அன்னையின் திருநாள் வெள்ளிக்கிழமைகள்
ஆடிவெள்ளியோ அனைத்திலும் உயர்வு
ஆடிடும் மனத்தை அசையா நிறுத்தி
அதிலே அவளைக் கண்டிட விழைவோம்!
ஆடும் மயிலாய் ஆடியே வருவாள்
அழகாய் எம்மின் உள்ளில் உறைவாள்
அகமும் புறமும் அவளை நினைந்தால்
அருளைப் பொழிவாள் கருணைக் கடலாய்!
ஆடிவெள்ளியில் அவளை நினைப்போம்
பாடியே நிதமும் பதமலர் பணிவோம்
தேடியே வருவாள் சத்தியம் இதுவே
நாடியே நாமும் நம்பிக்கை கொள்வோம்!
valayal alangaram(angala eswari,padiyanallur)
Amman Temple near Good Will Anjaneyar Temple, Tirunelveli Junction,
வையம் முழுதும் படைத்து அளிக்கின்ற
அம்பிகைதன் புகழ் வாழ்த்து கின்றோம்
செய்யும் வினைகள் அனைத்துமே
வெற்றி சேர்ந்திட நல்லருள் செய்கவென்றே.
வளையல் வியாபாரி ஒருவர் பெரியபாளையம் வேப்பமரத்தடியில் வளையல்களை வைத்துவிட்டு தூங்கிவிட்டார்.
கண் விழித்து பார்த்தபோது, தன் அருகில் வைத்திருந்த வளையல்கள் காணாமல் போயிருப்பதை கண்டு . சுற்றுமுற்றும் தேடினார்..
அன்றிரவு, அந்த வளையல் வியபாரியின் கனவில் அம்மன் தோன்றி “நான் ரேணுகை பவானி. நீ கொண்டு வந்த வளையல்கள் என் கைகளை அலங்கரித்து இருக்கிறது பார். என் மனதை மகிழ்வித்த உனக்கு வரங்கள் அளிக்கிறேன். பல யுகங்களாக பெரியபாளையம் வேப்பமரத்தின் அடியில் புற்றில் சுயம்புவாக வீற்றிருக்கும் என்னை வணங்குபவர்களின் வாழ்க்கை செழிக்கும்.” என்றாள் அம்பாள்.
தான் கண்ட கனவை தன் நண்பர்களிடத்திலும், உறவினர்களிடத்திலும் சொல்லி அழைத்து வந்து, பெரியபாளையத்தில் சுயம்புவாக தோன்றிய அம்மனுக்கு ஆலயம் கட்டி வழிபாடு செய்தார்கள்.
அம்பாள். வளையல் அணிய வேண்டும் என்ற ஆசையால்தான் புற்றில் இருந்தும் வெளிப்பட்டாள். அம்மனுக்கு அணிவித்த வளையல்களில் இரண்டு வாங்கி பெண்கள் அணிந்துகொண்டால், குடும்பத்தில் சுபிக்ஷங்கள் ஏற்படும்.
அகிலத்தின் நாயகி சந்தோஷப்பட்டால் அகில உலகமே மகிழ்சியடையும். ஆண்டாள் தோன்றிய தினம் ஆடிபூரம். நன்னாளில் ஆண்டாளை தரிசித்து பூமாலை, வளையல்களை கொடுத்து வணங்கி ஆண்டாளின் ஆசியை பெற்ற வளையல்கள் அணியலாம்.
ஆண்டாளுக்கு அணிவித்த மலர்களை சிறிது வாங்கி வைத்து கொண்டாலும் நல்ல முயற்சிகள் வெற்றி பெறும். மங்களங்கள் யாவும் கைக்கூடும்.
ஆடிப்பூரம் வெள்ளிக்கிழமை காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் கருக்காத்தம்மன் கோயில் அம்மனுக்கு வளைக்காப்பு நிகழ்ச்சி
வளையல் அலங்காரம்...
ஆடி வெள்ளியன்று
ReplyDeleteதேடித் தந்துள்ள பதிவினை
ஓடி வந்து பார்த்தேன் .... ;)))))
[இனிதான் நான் தூங்கணும். தூங்கி எழுந்து விட்டு மீண்டும் வருவேன்]
This comment has been removed by the author.
ReplyDeleteகடைசியில் 2+2=4 முறை காட்டியுள்ள படம் பளிச்சென்று ஜோராக உள்ளன.
Deleteகாமதேனுவுக்கே வளையல் அலங்காரம் .......
ReplyDeleteபுதுமையாகவும் பார்க்க அழகாகவும் உள்ளது ......
இரண்டு பக்கமும் மொழு மொழுன்னு கொம்புடன் ..... ;)
>>>>>
கும்பகோணம் காத்யாயினி
ReplyDeleteமாமல்லபுரம் கருக்காத்தம்மன்
திருச்செந்தூர் அன்பிற்பிரியாள் ...
உச்சினி மாகாளி அம்மன்
திருப்பூர் மாரியம்மன்
மதுரை சுந்தரேஸ்வரர்
வளையல் வியாபாரியாக ...
திருநெல்வேலி ஜங்ஷன்
குட்வில் அனுமனுக்கு
அருகில் உள்ள அம்மன்
பாடியநல்லூர் அங்காள ஈஸ்வரி
மைலாப்பூர் நந்தலாலா கோயில்
மஹாலக்ஷ்மி தாயார்
என ஏராளமான கோயில்களுக்கு அழைத்துச்சென்று அனைத்து அம்பாள்களையும் கண்குளிர இன்று ஆடி வெள்ளியில் தரிஸிக்க வைத்துள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாளுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே புரியவில்லை. ;)))))))))))
>>>>>
எங்கள் ஊர் குங்குமவல்லி போன்ற சில அம்பாள்களை அடுத்த ஆடிவெள்ளிக்காக ரிஸர்வில் வைத்துள்ளீர்கள் போலிருக்கிறது. தொடர்புடையப் பதிவாகவும்கூடச் சொல்லாதது மிகவும் ஆச்சர்யம் தான்.
ReplyDeleteஇந்த செவ்வாய்க்கிழமை நாங்கள் இருவரும் அந்தப்பக்கம் ஆட்டோவில் பயணம் சென்ற போது ட்ராஃபிக் ஜாமில் அந்தக்கோயில் பக்கம் சற்று நேரம் நிற்க நேர்ந்தது.
தங்கள் ஞாபகம்தான் எனக்கு உடனே வந்தது.
சென்ற ஆண்டோ அல்லது அதற்கு முந்திய ஆண்டோ, தங்களின் பதிவினைப்பார்த்து விட்டு உடனே உறையூர் குங்குமவல்லித்தாயாரின் வளையல் அலங்காரத்தைப்பார்க்க ஓடிச்சென்றது ஏனோ என் நினைவுக்கு வந்தது.
அப்படியொரு கோயில் அங்கு உள்ளது என்பதே அதற்கு முன்பு எனக்குத்தெரியாமல் தான் இருந்தது. தங்கள் பதிவு எல்லோருக்குமே நல்லதொரு வழிகாட்டியாகத்தான் உள்ளது. இல்லாவிட்டால் வழி மேல் விழி வைத்துக்காத்திருப்பேனா .... தங்கள் பதிவுகளை தினமும் பார்க்கவேண்டி......
>>>>>
முதல் படத்தில் நம் தொந்திப் பிள்ளையாரப்பா, லக்ஷ்மி, சரஸ்வதி மூவரும், சுற்றிலும் 10 தீபங்களுடன் கண் சிமிட்டுவதுபோல தோன்றித்தோன்றி மறைவது மிக அழகாக உள்ளது.
ReplyDelete>>>>>
இரண்டாவது படத்தில் பளபளக்கும் பொற்காசுகளை வாரி வழங்கிடும் [தன]லக்ஷ்மியும் ஜோர் ஜோர்.
ReplyDeleteமேலேயுள்ள கைகளில் தங்களின் Profile Photo க்களை ஏந்தியிருக்கா .... OK !
ஆனால் கீழ் இரு கைகளிலும் வெயிட்டான குடத்தையும் தாம்பாளத்தையும் ஏந்திக்கொண்டே இருக்கிறாளே ....... கொட்டக்கொட்ட குறையாமல் வேறு உள்ளதே ..........
அவள் கைகள் வலிக்காதோ ..... பாவம் !
>>>>>
ஆடி....
ReplyDeleteபாடி....
தேடி....
நாடி.....
ஆரம்ப வரிகள் கொண்ட பாடல்
நன்னாயிருக்கு.
தாங்களே இயற்றியதோ ! ;)
>>>>>
//ஆடிடும் மனதை அசையா நிறுத்தி
ReplyDeleteஅதிலே அவளைக் கண்டிட விழைவோம் !//
அதே அதே ஸபாபதே !!
அப்படியே தான் நானும் ....
அசையா நிறுத்தி கண்டிட விழைகிறேன்....
தினம் தினம் படத்தில் மட்டுமே பார்த்து மகிழ்ந்துவரும்
என் அம்பாள் என்றாவது எனக்கு நேரில் காட்சி தருவாளா !
அவளின் கடைக்கண் பார்வையாவது என் மீது விழுமா !!
அந்த நாளும் வந்திடாதோ !
>>>>>
இன்றைய தங்களின் பதிவு லக்ஷக்கணக்கான வளையல்களுடன் லக்ஷணமாகப் மிகப்பிரமாதமாக உள்ளது. கண்டு மகிழ்ந்தேன். மனதுக்கு மகிழ்ச்சியும் புத்துணர்வும் அளிப்பதாக உள்ளது.
ReplyDeleteஅனைத்துக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
நாளைய பதிவுக்கு இன்னும்
பலமணி நேரங்கள்
அதாவது ஒரு முழு நாள் அல்லவா
காத்திருக்க வேண்டும்
என ஓர் ஏக்கத்தை
ஏற்...ப டு த் து தே !
வாழ்க ! வாழ்க !! வாழ்க !!!
;) 1355 ;)
oo oo oo oo oo
வளையல் அல்ங்காரம் கண்ட
ReplyDeleteமகிழ்ந்தேன்
வியந்தேன்
நன்றி சகோதரியாரே
ஆடிவெள்ளியான இன்று அழகான வளையல் அலங்காரத்துடன் அம்மனின் தரிசனம்.அற்புதமான அழகான படங்களுடன் சிறப்பான பகிர்வு. நன்றிகள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவளையல் அலங்காரங்கள் அழகு. ஆடி வெள்ளியன்று வளையல் வியாபாரம் செழித்திருக்குமே.
ReplyDeleteஆடிவெள்ளியில் வளையல்களின் மகத்துவம் பற்றிய அரிய தகவல்கள்.. வளையல் அலங்காரப் படங்கள் அனைத்தும் அழகு..
ReplyDeleteமங்கலகரமாக இருக்கின்றது. மகிழ்ச்சி..
ஆடி வெள்ளிவளையல் அலங்கார அம்மன் படங்கள் மிக அழகு.
ReplyDeleteமங்கலங்கள் எல்லோருக்கும் அள்ளிதரட்டும் அன்னை.
வாழ்த்துக்கள்.
பாடல் பகிர்வு அருமை.
வண்ண வண்ண வளையல் அலங்காரம். பார்க்கப் பார்க்க பக்தி பரவசம். திரு வை.கோபாலகிருஷ்ணன் சார் சொல்வதைப் போல அந்த குங்குமவல்லி கோயில் பற்றி உங்கள் பதிவைப் படித்த பின்னர்தான் திருச்சியில் அப்படி ஒரு கோயில் இருப்பதே எனக்கு தெரிய வந்தது.. தொடரட்டும் உங்கள் ஆன்மீகப் பதிவுகள்!
ReplyDelete