Tuesday, February 26, 2013

ஆரோக்கியம் அருளும் அன்னை இந்த்ராக்ஷி




யா தேவீ ஸர்வபூதேஷு மாத்ருரூபேண ஸம்ஸ்திதா!
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

இந்த்ராக்ஷி காயத்ரி:  

பஸ்மயுத்தாய வித்மஹே, ரக்த நேத்ராய 

தீமஹி, தன்னோ ஜ்வரஹர ப்ரசோதயாத்.


ஆயுள்-ஆரோக்கியம் தரும் அன்னை இந்த்ராக்ஷி ஸ்தோத்திரம்
(தமிழ் வடிவில் )

இந்திரன் வடிவாய் வந்தவள் எவளோ இந்திராக்ஷி என்போம் அவளை
அனலாய் வந்தவள் அபயம் தந்தவள் புனலாய் வருவாள் காலாய் ஆனவள்

விண்ணாய் நிற்பாள் மண்ணாய் இருப்பாள் மனோரிதமே செய்பவள் அவளே
பகைவர் தன்னைப் பாரில் விரட்டிப் பண்பைப் புகுத்திட வந்தவள் அவளே





ஆயிரம் கண்கள் பாங்குறக் கொண்டவள் 
பாயும் புலியின் தோலைத் தரித்தவள்

கொஞ்சும் சதங்கை குலுங்கக் குலுங்கத்
தத்தோம் தக்தோம் வந்தோம் வந்தோம்

தந்தோம் வரமே தளரா உள்ளோடு உந்தன் செயலைச் செய்திடு நன்றே
என்றே சொல்லி வந்தாள் இன்றே ஸித்தியைத் தந்திடும் தெய்வத் திருமகள்

துர்கை அவளே! சங்கரி அவளே! சாகம் பரியாய்ச் சார்ந்திடும் பவானி
சோகம் துடைக்கும் இந்திரை அவளே இந்திராக்ஷி அன்னை அவளே
ஸுந்தரி அவளே! சுருதியும் அவளே!தண்டினி அவளே!கட்கினி அவளே

அவள் தாள் பணிவோம் அருளைப் பெறுவோம்
அவளைத் துதித்தால் இடரும் விலகும்

பகைமை தொலையும் சுகமும் பெருகும் பற்பல க்ரகங்கள் 
படுத்தும் பாடும் பட்டென ஒழியப் பாடுவோம் வாரீர்

ரோகாந்-அசேஷாந்-அபஹம்ஹி துஷ்டா
ருஷ்டா து காமாந் ஸகலாந்- அபீஷ்டாந்
த்வாம்-ஆஸ்ரிதாநாம் ந விபந்-நராணாம்
த்வாம்-ஆஸ்ரிதா ஹ்யாஸ்ரயதாம் ப்ரயாந்தி 

உனது பிரீதி பிரவாகத்தினால் சமஸ்த ரோகங்களையும் 
அழித்து விடுகின்றாய்! 

கோபமுண்டானாலோ அவரவர்களுக்கு பிரியமான 
எல்லாப் பொருள்களையும் அழித்து விடுகின்றாய்! 

உன்னை அண்டிய மனிதர்களுக்கு ஆபத்து என்பதே உண்டாவதில்லை. 

 அன்னையே ! உன்னை அண்டியவர்கள் மற்றவர்களால் 
விரும்பதக்கவர்களாகவும் ஆகிவிடுகின்றனர்.

இந்த ஸ்லோக பாராயணத்தால் எல்லா வித்யாப்ராப்திகளும் 
ஆரோக்கியமும் உண்டாகும்.
நீலாயதாக்ஷி, காமாக்ஷி, மீனாக்ஷி, விசாலாக்ஷி, ஜலஜாக்ஷி இந்திராக்ஷி, பத்மாக்ஷி, வனஜாக்ஷி, பங்கஜாக்ஷி என்னும் பெயர்களால்  அன்னையைத் தியானிக்க வேண்டும்
எல்லா தேவதைகளும் பராசக்தியிடம் அடங்குவதால் பராசக்தியைப் பூஜித்தால் அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகம் ..

சரணாகத தீநார்த்த பரித்ராண பராயணே
ஸர்வஸ்யார்த்திஹரே தேவி நாராயணி நமோஸ்துதே!


தன்னை சரணமடைந்த எளியவர்கள், துன்புற்றவர்கள் இவர்களை 

காப்பாற்றுவதையே முக்கிய நோக்கமாக கொண்டவளும், 
அனைவருடைய துன்பங்களை அபஹரிப்பவளுமான ஏ தேவி! 
நாராயணி! உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்.

பொருளோடு புகழோடு நோய் நொடி
இல்லாமல் எல்லோரையும் வைப்பாய் அம்மா அம்மா

49 comments:

  1. பராசக்தியே! அனைவருடைய துன்பங்களையும் அபகரிப்பாயாக...

    ReplyDelete
  2. மிக அழகிய படங்களுடன் சிறப்பானதொரு பதிவு. நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  3. அன்னை இந்த்ராக்ஷியினைப்பற்றி அழகான பட‌ங்களுடன்அறியதந்தமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. தமிழ் வடிவில் இந்த்ராஷி தோத்திரம் அருமை! இன்ன பிற தோத்திரங்களையும் தமிழில் கொணருங்கள்!

    ReplyDelete
  5. அன்னை இந்த்ராக்ஷி ஸ்தோத்திரத்தை தமிழ் வடிவில் வாசித்து மனனம் செய்து கொண்டேன்...
    தன்னை சரணடைந்தவர்களை காக்கும் தெய்வம் என்ற நம்பிக்கை ஒன்றே போதும், நெஞ்சம் அமைதி கொள்கிறது. வண்ணமிகு படங்களுடன் கருத்துகளும் அருமை,....

    ReplyDelete
  6. மிகப்பழைய இந்தியக் கடவுளரில் ஒருவராகக் கருதப்படுபவர். ancient indian gods என்ற புத்தகத்தில் சிவன் விஷ்ணுவுக்கெல்லாம் முன்னவராக இந்திரன்/இந்திராக்ஷி போன்ற கடவுள் வடிவங்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆரியர் குடியேறு முன்னரே "இந்திர"க் கடவுள்களை வழிபட்டதற்கான வரலாற்றுக் குறிப்புகளை இந்து சமவெளி நாகரீகம் பற்றியக் குறிப்புகளில் காணலாம்.

    besides, நான் வணங்கும் ஒரே கடவுள் இந்திராக்ஷி தான். (ஹிஹி.. எங்கம்மா பெயர்).

    ReplyDelete
  7. அன்னையே இந்திராக்ஷித்தாயே! அனைவருக்கும் நீயே!
    எம் துயர்துடைப்பாயே!

    அழகிய படங்களுடன் அற்புதமான பதிவு.

    பகிர்வுக்கு நன்றிகள் பல தாயே!

    ReplyDelete
  8. மிக மிக அழகிய படங்கள் ரசித்தேன் சிலிர்த்தேன்

    ReplyDelete
  9. அன்புடையீர்,

    காலை + மதிய வணக்கங்கள். ;)

    இன்றைய தலைப்பு:

    ”ஆரோக்கியம் அருளும் அன்னை இந்த்ராக்ஷி”

    என்னைப்பொறுத்தவரை

    “ஆரோக்கியம் அருளிய இந்த்ராக்ஷி”

    [சாக்ஷாத் என் பிரத்யக்ஷ அம்பாளைத்தான் சொல்கிறேன்]

    தலையால் வணங்க வேண்டிய தங்கமான பதிவு. வந்தனங்கள்.

    முழுவதும் படித்து ரஸித்து மகிழ்ந்து மீண்டும் அம்பாளை தரிஸித்துக் கருத்துக்கூற வருவேனாக்கும்.

    >>>>> நீண்ட இடைவேளை >>>>>

    ReplyDelete
  10. பகைமை தொலையும் சுகமும் பெருகும் க்ரகங்கள் படுத்தும் பாடும் பட்டென ஒழியப் பாடுவோம் வாரீர்.//

    ஆரோக்கியம் அருளும் அன்னை இந்த்ராஷியை வணங்கி நலம் பெறுவோம். நன்றி.
    படங்களும், பகிர்வும் அருமை.

    ReplyDelete
  11. அன்னை இந்திராக்ஷி தேவி குறித்த தகவல்கள் அருமை! படங்கள் சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  12. எல்லோருக்கும் எல்லா பாக்கியங்களும் கிடைக்க இந்த்ராக்ஷி அன்னை அருள் புரியட்டும்.

    ReplyDelete
  13. படங்களுடன் சிறப்பான விளக்கம் அருமைங்க. இனியும் தமிழில் தொடருங்கள் மகிழ்வேன்.

    ReplyDelete
  14. //
    துர்கை அவளே!
    சங்கரி அவளே!
    சாகம் பரியாய்ச் சார்ந்திடும் பவானி
    சோகம் துடைக்கும் இந்திரை அவளே இந்திராக்ஷி அன்னை அவளே
    ஸுந்தரி அவளே!
    சுருதியும் அவளே!
    தண்டினி அவளே!
    கட்கினி அவளே

    அவள் தாள் பணிவோம் அருளைப் பெறுவோம்

    அவளைத் துதித்தால் இடரும் விலகும்//

    எல்லாம் அவளே என்பதனை இந்த வரிகளில் மிகவும் அழகாகச்சொல்லியுள்ளீர்கள். ;)

    நீங்களும் அவளே !
    உங்களிலும் அவளே !! ;)))))

    >>>>>>

    ReplyDelete
  15. நீலாயதாக்ஷி, காமாக்ஷி, மீனாக்ஷி, விசாலாக்ஷி, ஜலஜாக்ஷி இந்திராக்ஷி, பத்மாக்ஷி, வனஜாக்ஷி, பங்கஜாக்ஷி என்னும் பெயர்களால் அன்னையைத் தியானிக்க வேண்டும்

    எல்லா தேவதைகளும் பராசக்தியிடம் அடங்குவதால் பராசக்தியைப் பூஜித்தால் அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகம் ..//

    தாங்கள் எது சொன்னாலும் அது மிகவும் அபாரமாகவே உள்ளது.

    >>>>>>>

    ReplyDelete
  16. //சரணாகத தீநார்த்த பரித்ராண பராயணே ஸர்வஸ்யார்த்திஹரே தேவி நாராயணி நமோஸ்துதே!

    தன்னை சரணமடைந்த எளியவர்கள், துன்புற்றவர்கள் இவர்களை
    காப்பாற்றுவதையே முக்கிய நோக்கமாக கொண்டவளும்,
    அனைவருடைய துன்பங்களை அபஹரிப்பவளுமான ஏ தேவி!
    நாராயணி! உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்.

    பொருளோடு புகழோடு நோய் நொடி
    இல்லாமல் எல்லோரையும் வைப்பாய் அம்மா அம்மா//

    பிரார்த்தனை மெய்சிலிரிக்க வைக்கிறது. மிக்க மகிழ்ச்சி ! ;)))))

    >>>>>>

    ReplyDelete
  17. இந்த்ராக்ஷி காயத்ரி:

    பஸ்மயுத்தாய வித்மஹே,
    ரக்த நேத்ராய தீமஹி,
    தன்னோ ஜ்வரஹர ப்ரசோதயாத்.

    இந்த மஹாமந்திரங்களை தமிழ் வடிவில் கொடுத்துள்ளதும், அவற்றிற்கு தகுந்த விளக்கங்கள் கொடுத்துள்ளதும் தங்களின் தனிச்சிறப்பாகும்.

    >>>>>>>>

    ReplyDelete
  18. மேலே முதல் படமும் கீழிருந்து நான்காவது படமும் நல்ல அழகோ அழகு.

    தீர்க்கமாகவும் திவ்ய மங்கள தேஜஸுடனும் அவைகள் உள்ளன.

    மேலிருந்து 2,3,7, 9 + கீழிருந்து 2 ஆகிய படங்கள் திறக்க மறுக்கின்றன.

    >>>>>>>

    ReplyDelete
  19. தந்தோம் வரமே தளரா உள்ளோடு உந்தன் செயலைச் செய்திடு நன்றே
    என்றே சொல்லி வந்தாள் இன்றே ஸித்தியைத் தந்திடும் தெய்வத் திருமகள்

    இந்த ஸ்லோகத்திற்குக்கீழ் உள்ள அம்பாளும் BRIGHT & CLARITY இல்லையே தவிர முகத்தில் நல்லதொரு புன்சிரிப்புடன் அழகாக சிம்பிளாக இருக்கிறது.

    Simply Superb!

    >>>>>>>

    ReplyDelete
  20. அன்னையே இந்திராக்ஷித்தாயே!

    முழு ஆரோக்கியம் திரும்பக் கொடுத்து, புத்துணர்ச்சியும் பொலிவும் கொடுத்து,

    இன்று இந்த அழகிய பதிவினைப்படிக்கும் பாக்யம் எனக்குக்கொடுத்தாயே!

    நன்றியோ நன்றிகள் தாயே !!

    அழகான பதிவு அளித்ததற்கு என் பாராட்டுக்கள்

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    ooooo

    ReplyDelete
  21. வை.கோபாலகிருஷ்ணன் said...
    அன்னையே இந்திராக்ஷித்தாயே!

    முழு ஆரோக்கியம் திரும்பக் கொடுத்து, புத்துணர்ச்சியும் பொலிவும் கொடுத்து,

    இன்று இந்த அழகிய பதிவினைப்படிக்கும் பாக்யம் எனக்குக்கொடுத்தாயே!

    நன்றியோ நன்றிகள் தாயே !!

    அழகான பதிவு அளித்ததற்கு என் பாராட்டுக்கள்

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.//

    வணக்கம் ஐயா..

    இந்த்ராக்ஷி ஜபம் பற்றிய பகிர்வுக்கு உற்சாகம் அளித்து பதிவிடச்செய்தமைக்கும், அன்பான இனிய நல்வாழ்த்துகள் அளித்துப் பாராட்டியதற்கும் மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  22. ஸ்கூல் பையன் said...
    பராசக்தியே! அனைவருடைய துன்பங்களையும் அபகரிப்பாயாக...//

    வணக்கம் ஸ்கூல் பையன்..//

    பராசக்தியே அனைவருடைய துன்பங்களையும் அபகரிக்கப் பிரார்த்திப்போம் ..!

    கருத்துரைக்கு இனிய நன்றிகள்..

    ReplyDelete
  23. பழனி. கந்தசாமி said...
    ரசித்தேன்.

    வணக்கம் ஐயா..

    கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  24. Gnanam Sekar said...
    அருமை ..//

    கருத்துரைக்கு இனிய நன்றிகள்


    வணக்கம் Gnanam Sekar..

    ReplyDelete
  25. திண்டுக்கல் தனபாலன் said...
    அருமை அம்மா... நன்றி...//



    வணக்கம் திண்டுக்கல் தனபாலன்..
    கருத்துரைக்கு இனிய நன்றிகள்

    ReplyDelete
  26. RAMVI said...
    மிக அழகிய படங்களுடன் சிறப்பானதொரு பதிவு. நன்றி பகிர்வுக்கு.

    வாங்க ராம்வி ..!

    சிறப்பான கருத்துரைக்கு
    இனிய நன்றிகள்..

    ReplyDelete
  27. வெங்கட் நாகராஜ் said...
    அருமையான படங்கள்.//

    வணக்கம் வெங்கட் நாகராஜ் ..

    அருமையான கருத்துரைக்கு
    இனிய நன்றிகள்..

    ReplyDelete
  28. priyasaki said...
    அன்னை இந்த்ராக்ஷியினைப்பற்றி அழகான பட‌ங்களுடன்அறியதந்தமைக்கு நன்றிகள்.

    வாங்க ப்ரிய சகி ..

    அழகான கருத்துரைக்கு
    இனிய நன்றிகள்..

    ReplyDelete
  29. தி.தமிழ் இளங்கோ said...
    தமிழ் வடிவில் இந்த்ராஷி தோத்திரம் அருமை! இன்ன பிற தோத்திரங்களையும் தமிழில் கொணருங்கள்!//

    வணக்கம் தி.தமிழ் இளங்கோ ஐயா..

    பல ஸ்தோத்திரங்கள் தமிழில் பகிர்ந்திருக்கிறேன்..

    உற்சாகம் தரும் தங்கள் கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

    ReplyDelete
  30. கவியாழி கண்ணதாசன் said...
    அருமை..


    வணக்கம் கவியாழி கண்ணதாசன் ..

    அருமையான கருத்துரைக்கு
    இனிய நன்றிகள்..

    ReplyDelete
  31. Advocate P.R.Jayarajan said...
    அன்னை இந்த்ராக்ஷி ஸ்தோத்திரத்தை தமிழ் வடிவில் வாசித்து மனனம் செய்து கொண்டேன்...
    தன்னை சரணடைந்தவர்களை காக்கும் தெய்வம் என்ற நம்பிக்கை ஒன்றே போதும், நெஞ்சம் அமைதி கொள்கிறது. வண்ணமிகு படங்களுடன் கருத்துகளும் அருமை,....//


    வணக்கம் ஐயா..

    உற்சாகம் தரும் தங்கள் கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..


    ReplyDelete
  32. அப்பாதுரை said...
    மிகப்பழைய இந்தியக் கடவுளரில் ஒருவராகக் கருதப்படுபவர். ancient indian gods என்ற புத்தகத்தில் சிவன் விஷ்ணுவுக்கெல்லாம் முன்னவராக இந்திரன்/இந்திராக்ஷி போன்ற கடவுள் வடிவங்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆரியர் குடியேறு முன்னரே "இந்திர"க் கடவுள்களை வழிபட்டதற்கான வரலாற்றுக் குறிப்புகளை இந்து சமவெளி நாகரீகம் பற்றியக் குறிப்புகளில் காணலாம்.

    besides, நான் வணங்கும் ஒரே கடவுள் இந்திராக்ஷி தான். (ஹிஹி.. எங்கம்மா பெயர்)./

    வணக்கம் ஐயா..

    வரலாற்றுத் தகவல்களுக்கு இனிய நன்றிகள் ..

    தாயின் பெயரை அறியத்தந்த தனயனுக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  33. இளமதி said...
    அன்னையே இந்திராக்ஷித்தாயே! அனைவருக்கும் நீயே!
    எம் துயர்துடைப்பாயே!

    அழகிய படங்களுடன் அற்புதமான பதிவு.

    பகிர்வுக்கு நன்றிகள் பல தாயே!//

    வாங்க இளமதி ..

    நம்பிக்கை நிலவாய் ஒளிரும் கருத்துரைகளுக்கு மனம்
    நிறைந்த இனிய நன்றிகள்..

    ReplyDelete
  34. malar balan said...
    மிக மிக அழகிய படங்கள் ரசித்தேன் சிலிர்த்தேன்//


    வணக்கம் malar balan ..!

    அருமையான கருத்துரைக்கு
    இனிய நன்றிகள்.

    ReplyDelete
  35. வை.கோபாலகிருஷ்ணன் said...
    அன்புடையீர்,

    காலை + மதிய வணக்கங்கள். ;)

    இன்றைய தலைப்பு:

    ”ஆரோக்கியம் அருளும் அன்னை இந்த்ராக்ஷி”

    என்னைப்பொறுத்தவரை

    “ஆரோக்கியம் அருளிய இந்த்ராக்ஷி”

    [சாக்ஷாத் என் பிரத்யக்ஷ அம்பாளைத்தான் சொல்கிறேன்]

    தலையால் வணங்க வேண்டிய தங்கமான பதிவு. வந்தனங்கள்.

    முழுவதும் படித்து ரஸித்து மகிழ்ந்து மீண்டும் அம்பாளை தரிஸித்துக் கருத்துக்கூற வருவேனாக்கும்.

    >>>>> நீண்ட இடைவேளை >>>>>/

    வணக்கம் ஐயா ..

    தங்கமான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  36. கோமதி அரசு said...
    பகைமை தொலையும் சுகமும் பெருகும் க்ரகங்கள் படுத்தும் பாடும் பட்டென ஒழியப் பாடுவோம் வாரீர்.//

    ஆரோக்கியம் அருளும் அன்னை இந்த்ராஷியை வணங்கி நலம் பெறுவோம். நன்றி.
    படங்களும், பகிர்வும் அருமை.


    வாங்க கோமதி அரசு ..
    வாழ்க வளமுடன் ..

    அருமையான கருத்துரைக்கு
    இனிய நன்றிகள்.

    ReplyDelete
  37. Ranjani Narayanan said...
    எல்லோருக்கும் எல்லா பாக்கியங்களும் கிடைக்க இந்த்ராக்ஷி அன்னை அருள் புரியட்டும்.//

    வாங்க ரஞ்சனி ..

    அருமையான கருத்துரைக்கு
    இனிய நன்றிகள்.

    ReplyDelete
  38. Sasi Kala said...
    படங்களுடன் சிறப்பான விளக்கம் அருமைங்க. இனியும் தமிழில் தொடருங்கள் மகிழ்வேன்.//

    வருக இனிய தென்றலே ..

    என்றும் தமிழில் தொடர்ந்துகொண்டிருக்கிறேன் ..

    மகிழ்ச்சியான கருத்துரைக்கு
    மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

    ReplyDelete
  39. arul said...
    thanks for sharing slokas

    வணக்கம் அருள் ..

    கருத்துரைக்கு
    மனம் நிறைந்த இனிய நன்றிகள்.

    ReplyDelete
  40. அருமையான பகிர்வு.

    ReplyDelete
  41. புதுப்புது தகவல்களுடன் அருமையான பதிவு.

    ReplyDelete
  42. இந்திராக்ஷீ ஸ்தோத்திரத்திலும் ஸ்ரீ துர்கா சப்த ஸ்லோகியிலும் சில ஸ்லோகங்கள் ஒன்றாகவே உள்ளது தனிச் சிறப்பு. அருமையான பதிவு. படங்கள் ஒவ்வொன்றும் அருமை. குறிப்பாக, ப்ராமரி தேவியின் கிடைத்தற்கரிய படம். தங்கள் சேவைக்கு என் நமஸ்காரங்கள்.

    ReplyDelete
  43. இன்று காலையிலேயே அம்பிகை தரிசனம் கிடைக்கப் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  44. படங்கள் கம்பீரமாய் மெய்சிலிர்க்க வைத்தன.

    ReplyDelete