Monday, September 30, 2013

விஸ்வரூப மகா சதாசிவ மூர்த்தி















சிவபெருமான், "பிறவாயாக்கைப் பெரியோன்" என்ற நிலைபெற்றவர். , இம்மண்ணுலகில் மானுடர்க்காக எத்தனை முறை தோன்றினாலும்;
மானுடக் கருவில் மீண்டும் பிறக்க மாட்டார்.

ஈசன் அறுபத்து நான்கு முறை திருவிளையாடல் நிகழ்த்தியபோதும், ஒருமுறை கூடப் பிறக்கவில்லை.
எனவே, 'கருவூறார்' என்ற சொல்லால், அதாவது கருவில் ஊறமாட்டார் (மீண்டும் பிறக்க மாட்டார்) என்ற சிறப்புப் பெயரைப் பெற்றவர்..!
சிவபெருமானது அறுபத்து நான்கு திருக்கோலங்களில் ஒன்றாகத்திகழும்
இருபத்தி ஐந்து தலைகளும், ஐம்பது கைகளையும் கொண்ட திருக்கோலம் மகா சதாசிவ மூர்த்தி என்று அழைக்கப்படுகிறது.

கயிலையில் உள்ள மகா சதாசிவ மூர்த்தியச் சுற்றி, இருபத்தி ஐந்து மூர்த்திகளும் இருப்பதாகவும், ருத்ரர்களும், சித்தர்களும், முனிவர்களும் வணங்கக்கூடியவராகவும்  அருள்புரிகிறார்..

மகா கைலாயத்தில் இருந்து கொண்டு அனைத்து உயிர்களுக்கும் அருள் பாலித்து அனுக்கிரகம் செய்வதால் அனுக்கிரக மூர்த்தி என்றேவணங்கப்படுகிறார்..

 இன்ன உருவம் தான் எனக் கூற முடியாதவாறு அனைத்தும் கலந்த திருமேனியுடையவர் என புராணங்கள் கூறுகின்றன. மகேஸ்வர வடிவங்கள் இருபத்து ஐந்தும் உள்ளடக்கிய வடிவம், ‘மகா சதாசிவர்’.


காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள மகா சதாசிவ மூர்த்தியை கோயிலுள்
காண முடியாது.

சுரகரேஸ்வரர் கோயில் விமானத்தில் சுதை சிற்பமாகத்தான் காண முடியும்.

பல கோயில் விமானங்களில் தரிசிக்க முடியும்.



25 முகங்களையும் 50 திருக்கரங்களையும் உடைய மகா சதாசிவ வடிவினை  திருநல்லூர் திருத்தலத்தில் சிவன் கோயிலின் ராஜகோபுரத்தில் தரிசிக்கலாம்.

 மகா சதாசிவ மூர்த்திய வணங்கினால் சிவ தரிசனம் விரைவில் கைகூடும்  என்பது ஐதீகம்.

 கடுமையான காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் கருப்பஞ்சாறால்
மகா சதாசிவரை அபிசேகம் செய்தால் கடும் காய்ச்சல் நீங்கி தேகம்   ஆரோக்கியம் பெறும் என்றும் நம்பிக்கை..!





Sunday, September 29, 2013

யாழிசைப் பறவை










ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதிக் காடுகளில் காணப்படும் வினோதப் பறவை லயர்’  

லயர்’பறவைக்கு வைத்திருக்கும் பெயரான லயர்’  (Lyre) என்பது ஒரு பழமையான இசைக்கருவி.Lyre என்றால் யாழ்
 லயர்’ பறவையின் தோகை போன்ற வால் சிறகுகள் ‘லயர்’ என்ற இசைக் கருவியினைப் போல் இருப்பதால் ‘லயர் பேர்ட்’ என்ற பெயர் வந்தது.
 (Lyre birds) பல குரலில் பாடும் சக்தி கொண்ட அதிசயமான பறவையினம். 
மிகவும் பிரமிக்கும் வகையில் தனது சூழலில் இருக்கக்கூடிய அனைத்து இசைகளையும் பல குரலில் (மிமிகிரி) செய்யும் ஆற்றல் படைத்தது. 
மயிலின் தோகை போன்றும்  குயிலின் உடல் போன்றும் காட்சிப்படுகின்றன. 

மக்கிய மரப் பாகங்களில் காணப்படும் புழுக்கள் மற்றும் பூச்சிகளை உணவாகக்கொள்கின்றன.. 

பல குரல் பாடும் சக்தி ஆண் லயர்’ பறவைக்கு மட்டுமே உள்ளது. 

 தனது பெண் இனத்தினைக் கவருவதற்காக இந்த பல குரல் விநோதம் செய்கிறது. 
 தோகை பதினாறு இறகுகள் கொண்டது. நடு இரண்டு இறகுகள் கம்பி போன்று நீண்டவை. வெளி இரண்டு இறகுகளும் சிறிது அகலமானவை. அவற்றின் நிறம் மிக அழகாக இருக்கும். மற்ற பன்னிரண்டு இறகுகளும் நுண்ணிய பட்டு இழைகளால் ஆனது போன்று இருக்கும்.
லயர் பறவைபல பறவைகளின் குரல்களையும் ஒலித்துக் காட்டுவதோடு மனிதர்கள் எழுப்பும் எந்த ஒலியினையும் இசைத்துக் காட்டி ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்..

ஆஸ்திரேலிய நாணயங்களிலும் , தபால் தலைகளிலும் லயர் பறவை இடம் பெற்றிருக்கிறது ...

The Australian 10 cent coin features a Superb lyrebird on one side




Lyrebird




யாழிசைப் பறவை -  லயர் பேர்டின் குரல் வளத்தினையும் நடனத்தின் நளினத்தினையும்   இந்ததளத்தில் ரசிக்கலாம்

http://www.youtube.com/watch?v=VjE0Kdfos4Y