


க்ஷேமங்கள் கோரி விநாயகனை துதித்து சங்கரனையும் கெளரியையும் வர்ணித்து ஸ்ரீ ராமனையும் ஜானகியுயும் வர்ணித்து
கௌரி கல்யாண வைபோகமே லக்ஷ்மி கல்யாண வைபோகமே
வாசுதேவ தவபால அசுர குல கால சஷிவதனா ரூபி சத்யபாமா லோல
கொத்தோட வாழை மரம் கொண்டு வந்து நிறுத்தி கோப்புடைய பந்தலுக்கு மேல் கட்டு கட்டி கொத்தோட வாழை மரம் கொண்டு வந்து நிறுத்தி
கோப்புடைய பந்தலுக்கு மேல் கட்டு கட்டி கௌரி கல்யாண வைபோகமே
லக்ஷ்மி கல்யாண வைபோகமே வைபோகமே வைபோகமே

வளர்பிறையில் நாள் பார்த்து அதிகாலையில் வளை அடுக்குவார்கள்.
வளைகாப்பு காணும் வசந்தப் பெண்ணிற்கு வேப்பிலையில் காப்புப் போல் செய்து முதலில் கைகளில் போடுவார்கள்.
தாயின் கையில் அணியப்பெற்ற கண்ணாடி வளையல்களின் ஒலி குழந்தையின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியை தூண்டுவதாக அமைந்து. குழந்தைக்குப் பாதுகாப்பான உணர்வையும் நல்ல மனநிலையையும் தரும் என்று நிருபிக்கப்பட்டுள்ளது.
சீருலாவும் இன்ப நாதம் ஜீவ சங்கீதமாய் புது உலகு காண சீரான வளைகாப்பில் எல்லோரும் குழந்தையையும் தாயையும் வாழ்த்துவதால் பெண்ணுக்குள் இருக்கும் பயம் குறைந்து மிகவும் சந்தோசமும், மனத்தைரியமும் ஏற்படுவதுடன் அனைவரின் ஆசீர்வாதங்களும் வாழ்த்துக்களும், இறையருளும் கருவாக இருக்கும் சிசுவுக்கும், தாயாருக்கும் கிடைக்கப் பெறுவதனால் நல்வாழாவு வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

அர்ஜூனனின் மகன் அபிமன்யூ, அவரது தாய் சுபத்ரா வயிற்றில் இருந்தபோது அர்ஜூனன் அவரது தாய் சுபத்ராவிற்கு சக்கரவியூகம் ஏற்பாடுகளைப் பற்றிக் கூறியபோது கேட்டதால், சக்கரவியூகம் பற்றி அறிந்தான் ..
..அபிமன்யுவின் மனைவி உத்தரையின் கர்ப்பத்தில் இருந்த பரீட்சித்து மீது பிரம்மாஸ்திரத்தை ஏவியபோது, கண்ணன் அருளால், கர்ப்பத்துக்குள்ளேயே சுதர்சன சக்கரத்தால் காப்பாற்றப்பட்ட. பாண்டவருக்கு மிஞ்சிய ஒரே வாரிசு...தான் கர்ப்பத்தில் இருக்கும்போது ஒளிமிகுந்த சுதர்சன சக்கரத்துடன் தன்னை காத்தது யார் என்று தான் பார்க்கும் ஒவ்வொருவரையும் இவரா இவரா என்று பரீட்சித்து பார்த்து ,கிருஷ்ணபரமாத்மாவைக்கண்டதும் இவரே தன்னைக் காத்தவர் என்று உணர்ந்து கொண்டாரம் பரீட்சித் ...


இரண்யணின் மகன் பிரஹலாதன் அசுர வம்சமானாலும் தாய் லீலாவதியின் கருவில் இருக்கும் போது நாரதர் நாராயண நாமம் உபதேசம் கேட்டதால் நரசிம்ம அவதாரத்தால் காப்பாற்றப்படுகிறான் ..
இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சிகளும் கருவிலுள்ள குழந்தைக்கு தாயின் மூலம் கற்றுத்தரமுடியும் என்று பயிற்சி வகுப்புகளும் ,ஒலிநாடாக்களின் மூலமும் நிரூபித்துவருகின்றன....
மஹாலட்சுமியை பற்றிய பாடல்களைப் பாடிக் கொண்டே நெற்றி வகிட்டில் முள்ளம்பன்றியின் முள்ளால் லேசாக கீறி குங்குமம் வைப்பார்.
முள்ளம்பன்றியின் முள்ளால் கீறுவது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நன்மையைத் தரும்.
வகிடு என்ற சொல்லின் சமஸ்கிருதப் பெயரே ஸீமந்தம். பெண்களின் வகிட்டில் லட்சுமி குடியிருக்கிறாள். நெற்றியில் பொட்டிட்டால் அவள் சந்தோஷமடைவாள். அப்பெண்ணுக்கு பிறக்கும் குழந்தை செல்வ வளத்துடன் வாழும் என்ற நம்பிக்கையினால் ஸீமந்தம் நடத்துகிறார்கள்.
முதல் வளையல்கள் குலதெய்வத்திற்கும், இஷ்ட தெய்வங்களுக்கும், பின்னர் நேர்ந்து கொண்ட தெய்வங்களுக்கும் எடுத்து வைப்பார்கள். ஒரு கையில் பனிரண்டு வளை அடுக்கினால் மறு கையில் பதினொன்று அல்லது பதின்மூன்று என ஒற்றைப்படையில் இருக்கவேண்டும். எத்தனை எண்கள் வேண்டுமானாலும் அடுக்கிக் கொள்ளலாம். கைகள் கொள்ளும்வரையில் அடுக்கிக் கொள்ளலாம். அரக்கு வளையைக் கங்கணமாகப் போடுவதுண்டு.
மல்லிகை, முல்லை போன்ற வாசனைப்பூக்கள் கொண்ட பூச்சரத்தைப் பெண்ணின் உச்சந்தலையில் இருந்து ஆரம்பித்து கடிகாரச்சுற்றாக ஒவ்வொருவரும் சுற்றிக்கொண்டே வந்து பின்னலின் நுனியில் முடிப்பார்கள்.


கர்ப்பிணிப் பெண்ணோடு கூடவே திருமணம் ஆகி இன்னும் கர்ப்பம் அடையாத ஒரு பெண்ணிற்குத் துணைக்காப்புப் போடுவார்கள்.
ஆரத்தி எடுப்பார்கள்...

வளை அடுக்குவதன் காரணம், கர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்குத் தாயின் அசைவுகள், கைகளின் வளை ஓசை கேட்கும் என்பதாலேயே. அதுவும் தாயின் கைகளின் வளையல்களின் கலகலச் சப்தம் குழந்தைக்கு நன்கு கேட்கும்.
இரண்டாவது பிரவசத்திற்கு முன்பும் வளைகாப்பு செய்வார்கள். உறவுகள் எல்லாவரையும் கூப்பிட்டு பெரிதாகச் செய்யாமல் வீட்டில் இருக்கும் மாமியார், அம்மா அல்லது நாத்தனார் யாராவது கர்பினிப்பெண்ணுக்கு ஏதாவது ஒரு குறிப்பிட்டதினத்தில் வளையல் அடுக்கி சாமி கும்பிடுவார்கள்.
அது வீட்டுக்குள்ளேயே சிம்பிளாக முடிந்து விடும்.
அதனால் இது வெளியே தெரிவதில்லை.
எத்தனாவது குழந்தையானாலும் அதற்கு இந்த உலகம் புது வரவு தானே! அதனால் அந்த குழந்தையையும் வரவேற்பது நன்மை பயக்கும் செயலே
எட்டாவது குழந்தையாக வந்த கண்ணன் தானே கீதை சொன்னான்! தொடர்ந்து சடங்குகளின் அர்தங்களைப் புரிந்து கொண்டு கடைபிடிக்க வேண்டியது நம் மக்களின் கையில் உள்ளது.

சில்லென பூத்து சிரிக்கிற பெண்ணுக்கு திரு நாள் வளைகாப்பு...
வாழ்வில் திரு நாள் வளைகாப்பு...
வண்ணக் கூந்தலை அள்ளி எடுத்து...பின்னல் அழகாய் போட்டு...
தேன் மணக்கும் தாழை மலர்கள்...கொண்டு வடிவாய் ஜடையில் சூட்டு...
வெள்ளி நிலாவை... வெட்டி எடுத்து நெற்றியில் குங்குமம் இட்டு...
வடிவேலை அளந்த கண்கள் இரண்டில்... சித்திர மையை தீட்டு...
அன்னை மனம் பிள்ளை முகம் கண்டு பசி தீரனும்...






திருச்சி உறையூரில் ஸ்ரீ குங்குமவல்லி சமேத ஸ்ரீதான் தோன்றீஸ்வரர் ஆலயத்தில் அருளும் அம்பாளுக்கு, ஸ்ரீ வளைகாப்பு நாயகி எனும் திருநாமமும் உண்டு.
நவராத்திரியின்போது தினமும் மகா சண்டி ஹோமம் நடைபெறும். கர்ப்பிணிகளும், திருமண தடையால் தவிப்பவர்களும், பிள்ளை பாக்கியம் இல்லாதவர்களும் ஹோமத்தில் பங்கேற்று அம்மனை வணங்கினால் சுகப்பிரசவம் நிகழும், நல்ல வரன் அமையும், குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர் என்பது நம்பிக்கை.


திருவாலங்காட்டு வண்டார்குழலி அம்மனுக்கு ஆடியில் வளைகாப்பு உற்சவம் நடத்தும் வளையல்களைப் பிரசாதமாகப் பெற்று அணிந்து கொண்டால் மகப்பேறு கிட்டுவதாக நம்பிக்கை ....






வளைகாப்பு நேரில் பார்த்ததுபோல் படங்களும் செய்திகளும் அருமை. கர்ப்பத்திலிருக்கும் குழந்தையும் பல விசயங்களை கேட்கும் என்று இன்றைய விஞ்ஞானம் உறுதி செய்கிறது. நல்ல விசயங்கள்தான் கர்ப்பிணிகள் பார்க்கவும் கேட்கவும் வேண்டும். அருமை..
ReplyDeleteகுழந்தை கண் சிமிட்டுவதும் வாயசைப்பதும் தத்ரூபமாக இருக்கின்றன.
ReplyDeleteஅடேயப்பா!வளைகாப்பு பற்றி இவ்வளவு விவரங்களா? அருமை
ReplyDeleteஅருமையான வளைகாப்பில் கலந்து கொண்டு பல வகை கலந்த சாத விருந்துண்ட திருப்தி கிடைத்தது எனக்கு.
ReplyDeleteவளைகாப்பைப் பற்றிய அத்தனை தகவல்களும் அறிய வேண்டியவையே.
காலையில் இந்தப் பதிவை காணும் போது மனம் மகிழ்ச்சி கொள்கிறது.
நன்றி பகிர்விற்கு,
ராஜி.
வளைக்காப்பு எந்த முறையில் செய்ய வேண்டும் என்பதையும், அதற்கு ஆன்மிகமும் மருத்துவமும் சொல்லும் விளக்கமும் படங்களுடன் அருமை...
ReplyDeleteவளைகாப்பு படங்கள், குழந்தைகள் படம் வளைகாப்பு பற்றிய செய்திகள் எல்லாம் அருமை. வளை அலங்கார அம்மன் அழகு.
ReplyDeleteநன்றி.
வளைகாப்பு செய்வதன் நோக்கம் என்ன என்பதை அறிந்துகொண்டேன்.அழகான
ReplyDeleteபடங்கள்,நல்லதொரு பகிர்வு.நன்றி.
வளைகாப்பு தகவல்கள் தெரிந்து கொண்டேன். பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteஒரு வளைகாப்பு அணிவதர்க்குள் இத்தனை விசயங்கள் அடங்கியுள்ளதா !!.......அருமை !...மிக்க நன்றி சகோதரி .சொல்லப்பட்ட விசயங்களும் பகிரப்பட்ட படங்களும் மனதோடு ஒட்டிக் கொண்டன .மிகவும் சிறப்பான பகிர்வு. மேலும் தொடர என் வாழ்த்துக்கள் .
ReplyDeleteAyoooooooooooooo!!!!!!!!!
ReplyDeleterachithu rachithu padithen Rajeswari.
Epodume enakku kannadi valai mogam undu.
Neeraiya valayal parthathum santhoshathal manam thuillayathu.
viji
வளைக்காப்பின் மகத்துவத்தை தெரிந்து கொள்ள முடிந்தது. படங்கள் அத்தனையுமே அழகு.
ReplyDeleteSuperb post! Thanks for sharing another good post!
ReplyDeleteஅருமையான நல்ல தகவல்கள்! அருமையான படங்கள்!
ReplyDeleteவளைகாப்பு சீமந்தம் முதலாவது கர்ப்பகாலத்தில் மட்டும்தான் செய்வார்களோ?
தாயின் அந்த சிசுவின் நன்மை கருதி இவற்றைச் செய்வதாயின் ஏன் அடுத்ததடுத்து வரும் கர்ப்ப காலங்களில் அந்தத் தாய்க்கு இவற்றைச் செய்வதில்லை...
வளைகாப்பு பற்றிய அரிய தகவல்கள் அழகான படங்கள்! பகிர்வுக்குநன்றி!
ReplyDeleteIt's going to be end of mine day, but before ending I am reading this wonderful piece of writing to increase my know-how.
ReplyDeleteAlso visit my blog - Cheap Baltimore Ravens Jerseys
ஆஹா இவ்வளவு விஷயம் இருக்கா,தெரிந்துக் கொண்டேன்,மிக்க நன்றி மேடம்!!
ReplyDeleteமங்கலகரமான வளைகாப்பு வைபவப் படங்களும்,அது சம்பந்தமான விளக்கமும்,குட்டிக் குழந்தைகளின் படங்களும் மனதிற்கு இதமாக இருந்தது.
ReplyDeleteகல்யாணபரிசு” படத்தில் வரும் ஜிக்கி பாடிய “அக்காளுக்கு வளைகாப்பு! அத்தான் முகத்திலே புன்சிரிப்பு!” என்ற வரிகள் (பாடல்: பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்) நினைவுக்கு வந்தன.
ReplyDeleteவளைகாப்பு, சீமந்தம் முடிந்து, குழந்தை ஊஞ்சல் ஆடும் காட்சியும் மனதை நிறைத்து விட்டது.
ReplyDelete'லக்ஷ்மி கல்யாண வைபோகமே' பாட்டில் 'சசி வதன ருக்மிணி சத்யபாமா லோலா...' என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் வரும் இந்த ஆனந்த நிகழ்ச்சியை மிகச்சிறந்த ஒரு பதிவாக போட்டிருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்!
சிறப்பான தகவல்கள் மற்றும் படங்கள்.
ReplyDeleteஒரு வளைக்காப்பு ஸீமந்த நிகழ்ச்சிக்கே நேரில் சென்று வந்தது போன்ற நிறைவைத்தந்தது இந்தத்தங்களின் பகிர்வு.
ReplyDelete//வளர்பிறையில் நாள் பார்த்து அதிகாலையில் வளை அடுக்குவார்கள்.
வளைகாப்பு காணும் வசந்தப் பெண்ணிற்கு வேப்பிலையில் காப்புப் போல் செய்து முதலில் கைகளில் போடுவார்கள்.
தாயின் கையில் அணியப்பெற்ற கண்ணாடி வளையல்களின் ஒலி குழந்தையின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியை தூண்டுவதாக அமைந்து. குழந்தைக்குப் பாதுகாப்பான உணர்வையும் நல்ல மனநிலையையும் தரும் என்று நிருபிக்கப்பட்டுள்ளது. //
அட்டா எத்தனை எத்தனைத்தகவல்கள், எத்தனை எத்தனைப்படங்கள். அழகான வர்ணனைகள். நிறைய .... கைநிறைய வளைகள் அணிந்த பெண்ணின் இரு கரங்களும் காட்டியுள்ளது சூப்பரோ சூப்பர் படம்.
மனமகிழ்வுடன் ஸ்பெஷல் பாராட்டுக்கள், ;)))))
.
>>>>>>>>>>>
//முள்ளம் பன்றியின் முள்ளால் கீறுவது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நன்மையைத் தரும்.
ReplyDeleteவகிடு என்ற சொல்லின் சமஸ்கிருதப் பெயரே ஸீமந்தம்.
அழகான விளக்க இது.
//பெண்களின் வகிட்டில் லட்சுமி குடியிருக்கிறாள். நெற்றியில் பொட்டிட்டால் அவள் சந்தோஷமடைவாள். அப்பெண்ணுக்கு பிறக்கும் குழந்தை செல்வ வளத்துடன் வாழும் என்ற நம்பிக்கையினால் ஸீமந்தம் நடத்துகிறார்கள்.//
சாஸ்திர சம்ப்ரதாயங்களின் விளக்கங்களைத் தாங்கள் இவ்வாறு விளக்கமாக எடுத்துச் சொல்லும் போது ‘வளையோசை’ போல அதில் ஒரு கிக் ஏற்படுகிறது. ;)))))
>>>>>>
//முதல் வளையல்கள் குலதெய்வத்திற்கும், இஷ்ட தெய்வங்களுக்கும், பின்னர் நேர்ந்து கொண்ட தெய்வங்களுக்கும் எடுத்து வைப்பார்கள்.//
ReplyDeleteஆம். அதுதான் வழக்கம். குழந்தைகளுக்கான குட்டியூண்டு வளையல்களையும் கோயிலுக்காக எடுத்து வைப்போம்.
//ஒரு கையில் பனிரண்டு வளை அடுக்கினால் மறு கையில் பதினொன்று அல்லது பதின்மூன்று என ஒற்றைப்படையில் இருக்கவேண்டும். எத்தனை எண்கள் வேண்டுமானாலும் அடுக்கிக் கொள்ளலாம். கைகள் கொள்ளும்வரையில் அடுக்கிக் கொள்ளலாம். அரக்கு வளையைக் கங்கணமாகப் போடுவதுண்டு.
மல்லிகை, முல்லை போன்ற வாசனைப்பூக்கள் கொண்ட பூச்சரத்தைப் பெண்ணின் உச்சந்தலையில் இருந்து ஆரம்பித்து கடிகாரச்சுற்றாக ஒவ்வொருவரும் சுற்றிக்கொண்டே வந்து பின்னலின் நுனியில் முடிப்பார்கள்.//
எப்போதோ நிகழும் இதுபோன்ற மங்களகரமான நிகழ்ச்சிகளை எப்படிச்செய்யப்பட வேண்டும் என்று அனுபவசாலிகளுக்கே கூட மறந்து போய்விடக்கூடும்.
தங்களின் இந்தப்பதிவு என்றும் ஒரு AUTHORITY யாகப் பலருக்கும் பயன்படும்.
மிகவும் மகிழ்ச்சி. வெகு அருமையான பதிவு. மனம் நிறைந்த இனிய பாராட்டுக்கள். நன்றியோ நன்றிகள்..
-oOo-
This comment has been removed by the author.
ReplyDeleteகடைசியில் பெட்டிக்குள் அமர்ந்து தலையில் தொப்பி போட்டு கண் சிமிட்டும் பொடியன் அழகோ அழகு, கொள்ளை அழகு!
ReplyDeleteஅவனைக் கடத்தலாம் என்று எவ்வளவோ முயற்சித்தேன் முடியவில்லை ;(((((
வை.கோபாலகிருஷ்ணன் said...//
ReplyDeleteவளைகாப்பு வைபவத்தில்
கருத்தளித்து கலந்துகொண்டு ஆசீர்வதித்தற்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..
வை.கோபாலகிருஷ்ணன் said...//
ReplyDeleteவளைகாப்பு வைபவத்தில்
கருத்தளித்து கலந்துகொண்டு ஆசீர்வதித்தற்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..
இளமதி said...
ReplyDeleteஅருமையான நல்ல தகவல்கள்! அருமையான படங்கள்!
வளைகாப்பு சீமந்தம் முதலாவது கர்ப்பகாலத்தில் மட்டும்தான் செய்வார்களோ?
தாயின் அந்த சிசுவின் நன்மை கருதி இவற்றைச் செய்வதாயின் ஏன் அடுத்ததடுத்து வரும் கர்ப்ப காலங்களில் அந்தத் தாய்க்கு இவற்றைச் செய்வதில்லை...//
ஒவ்வொரு குழ்ந்தையும் புதுவரவுதானே ,,!
எத்தனை குழ்ந்தைகள் பிறந்தாலும் சிறிய அளவிலாவது வளைகாப்பு நடத்துவது சிறப்பு சேர்க்கும் ..
இளமதி said...
ReplyDeleteஅருமையான நல்ல தகவல்கள்! அருமையான படங்கள்!
வளைகாப்பு சீமந்தம் முதலாவது கர்ப்பகாலத்தில் மட்டும்தான் செய்வார்களோ?
தாயின் அந்த சிசுவின் நன்மை கருதி இவற்றைச் செய்வதாயின் ஏன் அடுத்ததடுத்து வரும் கர்ப்ப காலங்களில் அந்தத் தாய்க்கு இவற்றைச் செய்வதில்லை...//
ஒவ்வொரு குழ்ந்தையும் புதுவரவுதானே ,,!
எத்தனை குழ்ந்தைகள் பிறந்தாலும் சிறிய அளவிலாவது வளைகாப்பு நடத்துவது சிறப்பு சேர்க்கும் ..
இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ணன் said...//
வளைகாப்பு வைபவத்தில்
கருத்தளித்து கலந்துகொண்டு ஆசீர்வதித்தற்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..//
அ ப் ப டி யா ?
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம் !!!!!!!
சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
மனம் நிறைந்த ஆசிகள்.
எல்லாம் நல்லபடியாக ஆகட்டும். ;)