பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
ஆற்றங்கரை ஓரத்திலே அரச மரத்து நிழலிலே
வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார்
ஆறுமுக வேலவனின் அண்ணனான பிள்ளையார்
நேரும் துன்பம் யாவையும் தீர்த்துவைக்கும் பிள்ளையார்
ஊரைக் காக்கும் பிள்ளையார் உலகை காக்கும் பிள்ளையார்
பாரிலுள்ள அனைவருக்கும் பலனளிக்கும் பிள்ளையார்
மஞ்சளிலெ செய்யினும் மண்ணினாலெ செய்யினும்
ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் காட்டும் பிள்ளையார்
அவல் பொரி கடலையும் அரிசி கொழுக் கட்டையும்
கவலை யின்றித் தின்னுவார் கண்ணை மூடி தூங்குவார்
கலியுகத்தின் விந்தையை காண வேண்டி அனுதினம்
எலியின் மீது ஏறியே இஷ்டம் போலச் சுற்றுவார் (பிள்ளையார்)
மூஷிக வாஹன மோதகஹஸ்த சாமரகர்ண விளம்பித சூத்ர
வாமனரூப மஹேஸ்வர புத்ர விக்ன விநாயக பாத நமஸ்தே!!''
அணுவுக்கு அணுவாகவும், பெரிதுக்கும் பெரிதானவனுமாக இறைவன் இருக்கிறான் என்பதைத் தத்துவ வடிவில் உணர்த்த யானை வடிவம் கொண்ட விநாயகர் சிறிய எலி வாகனத்தில் ஆரோகணிப்பதாக சொல்லப்படுகிறது..
கற்பனை கடந்த அற்புத கற்பகக்க்ளிறு....
பார்வையில்லாத ஐவர் ஒரு யானையைத் தொட்டுப்பார்த்தனர். ஒருவர் யானையின் வயிறைத் தொட்டு, அது சுவர் போல் இருப்பதாகச் சொன்னார். இன்னொருவர் அதன் வாலைத் தொட்டு கயிறு போல் இருக்கிறதென்றார். மற்றொருவர் காலைத் தொட்டு தூண் போல் உள்ளதென்றார்.
ஒருவர் துதிக்கையைத் தொட்டு உலக்கை போல் இருக்கிறதென்றார்.
ஒருவர் காதைத் தொட்டு முறம் போல் உள்ளதென்றார்.
இதில் எதுவுமே உண்மையில்லை.
அதுபோல், இறைவனையும் இன்னாரென வரையறுத்துச் சொல்ல முடியாது. அவரது குணநலன்களை அறிந்து கொள்ள முடியாது.
எலி மீது யானை ஏறுவதென்பது எப்படி கற்பனைக்கு கூட சாத்தியமில்லையோ, அது போல் இறைவனும் நம் கற்பனைகளையெல்லாம் கடந்தவன் என்பதே இதன் தத்துவம்.
ஒருவர் துதிக்கையைத் தொட்டு உலக்கை போல் இருக்கிறதென்றார்.
ஒருவர் காதைத் தொட்டு முறம் போல் உள்ளதென்றார்.
இதில் எதுவுமே உண்மையில்லை.
அதுபோல், இறைவனையும் இன்னாரென வரையறுத்துச் சொல்ல முடியாது. அவரது குணநலன்களை அறிந்து கொள்ள முடியாது.
எலி மீது யானை ஏறுவதென்பது எப்படி கற்பனைக்கு கூட சாத்தியமில்லையோ, அது போல் இறைவனும் நம் கற்பனைகளையெல்லாம் கடந்தவன் என்பதே இதன் தத்துவம்.
சமயக் குரவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிகள் இல்லறம் வெறுத்து, கைலாயம் செல்ல எண்ணி சிவபெருமானைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தார்.
சிவன் அவரை கைலாயத்திற்கு அழைத்துச் செல்ல ஐராவதம் என்னும் தேவலோக யானையையும், தேவர்களையும் அனுப்பினார்.
சுந்தரரும் யானை மீது கிளம்பி விட்டார்.
அப்போது வெளியில் சென்றிருந்த சேரமான் பெருமாள், வானத்தில் இந்த அதிசயத்தைப் பார்த்தார்.
அவருக்குச் சுந்தரரைப் பிரிய மனமில்லை. எனவே, தன் குதிரையில் ஏறிய அவர் அதன் காதில் "சிவாயநம' என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதினார்.
உடனே குதிரையும் கைலாயத்தை நோக்கிப் பறந்தது.
இப்படி சென்ற சுந்தரரும், சேரமான் பெருமாளும், கீழ் நோக்கிப் பார்த்தனர். ஓரிடத்தில் ஔவையார் விநாயகர் பூஜையில் இருப்பதைக் கண்டு "தாங்களும் வாருங்களேன் பாட்டி' என்று அழைத்தனர்.
பூஜையை முடித்து விட்டு வருகிறேன் என்று அவ்வைப்பாட்டி பதில் அளித்தாள். அப்போது விநாயகர் அவ்வையார் முன் தோன்றி, "தாங்களும்ம் கைலாயம் போக வேண்டுமா?' என்றார்.
"நீ இருக்கும் இடமும், உன்னைப் பூஜிக்கும் இடமுமே எனக்கு கைலாயம் போலத்தான். நீ விருப்பப்பட்டால் என்னை கைலாயத்திற்கு கொண்டு போ' என்றார் அவ்வையார்.
"ஔவையே! நீ குழந்தைகளுக்காக நிறைய பாடியிருக்கிறாய். தெய்வக் குழந்தையான என்னைப் பற்றி ஒரு பாட்டுப் பாடு' என்றதும், "சீதக்களப' என ஆரம்பிக்கும் அகவலைப் பாடினார்.
பாடி முடிந்ததும், விநாயகர் மகிழ்ச்சியில் அவளைத் தும்பிக்கையால் தூக்கி, சுந்தரரும் சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாயம் சென்று சேர்வதற்கு முன்பாகவே கொண்டு சேர்த்து விட்டார்.
கைலாயத்தை அடைந்த பிறகு ஔவையாரை சுந்தரரும், சேரமான் பெருமாளும் ஆச்சரியப்பட்டு நடந்த விபரத்தைக் கேட்டனர். விநாயகர் முதற்கடவுள். அவரை வணங்குவோர் எல்லாவற்றிலும் முதல்நிலையில் தான் இருப்பார்கள் என்றாள் ஔவை. இப்படி பிறந்தது தான் விநாயகர் அகவல் என்னும் தேன்தமிழ் பாடல்.
.
விநாயகர் அகவல் விநாயகப் பெருமானின் அழகையும் பெருமைகளையும் அற்புதமாக விளக்குகிறது.
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்கு அணுவாய் அப்பாலிற்கும் அப்பாலாய்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடும் மெய்த் தெண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்
தத்துவ நிலையை தந்து எனை ஆண்ட
வித்தக வினாயக விரை கழல் சரணே!
பொற்பதத்தினைப் பிடித்து நற்பதத்தினை உற்ற அற்புதம்
மணக்குள விநாயகர்
கற்பனை கடந்த கற்பகமே
ReplyDeleteவ்ருக!
கற்பனையில் மிதக்கும் எனக்கு உடனே காட்சி தருக!!
கற்பனை கடந்த கற்பகமே!
ReplyDeleteவருக வருக!
கற்பனையில் மிதக்கும் எனக்கு காட்சி தருக தருக!!
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் ..........
ReplyDeleteபாடலுடனும், எலியின் மேல் சவாரி செய்திடும் வேடிக்கையான பிள்ளையார் படத்துடனும் ஆரம்பமே வெகு ஜோர்.
அத்தனைப் பிள்ளையார்களும் நல்ல அழகோ அழகு.
ReplyDeleteநான் ஏற்கனவே கஷ்டப்பட்டு எழுதி அனுப்பிய ஒரு சில பின்னூட்டங்களைக் காணோம். ;(
வாகனம் பற்றிய விளக்க கொடுத்துள்ளது அருமை.
ReplyDeleteவிநாயகப்பெருமானால், அந்த சிற்றுயிரான மூஞ்சூருக்குப் பெருமையே தவிர, வாகனத்தால் ஸ்வாமிக்குப் பெருமை இல்லை என்பதே தத்துவம் என ஒரு பெரியவர் தன் பிரவசனத்தில் கூறியது நினைவுக்கு வந்தது.
ஆம், இறைவன் நம் கற்பனையெல்லாம் கடந்தவனே.
ReplyDeleteஒளவைப்பாட்டியைக் தன் துதிக்கையால் அலாக்காகத் தூக்கி நேரிடையாக, கைலாஸத்திற்கு கொண்டு சேர்த்த, அந்த பிள்ளையாரின் பெருமையை எடுத்துக்கூறியுள்ளது மிகச்சிறப்பு.
இன்றும் தங்களுக்காக வேறொருவரின் கணினியிலிருந்து கருத்துக்கூறி வருவதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.
ReplyDeleteமிகவும் அழகான பதிவு.
அனைத்துப்படங்களும் சிறப்பாக உள்ளன.
விளக்கங்கள் சுருக்கமாகவும் சுவையாகவும் உள்ளன.
பகிர்வுக்கு நன்றி. பாராட்டுக்கள்.
வலைச்சரத்தில் இன்று அடையாளம் காட்டப்பட்டுள்ளதற்கு வாழ்த்துகள்.
இன்றும் தங்களுக்காக வேறொருவரின் கணினியிலிருந்து கருத்துக்கூறி வருவதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.
ReplyDeleteமிகவும் அழகான பதிவு.
அனைத்துப்படங்களும் சிறப்பாக உள்ளன.
விளக்கங்கள் சுருக்கமாகவும் சுவையாகவும் உள்ளன.
பகிர்வுக்கு நன்றி. பாராட்டுக்கள்.
வலைச்சரத்தில் இன்று அடையாளம் காட்டப்பட்டுள்ளதற்கு வாழ்த்துகள்.
muzhu mudal kadavulayai kuritha niraivana padhivu nanri amma
ReplyDeleteஅன்பின் இராஜ இராஜேஸ்வரி - எனக்குப் பிடித்து பிள்ளையாரினைப் பற்றிய பதிவு. கற்பனை கடந்த கற்பகம் அருமை.
ReplyDeleteஉலகினைச் சுற்றிவர தம்பி முருகப் பெருமான் மயில் மீதேறி பறந்து கொண்டிருக்கும் போது - அமமையப்பனைச் சுற்றி வந்து பழத்தினைப் பெற்ற விநாயகர் இபொழுது கையில் குச்சியுடன் வாகனாமான மூஞ்சூறின் மேலமர்ந்து துதிக்கையினை ஆட்டிக் கோண்டு வானில் பறக்கும் காட்சியே காட்சி.
எலியின் மீதேறி இஷடம் போல் சுற்றும் பிள்ளையார்.
கைலையாத்திற்கு அவ்வையினை அழைத்துச் சென்றது - அவ்வை சீதக்களப என்று துவங்கும் அகவலைப் பாடியது.
மணக்குள விநாயகர் உள்ளிட்ட எத்தனை எத்தனை பிள்ளையார் படங்கள் - அத்தனையும் அருமை. விளக்கங்களோ அதனினும் அருமை. ஒவ்வொன்றாக பார்த்து இரசித்தேன்.
வை,கோவின் மறுமொழிகள் பதிவினிற்கு மகுடம் சூட்டுகின்றன.
வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா
இன்று காலை எழுந்த உடன் திரு ஜேசுதாஸ் பாடிய " ஸித்தி வினாயகம் " என்னும்
ReplyDeleteபாடல் ஷண்முகப்பிரியா ராகத்தில் கேட்டு அகமகிழ்ந்தேன்.
அதே நேரத்தில் இந்த வலைப்பதிவினைத் திறந்தபொழுது , அடடா !! என்ன
ஆச்சரியம் !! வினாயகனைப்பற்றிய ஒரு தொகுப்பும் அதற்கு முத்து வைத்தது போன்ற
ஒரு கவிதையும்.
அதே ஷண்முகபிரியா ராகத்தில் அதை ஒரே மூச்சில் பாடினேன்.
இங்கே கேட்கலாம்.
சுப்பு ரத்தினம்.
http://menakasury.blogspot.com
வழமையான சீரிய படங்களுடன் சிறப்பான பதிவு பாராட்டுகள்
ReplyDeleteஅருமை.
ReplyDeleteஓம் விக்னேஸ்வராய நமக.
எண்ணத்தினை வண்ணக் கோலமாக,
ReplyDeleteஅழகுக் கோலமாக, அற்புதமாக, அருமையாக பதிந்தமைக்கு நன்றும் வாழ்த்துக்களும்!
Oh!!!!!!!!!!!
ReplyDeletePretty cute sweet Ganeshas. I am happy happy viewing Him.
I am able to hear songs too!!!!!!!!!
It is very nice.
viji
காலையிலே செவிக்கும், கண்ணுக்கும் தேன்போன்ற காட்சியும் கருத்தும் மிகவும் அருமை அக்கா. அதிலும் கணபதியின் எல்லா வடிவையும் ஒரெஇடத்திலிருந்து பார்த்த மகிழ்ச்சி அக்கா எனக்கு.
ReplyDeleteநான் எங்கயும் பார்க்கவில்லை அக்கா மணக்கோல விநாயகரை மிக்க நன்றி அக்கா.
ReplyDeleteகற்பனை கடந்த கற்பகம் அருமை.சிறப்பான பதிவு பாராட்டுகள்
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.
121. கோவிந்தா ஹரி கோவிந்தா
ReplyDelete//Cheena [சீனா] May 16, 2012at 12.30 PM
ReplyDeleteவை.கோ வின் மறுமொழிகள் பதிவுக்கு மகுடம் சூட்டுகின்றன. //
அன்பின் திரு. சீனா ஐயா, வணக்கம் ஐயா, தாங்களாவது இதை உணர்ந்து சொல்லியுள்ளது மனதுக்கு ஆறுதலாக உள்ளது, ஐயா. மிக்க நன்றிகள் ஐயா. அன்புடன் VGK
3032+9+2=3043
ReplyDelete