"சொன்னாலும் வாயினிக்கும் சொலக்கேட்டால் காதினிக்கும்
பன்னாளும் சிந்தித்தால் பரந்தினிக்கும் சிந்தையெல்லாம்
பொன்னாளும் கலையாளும் புவியாளும் புகழ்ந்தேத்தும்
அன்னாயுன் சரிதங்கள் அற்புதமாம் கோமதியே'
அணியாரும் உன் விழா நாளில் அலங்காரம் பல கொண்டு
மணிவீதி முழக்கோடு வருநின்னைக் கண்டக்கால்
பணியாத தலை பணியும் பாடாத வாய்பாடும்
தணியாத சிந்தையும் தான் தணிந்து ஒடுங்கும் கோமதியே'
அருளும் பொருளும் அனைத்து அருளும்
துன்ப இருள் தொலைந்து மறையும்
தூயவள் என் அன்னை கோமதி
திருப் பாதம் பற்றிடும் அன்பருக்கு
பனிதூங்கும் மலரிலே பட்டொளி வீசிட பகவலன் வந்து தித்தான்
இனிய நல் காற்றினில் புள்ளினக் குரலோசை எழுந்துமே பொங்குதம்மா
நன்மக்கள் நற்றவத்தோர் நலிந் தோர்தலை வாசலில் வந்து நின்றார்
புன்னையின் வனக்குயில் பொற்கோ மதித்தாயே பூம்பள்ளி எழுந்தருளுவாய்
உலக அன்னையாம் உமையவள்-அனைத்துத் தலங்களிலும் எண்ணற்ற யுகங்களில் இறைவனை வணங்கி, பெறுதற்கரிய சங்கர நாராயண அம்சத் திருவளையும் பெற்று கோமதி அம்பிகையாகத் தோற்றம் கொண்டனள்.
ஆதி மூல பராசக்தி அவதாரங்களில் ஒன்றே கோமதி மூர்த்தமாகும்.
பன்னெடுங்கால யுகங்களாக வான லோகங்களில் வழிபடப் பெற்ற கோமதி அம்பிகை அரிய தவங்களால் கோமதித்தாய் பெற்ற இறையருளை, அம்பிகையை உபாசிப்பதன் மூலம் எளிதில் அடைந்திடலாம் எனில் என்னே பராசக்தியின் பரந்த நற்கருணை!
பராசக்தி வழிபாட்டின் திரண்ட திருவருளைக் குறிப்பதாகும்.
ஸ்ரீ கோமதி அம்மன் துதி
ஓம் ஜகத் ஜும்பே ஜகத் ஜாலனிம்
ஜய ஜய மாதுர் ஜன நாயகிம்
ஜ்வாலா ஜ்வால ஜும்ப வதனிம்
மதே மதே ஸ்ரீ கோமதீம்
ஆடி பவுர்ணமியன்று சங்கர நயினார் கோவிலில் ஆடித் தபசு நிகழ்ச்சி கோலாகலமாக முறையில் நிகழ்ந்து வருகின்றது.
வலப்பாகம் சிவன் உருவமும் இடப்பாகம் திருமால் உருவமாக இருக்கும்.
வலப்பக்கம் நெற்றியில் திருநீறும் இடப்பக்க நெற்றியில் திருமண் ணும் காணப்படும்.
வலபக்கம் இடுப்பில் புலித்தோலுடையும் இடப்பக்கம் இடுப்பில் பீதாம்பரமும் இருக்கும்.
வலப்பக்கம் செம்மேனியும், இடப்பக்கம் நீலமேனியும் தோன்றும்.
இவை போன்றே வலப்பக்கம் சிவனுக்குரிய அம்சங்கள் யாவும் பொருந்தியிருக்கும்.
இடப்பக்கம் திருமாலுக்குரிய அம்சங்களை கொண்டு இயங்குவது இததிருவுருவமாகும்.
சிவனுக்குரிய வலப்பாகத்தில் தலையில் கங்கை, பிறைச்சந்திரன், அக்னி, ஜடாமுடியும் உள்ளன. காதில் தாடங்கம், கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் ஆடை இருக்கிறது. திருவாசியில் நாக வடிவில் சங்கன் குடை பிடித்தபடி இருக்கிறான்.
திருமாலுக்குரிய இடப்பாகத்தில் நவமணி கிரீடம், காதில் மாணிக்க குண்டலம், மார்பில் துளசிமணி மற்றும் லட்சுமி மாலை, கையில் சங்கு, இடுப்பில் பீதாம்பரம் இருக்கிறது. இவர் பக்கமுள்ள திருவாசியில் நாக வடிவில் பதுமன் குடை பிடிக்கிறான்.
சங்கர நயினார் சன்னதியில் காலை பூஜையில் மட்டும் துளசிதீர்த்தம் தரப்படும். மற்ற நேரங்களில் விபூதி தருகின்றனர்.
பூஜையின் போது சிவனுக்குரிய வில்வம், பெருமாளுக்குரிய துளசி மாலைகளை அணிவிக்கிறார்கள் .பிரசாதமாக விபூதியும், துளசி தீர்த்தமும் ஒன்றாகத் தரப்படுகிறது
சிவன் அபிஷேகப்பிரியர். அலங்காரப்பிரியதிருமாலுக்கு உகந்த வகையில் மூலவர் சங்கரநாராயணர் எப்போதும் அலங்காரத்துடன் காட்சி தருகிறார். பெருமாள் குளிர்ச்சி பொருந்தியவர் என்பதால், சிவனுக்கு அபிஷேகம் கிடையாது!
சங்கர நயினார் சன்னதியில் ஸ்படிக லிங்கமாக காட்சி தரும் சந்திரமவுலீஸ்வரருக்கே அபிஷேகம் செய்யப் படுகிறது.
சிவராத்திரி, ஏகாதசி நாட்களில் உற்சவருக்கு அபி ஷேக, பூஜை நடக்கும்.
ஆடித்தபசு விழா வன்று மட்டும் அம்பாளுக்கு காட்சி தர வெளியே புறப்பாடாகிறார் இந்த உருவ கோலத்தை சங்கர நயினார் கோவிலில் நேரே இன்றும் காணலாம்.
இந்தச் சிவன் கோயிலில் சொர்க்க வாசல் உண்டு;
வைகுண்ட ஏகாதசி சிறப்பாகக் கொண்டாட்டம்!
எப்போதுமே அருவத்தில் லிங்கமாகக் காட்சி தரும் ஈசன், கருவறையில் உருவமாக காட்சி அளிப்பது மிக மிக விசேடம்!
எனினும் ஆகம வழக்கப்படி லிங்க உருவத்தில் மட்டுமே பூசை நடக்க வேண்டி, சங்கரலிங்கம் என்று இன்னொரு தனிச் சன்னிதியிலும் எழுந்தருளி உள்ளார் ஈசன்! அவர் நாயகியாக கோமதி அம்மன்!
புற்று சூழ்ந்த சங்க-பத்மன்! நாக நண்பர்கள் வழிபட்டதால் புற்று மண்ணே பிரசாதம்!
ஆடித் தபசின் பன்னிரண்டு நாளும், ஊர் மக்கள் தங்கள் வீட்டு விழாவைப் போல் கொண்டாடுகின்றனர்!
உலக நன்மைக்காகத் தன் இடப்பாகத்தையே அன்னை விட்டுத் தந்தாள் அல்லவா? அதனால் அவளுக்கென்று தனித்தேர்! அவள் மட்டுமே சிறப்பாக வலம் வருவாள்!
ஆடித் தபசு மண்டபத்தில் அவள் தவம் நடித்துக் காட்டப்படுகிறது!
ஒரு கையில் விபூதிப் பை! ஒரு காலில் தவம்! சங்கர நாராயணர் அவள் முன் தோன்றி வரம் அருளும் காட்சி!
பொதுவாக ஸ்ரீசக்ர பிரதிஷ்டை காலடிகளில் தான் இருக்கும்!
ஆனால் இங்கு சன்னிதி முகப்பில் பெரிதாக ஸ்ரீசக்ர அமைப்பு!
மன மாச்சர்யங்கள், பேதங்கள், மன நோய்கள் எல்லாம் நீங்கிட, அதில் உட்கார்ந்தும் தியானித்துக் கொள்ளலாம்!
மாதே, மலையத் தவஜ பாண்டிய சஞ்சாதே!
மாதங்க வதன குக மாதே!
சகோதரி சங்கரி! சங்கரி! சங்கரி!
சாமுண்டீஸ்வரி, சந்திர கலாதரி, தாயே கெளரி!
உலகன்னை! ஜகன்மாதா!
தர்ம சம்வர்த்தினி! அறம் வளர்த்த நாயகி!
நம சிவாய!ஓம் நமோ நாராயணாய!
கோமதித் தாய் திருவடிகளே சரணம்!!!
கண் கொள்ளாக் காட்சி!
ReplyDeleteசங்கரன் கோயில் சென்றுவந்த நினைவுகளை மீண்டும் ஏற்படுத்தியுள்ளீர்கள் சகோதரியாரே நன்றி
ReplyDeleteசங்கர நாராயண ஸ்வாமி தரிசனம் வேண்டி கோமதி அம்பிகை தவமிருக்கும் அழகினை விவரித்த விதம் அருமை..
ReplyDeleteஎங்கள் அத்தை ஒருவர் இருந்தார். (இப்போது இல்லை) அவர் சொல்லிக் கொண்டே இருப்பார். வருடா வருடம் அவர்கள் குடும்பத்தோடு இங்கு சென்று வருவார்கள்.
ReplyDeleteமீண்டும் ஆடித்தபசு பற்றிய இன்றைய பதிவு ஆடிப்போக வைக்கிறது.
ReplyDelete>>>>>
சங்கரன் கோயில் ஆடித்தபசு பற்றிய காணொளி அருமை.
ReplyDelete>>>>>
பாடல் வரிகள் இனிமையாகக் கொடுத்துள்ளீர்கள்.
ReplyDelete>>>>>
படங்கள் எல்லாம் அருமையாக உள்ளன.
ReplyDelete>>>>>
விளங்கங்கள் வியப்பளிப்பதாக உள்ளன.
ReplyDelete>>>>>
கடைசிப்படம் கலக்கலாக உள்ளது.
ReplyDelete>>>>>
அனைத்துக்கும் நன்றிகள். பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்க! வாழ்க!! வாழ்க!!!
;) 1363 ;)
oooOooo
ஆடி தபசு கூட்டத்தைப் பார்த்து மிரண்ட அந்த சிறுவயது நினைவுகள் நீங்காமல் இருக்கிறது.
ReplyDeleteஅதற்கு அப்புறம் கூட்டம் இல்லாத நேரத்தில் இரண்டு முறை போய் அன்னையை தரிசனம் செய்து வந்து இருக்கிறேன்.
அன்னை அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
வாழ்த்துக்கள்.
இக்கோயிலுக்கு நான் சென்றுள்ளேன். ஆனால் விழாவினைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை. தங்களின் பதிவால் அவ்வாய்ப்பு கிடைத்தது. நன்றி.
ReplyDeleteஆடித் தபசு விளக்கம் புதிது .
ReplyDeleteபடங்களுடன் அருமை.
இறையாசி நிறையட்டும்.
வேதா. இலங்காதிலகம்.