



முழுநிலவு மிதந்துகொண்டிருக்கும் பௌர்ணமியன்று விழாக்களை கொண்டாடியது நம் முன்னோர்களின் தனிச்சிறப்பு...
மீனாட்சி - மதுரையின் அரசி. இவளுக்கு, இந்தப் பெயர் வந்ததே, அவளது கண்களின் சிறப்பால் தான்!"அட்சம்' என்றால் கண்கள்.
மீனாட்சியை, "மீன்+அட்சி' என்று பிரிப்பர். மீன் போன்ற கண்களால், பக்தர்களுக்கு அருள்பவள் என்னும் தனிச்சிறப்பு கொண்ட அன்னை..மற்றவர்களின் கண்கள் இமைக்க வாய்ப்புண்டு; ஆனால், மீனின் கண்கள் இமைப்பதில்லை.
மீன் இமைக்காமல், தன் குஞ்சுகளைப் பாதுகாக்கும் தன்மையுடையது. அதுபோல், கயற்கண்ணியான மீனாட்சியும், தன் பக்தர்களை இரவும், பகலும் விழித்திருந்து பாதுகாக்கிறாள். அவளது கண்கள் இமைப் பதில்லை என்பதால் தான், மதுரையும் தூங்கா நகராக விளங்குகிறது.



மீனாட்சியை, மரகதவல்லி என்பர். மரகதம் பச்சை நிறமுடையது; பச்சை வண்ணம் செழுமை யின் அடையாளம்.
தொழில் பின்னணி அதிக மில்லாத மதுரை, இன்று, மிகப்பெரிய நகரானதற்கு காரணம், மீனாட்சியின் கைங்கர்யமே.
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களை நம்பியே இவ்வூர் உள்ளது. பச்சை, இரக்கத்தின் அடையாள மாகவும் உள்ளது.
அன்னை மீனாட்சி கருணையே வடிவானவள் என்பதை அவளது நிறம் உணர்த்துகிறது.

அன்னை பார்வதி தேவியே மீனாட்சியாக மானிட அவதாரம் எடுத்து, பூமிக்கு வந்தாள்.
சித்திரை திருவிழாவில் தான் மீனாட்சியம்மை மதுரையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் பட்டாபிஷேகம், பல நாடுகளை வென்று சிவலோகத்தையே கைப்பற்றச் செல்லும் திக்விஜயம், திருக்கல்யாணம் ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கும். இதைத் தொடர்ந்து, அழகர் வைகையில் இறங்கும் விழா நடைபெறும். சித்திரை திருவிழா காண்போம். அங்கயற்கண்ணியின் கடைக்கண் கருணை பார்வை பெற்று, பிறந்த பயனை அடைவோம்.

""உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம்
கள்ளப்புலனைந்தும் காலா மணிவிளக்கே''
என்று திருமூலர் திருமந்திரத்தில் சொல்கிறார். "
" நாம் நமது ஐம்புலன்களையும் ஒழுங்குபடுத்தி வாழும்போது, அவை செய்யும் கள்ளத்தனமான செயல்கள் அனைத்தும் நீங்கி, மனிதன் ஒளிவிளக்காக திகழ்கிறான். அப்படிப்பட்ட நிலையில் அவனுடைய ஜீவனே சிவலிங்கமாகி விடுகிறது,''என்பது இந்தப் பாடலின் பொருள்.
இதை சூசகமாகக் காட்டத்தான் சுவாமியும், அம்பாளும் குதிரை வாகனத்தில் வருகின்றனர்.

பாவ விமோசனம் தரும் சித்ரா பவுர்ணமி நன்னாளில்
கள்ளழகர் குதிரையில் வந்து வைகையாற்றில் இறங்குகிறார்.. குதிரையை போர்வீரர்களே அதிகம் பயன்படுத்துவார்கள். அழகரும் ஒரு போர் வீரரே! ..மானிடர்களின் பலவித கெட்ட குணங்களையும் "நான்' என்ற ஆணவ குணத்துடனும் வாழ்ந்து அதனால், பல பாவங்களைச் செய்து அவர்களுக்குள்
உறைந்து கிடக்கும் இந்த கெட்ட குணங்களுடன் போரிட்டு, பாவச்சுமையைக் குறைக்கவே அவர் குதிரை மீதேறி வருகிறார்.
அவரது குதிரையின் நான்கு கால்களும் தர்மப்படி வாழ வேண்டும், வாழ்க்கையின் பொருள் உணர்ந்து வாழ வேண்டும், அதன் மூலம் இன்பம் பெற வேண்டும், பாவமற்ற வாழ்க்கை பிறப்பற்ற நிலையை நல்கும் என்ற நான்கு நிலைகளாக (அறம், பொருள், இன்பம், வீடுபேறு) உள்ளன.
குதிரையின் ஒரு காது எதைக் கேட்கலாம் என்பதையும், மற்றொரு காது அதன் விளைவுகளையும் (பாவ, புண்ணியம்) குறிக்கிறது. அதன் கண்கள் எதைக் காண வேண்டும் என்பதையும், அதனால் கிடைக்கப் போகும் கண்ணுக்குத் தெரியாத பலன்களையும் தெரிவிக்கின்றன.
குதிரையின் முகம் நம் தலைவிதியைக் குறிக்கிறது. அதன் வாலுக்கு அபார சக்தி உண்டு. உடலில் ஈ மொய்த்தால், குதிரை தனது வாலை ஆட்டி எப்படி அதை விரட்டுமோ, அதுபோல, விதிப்படி நமக்கு துன்பம் ஏற்பட வேண்டும் என இருந்தால், அந்த துன்பங்களை அழகரின் தரிசனம் விரட்டி விடும் என்பதை குதிரையின் ஆடும் வால் எடுத்துரைக்கிறது.

கழுத்தில் கட்டப்பட்ட சலங்கைகளும், காலில் கட்டிய சிலம்புகளும் இறைவனை மந்திர ஒலி எழுப்பி வணங்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.

அழகர் குதிரையின் கடிவாளத்தை இறுகப் பிடித்திருக்கிறார்.
அதாவது, கட்டறுந்து ஓடும் மானிடப்பிறப்புகளின் செயல்பாடுகள் தன் கையில் உள்ளது என்பதை அவர் சொல்லாமல் சொல்கிறார். அவர் கையிலுள்ள சாட்டை, அவ்வாறு ஓடும் மானிடர்களுக்கு "சோதனை' என்னும் அடியைக் கொடுப்பதாக உள்ளது.
குதிரையின் முதுகில் அவர் அமர்ந்துள்ளது, "அனைத்துலகும் தனக்குள் அடக்கம்' என்பதைக் காட்டுகிறது.
அழகரை, இந்த ஆன்மிகக் கண்ணோட்டத்துடன் பார்ப்பவர்கள், அவர் உடுத்தியுள்ள பட்டு வஸ்திரம் போல், இவ்வுலகில் செல்வவளமும், மறு உலகில் தெய்வநிலையும் பெற்று உய்வடைவர்.என்பது ஐதீகம்..






அழகர்சாமியின் குதிரை ரசித்தேன். குதிரையின் கால், காது ஒவ்வொன்றிற்கான விளக்கமும் எனக்கு புதிது.
ReplyDelete// மீன் இமைக்காமல், தன் குஞ்சுகளைப் பாதுகாக்கும் தன்மையுடையது. அதுபோல், கயற்கண்ணியான மீனாட்சியும், தன் பக்தர்களை இரவும், பகலும் விழித்திருந்து பாதுகாக்கிறாள்.. அவளது கண்கள் இமைப்பதில்லை//
ReplyDeleteஇந்த விளக்கம் அருமை.
என்னைப்போல தூக்கம் வராமல்
[அதுவும் அவளின் அருளே! ]
ஏதேதோ சிந்தனைகளில் சிக்கித் தவிப்போர்களுக்கெல்லாம், என் அன்னை மீனாக்ஷியின் அருள் நிச்சயம் எப்போதும் உண்டு என்று நினைத்து மனதை சற்றே சமாதனப்பட வைக்கிறது.
//மீனாட்சியை, மரகதவல்லி என்பர். மரகதம் பச்சை நிறமுடையது;
ReplyDeleteபச்சை வண்ணம் செழுமை யின் அடையாளம்.
பச்சை, இரக்கத்தின் அடையாள மாகவும் உள்ளது.
அன்னை மீனாட்சி கருணையே வடிவானவள் என்பதை அவளது நிறம் உணர்த்துகிறது//
என் அன்னை மீனாக்ஷி எப்போதும் கருணையே வடிவமானவள் தான். சந்தேகமே இல்லை.
//குதிரையின் முகம் நம் தலைவிதியைக் குறிக்கிறது. அதன் வாலுக்கு அபார சக்தி உண்டு. உடலில் ஈ மொய்த்தால், குதிரை தனது வாலை ஆட்டி எப்படி அதை விரட்டுமோ, அதுபோல, விதிப்படி நமக்கு துன்பம் ஏற்பட வேண்டும் என இருந்தால், அந்த துன்பங்களை அழகரின் தரிசனம் விரட்டி விடும் என்பதை குதிரையின் ஆடும் வால் எடுத்துரைக்கிறது//
ReplyDeleteஅடடா ! அபார நம்பிக்கையூட்டும் நல்ல [ வால் ]வரிகள்.
//அழகர் குதிரையின் கடிவாளத்தை இறுகப் பிடித்திருக்கிறார்.
ReplyDeleteஅதாவது, கட்டறுந்து ஓடும் மானிடப்பிறப்புகளின் செயல்பாடுகள் தன் கையில் உள்ளது என்பதை அவர் சொல்லாமல் சொல்கிறார்.
அவர் கையிலுள்ள சாட்டை, அவ்வாறு கட்டறுந்து, அடிக்கடி ஆசையால் அலைபாய்ந்து அங்குமிங்கும் ஓடும் மானிடர்களுக்கு சோதனை என்னும் அடியைக் கொடுப்பதாக உள்ளது.//
கட்டறுந்து, அடிக்கடி ஆசையால் அலைபாய்ந்து அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கும் மானிடப் பிறப்புகளுக்கு சாட்டையடி கொடுத்தால் தான் சரிப்பட்டு வரும்.
இல்லாவிட்டால் அவர்களை யார் தான் தடுத்து நிறுத்தி, நல்வழிப்படுத்தித் திருத்திக் கொண்டுவர முடியும்?
நல்லதொரு தகவலாக உள்ளது இது.
அனைத்துப்படங்களும் அழகாக காட்டப்பட்டுள்ளன.
ReplyDeleteயானைப்படமும் அதன் பின்னனியும், அதற்கு அடுத்த படமும் கோயிலின் அழகிய பிரும்மாணடமான தோற்றத்தை மிகச்சிறப்பாக காட்டுவதாக உள்ளது.
நம் நாட்டு பாரம்பர்ய சிற்பக்கலைக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
இன்னிக்கு உங்களால் அருமையான தரிசனம் கிடைச்சது. அழகரின் குதிரை ரொம்பவே அழகு..
ReplyDeleteநேரில் பார்க்க பக்தி வெள்ளமாய் பெருகும்.
ReplyDeleteமீன் + அட்சி அருமையான விளக்கம்.மீனாட்சியின் சிறப்பையும் அழகர் மற்றும் அழகர் குதிரையின் சிறப்பையும் அழகாக கூறியதற்கு மனம் நிறைந்த நன்றிகள் அம்மா
ReplyDeleteசித்ரா பொளர்ணமி விழா பற்றி சிறப்பான பதிவு. படங்கள் அருமை.
ReplyDeleteஏழாண்டு கால மதுரை வாழ்க்கையில் காணாத அழகர் குதிரையை இன்று கண்டேன்,பல தகவல்களுடன்.நன்றி.
ReplyDeleteஅழகரின் குதிரை அழகோ அழகு... பல புதிய தகவல்களும் அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி.
ReplyDeleteஅன்புடன்
பவள சங்கரி.
அழகர் குதிரையின் விளக்கமும், அழகிய படங்களும் அருமை. நல்வாழ்த்து.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
"அழகர் சாமியின் குதிரை " அற்புத விளக்கம் தொடர்க உமது திருப்பணி.
ReplyDeleteAha!!!!!1
ReplyDeleteAlghar Kudurai algo algu.
Really very pretty post as usual. Thanks Rajeswari.
viji
படங்களும் பகிர்வும் நல்லா இருக்கு. நன்றி. வாழ்த்துகள்.
ReplyDeleteநாளைக்க்குத் தானே அழகர் ஆற்றில் இறங்குவார்.
ReplyDeleteஅந்த நிகழ்ச்சிக்குப் பின் இருக்கும் இத்தனை தத்துவங்களை எளிதாகப் புரியும் வண்ணம் கொடுத்திருக்கிறீர்கள். மனம் நிறைந்த நன்றி.
அழகரின் குதிரை ரகசியம் அறியத்தந்தமைக்கு பாராட்டுக்கள்..
ReplyDeleteஅழகர் சாமியின் குதிரை பற்றிய பதிவு அருமை. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஎம் பெருமானின் சிறப்புக்களை சொல்வதற்கு சொல்லில் அடங்காது என்பதால், எழுத்தில் வடிக்கும் போதும், இன்னமும் எழுதியிருக்கலாமோ என்று எண்ண வைக்கும். பெருமைக்குரிய பெருமானின் சிறப்புக்களை எழுத்தாலும், அழகிய வண்ணக் காட்சிகளும் ...தெவிட்டாத தெள்ளமுது.....
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteஅற்புதமான படங்கள்.
நன்றி.
For 02.05.2012
ReplyDelete108. நிகிலலோகேஸ கோவிந்தா
For 03.05.2012
109. ஆனந்த ரூபா கோவிந்தா
2936+6+1=2943
ReplyDelete