

















சௌபாக்கிய லஷ்மி நீ வருவாய் என் மனை மங்களம் பொங்க
சௌபாக்கிய லஷ்மி நீ வருவாய்
வாசலில் வண்ணக் கோலங்கள் இட்டு வாழையும் தோரணமும் கட்டி
ஆசனம் அமைத்து நெய் விளக்கேற்றி அன்புடன் அழைத்தோம்
சௌபாக்கிய லஷ்மி நீ வருவாய் என் மனை மங்களம் பொங்க


மல்லிகை, ஜாதி மருவுடன் ரோஜா
மணம் மிகு தாழை மலர்களும் மற்றும்
எல்லை இல்லாத பக்தியும் சேர்த்து
ஈஸ்வரியே உனக்கர்ச்னை செய்வோம்
சௌபாக்கிய லஷ்மி நீ வருவாய் என் மனை மங்களம் பொங்க
பாயசம் வகையும் பஷண வகையும்
பலவித பழங்களும் கொழுக்கட்டை தினுசும்
ஆசையுடன் உனக்கர்ப்பணம் செய்வோம்
அம்பிகையே எங்கள் அன்னையே வருக
சௌபாக்கிய லஷ்மி நீ வருவாய் என் மனை மங்களம் பொங்க

மாணிக்க சிவப்பில் மூக்குத்தி மரகத குண்டலம் காதினில் ஆட
ஆனிப் பொன் முத்து மாலைகள் அசைய
அச்சுதன் நாராயணன் மார்பினில் வாழும்
சௌபாக்கிய லஷ்மி நீ வருவாய் என் மனை மங்களம் பொங்க
அழகிய கூந்தல் இடைவரை புரள
அருள்மிகு கண்கள் கருணையும் பொழிய
எழில் மிகு நெற்றியில் குங்குமம் இலங்க
எங்கள் மங்கள பாக்கியங்கள் பெருக
சௌபாக்கிய லஷ்மி நீ வருவாய் என் மனை மங்களம் பொங்க
ஜல் ஜல் ஜல் என சதங்கைகள் ஒலிக்க
கண கண கண என வளையல்கள் குலுங்க
கல கல கல என கால் சிலம்பொலிக்க
கருணையால் எங்கள் கஷ்டங்கள் பறக்க
சௌபாக்கிய லஷ்மி நீ வருவாய் என் மனை மங்களம் பொங்க

கல்வியில் குழந்தைகள் சிறந்திட வேணும்
கன்னியர் நல்ல கணவனைப் பெறவும்
செல்வங்கள் சேர்ந்து மங்களம் பெருகி
சீருடன் சிறப்புடன் வாழ் என வாழ்த்தி
சௌபாக்கிய லஷ்மி நீ வருவாய் என் மனை மங்களம் பொங்க

கற்பூரம் சுற்றி கண்களில் ஒற்றி
கரத்தினில் மங்கள கங்கணம் கட்டி
பொற்பதம் சேவித்து பூக்களும் தூவி
புண்ணியம் அடைவோம் அன்னையே வருக
சௌபாக்கிய லஷ்மி நீ வருவாய் என் மனை மங்களம் பொங்க
சௌபாக்கிய லஷ்மி நீ வருவாய்


பார்வதிதேவியின் சாபத்தால் நோயால் அவதிப்பட்ட சிவகணம் பார்வதியின் கருணையால் உபதேசம் பெற்று நோயிலிருந்து விடுபட்டதாக ஐதீகம்..
அன்னை பார்வதிதேவி வரலஷ்மி விரதத்தை கடைப்பிடித்தே முருகனை மகனாக கிடைக்கப்பெர்றாள்..
வரலஷ்மி விரதம் திருமண பாக்கியமும் குழந்தை பாக்கியமும் கிடைக்கச் செய்யும் ..
ஸ்ரீமகாலஷ்மியே வரலாஷ்மி பூஜை மகிமையை பற்றி அருளி இளவரசிக்கு செல்வச்செழிப்பு ஏற்பட உதவினாள்..
வாசலில் கோலம் போட்டு மாவிலை தோரணம் கட்டி முதலில் விநாயகர் பூஜை செய்ய வேண்டும்.

ஈசானிய மூலையில் மண்டபம் அமைத்து ஒரு படி நெல்லை சதுரமாகப் பரப்பி அதன் மீது ஒரு தாம்பூலம் வைத்து அதன் மீது அரிசியைப் பரப்பி அரிசியின் மேல் ஒரு குடம் வைத்து அந்த குடத்திற்குள் தண்ணீர் ஊற்றி, அந்த குடத்தின் சுற்றி சந்தனம் குங்குமம் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்து அந்த குடத்தின் மேல் மாவிலை சொருகி அதன் மேல் தேங்காயை வைத்து கலசத்தின் மேல் ஸ்ரீமகாலஷ்மி உருவத்தை அமைத்து நகைகளாலும் நறுமண மலர்களாலும் அலங்கரித்த பிறகு லஷ்மி மந்திரங்கள் உச்சரித்து பூஜிக்க வேண்டும்.
.jpg)
ஒன்பது முடிச்சு உள்ள சரடை வலது கையில் கட்டிக் கொள்ள வேண்டும்.
ஸ்ரீ வரலஷ்மி பூஜை எண்ணற்ற வரங்களை வாரி தரும்.
வரம் தரும் லக்ஷ்மி என்பதால் வரலக்ஷ்மி.
மிகவும் பக்தி ச்ரத்தையோடும் சாத்வீக உணவு, அஹிம்ஸை, சுத்தம், அழகு, இனிமை, ஒரு முகப்பட்ட மனது எல்லாம் கலந்து , அம்பிகையை ஆத்மார்த்தமாக, தன் வீட்டுப்பெண்ணாக பாவித்து தன் செல்ல மகளாக பாவித்து, அலங்காரம் செய்து, விதவிதமான உணவு வகைகளை நைவேத்யம் செய்து, பூச்சூட்டி, புத்தாடை புனைந்து, உயிருக்கு உயிராகக் கண்ணுக்கு கண்ணாக வரித்து பூஜித்து ஆராத்திக்கவேண்டும்..

.jpg)












வரலஷ்மி விரத பூஜை செய்தால் அஷ்ட லஷ்மிகளையும் பூஜிப்பதால் ஏற்படும் பலன்கள் சித்திக்கும்தனம், தான்யம், ஆரோக்யம், சம்பத்து, தீர்க்க சௌமாங்கல்யம் யாவும் ஸ்ரீவரலஷ்மியின் அருளால் கிடைக்கும்.





-1000x1000.jpg)


















திருச்சி, உறையூர் தான்தோன்றீஸ்வரர் கோவில், வளைகாப்பு விழா , குங்குமவல்லி தாயார் பல்லாயிரக்கணக்கான வளையல்களால் அலங்காரம்











வணக்கம்
ReplyDeleteஅம்மா
சொல்லி கருத்தும் படங்களும் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வரலட்சுமி விரதம் அறிந்தேன்
ReplyDeleteஉணர்ந்தேன்
நன்றி சகோதரியாரே
மகத்தான வரலக்ஷ்மி விரதம்.. நல்வாழ்த்துக்கள்!..
ReplyDeleteசெளபாக்கியலக்ஷ்மி வீடுகள் தோறும் எழுந்தருளி அனைவருக்கும் வளம் தரட்டும்.
ReplyDeleteபாடல் பகிர்வு,படங்கள் எல்லாம் மிக அழகு.
வரந்தரும் வரலசக்ஷ்மி வணங்குவோர் எல்லோருக்கும்
ReplyDeleteவாழ்வு தருவாள்!
அத்தனையும் மிக அழகு! அருமை!
நல்வாழ்த்துக்கள் சகோதரி!
வரலட்சுமி விரதம் பற்றிய விவரங்களும் , படங்களும் அருமை......
ReplyDeletegreat post about varalakshmi viratham
ReplyDeleteசெளபாக்கியம் அருளும் வரலஷ்மி விரதம் பற்றிய தகவல்கள் ,படங்கள் அத்தனையும் சிறப்பான பகிர்வு. உங்களுக்கும்,குடும்பத்தினருக்கும் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteசெளபாக்யங்கள் வர்ஷிக்கும்
ReplyDeleteஸ்ரீவரலக்ஷ்மிக்கு என் இனிய
வந்தனங்கள் நமஸ்காரங்கள்.
>>>>>
பொட்டி நிறைய
ReplyDeleteபூக்கொணர்ந்து ....
பூஜிப்பேன் .....
அம்பாள் ! ......................................
>>>>>
படங்கள் அத்தனையும் அழகோ அழகு !
ReplyDelete>>>>>
முதல்படம் மிகவும் முத்தான படம் ....
ReplyDeleteஎனக்கு எப்போதும் பிடித்தமான
சர்வலக்ஷணங்களுடனும் கூடிய
அம்பாள் அவள் !!
என்னிடம் எப்போதும் உள்ள,
நான் தினமும் தரிஸித்து மகிழும்
அதே [டிட்டோ] அம்பாளின் படத்தினை
நினைவூட்டுவதாக அமைந்துள்ளதில்
மேலும் மகிழ்ச்சியாக உள்ளது.
அதுவும் அந்தப்படத்தினில் சுற்றிலும்
16 தாமரைகளை இணைத்துப்
புதுமையாகக் காட்டியுள்ளது
தங்களின் தனித் திறமைதான்.
ஸ்பெஷல் பாராட்டுக்கள் + நன்றிகள்.
>>>>>
ஆரம்பப்பாடல் வரிகள் ஜோர் ஜோர் !!
ReplyDelete>>>>>
ஜல் ஜல் ஜல்
ReplyDeleteகண கண கண
கல கல கல
எனத்தங்களின் இந்தப் பதிவும்
மங்களம் பொங்கத்தான் செய்கிறது.
>>>>>
திருச்சி வளையல் அம்பாள்களை
ReplyDeleteஇன்று வரலக்ஷ்மி விரதத்தன்று
ஆடிவெள்ளிக்கிழமையில்
காட்டியுள்ளதில் ஓர் தனி மகிழ்ச்சி.
>>>>>
முறம் மற்றும் மட்டைத்தேங்காய் ?
ReplyDeleteகைவேலைப்படங்கள் அசத்தல்.
ரஸிக்க வைத்தன.
>>>>>
வரலக்ஷ்மி நோன்பு நாளில் இன்றைய பதிவு மிகப்பொருத்தமாக, மிக அழகான அமைத்துக்கொடுத்துள்ளது மகிழ்வளிக்கிறது.
ReplyDeleteஅனைத்துக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
வாழ்க ! வாழ்க !! வாழ்க !!!
;) 1362 ;)
ooo ooo ooo
'பாக்யதா லக்ஷ்மி பாரம்மா' என்ற பிரபல கன்னடப் பாட்டின் மெட்டிலேயே நீங்கள் எழுதியிருக்கும் தமிழ் பாடலையும் பாட முடிகிறதே! புகைப்படங்கள் கண்ணையும், கருத்தையும் கவருகின்றன. அம்பாளின் பின்னல் அலங்காரம், வளை அலங்காரம் எல்லாம் அருமை.
ReplyDeleteஸ்ரீ லக்ஷ்மியின் அருள் எல்லோருக்கும் கிடைத்து எல்லோரும் சகல சௌபாக்கியங்களுடன் வாழ அன்னையின் அருள் வேண்டி நிற்கிறேன்.
அழகான படங்கள்! கன்னடப் பாட்டின் தமிழாக்கம் ! இரண்டும் மனத்தைப் பக்திமயமாக்கிவிடுகின்றன. நன்றி.
ReplyDeleteஅருமையான தரிசனங்கள் கிடைக்கப் பெற்றேன். வரலக்சுமி விரதம் பற்றியும் அறிந்தேன். காப்பு மாலை அலங்காரம் பிரமாதம் நான் இதுவரை பார்த்ததில்லை. வரலக்சுமி அம்மன் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்.
ReplyDeleteசிகரம் - வலை மின்-இதழ் - 001 இணையத்தில் வெளிவரும் முதலாவது வலை இதழ். இன்றே படியுங்கள்!
ReplyDelete