் கறுப்பு வெள்ளை புகைப்படத்தை தயாரித்து குழந்தைக்கு காட்டி முதல் மாதத்தில் அறிமுகப்படுத்த ஏற்பாடு செய்கிறார்கள்..
வெள்ளை பின்னனியில் கருப்பு புள்ளி , சிலநாட்கள் கழித்து புள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து குழந்தையின் பார்வைக்கு பயிற்சி அளிக்க தெர்மகோல் அட்டைகளில் கறுப்பு மை பயன் படுத்தி தயாரித்து வைத்துக்கொள்கிறார்கள்..
கர்ப்பத்தில் இருந்து குழந்தை பிறந்து வளர்ந்து நடமாடும் வரை தாயின் பங்களிப்பு மிக முக்கியம் . கருவில் இருந்து நடமாடும் வரை ஒரு குழந்தையை பராமரிப்பதற்கு ஆலோசனை வழங்கி வருகிறது
சமுதாயத்தில் நல்லவர்களாகவும், அறிவு திறன் கொண்டவர்களாகவும் குழந்தைகள் உருவாக்கப்படுவது அன்னையின் கைகளில் தான் உள்ளது. ஒரு தாய்க்கு அதற்கான பயிற்சிகளை தான் சிருஷ்டி மூலம் சிருஷ்டிக்கப்படுகிறது.
கூட்டுக்குடும்ப வாழ்க்கை விடைபெற்ற நிலையில் புதிய தாய் திகைத்து தடுமாறாமல் சரிவர பராமரிக்க பயிற்சி அளிக்கிறார்கள்..
வெளிநாடுகளில் கட்டாயப் பயிற்சி உண்டு..
அன்னை தந்தை இருவரும் பிரசவத்திற்கு ஒரு மாதம் முன்னரே மருத்துவமனை சென்று தங்களுக்கான உபகரணங்கள் , அறை ,படுக்கை என அனைத்தும் பதிவு செய்து கொள்ள வேண்டுமாம்..
வெளி நாடுகளில் குழந்தை பிறக்கும் முன்பே ஆணா பெண்ணா என அறிவித்துவிடுகிறார்கள்..நம் நாட்டில் தான் தடை...
வளைகாப்பு விழாவில் பிறக்க இருப்பது பெண்குழந்தையானால் பிங்க் வண்ணத்திலும் , ஆண்குழந்தையானால் ப்ளூ நிறத்திலும் இருக்குமாறு உடைகள் , பொம்மைகள் என பரிசளிக்கிறார்கள்..
ஒரு ஆண் குழந்தை பிங்க் வண்ணத்தில் எதையும் அணிந்திருந்தால் கேலி செய்கிறார்கள்..
தொடர்புடைய பதிவு
வளைகாப்பு வைபவம்
( இந்த பதிவை அமெரிக்காவிலிருக்கும் ஒருவர் தன் மருமகளின் வளைகாப்பு விழாவின் போது புத்தகமாக வெளியிட்டு விழாவுக்கு வந்தவர்களுக்கு வழங்கி அந்த தகவலை எனக்கு தெரியப்படுத்தினார்,,,,)
Cake for Bangle Ceremony
ஆஸ்திரேலியாவில் ஆறுமாத குழந்தை - ஸ்ரீ தியா- நீச்சல் பயிறசி...
படங்களும் தகவல்களும் அருமை.
ReplyDeleteமனத்தை கொள்ளை கொள்ளும் படங்கள் அம்மா...
ReplyDeleteவளையல்கள் அணிவதால் இத்தனை நன்மைகள் நிகழ்கின்றனவா !!
ReplyDeleteஅருமையான கண்கவர் படங்களுடன் தாங்கள் இட்ட பகிர்வு மனத்தைக் கவர்ந்து சென்றது .வாழ்த்துக்கள் தோழி இனிய பகிர்வுகள் மென்மேலும் பெருகட்டும் .
மங்கலகரமான வளைகாப்பு சடங்கின் மகத்துவத்தை அறிந்தவர்கள் நம் முன்னோர்.. அழகிய படங்களுடன் - இனிய பதிவு..
ReplyDeleteவாழ்க நலம்..
படகோட்டி படத்தில் வாத்தியார் பாடும் பாடலோடு (பாடல் – வாலி) வளையல்கள் பெருமை பதிவிலும் கலகலத்தன. இப்போதெல்லாம் ஓசை வராத ரப்பர் வளையல்களைத்தான் பெண்கள் கையில் காணமுடிகிறது. ஆனாலும் இதுபோன்ற மங்கல நிகழ்ச்சிகளுக்கு கண்ணாடி வளையல்கள்தான் கட்டாயம் போடுகிறார்கள்.
ReplyDeleteபதிவிலுள்ள ஒவ்வொரு படத்தையும் பொறுமையாக ரசித்தேன். மகாத்மா காந்தி கோயில்களைப் பற்றி உங்கள் பதிவுகளில்தான் அடிக்கடி பார்க்க முடிகிறது. உங்கள் தேசபக்திக்கு ஒரு “சல்யூட்” செய்கிறேன்.
படங்களும் தகவல்களும் மிக அருமையாக இருந்தது....
ReplyDeleteவளைகாப்பின் சிறப்புகள், மிக அழகான புகைப்படங்களுடன் இனிய
ReplyDeleteபகிர்வு.நன்றி.
ஆஹா ! பார்த்தாலோ படித்தாலோ ஓர் தனி சந்தோஷமும், குதூகலமும் ஏற்படுத்தும் அற்புதமான பதிவு.
ReplyDelete>>>>>
தங்களைத் தட்டிக்
ReplyDeleteகேக்க ஆள் இல்லை என்பதால் ஏராளமான
கேக்குகளைக் காட்டி அசத்தியுள்ளீர்கள்.
நான் இதுவரை கேக் சாப்பிட்டதே இல்லை.
இனியும் சாப்பிடுவதாக இல்லை.
இருப்பினும் தாங்களே காட்டியுள்ளதால
அவற்றின் படங்களை மட்டும் வெகுவாக
ரஸித்....தேன்,
மகிழ்ந்...தேன்.
தேனினும் இனிமையாக உள்ளன.
>>>>>
அந்த வரவேற்பில் ..... ‘நம் சிந்தனைக்கு’
ReplyDeleteஎன்று எழுதியுள்ளது யாவும் ரஸிக்கும்படியாக உள்ளன ....
அதுவும் தங்களின் படங்கள் + விளக்கங்களால் மட்டுமே
என்றால் அது மிகையில்லை.
>>>>>
வளையல் படங்கள் மிக அழகு! பதிவும் மிகவும் சிறப்பாக இருக்கிறது!!
ReplyDeleteகல்யாணப்பொண்ணு ....
ReplyDeleteகண்ணான கண்ணு ........
கொண்டாடி வரும் வளையல் !
எனக்கு மிகவும் பிடித்தமான
அந்தக்கால சினிமாப்பாட்டு ! ;)
பகிர்ந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
>>>>>
அதில் வரும்
ReplyDelete‘சி த் தா னை
உடம்பு
வத்தாமல்
இருந்தால்’
!!!!!! ;)))))
தங்களுக்கும் இது இன்று பொருந்தும். ;)
வளையல்கள் தானே இந்தப்பதிவிட
உங்களுக்கு ஒத்தாசை செய்துள்ளது.
அதற்காகச் சொன்னேன்.
முறைக்காதீங்கோ !
>>>>>
ஆஹா ! கண்ணாடி வளைகள் அணிவதின் தாத்பர்யம்.
ReplyDeleteஅதில் உள்ள கலர்களில் உள்ள தெய்வீகத்தன்மை என
எவ்வாறெல்லாம் எழுதி கரெக்டாக முடிச்சுப்போட்டுள்ளீர்கள்.
சபாஷ் ! புத்திசாலி !!
__ __ __ __ யா !!!
கொக்கா !!!!
>>>>>
கை நிறைய வளையல்கள் அணிந்த
ReplyDeleteசித்தானைக்குட்டிகளைப் பார்ப்பதே
தனி அழகு தான்.
அன்னநடை போட்டு பொலிவான முகத்துடன்
மெல்ல மெல்ல தேர்போல நடந்து வருவார்களே !
வளைகள் அணிந்த கைகளாகக்
காட்டியுள்ள படங்கள் யாவும்
பனங்கற்கண்டாக இனிக்கின்றன.
>>>>>
சிருஷ்டி மையத்தில் செயல்பாடுகளை அழகாகக்
ReplyDeleteகோர்த்து கோர்வையாக அளித்துள்ளது தங்களின்
தனிச்சிறப்பு அல்லவோ !
பலருக்கும் பயன்படுமே!
>>>>>
//நம் நாட்டில் தான் தடை//
ReplyDeleteஆமாம். சமீபத்தில் என் வாரிசிக்கு வாரிசு
பெண்ணாகப் பிறக்கப்போகிறது என்று
எவ்வளவு ஆசையாக கற்பனைகள் செய்து,
மனதில் பெயர் சூட்டல் கூட நடத்தியிருந்தேன் !
சக்தியை எதிர்பார்த்தால் அது சிவமாகி விட்டது.
ஆம்பளை சிங்கமாகவும் லிங்கமாகவும் மாறிவிட்டது.
நினைப்பதெல்லாம் .... நடந்து விட்டால் ..... ;)
>>>>>
31.01.2013 பதிவுக்குச் சென்று
ReplyDeleteஉச்சி முதல் உள்ளங்கால் வரை அனைத்தையும்
மீண்டும் படித்து ரஸித்து மகிழ்ந்து வந்தேன்.
அற்புதம் ... அபாரம் ...
விஸ்வநாத் ஆனந்தின் ஆட்டம்.
ஸ்ரீதர்ஷனோ !
இருவரும் ஒருவரே தானோ ! ;)
>>>>>
ஆஸ்திரேலியக் குழந்தைக்கு நீச்சல் பயிற்சி
ReplyDeleteதிருச்செங்கோட்டில் காந்திக்குக் கோயில்
என எல்லாமே நிறைவு.
>>>>>
அனைத்துக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
ReplyDeleteஅன்பான இனிய நல்வாழ்த்துகள்.
பளிச்சென்ற
பதிவுக்கும்
பகிர்வுக்கும்
நன்றியோ நன்றிகள்.
oOo oOo 1281 oOo oOo
வளையல் அணி விழாவே தாய்மை அடைந்து இருக்கும் பெண்ணை மகிழ்ச்சியாக வைத்து இருக்கத்தான்.தாய்மை அடைந்த பெண்ணுக்கு
ReplyDeleteகுடும்பத்தினர் அனைவரும் அன்பாக ,ஆதரவாக இருந்தால் குழந்தை மனம், உடல் ஆரோக்கியமாய், பிறக்கும் என்பார்கள்.
ஸ்ரீதியா நீச்சல் பயிற்சியில் உடல் உறுதிபெற்று நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள். குழந்தை முதலே நீச்சல் பயிற்சி கற்றுக் கொண்டால் நல்லது என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள்.
தாய், சேய் நலமே குடும்பநலம், சமுதாய நலம்.
மகாத்மா கோவில் தகவலுக்கு நன்றி.
வளைகாப்பு விழாவில் எழுதி வைக்கப்பட்ட வாசகம் அருமை. அலங்காரதட்டுக்கள், கேக் எல்லாம் அழகு. பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்.
படங்கள் அனைத்தும் அருமை. இங்கு குழந்தைகளிடம் ஊதா நிறம், பிங்க் நிறம் இரண்டும் படும் பாடு இருக்கிறதே, அப்பப்பா...
ReplyDeleteவளைகாப்பு விழாவின் பின்னணியில் உள்ள பண்பாடு தொடர்பான செய்திகளைத் தாங்கள் எடுத்து வழங்கியமைக்கு நன்றி. இவ்வாறான பதிவுகள்தான் நம் மண்ணின் பெருமையை வெளிப்படுத்துவனவாகும்.
ReplyDeleteகண்ணாடி வளையல் ஒலியும் மெட்டி ஒலியும் அம்பாளுக்கு மிகவும் பிடித்தவை. உண்மைதான். தாய்மை அடைந்திருக்கும் பெண்ணின் அசைவுகளை மிக நளினமான இசை மொழியில் வெளிப்படுத்துகின்றதையும் உணர்ந்திருக்கின்றேன். வளையொலி போலவே அழகான பதிவு. நன்றி.
ReplyDelete