Thursday, February 14, 2013

ரோஜா.. ரோஜா ...












ரோஜாக்கள்  கண்களுக்குக் குளிர்ச்சியும் மனதுக்கு 
மகிழ்ச்சியும் தந்து மகிழ்விப்பவை ...

வெற்றிபெற்றவர்களை பாராட்டுவதற்கும் 
 நோயுற்றவர்களுக்கு ஆறுதல் சொல்வதற்கும் ,
எல்ல்லையற்ற அன்பை பரிமாறிக்கொள்வதற்கும்  
ரோஜாப்பூங்கொத்து கொடுக்கறோம். 

இருமன்ம் இனிதாய் இணையும் திருமணம் போன்ற மங்களவிழாக்களும் 
பிறந்தநாள் விழாக்களுக்கும்  ரோஸ் பொக்கே' கொடுப்பது இனிமை சேர்க்கிறது ..

.திருமணம் போன்ற விழாக்களை, அலங்கரிப்பதிலும் ரோஜாக்களின் பங்கு மிகவும்  முக்கியமானது. 

பரிசாகக் கொடுப்பதற்கு ரோஜாப் பூங்கொத்தையும் ஒற்றை ரோஜாவையும் தவிர சிறந்தது வேறு இருக்கிறதா என்ன ..!

எல்லாரும் நண்பர்களுக்கும், பிரியமானவர்களுக்கும் ரோஜாக்களைப் பரிசாக கொடுத்து அவர்களையும் முகமும் அகமும் மலரவைப்போம் ...

  ஃப்ரான்ஸ் நாட்டின்  தேசிய மலர் ரோஜா ....

உலகிலேயே நெதர்லாந்துதான் ரோஜா ஏற்றுமதியில் முனனனியில் இருக்க்கிறது ...

 சின்ன, துளித்துளியான  ரோஜா முதல், பெரிய ரோஜா வரை பல வகைகள் இந்த உலகம் முழுவதும் மணம் ம்மரப்பி மனம் மகிழ்விக்கின்றன ..

நம்  நாட்டு காஷ்மீர் ரோஜா, ஊட்டி ரோஜாக்கள் சிறப்பானவை ....

 வெள்ளை, மஞ்சள், சிகப்பு, ஆரஞ்சு என பல  வண்ணங்களில் மண்ணில் வானவில்லாய் பல நிறங்களில்  ரோஜாக்கள் பூத்தாலும்  கறுப்பு வண்ண ரோஜாதான் ஊட்டி மலர்க்கண்காட்சியில் ஃபேமஸ்...

பச்சைவண்ண ரோஜாவும் புதுமை படைத்து கண்களுக்கு விருந்தளிக்கிறது ..
பச்சைவண்ண பட்டு ரோஜாவாம் ..பார்த்த கண்ணு மூடாதாம்  ..


மலர்க்கண்காட்சிகளுக்கு, ரோஜாக்களினால்தான் பெருமையே!

ஓசூரிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மட்டும் 10 லட்சம் ரோஜாப் பூக்கள் அனுப்பப்படுகின்றன. காதலர் தினத்தன்று மட்டும் இந்த எண்ணிக்கையில் ரோஜாக்கள் செல்கின்றன...!

ஓசூர் அருகே உள்ள அமுகொண்டனபள்ளி கிராமத்தில் டான்புளோரா நிறுவனத்தின் மிகப் பெரிய ரோஜா பண்ணை உள்ளது. இதன் பரப்பளவு  50 ஹெக்டேர். ஆசியாவிலேயே மிகப் பெரிய ரோஜாப் பண்ணை இதுதானாம். ..!

இங்கிருந்து ஆண்டுதோறும் 3 கோடி ரோஜாக்கள் ஏற்றுமதியாகின்றனவாம்.

இந்தப் பண்ணையில் 35 வகையான ரோஜாக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. வரும் ஆண்டுகளில் இதை 150 வகைகளாக உயர்த்தும் திட்டம் உள்ளதாம் ..!

தமிழக அரசின் ஊக்குவிப்புடன், அரசின் சார்பில் இந்தப் பண்ணை அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. இந்தியாவின் முன்னணி ரோஜா உற்பத்தி மையங்களில் முன்னணியில் உள்ள ரோஜாப் பண்ணை இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு ஹெக்டேர் பரப்பளவில் 70 ஆயிரம் ரோஜா செடிகளைப் பயிரிட முடியுமாம். ஒவ்வொரு செடியிலிருந்தும் 20 முதல் 22 பூக்கள் கிடைக்குமாம்.

காதலர் தினத்தன்று சுத்தமான சிவப்பு ரோஜாக்களுக்குத்தான் நிறைய கிராக்கி இருக்கும். 

இருப்பினும் ஜப்பானியர்கள் மட்டும் பிங்க் நிற ரோஜாக்ளை விரும்புகிறாரார்களாம். 

ஹாலந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் மஞ்சள் ரோஜாக்ளையும், ஆரஞ்சு நிற ரோஜாக்களையும் விரும்புகிறார்களாம்.

 ரோஜாப் பூவின் நீண்ட தண்டைப் பொறுத்து அதன் விலை மாறுபடுமாம்.

அன்பை இதமாகச்சொல்லி , ரம்யமாக அமைய கை கொடுக்கும் ரோஜாக்கள் -  உலகை ஆளும் மகாராஜாக்கள்!



Red Flower Wallpapers HD Red Flower Wallpapers HD








Red Flower Wallpapers HD Red Flower Wallpapers HDRed Flower Wallpapers HD Red Flower Wallpapers HD
rose-flower (1)Rose Flower Wallpapers HD Rose Flower Wallpapers HD



52 comments:

  1. மனதை கொள்ளை கொண்டு போகிறது றோஜா பூக்கள்! அருமையான படங்களாக தொகுத்து நல்ல விளக்கங்கங்களுடன் பகிர்ந்துள்ளீர்கள்.
    பகிர்வுக்கு மிக்க நன்றி!

    உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் இனிய காதலர் தின நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. மனதை மயக்கும் மலர்களின் கூட்டணி ..நான் இதுவரை பச்சை நிற ரோஜா பார்த்ததில்லை ..
    எல்லா மலர்களும் அழகு .பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. ரோஜாக்களின் அழகே அழகு.

    ReplyDelete
  4. பலவிதமான நிறங்களில் ரோஜா பூக்களை காட்டி அசத்தி விட்டீர்கள். அம்மாடி ஒரே மலரில் பச்சை, நீலம் .... என ஐந்து நிறங்களில் இப்போது தான் பார்க்கிறேன். ராம் ராம் லக்ஷ்மி நரசிம்ஹன், ஈரோடு

    ReplyDelete
  5. Blooms have invariably been an ideal thing for adornments and items.
    There are lots of varieties of floral arrangements :
    bouquets, solitary flowers, blooms in floral vases, corsages, and so on It
    really is sweet, it truly is romantic, which is calming.

    It truly is ADORE.

    Blossoms make everyone feel much better. It includes more than the design and useful someone.
    The effects of flowers go deep in me the guts of any man or
    woman.

    Also visit my weblog; wedding florists
    my site > wedding bouquets

    ReplyDelete
  6. உங்கள் ரோஜாக்கள் படங்கள் , செய்திகள் கண்களுக்குக் குளர்ச்சியும் மனதுக்கு மகிழ்ச்சியும் தந்து மகிழ்வித்தது. நன்றி.

    ReplyDelete
  7. ஆஹா... என்ன அழகு...!

    (உலகை ஆளும் மகாராஜாக்கள்-இதற்கு பின் உள்ள படமும், முடிவில் ஒரு படமும் வரவில்லை)

    ReplyDelete
  8. காதலர் தினத்திற்கு பொருத்தமாக அழகு ரோஜாக்கள். கண்ணை கவர்ந்தது. காதலர்களும் கவர்வார்கள் இந்த ரோஜாப்பூக்களை..!

    ReplyDelete
  9. பொருத்தமான பதிவு.
    ரோஜாவில் எத்தனி வகைகள்? நிறங்கள். கருப்பு ,பச்சை ரோஜாக்கள் அழகு. அந்த கலப்பு வண்ண ரோஜாவும் மிக அழகு.

    ReplyDelete
  10. ரோஜாக்கள் மனதை கொள்ளை கொண்டன. எனக்கு பிங்க் ரோஜா மிகவும் பிடிக்கும்.

    ReplyDelete
  11. ரோஜா ரோஜா

    இந்த நாளுக்கான மிகவும் இனிமையான பகிர்வு. ;))))

    ஒவ்வொரு படமும் கொள்ளை அழகூஊஊஊஊ


    >>>>>>>

    ReplyDelete
  12. //ரோஜாக்கள் கண்களுக்குக் குளிர்ச்சியும் மனதுக்கு
    மகிழ்ச்சியும் தந்து மகிழ்விப்பவை ...//

    //எல்ல்லையற்ற அன்பை பரிமாறிக்கொள்வதற்கும்
    ரோஜாப்பூங்கொத்து கொடுக்கிறோம்.//

    தங்களின் இந்தப்பதிவினிலும் அதே எல்லையற்ற அன்பினை மட்டுமே காணமுடிகிறது. ;)))))

    >>>>>>>>

    ReplyDelete
  13. //பரிசாகக் கொடுப்பதற்கு ரோஜாப் பூங்கொத்தையும் ஒற்றை ரோஜாவையும் தவிர சிறந்தது வேறு இருக்கிறதா என்ன ..!//

    அற்புதமான இந்தப்பரிசினை அள்ளி அள்ளியல்லவா கொடுத்து அசத்தியுள்ளீர்கள் !

    மகிழ்ச்சிக்கடலில் நாங்கள் மூழ்கித் தத்தளிக்கிறோமாக்கும்.

    >>>>>>>

    ReplyDelete
  14. // வெள்ளை, மஞ்சள், சிகப்பு, ஆரஞ்சு என பல வண்ணங்களில் மண்ணில் வானவில்லாய் பல நிறங்களில் ரோஜாக்கள் பூத்தாலும் கறுப்பு வண்ண ரோஜாதான் ஊட்டி மலர்க்கண்காட்சியில் ஃபேமஸ்...//

    ஆஹா, புதிய செய்தியாக உள்ளது. கறுப்பு வண்ணத்திலும் ரோஜாவா?

    பட்டுவண்ண ரோஜாவாம் பார்த்த கண்ணு மூடாதாம் என்று தான் கேள்விப்பட்டிருக்கிறோம்.

    //பச்சைவண்ண பட்டு ரோஜாவாம் ..பார்த்த கண்ணு மூடாதாம் ..//

    இதுவும் படத்தில் மிக அழகாகவே உள்ளதூஊஊஊஊ

    >>>>>>>

    ReplyDelete
  15. //ஓசூர் அருகே உள்ள அமுகொண்டனபள்ளி கிராமத்தில் டான்புளோரா நிறுவனத்தின் மிகப் பெரிய ரோஜா பண்ணை உள்ளது.

    இதன் பரப்பளவு 50 ஹெக்டேர். ஆசியாவிலேயே மிகப் பெரிய ரோஜாப் பண்ணை இதுதானாம். ..!

    இங்கிருந்து ஆண்டுதோறும் 3 கோடி ரோஜாக்கள் ஏற்றுமதியாகின்றனவாம்.

    இந்தப் பண்ணையில் 35 வகையான ரோஜாக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    வரும் ஆண்டுகளில் இதை 150 வகைகளாக உயர்த்தும் திட்டம் உள்ளதாம் ..!

    தமிழக அரசின் ஊக்குவிப்புடன், அரசின் சார்பில் இந்தப் பண்ணை அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.

    இந்தியாவின் முன்னணி ரோஜா உற்பத்தி மையங்களில் முன்னணியில் உள்ள ரோஜாப் பண்ணை இது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒரு ஹெக்டேர் பரப்பளவில் 70 ஆயிரம் ரோஜா செடிகளைப் பயிரிட முடியுமாம்.

    ஒவ்வொரு செடியிலிருந்தும் 20 முதல் 22 பூக்கள் கிடைக்குமாம்.//

    தகவல் களஞ்சியத்திடமிருந்து இன்று மிகவும் அருமையான தகவல்கள்.

    கேட்கவே மிகவும் பெருமையாக உள்ளது.


    >>>>>>>

    ReplyDelete
  16. //காதலர் தினத்தன்று சுத்தமான சிவப்பு ரோஜாக்களுக்குத்தான் நிறைய கிராக்கி இருக்கும்.

    இருப்பினும் ஜப்பானியர்கள் மட்டும் பிங்க் நிற ரோஜாக்ளை விரும்புகிறாரார்களாம்.

    ஹாலந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் மஞ்சள் ரோஜாக்ளையும், ஆரஞ்சு நிற ரோஜாக்களையும் விரும்புகிறார்களாம்.//

    ஆஹா நாடு நாடாக நாடிச்சென்று, ஓடி ஓடி தகவல்களைத்திரட்டி என்னமாய் அழகாய் அசத்தலாய்ச் சொல்லுகிறீர்கள்.!!!!!

    உங்களை நினைத்தாலே வியப்போ வியப்பாக உள்ளது. ;)))))

    >>>>>>>

    ReplyDelete
  17. //ரோஜாப் பூவின் நீண்ட தண்டைப் பொறுத்து அதன் விலை மாறுபடுமாம்.//

    ஆஹா, ரோஜாவை விட,

    அதைத்தாங்கிக்கொண்டுள்ள

    த ண் டு க் கு

    ஓர் தனிப்பெருமையோ! ;)))))



    //அன்பை இதமாகச்சொல்லி , ரம்யமாக அமைய கை கொடுக்கும் ரோஜாக்கள் - உலகை ஆளும் மகாராஜாக்கள்!//

    இனிய இந்தத்தங்களின் சொல்லாடல் [ரோஜா .... மஹா ராஜா] அருமையோ அருமை.

    >>>>>>>

    ReplyDelete
  18. கண்மணியின் ஓர் கண்ணில் மயிலிறகு.

    அதிலும் விழியாக ஓர் காதல் சின்னம்.

    அருமையான படத்தேர்வு.

    கட்டைவிரல் இரண்டிலும் சேர்த்து ஒரு ரோஜாவைப்பிடித்து மீதி நான்கு விரல்களை மடித்து அதில் ஒரு ஹாட்டீன் வடிவம் கொண்டு வந்துள்ள படமும் மிகச்சிறந்ததோர் தேர்வாகும்..

    உங்கள் படங்களைப்பற்றி கேட்கவா வேண்டும்.

    மெளனமாக இருப்பினும் அவை பேசும் படங்களாச்சே ... என்னோடு மட்டும்.

    >>>>>>>

    ReplyDelete
  19. கண்மணியின் ஓர் கண்ணில் மயிலிறகு.

    அதிலும் விழியாக ஓர் காதல் சின்னம்.

    அருமையான படத்தேர்வு.

    கட்டைவிரல் இரண்டிலும் சேர்த்து ஒரு ரோஜாவைப்பிடித்து மீதி நான்கு விரல்களை மடித்து அதில் ஒரு ஹாட்டீன் வடிவம் கொண்டு வந்துள்ள படமும் மிகச்சிறந்ததோர் தேர்வாகும்..

    உங்கள் படங்களைப்பற்றி கேட்கவா வேண்டும்.

    மெளனமாக இருப்பினும் அவை பேசும் படங்களாச்சே ... என்னோடு மட்டும்.

    >>>>>>>

    ReplyDelete
  20. கடைசியிலிருந்து மூன்றாவதாகக்காட்டியுள்ள

    ஒளிரும் கண்ணாடிப்பெட்டியில் அமைதியே உருவமாக உள்ள அந்தப்பட்டு வண்ண ரோஜா ..... ஜோர் ஜோர்.

    பாதிப்படங்கள் திறக்கப்படவே இல்லை. கடைசியில் இரண்டு படங்களும் கூட திறக்கவே இல்லை.

    திறந்து காட்டியுள்ளவைகளை ரஸிக்கவே நேரம் போதவில்லை.

    ஒவ்வொன்றும் மனதை மயக்குவதாக உள்ளது.

    மயங்கிச் சொக்கிப் போனதில், பின்னூட்டமும் இவ்வளவு நாழி ஆகிவிட்டதூஊஊஊஊ.

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    மனம் கனிந்த இனிய நல்வாழ்த்துகள்.

    நல்லதொரு மிகச்சிறப்பான பதிவினைக்கொடுத்த

    ரோஜாக்களின் ராணியான அம்பாளுக்கு என் ஸ்பெஷல் நன்றியோ நன்றிகள்.

    நறுமணம் தந்த நல்ல பகிர்வு.

    ooooooooo

    ReplyDelete
  21. வை.கோபாலகிருஷ்ணன் said...
    கடைசியிலிருந்து மூன்றாவதாகக்காட்டியுள்ள

    ஒளிரும் கண்ணாடிப்பெட்டியில் அமைதியே உருவமாக உள்ள அந்தப்பட்டு வண்ண ரோஜா ..... ஜோர் ஜோர்.

    பாதிப்படங்கள் திறக்கப்படவே இல்லை. கடைசியில் இரண்டு படங்களும் கூட திறக்கவே இல்லை.

    திறந்து காட்டியுள்ளவைகளை ரஸிக்கவே நேரம் போதவில்லை.

    ஒவ்வொன்றும் மனதை மயக்குவதாக உள்ளது.

    மயங்கிச் சொக்கிப் போனதில், பின்னூட்டமும் இவ்வளவு நாழி ஆகிவிட்டதூஊஊஊஊ.

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    மனம் கனிந்த இனிய நல்வாழ்த்துகள்.

    நல்லதொரு மிகச்சிறப்பான பதிவினைக்கொடுத்த

    ரோஜாக்களின் ராணியான அம்பாளுக்கு என் ஸ்பெஷல் நன்றியோ நன்றிகள்.

    நறுமணம் தந்த நல்ல பகிர்வு.//

    நறுமணம் கமழும் நல்ல பல கருத்துரைகளை ரோஜாப்பூக்குவியல்களாக அளித்து மகிழ்ந்ததற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  22. வை.கோபாலகிருஷ்ணன் said...
    கண்மணியின் ஓர் கண்ணில் மயிலிறகு.

    அதிலும் விழியாக ஓர் காதல் சின்னம்.

    அருமையான படத்தேர்வு.

    கட்டைவிரல் இரண்டிலும் சேர்த்து ஒரு ரோஜாவைப்பிடித்து மீதி நான்கு விரல்களை மடித்து அதில் ஒரு ஹாட்டீன் வடிவம் கொண்டு வந்துள்ள படமும் மிகச்சிறந்ததோர் தேர்வாகும்..

    உங்கள் படங்களைப்பற்றி கேட்கவா வேண்டும்.

    மெளனமாக இருப்பினும் அவை பேசும் படங்களாச்சே ... என்னோடு மட்டும்./

    மௌன மொழி பேசும் ..
    அசையும் ..ஆயிரம் கதைகள் அள்ளித்தரும் பேசும் படங்களாக ரசித்து கருத்துரைகள் வழங்கியமைக்கு இனிய நன்றிகள்...

    ReplyDelete
  23. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //ரோஜாப் பூவின் நீண்ட தண்டைப் பொறுத்து அதன் விலை மாறுபடுமாம்.//

    ஆஹா, ரோஜாவை விட,

    அதைத்தாங்கிக்கொண்டுள்ள

    த ண் டு க் கு

    ஓர் தனிப்பெருமையோ! ;)))))



    //அன்பை இதமாகச்சொல்லி , ரம்யமாக அமைய கை கொடுக்கும் ரோஜாக்கள் - உலகை ஆளும் மகாராஜாக்கள்!//

    இனிய இந்தத்தங்களின் சொல்லாடல் [ரோஜா .... மஹா ராஜா] அருமையோ அருமை. //

    ராஜா மலராம் ரோஜா மலர் பற்றிய ரம்யமான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..

    ReplyDelete
  24. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //காதலர் தினத்தன்று சுத்தமான சிவப்பு ரோஜாக்களுக்குத்தான் நிறைய கிராக்கி இருக்கும்.

    இருப்பினும் ஜப்பானியர்கள் மட்டும் பிங்க் நிற ரோஜாக்ளை விரும்புகிறாரார்களாம்.

    ஹாலந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் மஞ்சள் ரோஜாக்ளையும், ஆரஞ்சு நிற ரோஜாக்களையும் விரும்புகிறார்களாம்.//

    ஆஹா நாடு நாடாக நாடிச்சென்று, ஓடி ஓடி தகவல்களைத்திரட்டி என்னமாய் அழகாய் அசத்தலாய்ச் சொல்லுகிறீர்கள்.!!!!!

    உங்களை நினைத்தாலே வியப்போ வியப்பாக உள்ளது. ;)))))//

    அழகாய் அசத்தலாய் வியப்புடன் கருத்துரைகள் அளித்து மனம் மலரச்செய்யும் பூக்குவியல்களான கருத்துரைகளுக்கு மனம் மலர்ந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  25. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //ஓசூர் அருகே உள்ள அமுகொண்டனபள்ளி கிராமத்தில் டான்புளோரா நிறுவனத்தின் மிகப் பெரிய ரோஜா பண்ணை உள்ளது.

    இதன் பரப்பளவு 50 ஹெக்டேர். ஆசியாவிலேயே மிகப் பெரிய ரோஜாப் பண்ணை இதுதானாம். ..!

    இங்கிருந்து ஆண்டுதோறும் 3 கோடி ரோஜாக்கள் ஏற்றுமதியாகின்றனவாம்.

    இந்தப் பண்ணையில் 35 வகையான ரோஜாக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    வரும் ஆண்டுகளில் இதை 150 வகைகளாக உயர்த்தும் திட்டம் உள்ளதாம் ..!

    தமிழக அரசின் ஊக்குவிப்புடன், அரசின் சார்பில் இந்தப் பண்ணை அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.

    இந்தியாவின் முன்னணி ரோஜா உற்பத்தி மையங்களில் முன்னணியில் உள்ள ரோஜாப் பண்ணை இது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒரு ஹெக்டேர் பரப்பளவில் 70 ஆயிரம் ரோஜா செடிகளைப் பயிரிட முடியுமாம்.

    ஒவ்வொரு செடியிலிருந்தும் 20 முதல் 22 பூக்கள் கிடைக்குமாம்.//

    தகவல் களஞ்சியத்திடமிருந்து இன்று மிகவும் அருமையான தகவல்கள்.

    கேட்கவே மிகவும் பெருமையாக உள்ளது.//

    ரசித்துப்பாராட்டி கருத்துரை களஞ்சியமாக வற்றாத இனிய பின்னூட்டங்களுக்கு இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  26. வை.கோபாலகிருஷ்ணன் said...
    // வெள்ளை, மஞ்சள், சிகப்பு, ஆரஞ்சு என பல வண்ணங்களில் மண்ணில் வானவில்லாய் பல நிறங்களில் ரோஜாக்கள் பூத்தாலும் கறுப்பு வண்ண ரோஜாதான் ஊட்டி மலர்க்கண்காட்சியில் ஃபேமஸ்...//

    ஆஹா, புதிய செய்தியாக உள்ளது. கறுப்பு வண்ணத்திலும் ரோஜாவா?

    பட்டுவண்ண ரோஜாவாம் பார்த்த கண்ணு மூடாதாம் என்று தான் கேள்விப்பட்டிருக்கிறோம்.

    //பச்சைவண்ண பட்டு ரோஜாவாம் ..பார்த்த கண்ணு மூடாதாம் ..//

    இதுவும் படத்தில் மிக அழகாகவே உள்ளதூஊஊஊஊ //

    இனிய அழகான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  27. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //பரிசாகக் கொடுப்பதற்கு ரோஜாப் பூங்கொத்தையும் ஒற்றை ரோஜாவையும் தவிர சிறந்தது வேறு இருக்கிறதா என்ன ..!//

    அற்புதமான இந்தப்பரிசினை அள்ளி அள்ளியல்லவா கொடுத்து அசத்தியுள்ளீர்கள் !

    மகிழ்ச்சிக்கடலில் நாங்கள் மூழ்கித் தத்தளிக்கிறோமாக்கும்./

    அசத்தலான கருத்துரைகளை அள்ளி அள்ளித்தந்து உற்சாகமளித்தமைக்கு இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  28. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //ரோஜாக்கள் கண்களுக்குக் குளிர்ச்சியும் மனதுக்கு
    மகிழ்ச்சியும் தந்து மகிழ்விப்பவை ...//

    //எல்ல்லையற்ற அன்பை பரிமாறிக்கொள்வதற்கும்
    ரோஜாப்பூங்கொத்து கொடுக்கிறோம்.//

    தங்களின் இந்தப்பதிவினிலும் அதே எல்லையற்ற அன்பினை மட்டுமே காணமுடிகிறது. ;)))))//

    எல்லையற்ற அன்புடன் அளித்த கருத்துஅரைகளுக்கு இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  29. வை.கோபாலகிருஷ்ணன் said...
    ரோஜா ரோஜா

    இந்த நாளுக்கான மிகவும் இனிமையான பகிர்வு. ;))))

    ஒவ்வொரு படமும் கொள்ளை அழகூஊஊஊஊ//

    கொள்ளை அழகாய் மனம் கொள்ளை கொள்ளும் வண்ணம் மனம் நிறைந்த பாராட்டுக்களை ரோஜா மணம் கமழ அளித்த அத்தனைக் கருத்துரைகளுக்கும் எண்ணம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  30. கோவை2தில்லி said...
    ரோஜாக்கள் மனதை கொள்ளை கொண்டன. எனக்கு பிங்க் ரோஜா மிகவும் பிடிக்கும்.

    பிங்க் ரோஜா எனக்கும் ரொம்ப பிடிக்கும் ..

    கொள்ளை கொள்ளும் இனிய கருத்துரைக்கு நிறைவான நன்றிகள்..

    ReplyDelete
  31. உஷா அன்பரசு said...
    காதலர் தினத்திற்கு பொருத்தமாக அழகு ரோஜாக்கள். கண்ணை கவர்ந்தது. காதலர்களும் கவர்வார்கள் இந்த ரோஜாப்பூக்களை..!/

    அழகு ரோஜா பற்றி அழகான தகவலுக்கு இனிய நன்றிகள்..

    ReplyDelete
  32. திண்டுக்கல் தனபாலன் said...
    ஆஹா... என்ன அழகு...!

    அழகான கருத்துரைக்கு
    இனிய நன்றிகள்..

    ReplyDelete
  33. கோமதி அரசு said...
    உங்கள் ரோஜாக்கள் படங்கள் , செய்திகள் கண்களுக்குக் குளர்ச்சியும் மனதுக்கு மகிழ்ச்சியும் தந்து மகிழ்வித்தது. நன்றி.//

    தங்களின் இனிய கருத்துரைகள் மனதுக்கு மகிழ்ச்சியும் மலர்ச்சியும் தந்து மகிழ்வித்தது. இனிய நன்றிகள்..

    ReplyDelete
  34. Ram Ram Lakshmi Narasimhan V said...
    பலவிதமான நிறங்களில் ரோஜா பூக்களை காட்டி அசத்தி விட்டீர்கள். அம்மாடி ஒரே மலரில் பச்சை, நீலம் .... என ஐந்து நிறங்களில் இப்போது தான் பார்க்கிறேன். ராம் ராம் லக்ஷ்மி நரசிம்ஹன், ஈரோடு/

    அசத்தலான இனிய கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்..

    ReplyDelete
  35. பழனி. கந்தசாமி said...
    ரோஜாக்களின் அழகே அழகு.//

    அழகான கருத்துரைக்கு
    இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  36. angelin said...
    மனதை மயக்கும் மலர்களின் கூட்டணி ..நான் இதுவரை பச்சை நிற ரோஜா பார்த்ததில்லை ..
    எல்லா மலர்களும் அழகு .பகிர்வுக்கு நன்றி //

    அழகான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..

    ReplyDelete
  37. முதல் அசையும் படம் வெகு அழகாக உள்ளது.

    மேலிருந்து மூன்றாவது படம் இப்போது தான் எனக்குத்திறந்து காட்சி அளிக்குது.

    அதில் ஒரு வேடிக்கை பாருங்கோ!

    இந்தக்காதலர் தினத்தில் இந்த ஜனங்கள் தன்னை வைத்து செய்து வரும் ஜேஷ்டைகளைப் பார்த்து, ரோஜாக்குவியல்களே, தன் வெள்ளை ரோஜா போன்ற அகன்ற வாயைப்பிளந்து, சும்மா ஜொள்ளு விடுவது போலல்லவா காட்டப்பட்டுள்ளது. ;))))))))))

    அருமையான படத்தேர்வு தான்.

    நல்லவேளையாக இப்போதாவது அதை என்னால் கண்டு களிக்க முடிந்ததே!

    இன்னும் ஒவ்வொன்றாகத் திறக்கக்கட்டும்.

    திறக்கத்திறக்க நானும் மீண்டும் மீண்டும் வருவேனாக்கும்.

    ஹூக்க்க்க்கும். ஜாக்கிரதை !

    ReplyDelete
  38. இளமதி said...
    மனதை கொள்ளை கொண்டு போகிறது றோஜா பூக்கள்! அருமையான படங்களாக தொகுத்து நல்ல விளக்கங்கங்களுடன் பகிர்ந்துள்ளீர்கள்.
    பகிர்வுக்கு மிக்க நன்றி!

    உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் இனிய காதலர் தின நல் வாழ்த்துக்கள்!

    அவரிடம் தங்கள் வாழ்த்துகளை சேர்ப்பித்துவிடுகிறேன் .. கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..

    ReplyDelete
  39. இனிய நினைவுகளை ரோஜாவைப் போட்டு பதிவாக்கி விட்டிர்கள்.

    காதலர் தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  40. ரோஜாப்பூக்களோடு தகவல்களும் மிகவும் அருமை! தொகுத்தமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  41. ஆல் இன் ஆல் அழகு ரோஜாக்கள்!

    ReplyDelete
  42. சூப்பர் பதிவு. ரோஜாவைப் பற்றிய பெரிய ஆராட்சியே நடத்தியிருக்கிறீங்க நிறைய தெரிஞ்சுகொண்டேன்... வாழ்த்துக்கள்.

    இதில் இல்லாத கலர் ரோஜா, எங்க ஏரியாவில் பூத்தது..

    விரும்பினால் பாருங்கோ.. இது ஒரேஞ்...
    http://gokisha.blogspot.co.uk/2012/08/blog-post_6054.html


    இது பேப்பிள்... ஹையோ தேடத் தேட என்பக்கத்தில் எங்கிருக்கென கண்டுபிடிக்க முடிவவில்லை.. பின்பு கண்டால் லிங் தருவேன்.

    ReplyDelete
  43. அழகான ரோஜாப்படங்கள் இத்தினத்திற்கு ஏற்ற பதிவு.பிங்க் ரோஜா அழகு.

    ReplyDelete
  44. வண்ண வண்ண ரோஜாக்களை கண்களுக்கு விருந்தாக்கி, அவற்றிற்கு பொருத்தமாய் உங்கள் எழுத்துகளுக்கும் வண்ணம் கொடுத்தது சூப்பர்

    ReplyDelete
  45. அன்புச் சகோதரி...
    நலமாக இருக்கிறீர்களா? இருக்க வேண்டுகிறேன்.

    இன்று உங்கள் பதிவு வரவில்லையே...:( வெள்ளிக்கிழமை அருமையான ஆன்மீகப்பதிவு உங்களிடமிருந்து வருமே. நான் கோயிலுக்குப் போக முடியாமல் எனக்கேற்படும் மனக் குறையைத் தீர்ப்பதே நீங்கள்தான், உங்கள் பதிவுதான்.

    அதை இன்று காணவில்லையே... அதனால் ஒருவேளை உடல் நலமில்லையோவென கேட்டேன். நலமோடிருக்கப் ப்ரார்த்திக்கின்றேன்!

    ReplyDelete
  46. பட்டு வண்ண ரோஜாக்களின் அணிவகுப்பு மனத்தை கொள்ளை கொள்கின்றது.

    ReplyDelete
  47. கறுப்பு மற்றும் பச்சை நிற ரோஜாக்களைக் கண்டு அதிசயித்தேன் !
    வாசம் வீசும் பதிவு !

    ReplyDelete
  48. கண்ணுக்கும், மனதுக்கும் குளிர்ச்சியான ரோஜாப் பதிவு அற்புதம்!

    எத்தனை வண்ணங்களில் ரோஜாக்கள்! ஒவ்வொன்றும் கண்ணைக் கட்டி நிறுத்துகின்றன.

    ReplyDelete
  49. Ranjani Narayanan said...
    கண்ணுக்கும், மனதுக்கும் குளிர்ச்சியான ரோஜாப் பதிவு அற்புதம்!

    எத்தனை வண்ணங்களில் ரோஜாக்கள்! ஒவ்வொன்றும் கண்ணைக் கட்டி நிறுத்துகின்றன./

    வாங்க வணக்கம் .. குளிர்ச்சியான இனிய கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்..

    ReplyDelete
  50. ஸ்ரவாணி said...
    கறுப்பு மற்றும் பச்சை நிற ரோஜாக்களைக் கண்டு அதிசயித்தேன் !
    வாசம் வீசும் பதிவு !//

    வாங்க வணக்கம் .

    வாசம் வீசும் இனிய கருத்துரைகளுக்கு
    வண்ணமிகு நன்றிகள்...

    ReplyDelete
  51. மாதேவி said...
    பட்டு வண்ண ரோஜாக்களின் அணிவகுப்பு மனத்தை கொள்ளை கொள்கின்றது.

    வாங்க வணக்கம் ..

    மனத்தை கொள்ளை கொள்ளும் இனிய கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்

    ReplyDelete
  52. இளமதி said...
    அன்புச் சகோதரி...
    நலமாக இருக்கிறீர்களா? இருக்க வேண்டுகிறேன்.

    இன்று உங்கள் பதிவு வரவில்லையே...:( வெள்ளிக்கிழமை அருமையான ஆன்மீகப்பதிவு உங்களிடமிருந்து வருமே. நான் கோயிலுக்குப் போக முடியாமல் எனக்கேற்படும் மனக் குறையைத் தீர்ப்பதே நீங்கள்தான், உங்கள் பதிவுதான்.

    அதை இன்று காணவில்லையே... அதனால் ஒருவேளை உடல் நலமில்லையோவென கேட்டேன். நலமோடிருக்கப் ப்ரார்த்திக்கின்றேன்!//

    வாங்க வணக்கம் .

    நான் எங்கே சென்றாலும் பதிவுகள் குறித்த நேரத்தில் வெளியாகிவிடும் ..

    நலம் நல்கும் இனிய பிரார்த்தனைகளுக்கு
    மனம் நிறைந்த நன்றிகள்..

    ReplyDelete