Friday, May 25, 2012

பரிபாலிக்கும் பஞ்சமுக அனுமன்


Return to Album


தெளிந்த நல் அறிவு ;தேகத்தில் வலிமையும் 
பொலிவுறும் தேஜஸ் பண்பினில் துணிவும் 
அச்சமில் இயல்புட்ன் ஆரோக்ய உடலும் 
இச்சைகள் அடக்கும் தன்மை இனியசொல் வினயம்
வினையாற்றும் திறமை விவேகம் நிரம்ப வேண்டும்!
அனுமனைத் தியானம் செய்தால் அனைத்துமே சித்தியாகும்! 

அஞ்சனை மைந்தா போற்றி ! அஞ்சினை வென்றாய் போற்றி !
அஞ்சினைக் கதிர்பின் சென்று அரு மறையுணர்ந்தாய் போற்றி !
அல்லலைப் போக்கிக் காக்கும் அனுமனை பாடியே போற்றி !
அஞ்ச லென்றருளும் வீரன் அனுமனைப் போற்றுவோமே !!

அனுமனின் ஐந்து முகங்களான ஹயக்ரீவ, வராக, நரசிம்ம, வானர, கருட முகங்களில்ஐந்து திருமுகங்களும் ஒரே வரிசையில் அபூர்வ அமைப்பில்   பக்தர்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஈடேற்றக்கூடிய வல்லமை மிக்க பஞ்சமுக அனுமன். 
வித்தியாசமான கோலத்தில் அனுமன் 

 பகதர் ஒருவருக்கு பஞ்சமுக அனுமனை பிரதிஷ்டை செய்யும்படி அசரீரி மாதிரி கேட்க உடனடியாக அப்படி ஒரு சிலையைத் தேடிப்போனபோது, வித்தியாசமாக ஒரே நேர்க்கோட்டில் ஐந்து முகங்களும் அமைந்த, பக்தர்களைத் தன் ஐந்து முகங்களாலும் பார்க்கிற மாதிரியான அபூர்வமான அமைப்புள்ள இந்த அனுமன்சிலை கிடைத்ததாம் ...

சஞ்சீவி மலையையே தூக்கி வந்த அனுமன், ஏகப்பட்ட தடைகளைத்தாண்டி கோயில் வளர்ந்து மளமளன்னு எல்லாம் நடந்து முடிஞ்சு அனுமன் ஜம் என்று கம்பீரமாக பிரதிஷ்டையாகி கும்பாபிஷேகமும் நடத்திக்கொண்ட அதிசயமும் நடந்திருக்கிறது இந்த கலியுகத்தில் !

தன் வால் கோட்டையைத் தானே தனக்கு சிம்மாசனமாக அமைத்துக்கொண்ட அனுமன், இந்த கோயிலையும் தன் இருப்பிடமாக தானே அமைத்துக்கொண்டு எழுந்தருளி இருக்கிறார் ...

மூன்றுநிலை ராஜகோபுரம் ராமநாமத்தைச் சொல்லும் அனுமன்போல் கம்பீரமாக நிமிர்ந்து நின்று அழைக்கிறது.

ஜடாரிமுன் பவ்யமாக தலைவணங்கும் பாவத்துடன் ராஜகோபுரத்தின் வழி உள் நுழைய நேர் எதிரே உள்ள சன்னதியில் ஐந்து முகங்கள், பத்துக்கரங்களுடன் அருள்நிறை விழிகளோடு அன்பர்களுக்கு அருளக் காத்திருக்கிறார் அனுமன்.

சின்னஞ்சிறு சன்னதி. பக்தர்களுக்கு எளியவராக சிலை வடிவில் காட்சிதரும் அனுமன் அருட்காட்சி தந்து ஆட்கொள்கிறார்..

அஞ்சுமுக அனுமன் சட்டென விஸ்வரூபம் எடுத்து தன்பார்வையை நம்மீது பதித்து நெஞ்சு முழுவதும் நிறைந்த அஞ்சேல் என்று அபயக்கரம் நீட்டி சிலிர்க்க வைக்கிறார்...

பெரும்பாரமாக இருந்த கஷ்டங்கள் அப்போதே நீங்கி விட்டது போன்று உணர்வு எழ, காற்றின் மகன் வந்து அமர்ந்துவிட்டதில் மனம் லேசாகிறது.


கருடமுகம் பிணி நீக்கும்,
வராகமுகம் செல்வம் அளிக்கும்,
அனுமன் முகம் சகல கிரகதோஷமும் போக்கி எல்லாநலமும் தரும். நரசிம்மமுகம் தீமையைப் போக்கும். 
ஹயக்ரீவர் முகம் கல்வியும், ஞானமும் நல்கும் 
என்பதால், வேண்டியதை வேண்டியவாறு அருள்கிறார் 
அஞ்சிலே ஒன்று பெற்ற அருள் குமரன் அனுமன் ..

சன்னதியை வலம் வந்தால் ஏராளமான மட்டைத் தேங்காய்கள் ஓரிடத்தில் கட்டப்பட்டிருக்கிறது.

அமாவாசைகளில் இங்கு வரும் பக்தர்கள் காரியத்தடைகள் விலகவும், மணப்பேறு, மகப்பேறு வேண்டியும் அனுமனை வழிபட்டுக் கட்டியவையாம் இவை,

ஒவ்வொரு அமாவாசையின்போதும் அதிகரித்து அனுமன் வால்போல் நீண்டு இன்று ஆயிரக்கணக்கினையும் தாண்டியுள்ளதே, இந்த அனுமனின் ஆற்றலுக்கு சாட்சியாக இருக்கிறது. அதிகபட்சம் தொண்ணூறு நாட்களுக்குள் வேண்டுதல் நிறைவேறிவிடுகிறதாம்.

அஞ்சு முகத்துடன் பக்தர் தம் நெஞ்சம் நிறைந்து அருளும் அனுமன், கொஞ்சமும் குறைவிலாது பக்தர்கட்கு அளிக்கிறார் தன் குளிர்வான அருளை.

சென்னை தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி செல்லும் சாலையில் 6 கி.மீ.யில் உள்ள கௌரிவசக்கத்தில், பழனியப்பா நகரில் இருக்கிறது இந்தப் பஞ்சமுக அனுமன் ஆலயம்.

பிராட்வே மற்றும் தி.நகரிலிருந்து கிழக்கு தாம்பரம் செல்லும் பேருந்துகளில் சென்றும் இத்தலத்தை அடையலாம்.

 வேண்டுதல் எதுவானாலும் சரி... . எல்லாவற்றையும் ஒரே தலத்தில், ஒரே கடவுளிடம் சொன்னால் போதும்; விரைவிலேயே அனைத்தும் ஈடேற்றி சந்தோஷம் தருகிறார்..

சென்னை தாம்பரம் அருகே உள்ள கௌரிவாக்கத்தில் 
அருளாட்சி செய்கிறார் பஞ்சமுக அனுமன்.

பஞ்சமுக அனுமன் கோயில்களில், அனுமனின் முகங்களான ஹயக்ரீவ, வராக, நரசிம்ம, வானர, கருட முகங்களில் நான்கு முகங்கள் நாற்புறம் நோக்கி இருக்க, மற்றொரு முகம் அவற்றின் மேலமைந்து இருக்கும்.
ஐந்து திருமுகங்களும் ஒரே வரிசையில் அமைந்திருப்பது அபூர்வம். 

காற்று ஈன்ற காவியமே காக்கும் கருணைக் கடலே போற்றி !
கருத்தில் நிறைந்தாய் சொல்லின் செல்வா கழலே போற்றி ! 

ஸர்வ  கல்யாண  தாதாரம் ஸர்வா பத்கந  வாரகம் 
அபார  கருணா  மூர்த்திம் ஆஞ்சநேய  நமாம்யஹம்

அஞ்சனா  கர்ப்ப  ஸம்பூதம் குமாரம்  ப்ருஹ்மசாரிணம் 
துஷ்டக்ருஹ  வினாஸாய ஹனுமந்த  முபாஸ்மஹே
Return to Album
ஸ்ரீ ராமதூத  மஹாதீர ருத்ரவீர்ய  சமுத்பவ
அஞ்சனா  கர்ப்ப  ஸம்பூத   வாயு  புத்திர  நமோஸ்துதே 

40 feet tall monolithic green granite Murti of 
Sri Panchamukha Hanuman in Thiruvallur

அஸாத்ய  ஸாதக  ஸ்வாமிந் அஸாத்யம் தவ கிம்தவ
ராம தூத க்ருபாஷிந்தோ மத்கார்யம் ஸாதய  ப்ரபோ


புத்திர் பலம்  யசோதைர்யம் நிற்பயத்வம்  அரோகதா
அஜாட்யம்  வாக்படுத்வம்ச ஹனுமத் ஸரணாத் /ஸ்மரணாத்  பவேத்   



 Mantralaya.

21 comments:

  1. முதல் படத்தில் ஸீதா லக்ஷ்மண பரத சத்ருக்கண ஹநூமத் ஸமேத ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தி வெகு அழகாக வீற்றிருப்பது அருமையாக உள்ளது.

    தொடரும்...

    ReplyDelete
  2. முதல் படத்தில் ஸீதா லக்ஷ்மண பரத சத்ருக்கண ஹநூமத் ஸமேத ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தி வெகு அழகாக வீற்றிருப்பது அருமையாக உள்ளது.

    தொடரும்...

    ReplyDelete
  3. அனுமனுக்கும் கம்பிவலைத்தடுப்பு தேவைப்படுகிறதே?

    ReplyDelete
  4. anjanai mainthanai patri amsamana pathivu jai sri ram nanri amma.indru thaayar allathu ambal patri pathivu endru ethirparthen hanuman darisanam amogamaga petren

    ReplyDelete
  5. அனுமன் என்றாலே அற்புதம்தான்... பழங்களால் அலங்கரிக்கப்பட்ட அனுமன் மனம் கவர்ந்தான்.

    ReplyDelete
  6. அக்கா நாளைக்கு பெறவேண்டிய ஸ்ரீ ஆஞ்சநேயரின் தரிசனம் இன்றே கண்டத்தில் பெருமகிழ்ச்சி . வாழ்த்துக்கள் அக்கா...

    ReplyDelete
  7. கண்ணைகவரும் வண்ணமிகு படங்களுன் கூடிய பகிர்வு அருமை அக்கா. நான் ஐந்துதலை கொண்ட ஹனுமனை இப்பொழுதான் அக்கா பார்த்தேன் அதற்க்கு உங்களுக்கு என்னுடைய நன்றிகள்.

    ReplyDelete
  8. கண்டெடுத்த முத்தைப்போன்று கண்டெடுத்த ஹனுமானின் சிலை பிரமிக்க வைக்கிறது . அனைத்து படங்களும் அருமை அக்கா. என்னுடைய பாராட்டுகளை கூறுகிறேன் அக்கா ஏற்றுக்கொள்ளுங்கள் .......................

    ReplyDelete
  9. படங்கள் அனைத்தும் அழகு. தகவல்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  10. அஞ்சிலே ஒன்று பெற்ற
    அருள் குமரன் அனுமனுக்கு
    ஐந்து முகங்கள் !!!!!

    அதுவே பஞ்சமுக அனுமன்!

    ஆஹா!!


    பிணி நீக்கும் .. கருடமுகம்

    செல்வம் அளிக்கும் .. வராகமுகம்

    சகல கிரகதோஷமும் போக்கி எல்லாநலமும் தரும் ...

    அனுமன் முகம்

    தீமையைப் போக்கும் .. நரசிம்மமுகம்

    கல்வியும், ஞானமும் நல்கும் ..

    ஹயக்ரீவர் முகம்


    வேண்டியதை வேண்டியவாறு அருள்கிறார்.

    அற்புதமான விளக்கம் வெகு அருமையாகக் கொடுத்துள்ளீர்கள்.

    ReplyDelete
  11. பஞ்சமுக ஆஞ்ஜநேயராகவே பதினைந்து பஞ்சமுக ஆஞ்சநேயர்களைக் காட்டி அசத்தி விட்டீர்களே ... அதைத்தவிர போனஸாக, வழக்கமான ஒருமுக ஆஞ்ஜநேயர் மூவர் என மொத்தம் 78 முகங்களை இந்த ஒரே பதிவினில் காட்டி மகிழ்வித்துள்ளீர்கள்.

    நாளை சனிக்கிழமையாக இருப்பதால் காலை எழுந்ததும் எல்லா 15*5=75+3=78 ஹனுமனையும் மீண்டும் ஒரு முறை தரிஸிக்க செளகர்யம் செய்து கொடுத்துள்ளீர்கள்.

    ப ன் மு க த் தி ற மை யா ள ர் அல்லவா தாங்கள்!

    அதனாலேயே உங்களால் ஆஞ்ஜநேயரின் இவ்வளவு முகங்களையும் காட்டமுடிகிறது.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  12. பொதுவாக இந்தப் பஞ்சமுக ஹனுமாரெல்லாம் பாராமுகமாகவே உள்ளன.

    அதாவது நாம் எப்போதாவது தான் அது போன்ற சிறப்பான ஹனுமன் உள்ள கோயிலுக்குச் சென்று தரிஸிக்க முடிகிறது.

    என்ன இருந்தாலும் நமக்கு மிகவும் பிடித்த ஹனுமார் கடைசியில் காட்சியளிக்கிறாரே .. அவர்தாங்க.

    அவர் எவ்ளோ அழகு!

    அவரைச் சுற்றிலும் எவ்ளோ பழ மாலைகள்.

    அடடா, அவர் வாய்ப்பகுதியே ஒரு முரட்டுத் தக்காளிப்பழம் போலல்லவா சிவப்பாக பளபளப்பாக கும்மென்று வீங்கினால் போல உள்ளது.

    வலதுகையை அபயஹஸ்தமாகவும், இடது கையில் GHAதையைப் பிடித்தபடியும், அதுவும் வெள்ளிக்கவசத்தில் அற்புதமாகக் காட்சி தருகிறாரே! ;)))))

    நீங்கள் எவ்வளவு முறை காட்டினாலும் அலுப்புத் தட்டாத, மனதுக்கு நம்பிக்கையும், நிம்மதியும் தரும் நல்லதொரு படமல்லவா அது.

    அதைப் பார்க்கப்பார்க்க எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளதுங்க!!

    ReplyDelete
  13. கல்லினில் ஹனுமன்

    கலர்கலராக ஹனுமன்


    வெள்ளியில் ஹனுமன்

    வெங்கலத்தில் ஹனுமன்

    மஞ்சளில் ஹனுமன்

    பச்சையில் ஹனுமன்

    வாலைத்தூக்கி குடைபோல
    பிடித்த ஹனுமன்

    ஸ்ரீ ராமர் காலைப்பிடித்து
    கைங்கர்யம் செய்யும் ஹனுமன்

    வாலைச்சுருட்டி
    தியானத்தில் அமர்ந்த ஹனுமன்

    ஓங்கி உயர்ந்து விண்ணைத் தொட்டிடும் ஹனுமன்

    மண்டியிட்ட ஹனுமன்

    பாய்ந்து பறந்திடும் ஹனுமன்

    -oOo-

    ராமன் ... எத்தனை ... ராமனடி

    என்பது போல

    ஹனுமன் எத்தனை ஹனுமனடி என பாட வைத்து விட்டீர்களே!

    பாராட்டுக்கள். ;)))))

    ReplyDelete
  14. 2
    =
    ஸ்ரீராமஜயம்
    ===========

    புத்திர் பலம்
    யசோதைர்யம்
    நிற்பயத்வம்
    அரோகதா
    அஜாட்யம்
    வாக்படுத்வம்ச
    ஹனுமத்
    ஸரணாத்/ஸ்மரணாத்
    பவேத்

    -oOo-

    ஸர்வ
    கல்யாண
    தாதாரம்
    ஸர்வா
    பத்கந
    வாரகம்
    அபார
    கருணா
    மூர்த்திம்
    ஆஞ்சநேய
    நமாம்யஹம்

    -oOo-

    போன்ற சில அபூர்வமான அழகான ஸ்லோகங்களை ஆங்காங்கே கொடுத்துள்ளது மிகவும் பொருத்தமாகவும், பதிவுக்கு மெருகூட்டுவதாகவும் அமைந்துள்ளது.

    தினமும் அனைவர் மனமும் மயங்கிடுமாறு, மிகச்சிறப்பான தெய்வீகப் படைப்புகளை, சிரத்தையுடன் தந்துவரும் தங்களின் கடும் உழைப்புக்கு

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    அன்பான வாழ்த்துகள்.

    நெஞ்சார்ந்த நன்றிகள்.

    -oOo-

    ஜெய் ஹனுமான் !

    ReplyDelete
  15. கண்களுக்கும் மனதிற்கும் மகிழ்ச்சி ..!

    ReplyDelete
  16. அன்பின் இராஜ இராஜேஸ்பாரி - பஞ்ச முக அனுமன் - இப்பொழுது தான் முதன் முதலாக தரிசிக்கிறேன். இவ்வலவு ஊர்களில் இருக்கிறதா .... எத்தனை படங்கள் - அத்தனையும் அழகு - ஸ்லோகங்கள் - அதிகாலையில் இன்று தரிசனம் கிடைத்தது நன்று. நண்பர் வை.கோவின் அத்தனை மறுமொழிகளையும் கண்டு இரசித்தேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  17. பின் தொடர்பதற்காக இம் மறுமொழி

    ReplyDelete
  18. ஜெய் ஆஞ்சநேயா...
    பஞ்சமுக அஞ்சனை புத்திரனை கண்டு
    மனம் பக்தியில் திளைக்கிறது சகோதரி..

    ReplyDelete
  19. அருமையான பதிவு.
    அழகான படங்கள்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. 3172+7+1=3180

    அன்பின் திரு. சீனா ஐயா அவர்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete